Tuesday, July 07, 2009

சிதறல்கள்

நேற்று முன் தினம் நடந்து விம்பிள்டன் டென்னிஸ் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக அமைந்து இருந்தது. கிட்டதட்ட 4 1/2 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் மிகவும் போராடி பெடரர் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த போதிலும் ரோடிக் கின் ஆட்டம் பாராட்ட பட வேண்டிய ஒன்று. சமீபத்தில் நான் ரசித்த போட்டி இது தான். போன வருட விம்பிள்டன் இறுதி போட்டி பார்க்கவில்லை என்பது வேறு விசயம். 2001 ல் இவான்செவிக் மற்றும் ராப்டரின் ஆட்டத்திற்கு பிறகு இது தான் எனக்கு பிடித்த ஆட்டம். இந்த ஆட்டம் விம்பிள்டனின் முதல் ஆறு சிறந்த இறுதியாட்டங்களில் ஒன்றாக தேர்வு பெற்று உள்ளது. பார்க்க கிடைத்தவர்கள் உண்மையிலே பாக்கியசாலிகள். இருவரின் ஆட்டத்தை பார்த்து யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்றே நினைக்க வைத்தார்கள். 50 ஏஸ்கள் போட்டு பெடரர் கோப்பையை தட்டி சென்றார். தருமி, மருத்துவர் அய்யா ராமநாதன் மிகவும் மகிழ்ந்து இருப்பார்கள். நான் ரோடிக் பக்கம். மிகவும் அருமையான ஒரு ஆட்டம் தந்ததுக்காக. It's not winning that's important, it's how you play the game. Good Job Roddick.

நம்ம பயஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இறுதியாட்டம் வரை வந்தார்.

இந்த நேரத்தில் வருண பகவானுக்கு என் நன்றியை சொல்லிக்கனும், இல்லையென்றால் கிரிக்கெட் டில் சரணாகதி அடைந்து இருப்போம்.

******

காணவில்லை - 1!

மக்களே! நம்ம ஊரில் குட்டி சாமியார் குட்டி சாமியார் னு ஒருத்தர் இருந்தாரே, அதான்ப்பா பரணிதர ஸ்ரீஹரி ராகவேந்திர சுவாமி. என்னப்பா ஆனார் அவர். ரொம்ப நாளாக அவரை பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.

காணவில்லை - 2!

நம்ம தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதி னு ஒருத்தவங்க சினிமாவில் நடிச்சாங்களே, அங்க எங்கப்பா இப்போ? அதான்ப்பா ஆல்பம், ஸ்ரீ, தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடிச்சாங்களே, அவங்களே தான்! ரொம்ப மிஸ் பண்ணுறேனு நினைக்காதீங்க, லைட்டா தான் ;)

******

நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா என்று கதற வைக்கும் சக்தி இசை கருவிகளை கற்றுக் கொள்ளும் நம் நண்பர்களால் நமக்கு அடிக்கடி வாய்க்கும். கீ-போர்டு வாசிக்க கற்றுக் கொள்ளும் அனைவரும் பயிலும் அல்லது பயில விரும்பும் ஒரு பாடல் ஏக், தோ, தின் பாட்டு. அதை வாசிக்கா விட்டால் அந்த கருவியில் தேர்ச்சி பெறாத மாதிரி ஒரு எண்ணம் அவர்களுக்கும் ஏற்படுமோ என்னவோ! நான் படும் கஷ்டம் எனக்கே! ஏண்டா காலங்காலமா இதே தானா? மாத்துங்கப்பா, முடியல....ப்ளீஸ்..... இன்னும் சிலர் ஆரம்பத்தில் பல பாடல்களை வாசித்து பிறகு இந்த பாடலை முடிவு தொடுவதாக (அதான்ப்பா finishing touch ஆம்)இசைக்கிறார்கள். ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?

கீ-போர்டு பார்ட்டிகள் இப்படி என்றால் கிடார் மக்கள் என் இனிய பொன் நிலவே னு சட்னு பிரதாப் போத்தானா மாறி விடுகிறார்கள். ஏதோ ராஜா தெரியாம அந்த பாட்டுக்கு கிடாரை உபயோகப்படுத்திட்டார். அதுக்குனு இப்படியா? என்னை பார்த்தால் பாவமா இல்லையா?

இது போல் என்னை இம்சை பண்ணும் அதிலும் முக்கியமாக நான் நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது அலைப்பேசியில் அழைத்து இது போல் இம்சை கூட்டும் நண்பர்களுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனால் என் உற்ற நண்பனில் ஒருவன் கிடார் கற்றுக் கொண்டு என் பிறந்தநாள் அன்று புதிதாக கிடார் வாங்கி அவன் நண்பர்களையும் உடன் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறியது போல் எதாச்சும் புதுமையாக செய்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்பது உபரித்தகவல்.

23 comments:

கவிதா | Kavitha said...

"சிதறல்கள்"

:) நல்லா இருக்கு...

//நான் ரோடிக் பக்கம். மிகவும் அருமையான ஒரு ஆட்டம் தந்ததுக்காக.//

அவ்வ்வ்!! கேம் பார்த்தீங்க தானே? கிரவுண்டுல உங்களை மாதிரி நிறைய பேரு ரோடிக் 'க்கு தான் சப்போர்ட் செய்தாங்க.. ஃபெடரர் ?!! ம்ம்.. ரொம்ப சப்போர்டு இல்ல.. :( அது என்னவோ எனக்கு தனியா தெரிந்தது.. ஏன் மக்கள் இப்படி ஓரவஞ்ஜனை செய்யறாங்கன்னு :(

//என் பிறந்தநாள் அன்று புதிதாக கிடார் வாங்கி அவன் நண்பர்களையும் உடன் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறியது போல் எதாச்சும் புதுமையாக செய்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்பது உபரித்தகவல்.//

ம்ம்ம்.......பாவம் ஊர்ல எல்லாரும் அவர் வாசிப்பை கேட்டு வெறுத்து போயி இருப்பாங்க..நீங்க மட்டும் தான் பாக்கியா இருந்து இருக்கும்னு நினைக்கிறேன்.. :)))))

காணவில்லை 1, 2 நாட்டுக்கு ரொம்பவே முக்கியம்..!! :)

Raz said...

eppa paru game pakkuren pakkuren nu mokka poda vendiyathu... appadi enna than irukumo intha pasangalaluku game pakkurathula....

kanavillai nu kavala padathe... rendu perum missing na neeye maths potuko ;)

//அதிலும் முக்கியமாக நான் நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது அலைப்பேசியில் அழைத்து இது போல் இம்சை கூட்டும் நண்பர்களுக்கு மன்னிப்பே கிடைய//
nee ippadi ellam blog pota nan call pannratha nipatipen ninachiya... nalaiku kalailayum call varum paru:P

btw, bday ku call panni, frndz a vitu pada vaitha .... nandri ;)

கோபிநாத் said...

\\இது போல் என்னை இம்சை பண்ணும் அதிலும் முக்கியமாக நான் நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது அலைப்பேசியில் அழைத்து இது போல் இம்சை கூட்டும் நண்பர்களுக்கு மன்னிப்பே கிடையாது. \\

கொலைவெறியோடு வழிமொழிக்கிறேன் ;))

கலையரசன் said...

பாஸ்! உங்க பிறந்தநாளுக்கு எனக்கு கட்டிங் வாங்கி குடுங்க.. அப்புறம் பாருங்க, நம்ம தனிதிறமையை!!

Vidhya Chandrasekaran said...

:))

தருமி said...

அது என்னவோ பெடரர் பக்கம்தான் முதலில். போனதடவையே ரொம்ப அழுதுட்டாரா .. அதோட இப்ப ரபா வேற இல்லியா .. தல ஈசியா ஜெயிச்சுரும்னு பார்க்க ஆரம்பிச்ச பிறகுதான் ராடிக் ஆடிய ஆட்டம் ரசிக்க வச்சுது. அதுவும் மொத செட்டில கடைசில அடிச்சி ஆடி அத எடுத்ததும் ஆஹான்னு ஆயிரிச்சி... தோக்காமலே தோத்துட்டார் =- அந்தக் கடைசி கேம்ல...

***

சினிமா ஆட்களிலேயே வெறுக்குற ரெண்டு மூணுபேர்ல ஒரு ஆளான தேங்காய் பேத்தி - கண்ணுகூட பேய்க்கண்ணு மாதிரி இருக்குமே - அதயா மிஸ் பண்றீங்க .. :(

வெட்டிப்பயல் said...

நானும் ஃபெடரர் ஜெயிக்கணும்னு தான் பார்க்க ஆரம்பிச்சேன். ஆனா கடைசியா ராடிக் ஜெயிச்சாலும் ஓகேனு முடிவுக்கு வந்துட்டேன். நல்ல ஆட்டம்...

நாகை சிவா said...

@ கவிதா!

//ஃபெடரர் ?!! ம்ம்.. ரொம்ப சப்போர்டு இல்ல.. :( //

அப்படியா? நீங்க சொல்லி தான் தெரியுது.

//அது என்னவோ எனக்கு தனியா தெரிந்தது.. ஏன் மக்கள் இப்படி ஓரவஞ்ஜனை செய்யறாங்கன்னு :(//

லண்டன் மக்களை தான் கேட்கனும்.

பெடரர் ருக்கு தான் சப்போர்ட் அதிகமாக இருந்தது. ரோடிக் கின் ஆட்டத்தை கண்டு யாரு வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்ற எண்ணமே பெரும்பாலானோர்க்கு இருந்தது என்பது என் கருத்து!

நாகை சிவா said...

@ Raz!

//eppa paru game pakkuren pakkuren nu mokka poda vendiyathu... appadi enna than irukumo intha pasangalaluku game pakkurathula.... //

சிலருக்கு வாழ்க்கையே ஒரு விளையாட்டு, சிலருக்கு விளையாட்டே வாழ்க்கை... எதாச்சும் புரியுதா? ;)

//kanavillai nu kavala padathe... rendu perum missing na neeye maths potuko ;)//

நீயும் உன் கணக்கும்....... ஒடி போயிடு....

நாகை சிவா said...

@ கோபி,

//கொலைவெறியோடு வழிமொழிக்கிறேன் ;))//

:) சகா நீ இன்னும் பழச மறக்க போல இருக்கே ;))))

நாகை சிவா said...

// கலையரசன் said...

பாஸ்! உங்க பிறந்தநாளுக்கு எனக்கு கட்டிங் வாங்கி குடுங்க.. அப்புறம் பாருங்க, நம்ம தனிதிறமையை!!//

பாஸ்! என்ன பாஸ் நீங்க... கட்டிங் னு சொல்லிட்டீங்க... நீங்க பீல் பண்ணுங்க.. ஃபுல் ஃபுல்லா இறக்கிடுவோம்!

நாகை சிவா said...

@ வித்யா!

உங்க புன்னகைக்கு பின்பு ஏதும் நக்கல் இல்லையே?

நாகை சிவா said...

// தருமி said...

//அது என்னவோ பெடரர் பக்கம்தான் முதலில். போனதடவையே ரொம்ப அழுதுட்டாரா .. அதோட இப்ப ரபா வேற இல்லியா .. தல ஈசியா ஜெயிச்சுரும்னு பார்க்க ஆரம்பிச்ச //

எல்லோரும் அப்படி தான் நினைத்தான். நான் என்னத்த மேட்ச் பாத்துக்கிட்டு கூட இருந்தேன்.

//தோக்காமலே தோத்துட்டார் =- அந்தக் கடைசி கேம்ல...//

யார் முதலில் தவறு பண்ண போகிறார்கள் என்று தான் போட்டியே. அதில் கொஞ்சமாக ரோடிக் விட்டுட்டார்.

***

//சினிமா ஆட்களிலேயே வெறுக்குற ரெண்டு மூணுபேர்ல ஒரு ஆளான தேங்காய் பேத்தி - கண்ணுகூட பேய்க்கண்ணு மாதிரி இருக்குமே - அதயா மிஸ் பண்றீங்க .. :(//

பேய்க் கண்ணாவே இருக்கட்டுமே, அழகான பேய் கண்னா ;)

நாகை சிவா said...

@ வெட்டி!

அதே! இது போன்று போட்டிகள் அமைந்தால் யார் ஜெயித்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.

ரவி said...

புலி.

குட்டி சாமியார் வளர்ந்துட்டார். ரெண்டு குட்டிகளோடு குஜாலா இருப்பதாக கேள்வி.

நீங்க மிஸ் பண்ற நடிகை என் தங்கமணியோட க்ளாஸ்மெட்டு. மின்னஞ்சல் கேட்டு சொல்லவா ?

தருமி said...

நான் சொன்னது - //சினிமா ஆட்களிலேயே வெறுக்குற ரெண்டு மூணுபேர்ல ஒரு ஆளான தேங்காய்// அந்த ஆளு பத்தினதுதான் ...உங்க "அழகு பேய்க்கண் அழகி"யைச் சொல்லலைங்க ... :(

பாச மலர் / Paasa Malar said...

அப்படி இப்படி அசைய விடாமல் பார்க்க வைத்தனர் பெடரரும்..ரோடிக்கும்..பெடரர் வெல்லும்போது எப்போதும் வரும் சந்தோஷம் முழுமையாக இல்லை இந்தமுறை..ரோடிக்கான வருத்தம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது..

சுசி said...

உங்க பதிவு பக்கம் இத்தனை நாள் வராததுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கோ என்னமோ. என்னோட முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டம் போட்டவர் நீங்கதான். அதனால நான் அழைக்கப்பட்ட ஒரு தொடர் பதிவுக்கு உங்களையும் அழைச்சிருக்கேன். வந்து எழுதினீங்கன்னா சந்தோஷப்படுவேன்.

Porkodi (பொற்கொடி) said...

appaa! unga post and matha comments ellame naanum ninaithavai :-)

federer jeyithatharku pada vendiya sandhosham konjam kurainju thaan pochu, superb game!!

Porkodi (பொற்கொடி) said...

hahahaha... thengai pethi.. haiyo haiyo.. enna siva idhu??

Porkodi (பொற்கொடி) said...

evlo nerama kaal kadukka nikradhu? pudhu post epo thorapinga??

Jawahar said...

ம்ம்ம்ம் எனக்குக் கூட சுருதி காணாமப் போனதுலே வருத்தம்தான். என்ன பண்றது, நானும் நாகப்பட்டினத்திலே 17 வருஷம் குப்பை கொட்டினவந்தானே! முனிசிபல் கேர்ல்ஸ் ஹை ஸ்கூலிலே எத்தனை பேரைப் பாத்து அந்தக் காலத்திலே ஜொள் விட்டிருப்பேன்!

htt://kgjawarlal.wordpress.com

Porkodi (பொற்கொடி) said...

solla marandhutene, vaazhthukkal puli aadu anadhukku! :D epo bali?