Monday, August 07, 2006

பாக். பிரிந்ததால்.....

இன்னிக்கு மதியம் 3 மணி போல வேலை பிஸியில் மண்ட காய்ஞ்சு போய் வர்கார்ந்து இருந்தேன். அப்ப நம்ம பய புள்ள ஒன்னு தலைமையகத்தில் இருந்து தொலைப்பேசியில் மூலம் அழைத்தான். கூப்பிட்டவன் குசலம் விசாரிச்சுட்டு, சிவா உன் கிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்க தான் போன் பண்ணினேன் என்றான். ஏலேய், ஏற்கனவே நான் இங்க நொந்து போய் இருக்கேன். அதனால நொகடிக்காத மாதிரி கேளுடானு சொன்னேன். அவனும் நம்ம ஊர் பையன் தான், பேராவூரணி பக்கம். இது மாதிரி அடிக்கடி போன் பண்ணி சந்தேகம் கேட்டபான். அந்த ஞாபகத்தில் சொல்லுடானு சொல்ல..... பாகிஸ்தான் நம்மள விட்டு பிரிந்தாதால் நாம் இழந்தது என்னனு ஒரு கேள்விய கேட்டான். நானும் ஆர்வமாக பாக் மட்டும் பிரியாமல் இருந்து இருந்தால் பிரிவினையின் போது பல உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்காது என்று சொன்னேன். அவன் வேற அப்படினான், இந்த காஷ்மீர் பிரச்சனை ஏற்பட்டு இருக்காதுனுனேன். அப்புறம் என்றான் அவன். நாம ராணுவத்துக்கும், ஆயுதத்துக்கும் இவ்வளவு செலவு செய்யாமல் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி முன்னேறி இருக்கலாம் என்றேன். அவனும் விடாம வேறனு கேட்டான். கொஞ்சம் யோசிச்சி தண்ணீர் பிரச்சனன இருந்து இருக்காது, உணவு பொருட்கள் பிரச்சனை, ஈரான்யில் இருந்து பெட்ரோல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காதுனேன். இன்னும் வேற எதாவதுனான் ஒன்னா இருந்து இருந்தால் நம் நாட்டில் தீவிரவாதம், குண்டு வெடிப்பு போன்றப் பிரச்சனைகள் அவ்வளவாக இருந்து இருக்காது என்றேன். அவன் என்னடா இப்படி அரசியல் கண்ணோட்டத்துடன் பாக்குற, அரசியல தவிர்த்து எதாவது சொல்லுனான். நானும் அவன் சீரியஸா தான் கேட்குறான் என்று நினைத்து டேய் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்து இருந்தால் நம்ம கிரிக்கெட் அணியை கொஞ்சம் நினைச்சு பாரு. வாக்கர் யூனஸ், வாசிம் அக்ரம், கபில், சச்சின் ஆரம்பித்தேன். அவன் நிறுத்து நிறுத்துனு சொல்லிட்டு, சிவா ஒன்கிட்ட இருந்து நான் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பாக்குறேன் என்று காதல் படத்தில் வரும் இயக்குனர் டயலாக்ல கேட்க, ஆகா இவன் நம்மள வச்சி எதோ காமெடி பண்ணுற மாதிரியில இருக்கு என்று லேசா சுதாரிச்சுக்கிட்டு, எனக்கு தெரியல நீயே சொல்லு அப்படினேன். அவன் உன் வயசு என்னனு கேட்டான். அது உனக்கு தெரியாதானு நான் எதிர் கேள்வி கேட்டேன். இல்ல சும்மா சொல்லேனான். நாம கொஞ்சம் கடுப்பாயி(ஆப்புனு கன்பார்மா தெரிஞ்ச்சுடுச்சு) சொல்லறாதா இருந்தா சொல்லு எனக்கு இங்க நிறைய வேல இருக்குனு ஒரு சவுண்ட் போட்டேன். சிவா கடைசியா ஒரு கெஸ் பண்ணுனான். என்னால முடியாதுனு சொல்லிட்டு போன வச்சுட்டேன். விடாம உடனே போன போட்டான். எடுத்து டேய் சொல்லி தொலைடா , இல்ல ஆள விடுடா வேல இருக்குனு கத்த., கத்தாத உன் லொட்ஸ்(Lotus-Mail) ஒபன் பண்ணி பாருனு சொல்லிட்டு போனை வச்சுட்டான். அவன் வைக்கவும் அவன் அனுப்பிய மெயில் வரவும் சரியாக இருந்தது. திறந்து பார்த்தா.........
....
....
....
....
....
....

இந்த படங்கள்............... இந்தியா இழந்தது இவர்களையாம்., எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க மக்களே....

வந்த கோவத்துக்கு மறுபடியும் போன்னை போட்டு, ஏன்னடா அவன் அவன் இங்க நொந்து நொடுல்ஸ் ஆயிகிட்டு இருக்காங்க, உனக்கு காமெடியா இருக்கானு கத்த, அவன் கூலா படத்து பாத்தும்மா இவ்வளவு கோவப்படுறனு கேட்டான். அதுக்கு என்னத்த சொல்ல, சரி சரி பொழச்சு போனு சொல்லிட்டு போன வச்சுட்டேன். வேற என்ன பண்ணுறது.

இந்த படங்களை நம்ம ஜொள்ளு பாண்டிக்கும், க.பி. கழகத்துக்கும் சமர்ப்பனம் செய்கின்றேன். மிச்ச படம் வேணுமுனா கேட்கவும்.

151 comments:

இராம் said...

அப்பா பில்டப் மன்னா... உனக்கு வந்த ஒரு forward மெயிலை எல்லாருக்கும் காட்டணும்.அதுக்கு இவ்வளவு பெரிய பில்டப் வேண்டியது இருக்கா...

இருந்தாலும் போட்டோகள் நல்ல இருக்குப்பா... :-)

மிச்சத்த தனியா மெயில் அனுப்பு... ஹீ..ஹீ..

கைப்புள்ள said...

சரி மிச்ச படங்களையும் அனுப்பனும்னு ஆசை படறே. உன் ஆசையைக் கெடுப்பானேன்? சங்கத்து ஆளா வேற போயிட்டே...பரவால்ல அனுப்பி வை.

செல்வன் said...

சிவா

All indians are brothers and sisters என்பதால் தான் இவர்கள் இந்தியாவில் இருந்திருந்தால் நமக்கு sisters ஆகியிருப்பார்கள் என்பதால் பிரித்து பக்கத்து நாட்டுக்கு அனுப்பிவிட்டோம்.இனிமேல் அவங்க நமக்கு எதிர் வீட்டு பிகரு.
இப்ப புரியுதா விஷயம்?

நாகை சிவா said...

ஏலேய் ராம் பாத்தியா நீயே இப்படி லந்து பண்ணுற.
என்ன கலாய்ச்சது உனக்கு பில்டப்பா தெரியுது..........

தனி மெயில் வந்ததா?

நாகை சிவா said...

அட யாருப்பா அது, பதிவ படிச்சுட்டு பின்னூட்டம் கூட போடாம மெயில் அனுப்ப சொல்லி தனி மெயில் அனுப்பியது. அனுப்பியாச்சு. வந்துச்சா.......

நல்லா இருங்கட.......:))))))

நாகை சிவா said...

ஆஹா....... $செல்வன்.
என்ன ஒரு அருமையான விளக்கம்.
இது புரியாம நான் கொஞ்சம் வருத்துப்பட்டுட்டேனே......

இதுக்கு தான் உங்கள மாதிரி அறிவாளிங்கிட்ட பழக்கம் வச்சுக்கனும் என்பது.

ரொம்ப தாங்கஸ் செல்வன், என் அறிவு கண்னை திறந்ததுக்கு......

கைப்புள்ள said...

//அட யாருப்பா அது, பதிவ படிச்சுட்டு பின்னூட்டம் கூட போடாம மெயில் அனுப்ப சொல்லி தனி மெயில் அனுப்பியது. அனுப்பியாச்சு. வந்துச்சா.......//

அதை கூட தனியா ஒரு பின்னூட்டமா கணக்கு காமிச்சிட்டியேயா...காமிச்சிட்டியேயா!

சரி இதுக்கு முன்னாடி நான் போட்ட பின்னூட்டத்தை டீல்ல வுட்டுட்டியா?

பொன்ஸ்~~Poorna said...

ஏற்கனவே கருப்பு டெம்ப்ளேட்.. கொஞ்சம் பத்தி பிரிச்சி எழுதக் கூடாதா? படிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு.. .. இதுல பில்டப் வேற!!!

இராம் said...

//என் அறிவு கண்னை திறந்ததுக்கு...... //

அதென்னா துருப்பிடிச்ச இரும்பு பொட்டியா என்னா? திறந்து விடறாதுக்கு.... :-)

ENNAR said...

நீங்கள் ஏமாந்தது போதாதென எங்களையுமா? யான் பெற்ற ஏமாற்றம் அல்லாறும் பெறவா?

கைப்புள்ள said...

என் முதல் பின்னூட்டத்தைப் பப்ளிஷ் பண்ணாத ஒன்னய நான் வன்மையா கண்டிக்கிறேன். உன் பேச்சி 'கா'.

கைப்புள்ள said...

அந்த பயம் இருக்கட்டும்.

நாகை சிவா said...

//சங்கத்து ஆளா வேற போயிட்டே...பரவால்ல அனுப்பி வை. //
தல நீயுமா..........

ஸ்வாமி செல்வானந்தா said...

குழந்தாய் சிவா,

பிகருங்க மேட்டரில் குழம்புதல்,மனசு விட்டு போதல் இவை எல்லாம் சகஜம் தான்.விடாமுயற்சி,தன்னம்பிக்கை இவை இருந்தால் வெற்றி நமதே.

மங்களம் உண்டாகட்டும்

பி.கு:மங்களம் என்பது பெயர் சொல் அல்ல.வினை சொல்:))))

நாகை சிவா said...

//அதை கூட தனியா ஒரு பின்னூட்டமா கணக்கு காமிச்சிட்டியேயா...காமிச்சிட்டியேயா!

சரி இதுக்கு முன்னாடி நான் போட்ட பின்னூட்டத்தை டீல்ல வுட்டுட்டியா? //

அட ஆமாம் தல, அந்த நல்லவன் யாரு என்றே தெரியவில்லை. பதிவ போட்ட அடுத்த நிமிஷம் மெயில் வருது. அதான்.....

நீ அனுப்புன பின்னூட்டம் இவ்வளவு லேட்டா வந்தா நான் என்ன பண்ணுறது.
எங்க போன பதிவுக்கு உன்ன ஆள காணாம்

நாகை சிவா said...

//ஏற்கனவே கருப்பு டெம்ப்ளேட்.. கொஞ்சம் பத்தி பிரிச்சி எழுதக் கூடாதா? படிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு.. .. இதுல பில்டப் வேற!!! //
அம்மா தாய்குலமே, இது உண்மை உண்மை. சத்தியமாக நடந்த உண்மை. இங்கன ஒருத்துர தனியா சாட்டில் போட்டு உனக்கு ஏன் இந்த பில்டப் எல்லாம் என்று உயிர இண்ஸ்டால்மெண்ட்ல வாங்கிட்டு இருக்கார். நீங்க வேறையா.

இந்த டெம்பிளேட் பிரச்சனைக்கு ஒரு வழி பண்ணுறேன்.

நாகை சிவா said...

//அதென்னா துருப்பிடிச்ச இரும்பு பொட்டியா என்னா? திறந்து விடறாதுக்கு.... :-) //
துரு பிடிக்காத அறிவு பெட்டகம். அப்ப அப்ப வந்து யாராச்சும் திறந்து விடனும். அதுவும் அறிவாளிங்க. உன் மாதிரி களவாணிபயல்க இல்ல

கப்பி பய said...

/மிச்ச படம் வேணுமுனா கேட்கவும்.
//

இந்த போட்டோக்களை மெயில் பாக்ஸ்ல எங்கியோ வச்சிருந்தேன்..இப்போ தேடினா கிடைக்க மாட்டேங்குது :(

கேட்டாதான் அனுப்புவியா?? நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்?? :D

கப்பி பய said...

//ரொம்ப தாங்கஸ் செல்வன், என் அறிவு கண்னை திறந்ததுக்கு......
//

இதை மட்டும் என்னால ஜீரணிக்க முடியலை..நாலு சோடா பார்சல் ;)

இலவசக்கொத்தனார் said...

செல்வன் வாழ்க.

நாகை சிவா said...

//நீங்கள் ஏமாந்தது போதாதென எங்களையுமா? யான் பெற்ற ஏமாற்றம் அல்லாறும் பெறவா? //
இதை ஏன் ஏமாற்றம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். வேற மாதிரியும் எடுத்துக்கலாம் இல்ல.....
:)))

நாகை சிவா said...

//என் முதல் பின்னூட்டத்தைப் பப்ளிஷ் பண்ணாத ஒன்னய நான் வன்மையா கண்டிக்கிறேன். உன் பேச்சி 'கா'. //
அட எதுக்கு இப்ப கா விட்டுகிட்டு. அதான் ப்பளிச் பண்ணியாச்சுல.
சீக்கிரம் வந்து பழம் விடு

நாகை சிவா said...

//அந்த பயம் இருக்கட்டும். //
உன் மேல எனக்கு என்னிக்குமே பயம் உண்டு. மரியாதை கலந்து பயம்.
:)))

SK said...

நல்ல கூத்து!
இங்கனே இருக்கற ஃபிகருங்களை மட்டம் தட்டினதுக்கு, தாய்க்குலம் சண்டைக்கு வரப் போகுது, சிவா!
உஷாரா இருங்க!

:))))

நாகை சிவா said...

//பிகருங்க மேட்டரில் குழம்புதல்,மனசு விட்டு போதல் இவை எல்லாம் சகஜம் தான்.விடாமுயற்சி,தன்னம்பிக்கை இவை இருந்தால் வெற்றி நமதே.//
இந்த சுவாமிகள் எந்த மலையில் முக்தி பெற்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.......

சுவாமியின் பெயரை கேட்டால் நல்லா பழகிய பெயர் போல தெரிகிறதே.....

//பி.கு:மங்களம் என்பது பெயர் சொல் அல்ல.வினை சொல்:))))//
புரியுது புரியுது. இதுக்கு எல்லாம் விளக்கம் கொடுக்கனுமா.......

நாகை சிவா said...

//கேட்டாதான் அனுப்புவியா?? நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்?? :D //
உனக்கு இல்லாததா, கப்பி, உடனே ஆவண செய்கின்றேன்.
:)

நாகை சிவா said...

//இதை மட்டும் என்னால ஜீரணிக்க முடியலை..நாலு சோடா பார்சல் ;) //
பார்சல் வாங்கிட்டு போய் என்ன பண்ண போற.... இந்த உலகத்திலே சோடாவ பார்சல் கேட்ட முதல் ஆள் நீ தான்.

உன்ன அங்கன கவுத்ததுக்கு, நீ இங்கன போட்டு பாக்குறீயா. தோ வரனே அங்க

Anonymous said...

Pakistanies are realy cute..

Enjoy friend!

Good build up!!:)

இராம் said...

//அதுவும் அறிவாளிங்க. உன் மாதிரி களவாணிபயல்க இல்ல //


உர்ர்... :((((

நாகை சிவா said...

//செல்வன் வாழ்க.//
என் அறிவு பெட்டகத்தை திறந்து வைத்த செல்வன் வாழ்க என்று கூறிய கொத்தனார் வாழ்க.

நாகை சிவா said...

//நல்ல கூத்து!
இங்கனே இருக்கற ஃபிகருங்களை மட்டம் தட்டினதுக்கு, தாய்க்குலம் சண்டைக்கு வரப் போகுது, சிவா!
உஷாரா இருங்க!//
அந்த படத்த பாத்த பிறகுமா உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம். மத்த படத்த வேணும் என்றால் அனுப்பி வைக்குறேன். உங்களுக்கு அனுப்பினால் மரியாதையாக இருக்காது என்பதால் தான் சும்மா இருக்கேன்.

அதுவும் இல்லாம இக்கரைக்கு எப்பவும் அக்கரை பச்சை தானே
:))))

இராம் said...

//இங்கன ஒருத்துர தனியா சாட்டில் போட்டு உனக்கு ஏன் இந்த பில்டப் எல்லாம் என்று உயிர இண்ஸ்டால்மெண்ட்ல வாங்கிட்டு இருக்கார். நீங்க வேறையா.//

ஏ யாருப்பா அது சிவா அண்ணனை டிஸ்டர்ப் பண்ணுறது... வேலையை பார்க்க விடுங்கப்பா...!

கப்பி பய said...

//சீக்கிரம் வந்து பழம் விடு//

வெயிட் பண்ணு தல செட் தோசையும் கெட்டி சட்னியும் சாப்பிட போய் இருக்கு ;)

கப்பி பய said...

//இந்த உலகத்திலே சோடாவ பார்சல் கேட்ட முதல் ஆள் நீ தான்//

என்ன பண்ண..நான் இருக்க இடம் அப்புடி...

அதுவும் நீ அறிவு, கண்ணுனு ஏதேதோ பேசினதும் என்ன பண்றதுன்னே தெரியல...

//பார்சல் வாங்கிட்டு போய் என்ன பண்ண போற//
இனி மேல் தான் யோசிக்கனும்..வெயிட் எ நிமிட் பார் பைவ் நிமிட்ஸ்...

கப்பி பய said...

//என் அறிவு பெட்டகத்தை திறந்து வைத்த //

திரும்பத் திரும்ப பண்ற நீ...எதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு!!

ஸ்வாமி செல்வானந்தா said...

இந்த சுவாமிகள் எந்த மலையில் முக்தி பெற்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.......////

குழந்தாய் சிவா,

இந்த கடையேன் 'ஞானமும் சாந்தியும் அடைந்தது' சிந்து நதிக்கரையில்.(சாந்தி,ஞானம் என்பவை வினை சொல் அப்பனே)

//சுவாமியின் பெயரை கேட்டால் நல்லா பழகிய பெயர் போல தெரிகிறதே.....///

ரிஷிமூலம் எல்லாம் கேட்கக்கூடாது அப்பனே.

மீண்டும் மங்களம் உண்டாகட்டும்.

பி.கு:மங்களம் என்பது பெயர் சொல் அல்ல.வினை சொல்

உங்கள் நண்பன் said...

//இந்த படங்கள்............... இந்தியா இழந்தது இவர்களையாம்., எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க மக்களே....//


உன் நண்பன் நம் இண்மடா...

//மிச்ச படம் வேணுமுனா கேட்கவும். //

கேட்டாதான் அனுப்பனுமா,உனக்கே தெரிய வேணாமா..?

//அவங்க நமக்கு எதிர் வீட்டு பிகரு.
இப்ப புரியுதா விஷயம்? //

புரியுது செல்வன் புரியுது,எப்படிங்க இப்படி..?


//இங்கனே இருக்கற ஃபிகருங்களை மட்டம் தட்டினதுக்கு, தாய்க்குலம் சண்டைக்கு வரப் போகுது//

SK கொழுத்திப் போட்டும் இன்னும் ஒரு டப்பாசு கூட வெடிக்கலேயே..?
:(((அன்புடன்...
சரவணன்.

மகேஸ் said...

இதத்தான் உங்க நண்பர் சொல்ல வர்றாருன்னு கண்டு பிடிச்சுட்டேன்.

ஆனா பிகர் இவ்வளவு சூப்பரா இருக்குமுன்னு நினைசுப் பார்க்கல.

இப்ப பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்னா இருந்திருந்தா கராச்சியில வேலை(பிகர்) பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன்.

1947ல் நம்ம 'தலை'களுக்கு முற்போக்கு சிந்தனை இல்லாமல் போச்சு.

Karthik Jayanth said...

சிவா,

hmm..இந்த மாதிரி ஒரு படம் என்னோட மெயில்லையும் இருந்தது.. இப்ப சிக்க மாட்டேங்குது... ஆனா ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்கோ.. இந்தியாவுல இருந்தா அவங்க எல்லாம் சிஸ்டர்ஸ். இப்ப அவங்க எதிர் வீட்டு ஜன்னல் சரியா ;-)

நாகை சிவா said...

//ஏ யாருப்பா அது சிவா அண்ணனை டிஸ்டர்ப் பண்ணுறது... வேலையை பார்க்க விடுங்கப்பா...! //
ஏன் நீயா வாயா விட்டு மாட்டிக்குற.... யாராச்சும் இங்கன கேட்டாங்களா. இத தான் சொந்த செலவில் சூன்யம் வச்சுப்பது என்று சொல்லுவாங்க

நாகை சிவா said...

//வெயிட் பண்ணு தல செட் தோசையும் கெட்டி சட்னியும் சாப்பிட போய் இருக்கு ;) //
உன் பதிவில் பாத்தேன். கவா கவானு சத்தம் போடுவதை..
:))))

நாகை சிவா said...

//Pakistanies are realy cute..

Enjoy friend!

Good build up!!:) //

நன்றி அனாமி.....

யப்பா இது பில்டப் இல்ல. நம்புங்க சாமிகளா

நாகை சிவா said...

//உர்ர்... :(((( //
எதுக்கு இப்படி உறுமிட்டு, அப்புறம் சோகம் வேற....
என்னமோ இப்ப தான் இந்த மாதிரி ஒரு வார்த்தைய முதல் தடவையாக கேட்பது மாதிரி.

சரி விடு. பொது வாழ்க்கையில் இது எல்லாம் சதாரணம் தானே.

Syam said...

ஐயோ ஐயோ அத்தனயும் சூப்பர் பிகராச்சே...சூப்பர் பிகராச்சே...சொக்கா யேசு அல்லா என்ன யேய்யா இங்க இந்தியாவுல படச்ச...இன்னொரு ஜென்மம்னு இருந்தா ஏழேழு ஜென்மத்துக்கும் நான் பாக்கிஸ்தான்ல தான் பொறக்கனும்..

Syam said...

ஐயோ ஐயோ அத்தனயும் சூப்பர் பிகராச்சே...சூப்பர் பிகராச்சே...சொக்கா யேசு அல்லா என்ன யேய்யா இங்க இந்தியாவுல படச்ச...இன்னொரு ஜென்மம்னு இருந்தா ஏழேழு ஜென்மத்துக்கும் நான் பாக்கிஸ்தான்ல தான் பொறக்கனும்..

Syam said...

சரி சரி இன்னும் ஈமெல்ல போட்டோவ அனுப்புலயா எனக்கு...

நாகை சிவா said...

//என்ன பண்ண..நான் இருக்க இடம் அப்புடி...//
நீ எத சொல்லுற, வேல செய்யுற இடத்தை சொல்லுறியா, இல்ல இப்ப இருக்கும் ஊர் சொல்லுறீய்யா. கீளியரா சொல்லு அப்ப தானே உன் மொழி பெயர்ப்பாளர் கிட்டயும், அந்த ----- குடும்பத்து கிட்டயும் பேச வசதியா இருக்கும்.

கோவி.கண்ணன் said...

சிவா... காஷ்மீர் ரோஜா நல்லா இருக்கு ... அழகு எங்கிருந்தால் என்ன ? மாற்றான் தோட்டத்துக்கும் மணம் உண்டு என்று சொல்வது போல் இருக்கிறது ... உங்கள் பதிவு... பாராட்ட வார்த்தைகள் இல்லை :)

நாமக்கல் சிபி said...

////சங்கத்து ஆளா வேற போயிட்டே...பரவால்ல அனுப்பி வை. //

சங்க விதிகளின் படி தேவ், இளா, பாண்டித்தம்பி அவர்களுக்கும் சி.சி போட வேண்டும்.
.
.
.
.
.
.

அப்படியே எனக்கும்.

நாகை சிவா said...

//திரும்பத் திரும்ப பண்ற நீ...எதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு!! //
அந்த வரைமுறை என்னனு சொன்னா, நானும் தெரிஞ்ச்ப்பேன.....

அஞ்சு நிமிசத்தில் வரேன் சொல்லிட்டு அரை மணி நேரமா ஆள காணாம்......கப்பி நீ எங்கன இருக்க, சரவணன் கூட லார்ஜ் போட போயிட்டீயா.

Syam said...

ஏய்யா மனசே பொருக்கல இப்படி ஒரு அனியாயம் பன்னீட்டாய்ங்களே...வேர ஏதவது ரெண்டு மூனு தங்க சுரங்கம்,ஒரு நாலஞ்சு ஸ்டேட்டு இப்படி இழந்து இருந்தாலும் பரவால்லானு போய்டு இருந்து இருக்கலாம்... :-)

நாமக்கல் சிபி said...

//பி.கு:மங்களம் என்பது பெயர் சொல் அல்ல.வினை சொல் //

:-)

சுவாமி பித்தானந்தா!

நாகை சிவா said...

//குழந்தாய் சிவா,

இந்த கடையேன் 'ஞானமும் சாந்தியும் அடைந்தது' சிந்து நதிக்கரையில்.(சாந்தி,ஞானம் என்பவை வினை சொல் அப்பனே)//
சுவாமிகளே நான் சிறியவன். தாங்கள் என்னை அப்பன் என்று அழைப்பது முறையாகுமோ. தில்லையில் இருப்பவன் தான் நம் அனைவருக்கும் அப்பன்.

//ரிஷிமூலம் எல்லாம் கேட்கக்கூடாது அப்பனே.//
ரிஷிமூலம் பாக்க தான் கூடாது என்று சொல்வார்கள். கேட்கவும் கூடாதா....

சரி, போஜனம் ஆச்சா? இன்னிக்கும் வரட்டி தானா?
:)

நாகை சிவா said...

//உன் நண்பன் நம் இண்மடா...//
ஆமாம் ஆமாம் இல்லய்யா பின்ன...

//SK கொழுத்திப் போட்டும் இன்னும் ஒரு டப்பாசு கூட வெடிக்கலேயே..?//
நண்பன் என்று சொல்லிட்டு ஏன் இப்படி நாரதர் வேல பாக்குற.

//புரியுது செல்வன் புரியுது,எப்படிங்க இப்படி..?//
அத அவரு தான் சொல்லனும்.
:)))))

நாகை சிவா said...

//ஆனா பிகர் இவ்வளவு சூப்பரா இருக்குமுன்னு நினைசுப் பார்க்கல//
மீ டூ.

//1947ல் நம்ம 'தலை'களுக்கு முற்போக்கு சிந்தனை இல்லாமல் போச்சு. //
முற்போக்கு இல்லங்க. தொலைக்நோக்கு பார்வை இல்லாம போச்சு.

Syam said...

//முற்போக்கு இல்லங்க. தொலைக்நோக்கு பார்வை இல்லாம போச்சு//

ரெண்டும் இல்ல மொத்தத்துல புத்தியே இல்லாம போச்சு.... :-)

நாகை சிவா said...

//..இந்த மாதிரி ஒரு படம் என்னோட மெயில்லையும் இருந்தது.. இப்ப சிக்க மாட்டேங்குது...//
சிக்காட்டி விடுங்க பங்காளி. நான் அனுப்பி வைக்குறேன். ;)

//இப்ப அவங்க எதிர் வீட்டு ஜன்னல் சரியா ;-)//
ஆமாம் ஆமாம் இல்லயா பின்ன.
எதிர் வீட்டு கவிதைனு ஒரு தனி பதிவு போட்டு விடுவோம்.

Syam said...

நம்ம சங்கத்துல இருந்து பாண்டி தலைமைல பாக்கிஸ்தான இந்திவோட இணைக்க ஒரு போராட்டம் நடத்தலாமா...இந்த நாசமா போன நதிகள இணைக்கலனு யாரு அழுதா.. :-)

ஜொள்ளுப்பாண்டி said...

//இந்த படங்களை நம்ம ஜொள்ளு பாண்டிக்கும், க.பி. கழகத்துக்கும் சமர்ப்பனம் செய்கின்றேன். மிச்ச படம் வேணுமுனா கேட்கவும்.//

அய்யா எனக்கில்லை எனக்கில்லை ஏம்பா சிவா இந்தமதிரி பதிவைப் போட்டதுக்கப்புறம் ஒரு அலர்ட் கொடுத்திருக்கக் கூடாதா ??:))

ம்ம்ம்ம்ம்.... என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் ! சரி விருப்பப் பட்டுட்டே தனி மடல்ல இன்னும் அனுப்பித்தொலை ;)))))))))))

சரி அது யாருப்பா அது பெயர்ச்சொல் வினைச்சொல்லுன்னு தத்துவத்தை பிழிஞ்சு கொடுத்துகிட்டு இருக்காரு ?? கொஞ்சம் கவனியப்பூ!!!!

நாகை சிவா said...

//ஐயோ ஐயோ அத்தனயும் சூப்பர் பிகராச்சே...சூப்பர் பிகராச்சே...சொக்கா யேசு அல்லா என்ன யேய்யா இங்க இந்தியாவுல படச்ச...இன்னொரு ஜென்மம்னு இருந்தா ஏழேழு ஜென்மத்துக்கும் நான் பாக்கிஸ்தான்ல தான் பொறக்கனும்..//
பங்காளி ஏன் இப்படி பீல் பண்ணி, ஒரே பின்னூட்டத்த இரண்டு தடவை போட்டு இருக்க. போன பதிவுக்கு வரேன் சொல்லிட்டு எஸ்கேப் ஆன, இங்கன பிகர்களை கண்டவுடன் அப்படியே அத மறந்துட்ட அப்படி தானே

நாகை சிவா said...

//சரி சரி இன்னும் ஈமெல்ல போட்டோவ அனுப்புலயா எனக்கு...//
பங்கு, உன் மெயில் ஐடி தெரியாது. சொல்லு உடனே அனுப்புறேன்

Syam said...

//பிகர்களை கண்டவுடன் அப்படியே அத மறந்துட்ட அப்படி தானே//

என்ன பங்கு வெவரம் புரியாம பேசிட்டு இருக்க...பிகருகள விடவா பிரண்ட்சுக முக்கியம்... :-)

செல்வன் said...

சுவாமிகளே நான் சிறியவன். தாங்கள் என்னை அப்பன் என்று அழைப்பது முறையாகுமோ. தில்லையில் இருப்பவன் தான் நம் அனைவருக்கும் அப்பன். //

அந்த தில்லை அம்பலத்தானின் பெயரை நீ சுமந்திருப்பதால் தான் உன்னை அப்பனே என அழைத்தேன் குழந்தாய்.


//ரிஷிமூலம் பாக்க தான் கூடாது என்று சொல்வார்கள். கேட்கவும் கூடாதா....//

கூடாது மகனே கூடாது.


//சரி, போஜனம் ஆச்சா? இன்னிக்கும் வரட்டி தானா?
:)//

இப்போதுதான் போஜனத்தை முடித்துக்கொண்டு வந்தேன் குழந்தாய்.ரொட்டியும்,காளி மலரும்,கொக்கோ கோலா தீர்த்தமும் அருந்தி விட்டு வந்தேன்.

மங்களம் அடிக்கடி உண்டாகட்டும் குழந்தாய்.என் ஆசிகள்.

நாகை சிவா said...

//சிவா... காஷ்மீர் ரோஜா நல்லா இருக்கு ... அழகு எங்கிருந்தால் என்ன ? மாற்றான் தோட்டத்துக்கும் மணம் உண்டு என்று சொல்வது போல் இருக்கிறது ... உங்கள் பதிவு... பாராட்ட வார்த்தைகள் இல்லை :)//
மணம் மட்டும் இல்லை. அழகும் உள்ளது.

வார்த்தைகள் இல்லையா. காண்பதற்கு கண்கள் போத வில்லையா. நீங்க கண் தேடுதே என்று சொன்னீங்க.....

நாகை சிவா said...

//சங்க விதிகளின் படி தேவ், இளா, பாண்டித்தம்பி அவர்களுக்கும் சி.சி போட வேண்டும்.
அப்படியே எனக்கும்.//
கண்டிப்பாக உங்களுக்கு இல்லாமய்யா....

ஆனா பாருங்க தளபதியாரே... நீங்க தான் நயன் தாராவை தவிர வேற எந்த பொண்ணையும் நிமிர்ந்துக் கூட பாக்க மாட்டீங்களே. அப்புறம் எதுக்கு உங்களுக்கு

கப்பி பய said...

/கீளியரா சொல்லு அப்ப தானே உன் மொழி பெயர்ப்பாளர் கிட்டயும், அந்த ----- குடும்பத்து கிட்டயும் பேச வசதியா இருக்கும்.
//

ஏற்கனவே பேசி என்னை அசிங்கப்படுத்தினது போதும்...இதுக்கு மேலேயும் உன்னை அவன்கிட்ட பேச விடமாட்டேன்...

கப்பி பய said...

/அஞ்சு நிமிசத்தில் வரேன் சொல்லிட்டு அரை மணி நேரமா ஆள காணாம்......//

ஐயாம் தி லஞ்ச் ஈட்டிங் அண்டு ஸ்பானிஷ் ப்ரண்ட்ஸ் ஸ்பீக்கிங்...

//நீ எங்கன இருக்க, சரவணன் கூட லார்ஜ் போட போயிட்டீயா.
//
சரவணன் ஏற்கனவே ஆரம்பிச்சாச்சுன்னு கேள்விபட்டேன்...

//கப்பி, உடனே ஆவண செய்கின்றேன்.//
இந்த ஆவண எங்கப்பா கண்ணா??

நாகை சிவா said...

//ஏய்யா மனசே பொருக்கல இப்படி ஒரு அனியாயம் பன்னீட்டாய்ங்களே...வேர ஏதவது ரெண்டு மூனு தங்க சுரங்கம்,ஒரு நாலஞ்சு ஸ்டேட்டு இப்படி இழந்து இருந்தாலும் பரவால்லானு போய்டு இருந்து இருக்கலாம்... :-)//
சரி விடு பங்கு. ஆனது ஆச்சு
என்ன பண்றுத நம்ம கொடுத்து வச்சது அவ்வளவு தான் என்று நினைச்சுக்கோ

மனதின் ஓசை said...

சிவா,..பாகிஸ்தான் போக வழிமுறை என்னன்னு கெட்டு எனக்கு மட்டும் சொல்றியா? விசா எதும் எடுக்கனுமா?

நாகை சிவா said...

////பி.கு:மங்களம் என்பது பெயர் சொல் அல்ல.வினை சொல் //
சுவாமி பித்தானந்தா!//
அவரு நம்ம சுவாமி செல்வானந்தா....
:))))

நாகை சிவா said...

///ரெண்டும் இல்ல மொத்தத்துல புத்தியே இல்லாம போச்சு.... :-) //
பங்கு இப்படி எல்லாம் ப்பளிக்காக சொல்லி ஏன் வம்புல மாட்டி விடாதம்மா.
:)

நாகை சிவா said...

//நம்ம சங்கத்துல இருந்து பாண்டி தலைமைல பாக்கிஸ்தான இந்திவோட இணைக்க ஒரு போராட்டம் நடத்தலாமா..//
நடத்து நடத்து. அதுக்கு பாண்டி தான் தலையமையா? நல்ல தலைமை தான்.

நதி.. மேட்டரு எல்லாம் உச்ச்ச்ச்ச்ச்.... நோ அரசியல்.

நாகை சிவா said...

//சிவா இந்தமதிரி பதிவைப் போட்டதுக்கப்புறம் ஒரு அலர்ட் கொடுத்திருக்கக் கூடாதா ??:)//
சாரி பாண்டி அண்ணன், தப்பு பண்ணிட்டேன். அடுத்தபா இது போல நடக்காம பாத்துக்குறேன்.

// யாருப்பா அது பெயர்ச்சொல் வினைச்சொல்லுன்னு தத்துவத்தை பிழிஞ்சு கொடுத்துகிட்டு இருக்காரு ?? கொஞ்சம் கவனியப்பூ!!!! //
கவனிக்க எல்லாம் வேண்டாம். அது நம்ம ஆளு தான். படிப்பா படிச்சிகிட்டு இருந்தார்ல. அதுல முக்தி அடைந்து சுவாமிகள் ஆகி விட்டார்.

நாகை சிவா said...

//என்ன பங்கு வெவரம் புரியாம பேசிட்டு இருக்க...பிகருகள விடவா பிரண்ட்சுக முக்கியம்... :-) //
அட பாவி பங்காளி, கவுத்துட்டியே
:(

நாகை சிவா said...

//அந்த தில்லை அம்பலத்தானின் பெயரை நீ சுமந்திருப்பதால் தான் உன்னை அப்பனே என அழைத்தேன் குழந்தாய்//
தாங்கள் அப்படியே அழைக்கலாம் சுவாமிகளே.

//ரொட்டியும்,காளி மலரும்,கொக்கோ கோலா தீர்த்தமும் அருந்தி விட்டு வந்தேன்.//
இதுல அந்த கோலாவ விசம் பூச்சி மருந்து என்று எல்லாம் சொல்கின்றார்களே. அது தங்களை ஒன்றும் செய்யாதா?

//மங்களம் அடிக்கடி உண்டாகட்டும் குழந்தாய்.என் ஆசிகள். //
உங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி சுவாமிகளே.

போன பின்னூட்டத்தில் ஒரு தவறு நடந்து விட்டதாக் தெரிகின்றது. அது தெரிந்தே செய்த தவறு தானா சுவாமிகளே.

நாகை சிவா said...

//ஏற்கனவே பேசி என்னை அசிங்கப்படுத்தினது போதும்...இதுக்கு மேலேயும் உன்னை அவன்கிட்ட பேச விடமாட்டேன்... //
இப்படி ஒரு அவப்பழியா ஏன் மீது. உனக்கு நல்லது செய்யும் பொருட்டு தானே அவனிடம் பேசினேன். என்ன போய் தப்பா நினைச்சிட்டேயே கப்பி.
:(

ஸ்வாமி செல்வானந்தா said...

//போன பின்னூட்டத்தில் ஒரு தவறு நடந்து விட்டதாக் தெரிகின்றது. அது தெரிந்தே செய்த தவறு தானா சுவாமிகளே. //

நீ பதிவில் இட்ட புகைப்படங்களை கண்டதும் இந்த கட்டை தன் பூர்வாசிரமத்துக்கு ஒரு வினாடி சென்றுவிட்டான் குழந்தாய்.அதனால் நேர்ந்த குழப்பம் தான் இது.

நாகை சிவா said...

//ஐயாம் தி லஞ்ச் ஈட்டிங் அண்டு ஸ்பானிஷ் ப்ரண்ட்ஸ் ஸ்பீக்கிங்...//
நல்லது (குட்) தூக்கி வை(Keep it up)

//இந்த ஆவண எங்கப்பா கண்ணா?? //
அவரசப்படாத கப்பி, சேர்த்து எல்லாருக்கும் மொத்தமாக அனுப்பி வைக்குறேன்.

ஸ்வாமி செல்வானந்தா said...

//இதுல அந்த கோலாவ விசம் பூச்சி மருந்து என்று எல்லாம் சொல்கின்றார்களே. அது தங்களை ஒன்றும் செய்யாதா?//

பாம்பு விஷத்தை ஆதிசேடனின் பிரசாதாமாய் அருந்தும் இந்த அடியவனை கோலா விஷம் என்ன செய்யும் குழந்தாய்?ஒன்றும் செய்யாது.

சாந்தியை அடைந்து,மங்களம் உண்டாகி அதனால் ஞானம் பெற்றால் இந்த குழப்பங்கள் வராது அப்பனே

மின்னுது மின்னல் said...

//
பொன்ஸ் said...
ஏற்கனவே கருப்பு டெம்ப்ளேட்.. கொஞ்சம் பத்தி பிரிச்சி எழுதக் கூடாதா? படிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு.. ..
//


படகு இங்க லேன்ட் ஆயிட்டா ??? :)

நாகை சிவா said...

//சிவா,..பாகிஸ்தான் போக வழிமுறை என்னன்னு கெட்டு எனக்கு மட்டும் சொல்றியா? விசா எதும் எடுக்கனுமா? //
உனக்கு மட்டுமா சொல்லுறேன்.
விசா எடுக்கனுமா இல்லயா என்று தெரியவில்லை. சீக்கிரமே கேட்டு சொல்லுறேன். தங்கமணி ஊரில் இருந்து இன்னும் வரல போல இருக்கு.
:)

நாகை சிவா said...

//நீ பதிவில் இட்ட புகைப்படங்களை கண்டதும் இந்த கட்டை தன் பூர்வாசிரமத்துக்கு ஒரு வினாடி சென்றுவிட்டான் குழந்தாய்.அதனால் நேர்ந்த குழப்பம் தான் இது. //
இது போன்ற குழப்பங்கள் ஆரம்பித்தில் ஏற்படுவது சகஜம் தான். கண்டுக் கொள்ளப்பட வில்லை சுவாமிகளே. உங்க ஆன்மிக பணி தொடரட்டும்.
:)

மின்னுது மின்னல் said...

//
துரு பிடிக்காத அறிவு பெட்டகம். அப்ப அப்ப வந்து யாராச்சும் திறந்து விடனும். அதுவும் அறிவாளிங்க. உன் மாதிரி களவாணிபயல்க இல்ல
//

தல களவன் பதில்கள் அப்பிடினு சொன்னது தலய குறிக்காது மாங்கு மாங்குனு பதில் சொன்ன நம்மலதான்.புரிஞ்சதா ??
:)
(அப்பாடா ஆப்பு வைச்சாசி)

நாகை சிவா said...

//பாம்பு விஷத்தை ஆதிசேடனின் பிரசாதாமாய் அருந்தும் இந்த அடியவனை கோலா விஷம் என்ன செய்யும் குழந்தாய்?ஒன்றும் செய்யாது.சாந்தியை அடைந்து,மங்களம் உண்டாகி அதனால் ஞானம் பெற்றால் இந்த குழப்பங்கள் வராது அப்பனே //
அது சரி.
இந்த பின்னூட்டத்தில் பெயர் சொல்லா, இல்ல வினை சொல்லானு சொல்லாமலே போயிட்டிங்க....

நாகை சிவா said...

//படகு இங்க லேன்ட் ஆயிட்டா ??? :) //
லேண்ட் ஆயி, டேக் ஆப் எடுத்தாச்சு... நீ தான் லேட்டு

மனதின் ஓசை said...

//விசா எடுக்கனுமா இல்லயா என்று தெரியவில்லை. சீக்கிரமே கேட்டு சொல்லுறேன். //
தங்ஸ்பா.. அத மட்டும் சொல்லு போதும்.. வேற எதும் வத்தி வைக்கற வேலை எல்லாம் வெனாம்..சரியா?
//தங்கமணி ஊரில் இருந்து இன்னும் வரல போல இருக்கு//
ஹி ஹி...

நாகை சிவா said...

//சரி சரி இன்னும் ஈமெல்ல போட்டோவ அனுப்புலயா எனக்கு...//
நினைச்சேன். உனக்கு இங்க பதில் சொல்லி முடிக்காட்டியும் அங்கன என் மெயிலுல உன் மெயிலு வந்தப்பவே. கொஞ்சம் வெயிட் பண்ணு....அனுப்பி வைக்குறேன்

சந்தோஷ் aka Santhosh said...

ஆகா பங்காளி,
எவ்ளோ பெரிய இழப்பு இது.. ஆகா இது தெரியாம நான் இவ்வுளவு நாளு பாக் கை பிரிச்சது சரின்னு இல்ல நின்னைச்சிட்டு இருந்தேன் நாளைக்கு இருந்து இணைப்புக்கு போராட வேண்டியது தான் நம்ம பேரப்புள்ளைங்களாவது நல்ல வாழ்க்கை வாழட்டும் என்ன நான் சொல்றது.

நாகை சிவா said...

//தல களவன் பதில்கள் அப்பிடினு சொன்னது தலய குறிக்காது மாங்கு மாங்குனு பதில் சொன்ன நம்மலதான்.புரிஞ்சதா ??
:)
(அப்பாடா ஆப்பு வைச்சாசி)//
இது யாருக்கு வச்ச ஆப்பு மின்னல்.
எனக்கு இல்லல?

நாகை சிவா said...

//தங்ஸ்பா.. அத மட்டும் சொல்லு போதும்.. வேற எதும் வத்தி வைக்கற வேலை எல்லாம் வெனாம்..சரியா? //
சே.. சே.. அத எல்லாம் பண்ணுவேனா. நீ எம்புட்டு நல்லவன். உன்ன எல்லாம் அது போல வம்புல மாட்டி விட மாட்டேன்.

ஸ்வாமி செல்வானந்தா said...

//இந்த பின்னூட்டத்தில் பெயர் சொல்லா, இல்ல வினை சொல்லானு சொல்லாமலே போயிட்டிங்க....//

பெயர் முக்கியமில்லை அப்பனே.வினை தான் முக்கியம்.ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இருக்கணும் குழந்தாய்.அப்போது தான் சாந்தி பெற முடியும்.

நாகை சிவா said...

//எவ்ளோ பெரிய இழப்பு இது.. ஆகா இது தெரியாம நான் இவ்வுளவு நாளு பாக் கை பிரிச்சது சரின்னு இல்ல நின்னைச்சிட்டு இருந்தேன் //
ஆமாம் பங்களி, நானும் அந்த தப்ப பண்ணிட்டேன்.

//நாளைக்கு இருந்து இணைப்புக்கு போராட வேண்டியது தான் நம்ம பேரப்புள்ளைங்களாவது நல்ல வாழ்க்கை வாழட்டும் என்ன நான் சொல்றது. //
நீ சொன்னதுக்கு அப்புறம் மறுக்க முடியுமா. நல்ல தொலைக் நோக்கனான பார்வை உனக்கு பங்கு.

ஸ்வாமி செல்வானந்தா said...

//நாளைக்கு இருந்து இணைப்புக்கு போராட வேண்டியது தான் நம்ம பேரப்புள்ளைங்களாவது நல்ல வாழ்க்கை வாழட்டும் என்ன நான் சொல்றது//

பிகரை இப்ப மடக்க வழி சொல்லாம பிகரோட பேத்தியை நம்ம பேரன் மடக்க வழி சொல்லிகிட்டிருக்கீங்க?

இப்பவே இணைந்தா தான் பேரன் பேத்தி எல்லாம் அண்ணன் தம்பியா வளர்வாங்க.அது என்னவோ போங்க.எல்லாம் நான் சொல்லித்தர வேண்டியதா இருக்கு

நாகை சிவா said...

சுவாமிகளே, நீங்க சொல்வது புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாதா மாதிரியும் இருக்கு. மொத்ததில் சாந்தி கிடைக்க வேண்டும் என்பது மட்டும் க்ளியரா புரியுது.
தாங்கள் அக்டோபர் வரை எதோ மிக முக்கியமான தவத்தில் ஈடுபட போவதாக கேள்விப்பட்டேன். தங்கள் தவம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
எஸ்.கே. வந்து தீட்டுவதற்கு முன்பாக நானே சொல்லிட்டேன்.
:)

நாகை சிவா said...

//பிகரை இப்ப மடக்க வழி சொல்லாம பிகரோட பேத்தியை நம்ம பேரன் மடக்க வழி சொல்லிகிட்டிருக்கீங்க?

இப்பவே இணைந்தா தான் பேரன் பேத்தி எல்லாம் அண்ணன் தம்பியா வளர்வாங்க.அது என்னவோ போங்க.எல்லாம் நான் சொல்லித்தர வேண்டியதா இருக்கு //
சந்தோஷ் பங்காளி, பாரும்மா சுவாமிகள் சொல்வதை. குழப்பமாக இருக்குதே. நீயே வந்து சரி பண்ணு.

மின்னுது மின்னல் said...

//
ஐயோ ஐயோ அத்தனயும் சூப்பர் பிகராச்சே...சூப்பர் பிகராச்சே...சொக்கா யேசு அல்லா என்ன யேய்யா இங்க இந்தியாவுல படச்ச...இன்னொரு ஜென்மம்னு இருந்தா ஏழேழு ஜென்மத்துக்கும் நான் பாக்கிஸ்தான்ல தான் பொறக்கனும்..
//

ஏன் ?? ஏன் ?? இப்படி...

இதெல்லாம் என்ன ஜுஜுப்பி நம்ம பக்கத்து மாநிலத்தை பாருப்பு தளபதி
ஏன் விழுந்தாருனு தெரியும்.!!!!

பக்கத்தில் இருக்றத விட்டுடு பறக்குறத ஆசை படகூடாது

(பொன்ஸ் மன்னிக்க.)

நேச குமார் said...

:-)


படித்தேன், சிரித்தேன். இந்த வாக்கியங்கள் சிந்திக்கவும் வைத்தன:

//நானும் ஆர்வமாக பாக் மட்டும் பிரியாமல் இருந்து இருந்தால் பிரிவினையின் போது பல உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்காது என்று சொன்னேன். அவன் வேற அப்படினான், இந்த காஷ்மீர் பிரச்சனை ஏற்பட்டு இருக்காதுனுனேன். அப்புறம் என்றான் அவன். நாம ராணுவத்துக்கும், ஆயுதத்துக்கும் இவ்வளவு செலவு செய்யாமல் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி முன்னேறி இருக்கலாம் என்றேன். அவனும் விடாம வேறனு கேட்டான். கொஞ்சம் யோசிச்சி தண்ணீர் பிரச்சனன இருந்து இருக்காது, உணவு பொருட்கள் பிரச்சனை, ஈரான்யில் இருந்து பெட்ரோல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காதுனேன். இன்னும் வேற எதாவதுனான் ஒன்னா இருந்து இருந்தால் நம் நாட்டில் தீவிரவாதம், குண்டு வெடிப்பு போன்றப் பிரச்சனைகள் அவ்வளவாக இருந்து இருக்காது என்றேன்.//

Arjuna_Speaks said...

Siva - unga friend romba correct-a thaan solirukaar :D JOL :D lol

வடுவூர் குமார் said...

பாதி மீட்டிங்குல பிச்சுக்குட்டு வந்து பார்க்கிறேன்.
நல்லாத்தான் இருக்கு சிவா.
இன்னும் இழந்த மாதிரி தெரியவில்லையே??அதான் புகைப்படம் கிடைத்துவிட்டதே!!

முத்துகுமரன் said...

99ல நிக்காதாப்பா, ஜருகண்டி ஜருகண்டி

(துபாய்) ராஜா said...

அன்பரே,ஆராய்ச்சி தொடரட்டும்.

இராம் said...

ஏலே சிவா அதுக்குள்ளே நூறு அடிச்சச்சா...?

வேதா said...

அட அட என்ன ஒரு தொலைநோக்கு பார்வை உங்களுக்கு. இந்த பதிவுக்கெல்லாம் ஒரே நாளில் 100 பின்னூட்டம்.:)
பி.கு.:பொண்ணுங்க படம் தான் போடுவீங்களா? ஏதும் பசங்க போட்டீங்கன்னா எங்கள மாதிரி தாய்குலங்களும் வந்து பார்ப்போம் இல்ல;)

மனதின் ஓசை said...

சிவாவுக்கு "பதிவுலக பிராட்மேன்" பட்டம் அளிக்கப்படுகிறது..

மனதின் ஓசை said...

// அப்போது தான் சாந்தி பெற முடியும்.//

பதிவோட நொக்கத்தை திசை திருப்பும் ஸ்வாமியை கன்டிக்கிறேன்
"சாந்தி"(/கமலா/ விமலா) எல்லாம் வேண்டாம் என்று தானே பாகிஸ்தான் பிகரை ரூட் விட பதிவு போட்டார் சிவா? ..

தேவ் | Dev said...

JAI HIND !!!

MERA BHARAT MAHAAN !!!!

நாகை சிவா said...

//இதெல்லாம் என்ன ஜுஜுப்பி நம்ம பக்கத்து மாநிலத்தை பாருப்பு தளபதி
ஏன் விழுந்தாருனு தெரியும்.!!!!//
மின்னல் இது எல்லாம் நல்லா இல்ல. தளபதி விழுந்தார்னா, அது அவர் தலையெழுத்து அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும். எதிர் வீட்டு பொண்ணுகளை பத்தி தப்பா பேசுவதை இத்தோட விடு.

நாகை சிவா said...

//படித்தேன், சிரித்தேன். இந்த வாக்கியங்கள் சிந்திக்கவும் வைத்தன://
வாங்க நேசகுமார். முதல் முறையாக வந்து உள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை அது தானே.

நாகை சிவா said...

//Siva - unga friend romba correct-a thaan solirukaar :D JOL :D lol //
ஆமாம் அர்ஜுன், அவன் நம்ம பிரண்டுல வேற எப்படி இருப்பான்.
:)))))

நாகை சிவா said...

//பாதி மீட்டிங்குல பிச்சுக்குட்டு வந்து பார்க்கிறேன்.
நல்லாத்தான் இருக்கு சிவா.
இன்னும் இழந்த மாதிரி தெரியவில்லையே??அதான் புகைப்படம் கிடைத்துவிட்டதே!! //
வாங்க குமார் அண்ணாத்த! புகைப்படம் மட்டும் கிடைத்து இருப்பதால் இந்த சோகமே.....

அங்கனயும் மீட்டிங் பிரச்சனையை தானா! :)

நாகை சிவா said...

//99ல நிக்காதாப்பா, ஜருகண்டி ஜருகண்டி //
ஆகா என்ன ஒரு பாசம். முத்துக்குமரன் முதல் முறையாக வந்து இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். அடிக்கடி வந்து போங்க அண்ணன்(நண்பா)

நாகை சிவா said...

//அன்பரே,ஆராய்ச்சி தொடரட்டும்.//
ராசா வாங்க ராசா. என்ன பண்ணுறது நாங்க இன்னும் க.பி. தான். அதான் இது மாதிரி ஆராய்ச்சி எல்லாம். உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி.

நாகை சிவா said...

//ஏலே சிவா அதுக்குள்ளே நூறு அடிச்சச்சா...? //
ஆமாம் மதுர தங்கம். நேத்தே 99 ஆச்சு. நான் தான் மணியாகுது போயிட்டேன். எல்லாம் உன் போன்ற நண்பர்கள் ஆதரவால் தான்.
:)

நாகை சிவா said...

//அட அட என்ன ஒரு தொலைநோக்கு பார்வை உங்களுக்கு. இந்த பதிவுக்கெல்லாம் ஒரே நாளில் 100 பின்னூட்டம்.:) //
ஹிஹி..... ஹிஹி....

//பொண்ணுங்க படம் தான் போடுவீங்களா? ஏதும் பசங்க போட்டீங்கன்னா எங்கள மாதிரி தாய்குலங்களும் வந்து பார்ப்போம் இல்ல;) //
சரி தான். எங்கள மாதிரி தானே நீங்களும். சீக்கிரமே படங்கள் எடுத்து போட்டு விட்டா போச்சு. என்ன நம்ம பசங்க இது மாதிரி ஒரு ஆதரவு அந்த பதிவுக்கு தருவாங்களா என்று தான் தெரியல. இருந்தாலும் நீங்க தனிப்பட்ட உங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையில் அந்த முயற்சியில் இறங்குறேன்.

நாகை சிவா said...

//சிவாவுக்கு "பதிவுலக பிராட்மேன்" பட்டம் அளிக்கப்படுகிறது.. //
ஏன் ஹமீது என்ன இப்படி கவுக்குற. இப்ப தான் பதிவுலகில் தவழ ஆரம்பித்து இருக்கேன். அது உனக்கு பிடிக்கலையா. அப்படி என்ன என் மேல கோபம் உனக்கு :(

நாகை சிவா said...

//பதிவோட நொக்கத்தை திசை திருப்பும் ஸ்வாமியை கன்டிக்கிறேன்
"சாந்தி"(/கமலா/ விமலா) எல்லாம் வேண்டாம் என்று தானே பாகிஸ்தான் பிகரை ரூட் விட பதிவு போட்டார் சிவா? .. //
ஹமீது அந்த சுவாமிகள் ரொம்ப நல்லவர்ப்பா. திசை திருப்பும் நோக்கம் எல்லாம் என்றுமே அவருக்கு கிடையாது. அவர் கூறும் உள்கருத்தை உள்வாங்கி கொண்டால் உனக்கே புரியும்.
சாந்தி வேண்டாம் என்று நான் எங்கு சொன்னேன். :))))))))

நாகை சிவா said...

//JAI HIND !!!

MERA BHARAT MAHAAN !!!! //

ஜெய்ஹிந்த்!!!!
ஜெய்ஹிந்த்!!!!


யம்மா தேவ் இப்படி!

வேதா said...

//நீங்க தனிப்பட்ட உங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையில் அந்த முயற்சியில் இறங்குறேன். //
பாத்து இறங்குங்க:) ஒரேடியா உங்க ஆளுங்களே கவுத்துட போறாங்க:) ஆனா என் ஆதரவு எப்பவும் உண்டு, ஹிஹி:):)

மனதின் ஓசை said...

//சாந்தி வேண்டாம் என்று நான் எங்கு சொன்னேன். :))))))))//


ஓஹோ .. கத அப்படி போகுதா..

கீதா சாம்பசிவம் said...

ம்ஹும், இது ஒரு பதிவு, அதுக்கு இத்தனை பின்னூட்டமா? இந்த மாதிரி மொக்கப் பதிவு எத்தனை போட்டாலும் என்னோட பதிவு மாதிரி வருமா? அதான் நல்ல வேளையா முன்னெச்சரிக்கையா உங்களுக்குக் காக்காயை அனுப்பி வைத்தேன். வந்திருக்குமே?

நாகை சிவா said...

//ஒரேடியா உங்க ஆளுங்களே கவுத்துட போறாங்க:) ஆனா என் ஆதரவு எப்பவும் உண்டு, ஹிஹி:):)//
நம்ம பசங்க அப்படி ஒன்னும் கவுத்துட மாட்டாங்க. நம்ம மேல அவிங்களுக்கு பாசம் அதிகம். பாசக்கார பயல்க.

நீங்க வேற ஆதரவு தரேன் சொல்லிட்டிங்க அப்புறம் என்ன. போட்டுட்டா போச்சு.

நாகை சிவா said...

//ஓஹோ .. கத அப்படி போகுதா.//
எப்படி போகுது. இங்க பாரு நீனா கண்டத கற்பனை பண்ணி அப்புறம் அசிங்கப்படாத சொல்லிட்டேன்.
ஒரு வார்த்த சொல்ல விட மாட்டேங்குறாங்கப்பா.

நாகை சிவா said...

//அதான் நல்ல வேளையா முன்னெச்சரிக்கையா உங்களுக்குக் காக்காயை அனுப்பி வைத்தேன். வந்திருக்குமே? //
காக்காயையும் வரல, குயிலும் வரல்.

எப்ப வந்தீங்க பெங்களுரில் இருந்து ?

Vajra said...

..
"பாக். பிரிந்ததால்....."
123 Comments -
..


அடப்பாவிங்களா...தமிழ்மணம் இப்புடி காஞ்சி கெடக்கா...!! சும்மா ஏப்ப சாப்பையா ஏதோ 4 figure போட்டு இப்புடி செஞ்சுரி எல்லாம் அடிக்கிறீங்களேயா? உங்களுக்கே ஞாயமா இருக்கா?

எங்கெய்யா அந்த போலீஸ்காரன்... பின்னூட்டக் கயமைத்தனம் ன்னு மாமூல் கேட்க வரல்லியா?

:D

நாகை சிவா said...

//அடப்பாவிங்களா...தமிழ்மணம் இப்புடி காஞ்சி கெடக்கா...!! சும்மா ஏப்ப சாப்பையா ஏதோ 4 figure போட்டு இப்புடி செஞ்சுரி எல்லாம் அடிக்கிறீங்களேயா? உங்களுக்கே ஞாயமா இருக்கா?//
ஆஹா சங்கர். வரவே வராத ஆட்கள் எல்லாம் வராங்கப்பா. என்ன அதிசயம்.

இந்த ஏப்ப சாப்பையா என்ற வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இஸ்ரேலில் போனவுடன் நம் எதிர் வீட்டை மறப்பது அவமதிப்பது தவறுங்கண்ணா.

//எங்கெய்யா அந்த போலீஸ்காரன்... பின்னூட்டக் கயமைத்தனம் ன்னு மாமூல் கேட்க வரல்லியா?//
இதுல எங்கண்ணா பின்னூட்ட கயமைத்தனம் நடந்து இருக்கு.

கால்கரி சிவா said...

//ஆஹா சங்கர். வரவே வராத ஆட்கள் எல்லாம் வராங்கப்பா. என்ன அதிசயம்.
//

எல்லாம் பாகிஸ்தானிய சகோதரிகளின் தாக்கம்தான்

Syam said...

//சும்மா ஏப்ப சாப்பையா ஏதோ 4 figure போட்டு இப்புடி செஞ்சுரி எல்லாம் அடிக்கிறீங்களேயா? உங்களுக்கே ஞாயமா இருக்கா?//

ஏனுங்க சங்கரு இத போய் ஏப்ப சாப்ப பிகருனு சொல்றீங்களே...பங்கு இத்தன சூப்பர் பிகருங்கள காட்டிருக்கார் இதுக்கு 1000 பின்னூட்டம் வந்தாலும் தகும்... :-)

(பங்கு நீ அனுப்பின ஈமெயில்கு என்னாலான சப்போர்ட் உனக்கு) :-)

Ramya said...

romba nallave irukku.edho serious matternu paatha jollu matteraa irukku.

Gopalan Ramasubbu said...

பாக்ல இருந்து இங்க வந்து படிக்கற பொண்ணுங்கள உங்க பேராவூரணி நண்பர் பார்க்கல. அட அட, என்னமா இருப்பாங்க தெரியுமா? ;)

மனதின் ஓசை said...

//எப்படி போகுது. இங்க பாரு நீனா கண்டத கற்பனை பண்ணி அப்புறம் அசிங்கப்படாத சொல்லிட்டேன்.//

என்னைய்யா இப்படியெல்ல்லாம் மிரட்டர..இனி உன் பேச்சு "கா"....

நாகை சிவா said...

//எல்லாம் பாகிஸ்தானிய சகோதரிகளின் தாக்கம்தான் //
சிவா அண்ணன், அது அவருக்கு மட்டும் தானா, இல்ல உங்களுக்குமா?
:)))))))))

நாகை சிவா said...

//ஏனுங்க சங்கரு இத போய் ஏப்ப சாப்ப பிகருனு சொல்றீங்களே...பங்கு இத்தன சூப்பர் பிகருங்கள காட்டிருக்கார் இதுக்கு 1000 பின்னூட்டம் வந்தாலும் தகும்... :-)//
அப்படி கேளு பங்கு.
இருந்தாலும் 1000 பின்னூட்டம் எல்லாம் ரொம்ப அதிகம். அது நமக்கு வேணாம்.

நாகை சிவா said...

//romba nallave irukku.edho serious matternu paatha jollu matteraa irukku. //
தாங்கஸ்ங்க ரம்யா. நானும் அப்படி தாங்க முதல நினைச்சேன். பயபுள்ள ஏமாத்திடுச்சு.:))))

நாகை சிவா said...

//பாக்ல இருந்து இங்க வந்து படிக்கற பொண்ணுங்கள உங்க பேராவூரணி நண்பர் பார்க்கல. அட அட, என்னமா இருப்பாங்க தெரியுமா? ;) //
அவனுக்கு தெரியுமா தெரியாதானு எனக்கு தெரியாது, ஆனா எனக்கு தெரியும், நிறைய பாக் பெண்களை பார்த்து உள்ளேன். நல்லா தான் இருப்பாங்க. :)

Raji said...

Seri edho perisa vishayam solla poreenga nu partha, idhu romba chinna pulla thanama illa iruku:-)

Belated Friendship wishes nanba!

இராம் said...

ஏ சிவா பார்த்துக்கோ நான் வந்து உனக்கு மொதபோணி போட்டதனலா 135 பின்னூட்டம் வாங்கி இருக்க....!

சரி போ நல்லவே இரு...:-))))

இலவசக்கொத்தனார் said...

நல்லா தேறிட்டீங்கப்பா!

இராம் said...

//இலவசக்கொத்தனார் said...
நல்லா தேறிட்டீங்கப்பா! //

வஷ்டர் வாயிலிருந்தே வந்திருச்சிப்பா புலி...

கொத்ஸ் நீங்கதான் எல்லோருக்கும் குரு ,இப்படி பின்னூட்டம் வாங்குறதிலே...:-)

நாகை சிவா said...

//Seri edho perisa vishayam solla poreenga nu partha, idhu romba chinna pulla thanama illa iruku:-)
Belated Friendship wishes nanba! //
வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜி!

நான் இன்னும் சின்ன பையன் தானே
:))) அதான் இப்படி

நாகை சிவா said...

//ஏ சிவா பார்த்துக்கோ நான் வந்து உனக்கு மொதபோணி போட்டதனலா 135 பின்னூட்டம் வாங்கி இருக்க....!
சரி போ நல்லவே இரு...:-)))) //
யோவ், இது என்ன கடையா, முதல் போணி கடைசி போணினு சொல்லிகிட்டு இருக்க.
முதல் பின்னூட்டம் போட்தற்கு வேணும் என்றால் புளியோதரை கொடுக்கலாம்.
நீங்க எல்லாம் இருக்கும் போது நான் நல்லாதானே இருப்பேன். :)

நாகை சிவா said...

//நல்லா தேறிட்டீங்கப்பா! //
எல்லாம் உங்க தயவு தான் தெய்வமே!
உங்க கிட்ட பாடம் படிச்ச பெயர காப்பாத்த வேண்டாமா.
இது போல உங்க ஆசிர்வாதம் என்றும் இந்த அடியேனுக்கு தேவை.

நாகை சிவா said...

//வஷ்டர் வாயிலிருந்தே வந்திருச்சிப்பா புலி...//
ராம் கண்ணு, அது வஷிடர்.
மதுரை பய நீ, தமிழில் இவ்வளவு வீக்காக இருக்கலாமா. கொத்துஸின் வெண்பா கிளாஸ்க்கு போ.
கொத்துஸ் இங்கன ஒரு ஆள் வகுப்புக்கு மாட்டி இருக்கு. அத அங்கன சீக்கிரமே இட்டுக்குனு வரேன்.

Shuba said...

Indian girls kku ithu big insult!

நாகை சிவா said...

//Indian girls kku ithu big insult! //
சே...சே.... நீங்க அப்படி எல்லாம் தப்பு கணக்கு போட கூடாது. நாங்க எல்லாம் தேசியவாதிகள். எதிர் வீடு பார்க்க மட்டும் தான்.....
:))))

Ilamadhi said...

//நாங்க எல்லாம் தேசியவாதிகள். எதிர் வீடு பார்க்க மட்டும் தான்.....
:)))) //

Nalla Desaptru dhaan...

இராம் said...

//ராம் கண்ணு, அது வஷிடர்.
மதுரை பய நீ, தமிழில் இவ்வளவு வீக்காக இருக்கலாமா.//

ஏ புலி ஒரு எழுத்து தப்பா போட்டற கூடாதே, உடனே அதை புடிச்சுக்கிட்டு ஏத்துறது, ஹீம் நீ கூட தப்புதான் அது வஷிடர் இல்ல வஷிஷ்டர்....!

//கொத்துஸின் வெண்பா கிளாஸ்க்கு போ. //

அவரு ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும். என்னயல்லாம் சேர்த்துக்க மாட்டார்... :-))))

//கொத்துஸ் இங்கன ஒரு ஆள் வகுப்புக்கு மாட்டி இருக்கு. அத அங்கன சீக்கிரமே இட்டுக்குனு வரேன். //

உன்னோட தலவிதி... போ கூடவர்றேன்

Syam said...

//எதிர் வீடு பார்க்க மட்டும் தான்..... //

போட்டு தாக்கு... :-)

நாகை சிவா said...

//Nalla Desaptru dhaan...//
ஆமாம் இல்லயா பின்ன.
:))))

நாகை சிவா said...

//ஏ புலி ஒரு எழுத்து தப்பா போட்டற கூடாதே, உடனே அதை புடிச்சுக்கிட்டு ஏத்துறது, ஹீம் நீ கூட தப்புதான் அது வஷிடர் இல்ல வஷிஷ்டர்....!//
ஹிஹி.... ஒரு எழுத்த விட்டுட்டேன்... அத எல்லாம் கண்டுக்காத தங்கம்

நாகை சிவா said...

////எதிர் வீடு பார்க்க மட்டும் தான்.....
போட்டு தாக்கு... :-) //
அது உண்மை தானே பங்காளி. நம்ம வீட்ட வுட்டுக் கொடுக்க முடியுமா?

Syam said...

//நம்ம வீட்ட வுட்டுக் கொடுக்க முடியுமா?
//

கக்கக்க போ.... :-)