Sunday, April 02, 2006

உலக இரட்சகர்!




தற்பொழது நடந்து கொண்டு இருக்கும் 10ஆம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடத்தில் உலக இரட்சகர் யார் என்று கேள்வி கேட்க பட்டதாக தினமலர் மூலம் படிக்க நேர்ந்தது. அதற்கு விடைகளாக 1, சிவன் 2, ஏசு 3, திருமால் என கொடுக்கபட்டு இவற்றில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டு உள்ளார்க்கள். இது வன்மையாக கண்டிக்க பட வேண்டியது. இது மாணவர்க்களிடம் மத வேற்றுமை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஏசு காவியம் போன்ற கிறிஸ்துவ பாடத்தில் இருந்து இந்த கேள்வி கேட்க பட்டு இருந்தாலும் விடைகளில் இந்து கடவுள் ஆன சிவன் மற்றும் திருமால் சேர்க்கபட்டது மிகவும் தவறு. இந்து மதத்தை பொறுத்தவரை திருமால் தான் உலகத்தை காப்பவர்(இரட்சகர்). அதனால் மத உணர்வை புண்படுத்தும் படியான கேள்விகளை தவிர்ப்பது நன்று.இதை கேள்வி தாள் தயாரிப்பவர்க்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கல்வி இயக்குனரகமும் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இது மாதிரியான தவறுகள் எந்த காரணமாகவும் மறுபடியும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

2 comments:

பரஞ்சோதி said...

கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

கேள்வியை தயாரித்தவரும், அதை சரி சார்த்தவரும் கட்டாயம் படித்த முட்டாள்கள் தான்.

வஜ்ரா said...

ஐயா, பதிவைப் பார்த்துப் போடுங்கள். இந்த கேள்விக்கு பதில், ஏசு என்றால் "மதச்சார்பின்மை" திருமால் என்றால் இந்து அடிப்படைவாதி.

பாடத்தில் இருக்கும் கேள்வியய் கேட்டுட்டு போகவேண்டியது தானே. எதற்காக இந்த விஷப் பரீட்சை. தவிற்க பட வேண்டிய கேள்வி.

மிகவும் கண்டிக்கப் படவேண்டிய விஷயம்.

ஷங்கர்.