Tuesday, March 17, 2009

கதம்பம்

நடிகர் ஒமக்குச்சி நரசிம்மன் போன வாரத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபவங்கள். சூரியன் படத்தில் கவுண்டருடன் அவர் வரும் பகுதி மிக அருமையாக அமைந்து இருக்கும். அதிலும் நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா என்ற டயலாக் செம பேமஸ். அதே படத்தில் ஜாங்க்கு ஜக்கு னு(தளபதி மியூசிக்) கவுண்டர் முன்னாடி ஒரு ஸ்டெப் போடுவார். அவரை பெரும்பாலும் பல படங்களில் நோயாளியாக தான் காட்டி வந்தார்கள். முதல்வன், ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் போன்ற படங்களில் அவரின் காமெடி குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. அவர் தலைமுடியை கோதும் ஸ்டைலே தனி தான். அவர் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்.

*******

தேர்தல் வந்தா தான் எல்லா வேலையும் நடந்து முடியும் போல. நாகையில் அகல ரயில் பாதை போடுவதற்காக நாகையில் இருந்து அனைத்து ரயில்களையும் நிறுத்தி 4, 5 வருடங்கள் ஆச்சு. பிறகு திருவாரூரில் இருந்து பணிகள் முடிவடைந்து ரயில் விட துவங்கியும் பல வருடங்கள் ஆச்சு. ஆனால் நாகை டூ திருவாரூர் க்கு அகல ரயில் பாதை போட்டாங்க போட்டாங்க அம்மாம் வருசமா போட்டாங்க. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வழியா ரயில் நிலையத்தை திறந்துட்டாங்க. (பிப்ரவரி 28). வேளாங்கண்ணி ரயில் பாதை எந்த தேர்தல் நேரத்தில் முடியுமோ? ஏ.கே.எஸ். இதை ஒரு பெரிய விசயமா தேர்தல் பிரசாரத்தில் பேசுவார்.அதை விட்டால் சொல்லுற அளவுக்கு அண்ணன் என்ன செய்து இருக்கார் என்று அவர் சொன்னால் தான் தெரியும், சேது சமுத்திரம் திட்டத்தை சொல்லுவீங்களாண்ணா?அண்ணன் இந்த தடவை தேறிடுவீங்களா? கஷ்டம் தான்.
*******

இந்த ஐ.சி.சி. பிரச்சனையில் சூடான் தலைநகரத்திலே சில நாட்கள் தங்க வேண்டியதாய் போச்சு. அந்த நேரத்தில் இணையமும் இல்லாத காரணத்தால் மறுபடியும் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு. கவலைப்படாதீங்க விமர்சனம் எல்லாம் எழுத போற இல்லை. சும்மா போற போக்கில் ஒரு பார்வை அம்புட்டு தான்.

நான் கடவுள் (2009) - பாலா, கலைஞண்டா நீ, நீ தான் கலைஞன். இப்படி ஒரு படம் எடுக்க தமிழில் எந்த இயக்குனருக்கு திறமை இருக்கு அல்லது தைரியம் இருக்கு? கதை, அகோரி, அந்த கன்றாவி எல்லாத்தையும் விடுங்க. கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பு ஒன்னு போதும்ய்யா. அவர்களை எல்லாம் தேர்ந்து எடுத்ததே பெரிய வேலை, அதில் அவர்கள் அவர்களிடம் வேலை வாங்கியது அதை விட சிறப்பு. இதற்கு எந்த அளவுக்கு ஹோம் வொர்க் பண்ணி இருக்கனும் என்பதை நினைக்குமே போதே பாலா மேல் மரியாதை தானாக வருகிறது. Hats off.

வெண்ணிலா கபடி குழு (2009) - இயல்பான படம். வசனங்கள் அருமை. அனைவரும் பொருந்தி நடித்து உள்ளார்கள். கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் வருத்தம். வேற மாதிரி முடித்து இருக்கலாம். பஸ்சை சைக்கிளால் முந்திய பிறகு ஒட்டுனர் பேசும் வசனம் சூப்பர். போற போக்குல மாநில போட்டிகளில் விளையாட விடுவது மட்டும் கொஞ்சம் ஒவர்.

Freedomland (2006) - Samuel Jackson நடிச்ச படம். நல்ல த்ரில்லர். வெள்ளை இனத்தை சேர்ந்த ஒரு குழந்தை காருடன் சேர்ந்து கடத்தப்பட்டதாக ஒரு பெண் புகார் கூற அந்த குழந்தையை தேடும் பொருட்டு கருப்பு இனத்தவர் வாழும் ஒரு ஏரியாவை முழுக்க தடை செய்து தேடுதல் வேட்டை நடக்குகிறது. ஆனால் அந்த பெண் பொய் கூறுகிறாள், அவள் தான் அந்த குழந்தையை ஏதோ செய்து விட்டாள் என்பது போல் காட்சிகளை நகர்த்தி அதன் நடுவில் Racism தொட்டும் படம் நகர்கிறது. எதிர்பாராத முடிவு. Jackson நடிப்பு அருமை. நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.

Nip/Tuck (2003) - அமெரிக்க டிவியில் வெளியான ஒரு மருத்துவ டிராமா. மொத்தம் 5 சிடி. (1 சிஸன் - 13 எபிசோட்) ஒவ்வொரு எபிசோட்டும் ஒரு தனி கதை. ஆனால் கதைத் தளம் ஒன்று தான். பிளாஸ்டிக் சர்ஜன்னா இரு மருத்துவர்கள் பற்றிய கதை. இதில் செக்ஸ் கொஞ்சம் அதிகம். ஆனால் நல்ல விறுவிறுப்பான தொடர். இது வரை 5 சிஸன் வந்து உள்ளது. 2011 வரை சிஸன் வரும். பல விருதுகளை இந்த தொடர் பெற்று உள்ளது. நம்மூரில் மெகா தொடர் எடுக்கும் புண்ணியவான்கள் இந்த தொடரை எல்லாம் பார்த்தால் நம் தொடர்களுக்கு விடிவு காலம் கிட்டினாலும் கிட்டும்.

Fahrenheit 9/11 (2004) - செப்டம்பர் 11 தொடர்ந்து ஆப்கான், ஈராக் போர் பற்றியும் அமெரிக்க அதிபர் புஷ் பற்றியும் ஒரு செமையான அலசல் இந்த படம். Michael Moore இயக்கி இருக்கும் இந்த டாக்குமெண்டரி படம் உண்மையான ஜனநாயக நாட்டின் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமையை(சுகந்திரத்தை) வெளிக்காட்டுகிறது. படத்தில் உள்ள விசயங்கள் ஒரளவு அனைவருக்கும் தெரிந்த விசயம் தான் அதை சில ஆதாரங்களுடன் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அளித்து உள்ளார். அந்த படத்தை பார்த்து புஷ்யை பற்றி யோசிக்க விடாமல், நம்மால் நம் நாட்டில் இது போல் ஒரு படம் எடுத்த முடியுமா என்ற கேள்வி தான் மேலோங்கி இருந்தது. கருத்து கணிப்பு & நீதிமன்ற தீர்ப்புக்கே எரிப்பு நடவடிக்கையில் இறங்கும் கழக கண்மணிகள் இருக்கும் நாட்டில் அடக்கி வாசிப்பது தான் தேகத்துக்கு நல்லதுனு பட்டது.
*******

போன பதிவை பாத்துட்டு அவங்க கவிதையை(???) என்னோடு பதிவில் போட்டாலே ஆச்சுனு வந்த தொடர் மிரட்டலை தொடர்ந்து இந்த கவிதை இங்கு பதிவிடப்படுகிறது.

லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும்
புன்னகையுடன் ரசிப்பது நிலவை தான்
சிரித்து பேச நண்பர்கள் பலர் இருந்தாலும்
மனதில் எண்ணி மகிழ்வது உனை தான்!

இதை எனக்கு அனுப்பிவுடன் நான் கொடுத்த கமெண்ட்,

பின்னி பெடல் எடுத்துட்ட... ஒத்துக்குறேன்.. நீ ஒரு கேடி.. சீ லேடி வாலி என்பதை. (கவிதை எழுத தெரியுமானு கேட்டது ஒரு குத்தமா? )
*******

38 comments:

அபி அப்பா said...

புலி சார்! உங்க கதம்பம் அருமைர் அருமை!!

ஆனா தேர்தல் பத்திய உங்க அறிவை நல்லா இன்னும் வளர்துக்க வாழ்த்துக்கள்!!!

ஆயில்யன் said...

ஓமக்குச்சி நரசிம்மன்

//அவரை பெரும்பாலும் பல படங்களில் நோயாளியாக தான் காட்டி வந்தார்கள். //

அது போலவே மிக ஒல்லியான மனிதர்களை இவர் பேர் சொல்லி கிண்டலடித்ததும் :( - அனுதாபத்தினை மட்டுமே + பாயிண்டாக வைத்து திரையுலகில் ஒரு சுற்று வந்தவர் !

ஆயில்யன் said...

//நாகை டூ திருவாரூர் க்கு அகல ரயில் பாதை போட்டாங்க போட்டாங்க அம்மாம் வருசமா போட்டாங்க.//

இந்த ரூட்டுக்கே 4 வருசம்ன்னா அனேகமா மயிலாடுதுறை - விழுப்புரம் லைன் அடுத்த எலெக்‌ஷன் பிரச்சாரத்திற்குத்தானா :(((((

ஆயில்யன் said...

//பாலா, கலைஞண்டா நீ, நீ தான் கலைஞன்///


ரிப்பிட்டேய்ய்ய்ய் !!!

கவனமாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஜ மனிதர்கள் நடிக்க வைக்கப்பட்டதிலும் அவர்களின் இயல்பு வாழ்க்கை திரை மூலமும், அனைவரின் மனதிலும் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியிருப்பது மறுக்கமுடியாத உண்மை!

உண்மைத்தமிழன் said...

பாரன்ஹீட் மாதிரியெல்லாம் ஒரு ஆவணப் படம் தமிழ்நாட்டுல எடுக்கவே முடியாது.. கொலையே பண்ணிருவாங்க.. ஆனா நம்ம நாட்டுலதான் பெரிசா கருத்து சுதந்திரம் இருக்குன்னு சொல்லி பீத்திக்கிட்டிருக்கோம்..!

அது சரி.. யாரு சாமி அந்த லேடி வாலி..?!

Raz said...

mr.narasiman o da aatma santhi adaiya.

so thiruvarur nagai rail vanthachu! super... intha tharam nagai vara vendiyathu than!

nan kadavul nan pakkale.. vennila kapadi kuzhu, right... climax sothapitan.. micha movies ellam.. ABCD theriyathu ennaku...

yaru antha azgaha kavithai eluthinathu?

நாகை சிவா said...

@ தொல்ஸ்,

நன்றி!

வளர்த்துக்க வா, இப்ப தான் கத்துக்கவே ஆரம்பிக்குறேன், அதுவும் உங்க கையை பிடிச்சு.... நல்லா வளர்த்து விடுங்க ஆசானே!

நாகை சிவா said...

@ ஆயில்ஸ்,

//அனுதாபத்தினை மட்டுமே + பாயிண்டாக வைத்து திரையுலகில் ஒரு சுற்று வந்தவர் !//

உண்மை.

//இந்த ரூட்டுக்கே 4 வருசம்ன்னா அனேகமா மயிலாடுதுறை - விழுப்புரம் லைன் அடுத்த எலெக்‌ஷன் பிரச்சாரத்திற்குத்தானா :(((((//

ஹிஹி... உங்களுக்கு தான் மாயவரம் பேருந்து நிலையம் இருக்கே. எல்லா தேர்தலுக்கும் அது வரும்ல ;)

//கவனமாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஜ மனிதர்கள் நடிக்க வைக்கப்பட்டதிலும் அவர்களின் இயல்பு வாழ்க்கை திரை மூலமும், அனைவரின் மனதிலும் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியிருப்பது மறுக்கமுடியாத உண்மை!//

அந்த படத்தை பாத்துட்டு போன் போட்டு கிட்டதட்ட 1 மணி நேரம் அந்த படத்தை பற்றி ஒரு நண்பனிடம் பேசினேன். அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது.

நாகை சிவா said...

//பாரன்ஹீட் மாதிரியெல்லாம் ஒரு ஆவணப் படம் தமிழ்நாட்டுல எடுக்கவே முடியாது.. கொலையே பண்ணிருவாங்க.. ஆனா நம்ம நாட்டுலதான் பெரிசா கருத்து சுதந்திரம் இருக்குன்னு சொல்லி பீத்திக்கிட்டிருக்கோம்..!//

சரியா சொன்னீங்க, வெட்டி பந்தா பண்ணிக்கிட்டு தான் நாம அலையுறோம்.

//அது சரி.. யாரு சாமி அந்த லேடி வாலி..?!//

அவங்களா? பெயரை பதிவில் போடாதே என்று சொன்னாங்க, பின்னூட்டத்தில் தெரியல, கேட்டு சொல்லுறேன்.

நாகை சிவா said...

@ Raz!

//so thiruvarur nagai rail vanthachu! super... intha tharam nagai vara vendiyathu than!//

Vandhachu... U r most welcome :)

//nan kadavul nan pakkale.. vennila kapadi kuzhu, right... climax sothapitan.. micha movies ellam.. ABCD theriyathu ennaku...//

Ethachum nambura mathiri sollu!

//yaru antha azgaha kavithai eluthinathu?//

Kounder roda oru famous dialogue irruku theriyuma? Unaku en intha vilambaram nu.. athu ippo en mind la vandhu poguthu...

வெட்டிப்பயல் said...

//லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும்
புன்னகையுடன் ரசிப்பது நிலவை தான்
சிரித்து பேச நண்பர்கள் பலர் இருந்தாலும்
மனதில் எண்ணி மகிழ்வது உனை தான்!
//

Enna kodumai ithu Puli???

un blogla kavujaiya???

makkal paavam illaiya? unnaiya nambi vanthu padikira makkaluku nee ippadi throgam seyyalama?

வெட்டிப்பயல் said...

Thura Engilisu padam ellam paakathu :)

தமிழன்-கறுப்பி... said...

வெட்டிப்பயல் said...
\\
Thura Engilisu padam ellam paakathu :)
\\
யோவ் வெட்டி இது தமிழில் எழுத வேண்டிய பின்னூட்டம்யா...

நாகை சிவா said...

@ வெட்டி!

//Enna kodumai ithu Puli???

un blogla kavujaiya??? //

பாசத்தில் (மிரட்டலுக்கு) கட்டுண்டதால் வந்த வினை. தெளிய வைத்து விட்டாய்... இனி கவனமாய் இருக்கேன் ;)

//Thura Engilisu padam ellam paakathu :)//

சப் - டைட்டிலோட ;) சப் - டைட்டில் இருந்தால் எந்த மொழி படம்னாலும் பாப்போம்ல ;)

தமிழன்-கறுப்பி... said...

கதம்பம் நல்லாருக்குது..!

நாகை சிவா said...

@ தமிழன் - கறுப்பி!

//யோவ் வெட்டி இது தமிழில் எழுத வேண்டிய பின்னூட்டம்யா...//

தெலுங்கல எழுதாம தங்கிலிஷ் ல எழுதி இருக்காரேனு சந்தோஷப்படுறேன், அதுக்கும் வேட்டா?

வெட்டிப்பயல் said...

// தமிழன்-கறுப்பி... said...
வெட்டிப்பயல் said...
\\
Thura Engilisu padam ellam paakathu :)
\\
யோவ் வெட்டி இது தமிழில் எழுத வேண்டிய பின்னூட்டம்யா...
//

Good Catch :)

No tamil font in Oppice machine :)

Vidhya Chandrasekaran said...

கலந்து கட்டி கதம்பம் தொடுத்திருக்கீங்க. அப்புறம் அந்த பாரன்ஹீட் படம் நம்மூர்ல எடுக்க ஆரம்பிச்சிருந்தோம்னா எத்தனையோ பாகம் எடுத்திஒருக்கலாம்:)

கைப்புள்ள said...

புலி,
உங்கள் வேண்டுகோளுக்கிணங்க பட்டாம்பூச்சி விருது பதிவு போட்டாச்சு. இங்கன இருக்கு பாருங்க. நன்றி.

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html

Geetha Sambasivam said...

//அது சரி.. யாரு சாமி அந்த லேடி வாலி..?!//

இதே தான் நான் கேட்க நினைச்சதும், உ.த. முந்திட்டார். :P

நல்ல வாசனைக் கதம்பம்!

நாகை சிவா said...

@ வித்யா!

வாஸ்தவம் தான். என்னிக்காவது அது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. பார்ப்போம் :)

@ தமிழன் - கறுப்பி!

நன்றிங்கோ :)

நாகை சிவா said...

@ கைப்புள்ள!

பாத்தாச்சு, நன்றி பதிவு போட்டதுக்கு :)

கதம்பத்தை பற்றி ஏதும் சொல்லாமலே போயிட்டிங்களே :(

நாகை சிவா said...

////அது சரி.. யாரு சாமி அந்த லேடி வாலி..?!//

இதே தான் நான் கேட்க நினைச்சதும், உ.த. முந்திட்டார். :P//

அவ்வளவு மேட்டரு எழுதி இருக்கேன், அந்த கவுஜு பத்தி தான் கேட்குறீங்க ;))

//நல்ல வாசனைக் கதம்பம்!//

நன்றிங்கோ !

gayathri said...

கதம்பம்! nalla iruku pa

நாகை சிவா said...

@ காயத்ரி!

வருகைக்கும் கருத்துக்கு நன்றிங்கோ :)

கவிதா | Kavitha said...

//அவ்வளவு மேட்டரு எழுதி இருக்கேன், அந்த கவுஜு பத்தி தான் கேட்குறீங்க ;))
//

அவ்வளவு மேட்டர் எழுதி இருந்தாலும் கவுஜய மட்டும் நீங்க தனியா கலர் செய்து இருக்கீங்களே..

கவிதா | Kavitha said...

//இதற்கு எந்த அளவுக்கு ஹோம் வொர்க் பண்ணி இருக்கனும் என்பதை நினைக்குமே போதே பாலா மேல் மரியாதை தானாக வருகிறது. Hats off.
//

இந்த படம் சம்பந்தமாக தொலைக்காட்சியில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார், அது பார்த்தபோது அந்த மரியாதை அதிகமாகிவிட்டது. :) ரொம்ப நல்ல சிந்தனையும், கமர்ஷியல் வேல்யூ எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்ற பிடிவாதம் யதார்த்தம்ம் அவர் பேச்சில் இருந்தது. :)

சரியாக அவரின் சிந்தனையை புரிந்துக்கொள்ளாவிடில், மிக சாதாரணமாக பாலாவிற்கு திமிர் அதிகம் னு நினைக்க நிறையவே வாய்ப்பு இருக்கு..

கவிதா | Kavitha said...

//நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.
//
அப்ப நேரம் இல்லைன்னா பார்க்க வேண்டாம்

//நம்மூரில் மெகா தொடர் எடுக்கும் புண்ணியவான்கள் இந்த தொடரை எல்லாம் பார்த்தால் நம் தொடர்களுக்கு விடிவு காலம் கிட்டினாலும் கிட்டும்./

ஏன் நம்ம ஆளுங்க..படத்தை காப்பி அடிக்கறது பத்தாதா? இது வேற ஆரம்பிக்கனும்மா... சீரியலே வேண்டாம்னு சொல்லுங்க.. சந்தோஷமா இருக்கும்..


//கருத்து கணிப்பு & நீதிமன்ற தீர்ப்புக்கே எரிப்பு நடவடிக்கையில் இறங்கும் கழக கண்மணிகள் இருக்கும் நாட்டில் அடக்கி வாசிப்பது தான் தேகத்துக்கு நல்லதுனு பட்டது.

//

ம்ம்... இன்னும் அங்க இருந்து நகரலியா நீங்க..

//கவிதை எழுத தெரியுமானு கேட்டது ஒரு குத்தமா?//

ஓ இப்படி சொல்லி சொல்லியே எல்லார் கிட்ட இருந்தும் கவுஜ'ய கலெக்ட் பண்றீங்களா நீங்க?!!

நாகை சிவா said...

//அவ்வளவு மேட்டர் எழுதி இருந்தாலும் கவுஜய மட்டும் நீங்க தனியா கலர் செய்து இருக்கீங்களே..//

கவுஜு போட சொன்னவங்க ஹைலைட் பண்ணி காட்ட சொன்னாங்க, அதான் :)

//சரியாக அவரின் சிந்தனையை புரிந்துக்கொள்ளாவிடில், மிக சாதாரணமாக பாலாவிற்கு திமிர் அதிகம் னு நினைக்க நிறையவே வாய்ப்பு இருக்கு..//

புரிந்துக் கொண்டாலும் கூட அவருக்கு திமிர் அதிகம் என்பதில் என்ற மாற்று கருத்தும் கிடையாது. Perfection வேணும் என்பதால் இந்த திமிர்.

நாகை சிவா said...

கோபி - வர வர வெறும் புன்சிரிப்புடன் நிறுத்திக் கொள்கிறாய்.. என்ன ஆச்சு உனக்கு....

நாகை சிவா said...

//அப்ப நேரம் இல்லைன்னா பார்க்க வேண்டாம்//

வேண்டாம் ;)

//ஏன் நம்ம ஆளுங்க..படத்தை காப்பி அடிக்கறது பத்தாதா? இது வேற ஆரம்பிக்கனும்மா... சீரியலே வேண்டாம்னு சொல்லுங்க.. சந்தோஷமா இருக்கும்..//

அழுக்காச்சி, அபத்த சீரியல் கள் வேண்டாம் என்பது தான் என் கருத்து.

//ம்ம்... இன்னும் அங்க இருந்து நகரலியா நீங்க..//

நான் நகர்ந்து வந்துட்டேன். உயிர் இழந்தோர் குடும்பவங்கள் இன்னும் மீளவே இல்லை.

//ஓ இப்படி சொல்லி சொல்லியே எல்லார் கிட்ட இருந்தும் கவுஜ'ய கலெக்ட் பண்றீங்களா நீங்க?!!//

இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!

கவிதா | Kavitha said...

//புரிந்துக் கொண்டாலும் கூட அவருக்கு திமிர் அதிகம் என்பதில் என்ற மாற்று கருத்தும் கிடையாது. Perfection வேணும் என்பதால் இந்த திமிர்.
//

ஹல்லோ.. விட்டுக்கொடுக்காமல் சில விஷயங்கள் செய்வதால் தான் சாதனை செய்ய முடிகிறது சரியா.. விட்டுக்கொடுத்தல் என்பது எல்லா விஷயத்திற்கும் சரிப்பட்டு வராது. .அதற்காக பர்ஃபக்ஷன் ஆக இருப்பவர்கள் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்ல ஆரம்பித்தால்....
.............. சிவா.. உலகதரம் ஒன்று இருக்கு தெரியுமா அது தேவைபடவே படாது...

என்னவோ எல்லாத்துக்குமே புது புது அர்த்தம் உங்கக்கிட்ட இருந்து தான் தெரிஞ்சிக்கிறேன்.. Now other one "Perfection" is Themiru??!
I couldnt get along with your comment sure..!! :)

நாகை சிவா said...

//ஹல்லோ.. விட்டுக்கொடுக்காமல் சில விஷயங்கள் செய்வதால் தான் சாதனை செய்ய முடிகிறது சரியா.. விட்டுக்கொடுத்தல் என்பது எல்லா விஷயத்திற்கும் சரிப்பட்டு வராது. //

ஒத்துக்குறேன்.

//அதற்காக பர்ஃபக்ஷன் ஆக இருப்பவர்கள் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்ல ஆரம்பித்தால்....
.............. சிவா.. உலகதரம் ஒன்று இருக்கு தெரியுமா அது தேவைபடவே படாது...//

Perfection na இருப்பங்க எல்லாம் திமிர் பிடித்தவர்கள் என்று நான் எப்போ சொன்னேன். பாலா வுக்கு திமிர் அதிகம் என்று தான் சொன்னேன். அதை அவரே மறுக்க மாட்டார். அவர் படங்களில் வரும் கதாநாயகன் கள் எல்லாம் ஒரு ஆணவத்தோடு இருப்பது போன்றே காட்சிகள் அமைத்து இருப்பார். என்னுடைய வெளிப்பாடு என் கதை நாயகர்கள் என்று அவரே சொல்லி இருக்கார். பாலா விட்டு கொடுக்காமல் படம் எடுக்கிறார் என்பதை ஒற்றுக் கொள்ள முடியாது. சேது வில் ஜோதி லட்சுமி பாடல், பிதாமகன் ல் சிம்ரன் பாடல், நான் கடவுள் படத்தில் அந்த காவல் நிலைய காட்சி என்று அவரும் சில இடங்களில் விட்டுக் கொடுத்து தான் உள்ளார்.

அதே நேரத்தில் இந்த படத்திற்கு எத்தனை ஹீரோ ஹீரோயின்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பின் நீக்கப் பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. எனக்கு இந்த அவுட் புட் தான் வேணும் என் இஷ்டத்திற்கு தான் நான் படம் பிடிப்பேன், அதுக்கு ஒத்து வருபவர்கள் மட்டும் நடித்தால் போதும் என்பதில் அவர் விட்டுக் கொடுக்கவில்லை.

விக்ரம் அல்லது சூர்யா மீண்டும் பாலா படத்தில் நடிப்பது சிரமம். அதற்கு என்ன காரணமாக இருக்கும் யோசிக்க முடியுதா?

//என்னவோ எல்லாத்துக்குமே புது புது அர்த்தம் உங்கக்கிட்ட இருந்து தான் தெரிஞ்சிக்கிறேன்.. Now other one "Perfection" is Themiru??!
I couldnt get along with your comment sure..!! :)//

Perfection is Thimiru nu நான் சொல்லவே இல்லை. புது புதுசா எல்லாம் நான் அர்த்தம் சொல்ல, நீங்க எடுத்து கொள்ளவ்து அப்படி இருக்கு. நான் என்ன பண்ண?

கவிதா | Kavitha said...

//பாலா விட்டு கொடுக்காமல் படம் எடுக்கிறார் என்பதை ஒற்றுக் கொள்ள முடியாது. சேது வில் ஜோதி லட்சுமி பாடல், பிதாமகன் ல் சிம்ரன் பாடல், நான் கடவுள் படத்தில் அந்த காவல் நிலைய காட்சி என்று அவரும் சில இடங்களில் விட்டுக் கொடுத்து தான் உள்ளார்.
//

:) கமர்ஷியலில் அவரும் உண்டுன்னு சொல்றீங்களா..?!! நான் கடவுள் பார்க்க எனக்கு வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை அதனால் இன்னும் பார்க்கவில்லை.. மற்ற 2 பாடல்களிலும் என்டர்டைன்மென்ட் இருக்குமே அன்றி கவர்ச்சி.. இல்லை.. அது உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.. :)

//அதே நேரத்தில் இந்த படத்திற்கு எத்தனை ஹீரோ ஹீரோயின்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பின் நீக்கப் பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. எனக்கு இந்த அவுட் புட் தான் வேணும் என் இஷ்டத்திற்கு தான் நான் படம் பிடிப்பேன், அதுக்கு ஒத்து வருபவர்கள் மட்டும் நடித்தால் போதும் என்பதில் அவர் விட்டுக் கொடுக்கவில்லை.

விக்ரம் அல்லது சூர்யா மீண்டும் பாலா படத்தில் நடிப்பது சிரமம். அதற்கு என்ன காரணமாக இருக்கும் யோசிக்க முடியுதா?
//

Siva absolutely none our business சரியா.. ஒரு படைப்பாளிக்கு தெரியும் அவனுக்கு என்ன தேவை என்று.. அதைவிட்டுக்கொடுத்தால் அவனின் செய்து வைத்த கற்பனை கதாபாத்திரம் சரிவாரது, அவன் மனதிற்கு அதை ஒத்துக்கொள்ள முடியாது. அப்படித்தான் பாலாவின் விருப்பம் அது.. படம் பிடித்ததா பிடிக்கவில்லை.. இரண்டு ஆப்ஷன் தான் நம்மிடம் உள்ளது. வேறு எதையும் சொல்லி நாம் அறிவாளி என்று எடுத்துக்காட்ட வேண்டும் என்ற அவசியம் அடுத்தவர் படத்தில் இல்லை என்பது என் கருத்து :)

//Perfection வேணும் என்பதால் இந்த திமிர்.//

சிவா நீங்கள் சொன்னது தான் இது .. இப்ப நீங்க சொல்லலன்னு சொல்றீங்க... அதற்கு பாலாவுடைய Perfection தான் அவருடைய திமிர்'க்கு அர்த்தம் என்று பொருளாகிறது சரியா.. ?!!

நாகை சிவா said...

//:) கமர்ஷியலில் அவரும் உண்டுன்னு சொல்றீங்களா..?!!//

அப்படி என்னால் Conclude பண்ண முடியவில்லை. ஆனால் கமர்ஷியலுக்காக சில விசயங்கள் விட்டு கொடுத்ததாக அவரே சொல்லி உள்ளார்.

//மற்ற 2 பாடல்களிலும் என்டர்டைன்மென்ட் இருக்குமே அன்றி கவர்ச்சி.. இல்லை.. அது உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.. :)//

கவர்ச்சியை பற்றி இங்கு பேசவே இல்லை. பாலா வை நான் மசாலா படம் எடுக்கும் இயக்குனர் என்றா சொன்னேன். கண்டிப்பாக கிடையாது.

//Siva absolutely none our business சரியா.. ஒரு படைப்பாளிக்கு தெரியும் அவனுக்கு என்ன தேவை என்று.. அதைவிட்டுக்கொடுத்தால் அவனின் செய்து வைத்த கற்பனை கதாபாத்திரம் சரிவாரது, அவன் மனதிற்கு அதை ஒத்துக்கொள்ள முடியாது. அப்படித்தான் பாலாவின் விருப்பம் அது..//

இதை நான் ஒத்துக்குறேன், நான் சொல்ல வந்ததே நீங்க புரிஞ்சுக்கல.

// படம் பிடித்ததா பிடிக்கவில்லை.. இரண்டு ஆப்ஷன் தான் நம்மிடம் உள்ளது. வேறு எதையும் சொல்லி நாம் அறிவாளி என்று எடுத்துக்காட்ட வேண்டும் என்ற அவசியம் அடுத்தவர் படத்தில் இல்லை என்பது என் கருத்து :)//

அதில் இருக்கும் நிறை குறைகளை சொல்ல தான் செய்வார்கள். பொதுவில் ஒரு படம் வந்தால் அதை பற்றி விமர்சனங்கள் வர தான் செய்யும். நமக்கு பிடித்து காட்சியை சொல்லி சிலாரித்து பேசுவது போல தான், பிடிக்காத காட்சியை பற்றியும் பேச்சு வரும். பிடித்தாத பிடிக்கவில்லை என்பது நம் கடைசிப்பட்ச கருத்தாக தான் ஒரு விமர்சனத்தில் இருக்கும். எந்த விமர்சனம் நீங்க சொல்வது போல இரு வார்த்தைகளில் ஒன்றாக அமைவது இல்லை.

//Perfection வேணும் என்பதால் இந்த திமிர்.//

சிவா நீங்கள் சொன்னது தான் இது .. இப்ப நீங்க சொல்லலன்னு சொல்றீங்க... அதற்கு பாலாவுடைய Perfection தான் அவருடைய திமிர்'க்கு அர்த்தம் என்று பொருளாகிறது சரியா.. ?!!//

நல்லா புரிஞ்சுக்கோங்க. Perfection is Thimir nu நான் சொல்லல என்று தான் சொன்னேன். பாலாவின் திமிர் தனக்கு வேண்டிய Perfection வேணும் என்ற அளவில் மட்டும் தான். மற்ற நேரங்களில் அவர் பேசுவதையே தவிர்த்து விடுவார். பேட்டிகளில் திமிராக பேசுவதோ, அநாவசியமாக அடுத்தவர்கள் பற்றியோ அவர்கள் படத்தை பற்றிய கமெண்ட் அடிப்பதோ கிடையாது. நான் சொல்ல வருவதை புரிஞ்சுப்பீங்க என்று நினைக்குறேன்.

கவிதா | Kavitha said...

//எந்த விமர்சனம் நீங்க சொல்வது போல இரு வார்த்தைகளில் ஒன்றாக அமைவது இல்லை.
//

அப்படி அமைந்தால் ஆரோக்கியம் என்பது என் கருத்து. சிவா நான், நீங்கள், அவர்கள் விமர்சனம் செய்வதால் படம் ஓடுகிறதா? சொல்ல்லுங்க. .பாக்ஸ் ஆபிஸ் ன்னு ஒன்று வைத்து விமர்சனம் செய்யறாங்க.. ஆனா நான்/நீங்கள்/அவர்கள் நினைக்கறபடியா கவுண்ட் டவுன் இருக்கு?!!

நல்லா யோசிச்சி பாருங்க விமர்சனம் என்பது தனிமனித விருப்பதை பொருத்துதான் அமைது இல்லையா? அன்பே சிவமும், ஹே ராமும் எத்தனை பேருக்கு பிடித்தது. ஏன் சினிமா ரசிகர்களையே A, B, C ன்னு பிரித்து தான் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் இல்லையா? சிவா யோசிக்க சொன்னா வேண்டாம்னு சொல்லுவீங்க ..ஆனா நல்லா யோசிச்சு பாருங்க..விமர்சனம் என்பது இரண்டு தான் நல்லா இருக்கு பார்க்க்கலாம்.. நல்லா இல்லை பார்க்கவேண்டாம்.. :)

அதை தாண்டி நீங்க விமர்சனம் செய்தீங்கன்னா அது தனிப்பட்ட உங்களின் விருப்பு வெறுப்பு தான் கருத்தாக இருக்கும்.

நாகை சிவா said...

//அதை தாண்டி நீங்க விமர்சனம் செய்தீங்கன்னா அது தனிப்பட்ட உங்களின் விருப்பு வெறுப்பு தான் கருத்தாக இருக்கும்.//

எல்லா விமர்சனமும் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்பும் அவர்கள் பார்க்கும் பார்வையும் தான்.

நாகை சிவா said...

டாபிக் மாறி எங்கேயோ போயிடுச்சு! சோ, முடிச்சுப்போம் :)