Monday, March 30, 2009

வாழ்க சனநாயகம் 5 - தமிழ் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல் தேதி மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவு

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று கடந்த வருடம் அறிவித்த தமிழக அரசு இப்போது மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்....

'1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டுக் கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு. மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்றுகூடி ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு எனவும், தை முதலாம் நாளே தமிழரின் புத்தாண்டாக அமைதல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை 1971 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழனுக்கும் ஏற்றம் தரும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கணிப்பீட்டு முறைமையை அரசு மற்றும் ஊடகங்களும் பயன்படுத்தத் தொடங்கின. இதனை அரசு 2008 இல் முறையாக அறிவித்தது.

ஆன்றோர், சான்றோர், புலவர் னு கேட்க நல்லா வக்கனையாக இருந்துச்சு. மக்களும் ஒத்துக்கிட்டாங்க!

இதன்படி கடந்த தைத் திங்கள் ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களால் அகம் மகிழ சிறப்புற கொண்டாடப்பட்டது.

உண்மை. கோடிக்கணக்கான தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினார்களே. பதிவுலகமே பரபரத்துச்சே. பதிவு , மின் வாழ்த்து, சச்சரவுனு கலக்கிட்டாங்கள!

ஆனாலும் பழைமையை மாற்ற விரும்பாத பலரும், 'தொடர்ந்து சித்திரை முதல் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.

அதே பழமைவாதிகள் அப்பவே எதிர்ப்பு குரல் கொடுத்தார்களே!

பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கையையும் பரிவுடன் பரிசீலித்த தமிழக அரசு சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துள்ளது.

பெரும்பான்மையா? ஏற்கனவே கோடிக்கணக்கான தமிழர்கள் தைத் திங்களை புத்தாண்டாக கொண்டாடியதாக நீங்களே சொல்லிட்டீங்க, அப்ப மிச்சம் இருப்பதும் சில கோடிகள் தானே, இந்த சில கோடிகளுக்காக அந்த சில பல கோடிகளை முட்டாள்கள் ஆக்கி விட்டீர்களே!

இது குறித்த முறைப்படியான அரசு அறிவிப்பு பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் வெளியிடப்படும். ஆனால் வருகிற சித்திரைத் திருநாளிலேயே கோயில்களில் வழிபாடுகள் முறைப்படி நடப்பதில் தடை இல்லை என்கிறது அரசு செய்திக் குறிப்பு

ஆங்! அப்படி சொல்லுங்க, பொது தேர்தல் வந்தா எல்லாமே பின்வாங்குவீங்க போல.

வச்சா குடுமி அடிச்சா மொட்டை.

அரசு ஆனது ஒரு முடிவு எடுப்பதுக்கு முன்பு எல்லா சாதக பாதகங்களையும் பார்த்து தான் முடிவு எடுக்கனும். இது ஒன்றும் தனிப்பட்ட ஒருவரின் முடிவு அல்லவே. இஷ்டXXXXக்கு மாற்ற.

தேவர்மகன் நாசர் வசனம் என் பதிவில் அடிக்கடி குறிப்பிட வேண்டியதா இருக்கு. அந்த வசனம் மீண்டும் ஒரு முறை

"இது என்ன உம்ம மீசை மசுருனு நினைச்சிங்களா நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க"

அப்ப முறுக்குனீங்க, இப்ப மடக்கிட்டீங்க. நல்லா இருங்க. வாழ்க சனநாயகம்!

செய்தி : நன்றி - இட்லிவடை

41 comments:

Vidhya Chandrasekaran said...

இதென்னப்பு. இத விட பயங்கர காமெடில்லாம் நடக்கும். மனச திடப்படுத்திக்கோங்க. கோமாளிகள் அடிக்கும் கூத்துக்கெல்லாம் டென்ஷனானீங்கன்னா உடம்பு கெட்டுடும் பாஸ்:)

Poornima Saravana kumar said...

அப்ப முறுக்குனீங்க, இப்ப மடக்கிட்டீங்க.//

:))

ஆயில்யன் said...

”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”

காமெடியா இருந்தாலும்,எவ்ளோ தீர்க்கதரிசனமா வார்த்தை பார்த்தீங்களா ?! :))))))

Unknown said...

:)))ம்ம்ம் கவனிக்கணும்... இன்னும் இந்த தேர்தல் வந்து என்னென்ன பண்ணுமோ??

கவிதா | Kavitha said...

சிவா நல்ல பதிவு :)

//அரசு ஆனது ஒரு முடிவு எடுப்பதுக்கு முன்பு எல்லா சாதக பாதகங்களையும் பார்த்து தான் முடிவு எடுக்கனும். இது ஒன்றும் தனிப்பட்ட ஒருவரின் முடிவு அல்லவே. இஷ்டXXXXக்கு மாற்ற. //

உண்மை..!! கண்டிப்பாக தனிமனித முடிவு அல்ல..

//"இது என்ன உம்ம மீசை மசுருனு நினைச்சிங்களா நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க"
அப்ப முறுக்குனீங்க, இப்ப மடக்கிட்டீங்க. நல்லா இருங்க. வாழ்க சனநாயகம்!
//

ம்ம்..நாமத்தான் அப்பவே மீசைய முறுக்கலையே.. அதனால இப்ப மடக்கவே வேண்டாமே !! :))) எதுக்கு இப்ப இம்புட்டு டென்ஷன் கூல் பேபி..!!

G3 said...

//”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” //

ரிப்பீட்டே :))))


சரி.. எல்லாம் சொன்னீங்க. அன்னிக்கு லீவ் உண்டா இல்லையான்னு சொல்லவே இல்லயே :((

கவிதா | Kavitha said...

//சரி.. எல்லாம் சொன்னீங்க. அன்னிக்கு லீவ் உண்டா இல்லையான்னு சொல்லவே இல்லயே :((
//

காயூ அதை எழுதணும்னு நினைச்சேன்.. இந்த ஆண்டு விடுமுறை லிஸ்ட் ல் சித்திரை வரவில்லை. .ஆனால், இனி சேர்த்துக்கொள்ளலாம்.. :)

கண்டிப்பாக லீவு உண்டு.. :)) இல்லைன்னா மட்டும் நீங்க லீவு எடுக்காமலா இருக்க போறீங்க.. ?!!

G3 said...

//இல்லைன்னா மட்டும் நீங்க லீவு எடுக்காமலா இருக்க போறீங்க.. ?!!//

நல்ல வேளை.. இதோட நிறுத்தினீங்க.. ஜி-டாக்ல சொன்னதை முழுசா இங்க போடாம கொஞ்சம் மானத்தை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்னி :))

கவிதா | Kavitha said...

//நல்ல வேளை.. இதோட நிறுத்தினீங்க.. ஜி-டாக்ல சொன்னதை முழுசா இங்க போடாம கொஞ்சம் மானத்தை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்னி :))
//

நோ ஒரீஸ், அதை சிவா கண்டிப்பாக செய்துடுவாங்க :))))

G3 said...

//நோ ஒரீஸ், அதை சிவா கண்டிப்பாக செய்துடுவாங்க :))))//

சிவா நல்லவர் வல்லவர். அப்படி எல்லாம் செய்யமாட்டார்னு நம்பி இந்த இடத்தை விட்டு செல்கிறேன்...

[அப்பாடா.. இனி டேமேஜ் ஆனாலும் இந்த பக்கம் வந்தா தானே தெரியும்.. நான் தான் வரமாட்டேனே :P]

கவிதா | Kavitha said...

//சிவா நல்லவர் வல்லவர்//

போச்சி எல்லாம் போச்சி.. இப்படி இரண்டே வார்த்தையில புலிய ... கவுத்துப்புட்டீங்களே...!!

கவிதா | Kavitha said...

//[அப்பாடா.. இனி டேமேஜ் ஆனாலும் இந்த பக்கம் வந்தா தானே தெரியும்.. நான் தான் வரமாட்டேனே :P]
//

அவசியமே இருக்காது காயூ!! நீங்க வரலாம் நீங்க நினைக்கற எந்த டேமேஜ் ஜும் இங்க நடக்காது.. காரணம்... plz refer my earlier comment .... :))))

நாகை சிவா said...

@ வித்யா!

//இத விட பயங்கர காமெடில்லாம் நடக்கும். மனச திடப்படுத்திக்கோங்க. கோமாளிகள் அடிக்கும் கூத்துக்கெல்லாம் டென்ஷனானீங்கன்னா உடம்பு கெட்டுடும் பாஸ்:)//

எவ்வளவோ தாங்கிட்டோம், இனியும் தாங்குவோம்ல. இருந்தாலும் சில விசயங்கள் படிச்சதும் சட்னு பொங்குது, பொங்கினா பதிவு பொங்கல் வைக்க வேண்டியதா இருக்கு!

:)

நாகை சிவா said...

@ பூர்ணிமா!

புன்சிரிப்புடன் நிறுத்துக்கிட்டீங்க! இதை தான் புத்தி உள்ள புள்ள பொழச்சுக்கும் என்று சொல்லுவாங்களோ? ;)

@ ஆயில்ஸ்!

தீர்க்கதரிசனமா ஆக்கிட்டாங்க, அதுவும் மிக சமீப காலமாக தான் (கடந்த 20 வருடமாக)

நாகை சிவா said...

@ ஸ்ரீமதி!

ஏதுவும் நடக்கலாம். தைரியமா இருங்க :)

@ கவிதா!

//ம்ம்..நாமத்தான் அப்பவே மீசைய முறுக்கலையே.. அதனால இப்ப மடக்கவே வேண்டாமே !! :))) எதுக்கு இப்ப இம்புட்டு டென்ஷன் கூல் ..!!//

இவிங்கள நம்பி முறுக்கினா என்ன ஆகும்னு நமக்கு தெரியாத என்ன? நம் நண்பர்கள் ஒவரா முறுக்கி இப்ப விழிக்குறாங்களேனு தான் வருத்தமே ;)

நாகை சிவா said...

@ காயத்ரி!

//சரி.. எல்லாம் சொன்னீங்க. அன்னிக்கு லீவ் உண்டா இல்லையான்னு சொல்லவே இல்லயே :((//

உங்க கவலை உங்களுக்கு. இருக்கும் இருக்கும்! :)

ஜி டாக் ல என்ன சொன்னீங்க?

உண்மைய உரக்க சொன்னதுக்கு நன்றி! ஆனா என்ன சொன்னீங்க தெரிஞ்சா தானே நியாயத்தை நிலை நிறுத்த முடியும்?

கவிதா | Kavitha said...

//ஜி டாக் ல என்ன சொன்னீங்க?//

சரி க்ளூ கொடுக்கிறேன் :) காயூ லீவு போட்டா வீட்டுல என்ன செய்வாங்க?!!

கவிதா | Kavitha said...

//சரி க்ளூ கொடுக்கிறேன் :) காயூ லீவு போட்டா வீட்டுல என்ன செய்வாங்க?!!//

காயூ சொல்ல மாட்டேன் தான் சொன்னேன்.. ஆனா க்ளூ கொடுக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே :))))

நாகை சிவா said...

@ கவிதா!

//நோ ஒரீஸ், அதை சிவா கண்டிப்பாக செய்துடுவாங்க :))))//

முதலில் விசயம் என்னனு சொல்லுங்க!

//போச்சி எல்லாம் போச்சி.. இப்படி இரண்டே வார்த்தையில புலிய ... கவுத்துப்புட்டீங்களே...!!//

இரண்டு ஃபுல் கே கவுற மாட்டோம், இரண்டு வார்த்தைக்கா கவுற போறோம்?

கவிதா | Kavitha said...

//நோ ஒரீஸ், அதை சிவா கண்டிப்பாக செய்துடுவாங்க :))))//

முதலில் விசயம் என்னனு சொல்லுங்க!
//

க்ளூ கொடுத்த பிறகும் இப்படி ஓபன் குவஸ்ஸின்ஸ் கேட்கப்பிடாது சொல்லிட்டேன் !!

G3 said...

இந்த பக்கம் நீ வரலைனா என்ன நான் சொல்றேன்னு எல்லா கமெண்டையும் ஜி-டாக்கில அனுப்பி என்னை கலாய்க்கும் கவிதாவை வன்மையாக கண்டிக்கிறேன் :(

G3 said...

//உண்மைய உரக்க சொன்னதுக்கு நன்றி! ஆனா என்ன சொன்னீங்க தெரிஞ்சா தானே நியாயத்தை நிலை நிறுத்த முடியும்?//
அவ்வ்வ்வ்வ்.. சொந்த செலவுல சூன்யம் வைச்சுக்க சொல்றீங்களே.. இது உங்களுக்கே நியாயமா படுதா? :(

G3 said...

//கவிதா | Kavitha said...
//சரி க்ளூ கொடுக்கிறேன் :) காயூ லீவு போட்டா வீட்டுல என்ன செய்வாங்க?!!//
காயூ சொல்ல மாட்டேன் தான் சொன்னேன்.. ஆனா க்ளூ கொடுக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே :))))//

துரோகீகீகீகீகீகீகீகீகீகீகீ !!!!

G3 said...

////போச்சி எல்லாம் போச்சி.. இப்படி இரண்டே வார்த்தையில புலிய ... கவுத்துப்புட்டீங்களே...!!//
இரண்டு ஃபுல் கே கவுற மாட்டோம், இரண்டு வார்த்தைக்கா கவுற போறோம்?//
அதானே.. இவருக்கு ஐஸ் வைக்கனும்னா ஒரு பத்து பக்கதுக்கு வாழ்த்துப்பாடல் பாடினாலும் பத்தாதே.. 2 வார்த்தை எந்த மூலைக்கு???

G3 said...

25 நானே :))))

கவிதா | Kavitha said...

//கவிதா | Kavitha said...
//சரி க்ளூ கொடுக்கிறேன் :) காயூ லீவு போட்டா வீட்டுல என்ன செய்வாங்க?!!//
காயூ சொல்ல மாட்டேன் தான் சொன்னேன்.. ஆனா க்ளூ கொடுக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே :))))//

துரோகீகீகீகீகீகீகீகீகீகீகீ !!!!

//

:))) அவசரப்படக்கூடாது கண்ணா.. ஒருத்தருக்கு க்ளூ எல்லாம் கொடுத்து கூட கண்டுபிடிக்க முடியல. :))) (அது தெரிஞ்சி தானே நாங்க கொடுக்கிறோம்.. ) So No Damage..! u r Safe !! :)

கவிதா | Kavitha said...

//அதானே.. இவருக்கு ஐஸ் வைக்கனும்னா ஒரு பத்து பக்கதுக்கு வாழ்த்துப்பாடல் பாடினாலும் பத்தாதே.. 2 வார்த்தை எந்த மூலைக்கு???
//

நான் சிம்பிள் வழி சொல்றேன் சரியா.. ஒரூ கவுஜ(மாதிரி) எழுதுங்க, சிவா விற்கு சத்தியமா புரியாது...அதை வெளியிலும் காட்டிக்க முடியாது.. சோ.. கவுஜ நல்லா இருக்கறதா நினைச்சி.. கவுந்துடுவாரு.. :)

(இது எப்படி இருக்கு!!! )

நாகை சிவா said...

//சரி க்ளூ கொடுக்கிறேன் :) காயூ லீவு போட்டா வீட்டுல என்ன செய்வாங்க?!!//

நீங்க என்ன செய்வீங்களோ அதே தான் செய்வாங்க!

உ.தா - சாப்பிடுவது, தூங்குவது, வெட்டி கதை (மொக்கை) பேசுவது, டிவி பார்ப்பது, பாட்டு கேட்பது!

நாகை சிவா said...

//அவ்வ்வ்வ்வ்.. சொந்த செலவுல சூன்யம் வைச்சுக்க சொல்றீங்களே.. இது உங்களுக்கே நியாயமா படுதா? :(//

சபைல நியாயம் தோற்றுவிட கூடாது என்று தான் கேட்குறேன், தப்பா?

//துரோகீகீகீகீகீகீகீகீகீகீகீ !!!!//

துரோகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ னு கத்துனா சரி

அல்லது

துரோகிகீஈஈஈஈஈஈஈஈஈ னு கத்தனும்

தவறா எல்லாம் கூவ கூடாது...

அடுத்த தபா சரியா கூவுங்க!

நாகை சிவா said...

//அதானே.. இவருக்கு ஐஸ் வைக்கனும்னா ஒரு பத்து பக்கதுக்கு வாழ்த்துப்பாடல் பாடினாலும் பத்தாதே.. 2 வார்த்தை எந்த மூலைக்கு???//

ரொம்ப புகழாதீங்க ! ;)

//சோ.. கவுஜ நல்லா இருக்கறதா நினைச்சி.. கவுந்துடுவாரு.. :) //

கவுஜு திறனாய்வு செய்த கதை எல்லாம் உங்களுக்கு தெரியாது போல. சரித்திரத்தை புரட்டி பார்த்து வாங்க!

G3 said...

//சபைல நியாயம் தோற்றுவிட கூடாது என்று தான் கேட்குறேன், தப்பா?//

உங்க நியாய உணர்ச்சிக்கு நான் தான் சிக்கினேனா இன்னிக்கு :(

மாட்டேன்.. சிக்க மாட்டேன் :P

G3 said...

//நீங்க என்ன செய்வீங்களோ அதே தான் செய்வாங்க!//

@கவி,

தேவையா இது உங்களுக்கு :)))) பாருங்க நீங்களும் சேந்து டேமேஜ் ஆயிட்டீங்க :)))

[போதும் இத்தோட நிறுத்திக்குவோம் :) ]

G3 said...

//தவறா எல்லாம் கூவ கூடாது...

அடுத்த தபா சரியா கூவுங்க!//

சரிங்க ஆபீஸர்.. அடுத்த தபா திருத்திக்கறேன் :))

G3 said...

//ரொம்ப புகழாதீங்க ! ;)//

ஆஹா.. இப்படி சொன்னா கொஞ்சம் பலன் இருக்கு போல.. ஓ.கே.. நெக்ஸ்ட் டைம் இந்த டெக்னிக்க யூஸ் பண்ணிக்கறேன் :)

G3 said...

35 :)))

கவிதா | Kavitha said...

நீங்க என்ன செய்வீங்களோ அதே தான் செய்வாங்க!

உ.தா - சாப்பிடுவது, தூங்குவது, வெட்டி கதை (மொக்கை) பேசுவது, டிவி பார்ப்பது, பாட்டு கேட்பது!
//

ம்ம் அப்புறம் நீங்க என்ன செய்வீங்க.. டான்ஸ் ஆடுவீங்களோ.. ?!! ஓவரா இல்ல உங்களுக்கு... ???

காயூ என்ன செய்வாங்க. .அதை மட்டும் தான் பேசனும். !! :) (காயூ Dont worry, he wont get it. )

கவிதா | Kavitha said...

துரோகிகீஈஈஈஈஈஈஈஈஈ னு கத்தனும்

தவறா எல்லாம் கூவ கூடாது...

அடுத்த தபா சரியா கூவுங்க!
//

ஆமா அடுத்த தபா , சிவா பார்த்து கூவனும் சரியா.. !!

கோபிநாத் said...

இவருக்கு என்னப்பா ஆச்சு...ச்ச..

Raz said...

yar enna sonna enna? chitirai 14 than tamil puthandu... :) so tension agathe. antha aalu sonnathu nala.. nee pona varusham kondadama irunthiya? illa intha varusham thai14 kondaduniya? illalee...

ambutu than!

நாகை சிவா said...

@ கோபி!

வர வர யாருக்குமே புரியாத புதிரா இருக்கனும் என்று முடிவு பண்ணிட்டார் போல!

@ Raz!

எங்க அம்மா மாதிரியே பேசுற :)))

நாகை சிவா said...

@ கவிதா & காயத்ரி!

உங்க பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துடுச்சா ;)