Monday, July 06, 2009

ரெயில்வே பட்ஜெட்!

சில நாட்கள் முன்பு ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து இருந்தாங்க. சில நல்ல விசயங்கள் இருக்க தான் செய்தது. ஆனால் மகளிர்கான தனி கழிப்பறை வசதி என்ற செய்தி சிறிதே தனித்துப்பட்டது எனக்கு. வைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை எப்படி அமல்படுத்த போகின்றார்கள் என்ற அளவில் தான். இருக்கும் இரண்டை ஆளுக்கு ஒன்றாக மாற்றியா? அது தீர்வாகாது என்பது என் எண்ணம். அதற்கு பதில் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பது ஒரு வழி, அல்லது கழிப்பறைக்கு என்றே தனியாக சில பெட்டிகள் சேர்க்கலாம். தற்சமயம் வரை கழிப்பறையில் வெறும் ஒட்டை தான் இருக்கும் (தவறு என்றால் சுட்டிக் காட்டவும்) அதற்கு பதில் இது போன்ற தனிப்பட்ட பெட்டிகள் வைப்பது என்றால், அந்த அந்த நிறுத்தங்களில் அந்த கழிப்பறை பெட்டியை மட்டும் கழட்டி வேறு பெட்டி இணைத்து கொள்ளலாம். சுத்தம் செய்வதும் வசதியாக இருக்கும். சுற்றுசூழல் மாசுவை தடுக்கலாம். கூடவே கதவு ஒரத்தில் நின்று பயணம் செய்பவர்களுக்கும் துற்நாற்றத்தில் இருந்து தப்பிக்க வழி வகுக்கும்.

*****

கூடவே இந்த அளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டிய ஒன்று. அதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கூடவே சில மாதங்களுக்கு முன்பு கூட ரெயில்வே துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிரிப்பாய் சிரித்தது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் தேவை.

******

இந்த பட்ஜெட் ல் பாராட்ட பட வேண்டிய விசயங்களில் ஒன்று, ரயில்வே க்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு லீஸ் க்கு விடும் திட்டம். எவ்வளவு இடம் ரயில்வே வசமிடம் எதற்க்கும் உதவாமல் உள்ளது என்பது நம்மில் யாரு ஊரில் எல்லாம் ரயில் நிலையம் உள்ளதோ அவர்கள் அறிவார்கள். வெறும் புதராக மண்டி கிடைக்கும் அந்த இடங்களில் என்ன நடக்கிறது என்பதும் நாம் அறிந்தது தான். அதற்கு முடிவு கட்டும் விதமாக இது ஒரு நல்ல விசயம். வருமானத்துக்கும் வருமானும் ஆச்சு. சமூக விரோதிகளுக்கு கூடாரமாக அமைவதிலும் இருந்தும் ஒரு பெரிய விடுதலை கிடைக்கும்.

******

சென்னை டூ டில்லி பாயிண்ட் டூ பாயிண்ட் ரெயில்- நல்ல முடிவு. விமான சேவை மலிந்து விட்ட இந்த காலத்தில் இது போன்ற திட்டங்கள் தான் நல்ல பயனை தரும். இது போன்ற பல பாயிண்ட் டூ பாயிண்டு ரெயில்கள் வரவேற்கதக்கதே. அதே நேரத்தில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பது மக்களுக்கு பயன் தரும்.

******

எங்க ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு னு எர்ணாக்குளம் டூ திருச்சி வரை இருந்த எக்ஸ்பிரஸ் வண்டியை நாகூர் வரை நீட்டித்து உள்ளார்கள். கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர் வரும் பக்தர்களுக்கு கண்டிப்பாக பயன் தரும். அதே போல் பெங்களூர் ரெயிலையும் நீட்டித்து இருந்தால் இன்னும் பயன் தந்து இருக்கும். வேளாங்கண்ணி திட்டம் என்ன ஆச்சோ. இதை எல்லாம் நம் மக்கள் பிரநிதிகள் கோரிக்கை வைத்து செய்து இருக்கனும். அவங்களை என்னத்த சொல்ல. நல்லா இருங்கடே.

******

என்ன தான் மாஞ்சு மாஞ்சு பட்ஜெட் போட்டாலும் அதை செயல்படுத்துவதில் தான் உள்ளது திறமை. அந்த அந்த கால அளவில் குறித்த திட்டங்களை நிறைவேற்றுவது தான் நம் நாட்டின் தற்போதைய அவசர தேவை,அதிலும் முக்கியமாக கட்டுமான துறையில். அதை விடுத்து நாகூர் டூ திருவாரூர் வரை இருவத்தி சொச்ச கி.மீ போட 2004ல் இருந்து 2009 வரை ரெயிலை நிறுத்தி வைத்து அதற்கு பல போராட்டங்களை நடத்தி வேலை முடிக்க வைத்து ரெயில் கொண்டு வர நாங்கள் பட்ட பாடு மீண்டும் தொடர்ந்தால் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. வாழ்க பாரதமே தான் !

******

11 comments:

கீதா சாம்பசிவம் said...

ஒரே பதிவில் அனைத்து விஷயங்களையும் சேர்த்தது உங்கள் திறமையைக் காட்டுது. முதல் ஆலோசனை வரவேற்கப் படவேண்டிய ஒன்றே. அருமையா சிந்திச்சு எழுதி இருக்கீங்க. பாராட்டுகள்.

கீதா சாம்பசிவம் said...

அட, மீ த ஃபர்ஷ்டு??? :))))))))

$anjaiGandh! said...

கலக்கல் புலி..

Raz said...

unna adutha economic times analyzer a poturalam.

நாகை சிவா said...

@ கீதா!

நீங்களே பர்ஸ்டூ :)

விரிவா எழுத ஞானம் பத்தலை அதான் சுருக்கி ஒரே பதிவில் எல்லாத்தையும் போட்டாச்சு. :)))

நாகை சிவா said...

@ சஞ்சய்!

அட அட... பிரம்ம ரிஷி யிடம் இருந்தே பாராட்டா? அப்ப கலக்கல் தான். நன்றிங்கோ :)

நாகை சிவா said...

@ Raz!

நக்கலை குறைக்கலாம், உடம்பிற்கு நல்லது.... ;)

கோபிநாத் said...

பகிர்வுக்கு நன்றி சகா...

\\அல்லது கழிப்பறைக்கு என்றே தனியாக சில பெட்டிகள் சேர்க்கலாம்.\\

இதுவும் கொஞ்சம் கஷ்டம் தான் சகா..எங்க கொண்டு போயி போடுவாங்கன்னு தெரியாது. அதை ஒவ்வொரு இடமாக கழட்டி வேறு பெட்டி இணைக்கும் நேரம் அது இதுன்னு பிரச்சனை வருமுன்னு நினைக்கிறேன்.

\\அதற்கு பதில் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பது ஒரு வழி\\

இது யோசிச்ச நல்லது ;)

கோபிநாத் said...

\\எவ்வளவு இடம் ரயில்வே வசமிடம் எதற்க்கும் உதவாமல் உள்ளது என்பது நம்மில் யாரு ஊரில் எல்லாம் ரயில் நிலையம் உள்ளதோ அவர்கள் அறிவார்கள். \\

நல்ல திட்டம்...முதல்ல ஏங்க ராயபுரம் நிலையத்துக்கு செயல்படுத்தினா ரொம்ப நல்லாயிருக்கும்.

வித்யா said...

நல்ல அலசல்.

Vetrimagal said...

Nice suggestons. Hope soemone will lookinto it.

Waiting for Thiruvavur-Velankanni line to happen, since 5 years.
do not know whom to blame, so we are praying to god atleast this year it will happen. It is easier to apologise to Mother Mary and postpone the visit.( Problem using road transport).

Who cares?