Tuesday, December 02, 2008

டைரிக் குறிப்பு - 2 (இந்திய அரசியல்)

மகாராஷ்ட்ரா துணை முதல்வர் ராஜினாமா, உள்துறை அமைச்சர் ராஜினாமா, ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்பு என இந்திய அரசு பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றது. இருந்த போதிலும் இந்தியா இன்னும் பல முக்கிய மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கியமாக தேசிய பாதுகாப்பிலும், பதில் நடவடிக்கை, உளவுத் துறை போன்ற விசயத்தில். பொறுத்து இருந்து பார்ப்போம்.

*****

இந்தியாவில் மும்பையில் நடைப்பெற்ற சம்பவத்துக்கு யாரு காரணம் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. ஆனால் அதுக்குள் இங்கு மக்கள், எல்லை தாண்டிய தீவிரவாதிகள், பாக் ஆதரவு தீவிரவாதிகள் என்று ஒரு பக்கமும், முஸ்லீம் பயங்கரவாதிகள் என மறுபுறமும், இந்துத்வா வே இதை செய்து இருக்கலாம் என ஒரு பிரிவினரும் குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள். அதில் நம் பதிவர்களும் அடக்கம். மக்கா இதை எவன் செய்து இருந்தாலும் எந்த மண்ணாங்கட்டி மதமாக இருந்தாலும் சரி இதுக்கு துணையாக இருந்த அத்தனை பெயரையும் பிடித்து தூக்கில் இட வேண்டும் என்பதே எங்களை போன்றோரின் எண்ணம். அதை விடுத்து இந்த பிணந்தின்னி அரசியலை தொடராதீர்கள்.
*****

இங்கு இப்படி என்றால் பாகிஸ்தானில் அரசில் இருந்து மக்கள் வரை எதற்கெடுத்தாலும் இந்தியா பாகிஸ்தானை குறை கூறுவது சரி அல்ல, ஆதாரத்தை காட்டுங்கள் என அறிக்கை விடுவதும், ஆங்காங்கே கண்டன ஆர்பாட்டம் ஊர்வலம் நடப்பதுமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் மீது ஏவப்படும் ப்ராக்ஸி வார்(போர்) க்கு பாகிஸ்தான் தான் பின்புலமாக திகழ்கின்றது என்பது உலக அறிந்த உண்மை. ஆப்கானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்று அமெரிக்காவே குற்றம் சாட்டி உள்ளது என்பதும் இங்கு குறிப்பிட்ட காண வேண்டிய விசயம். பாகிஸ்தான் என்று கூறுவதால் ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் குறை கூறுவதாக அர்த்தம் இல்லை. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதம் அமைப்பை தான் இந்தியா குற்றம் சாட்டுவதாக என் எண்ணம்.
*****

மும்பை பயங்கரம் முடிவுக்கு வந்த அடுத்த நாளே கராச்சியில் நடைபெற்ற கலவரத்தில் 16 நபர்கள் இறந்தும், 40 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தும் உள்ளனர். இதில் இந்தியாவின் கை இருக்கலாம் என அங்கு உள்ள மக்கள் அச்சம் எழுப்பி உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளாதாகவும்,அதை முன்னிட்டு ஆப்கான் எல்லையில் இருந்து 1 லட்சம் படை வீரர்களை விலகி இந்திய எல்லையில் நிறுத்த இருப்பதாக செய்தி. இது போதாது என்று நேட்டோ படைகளுக்கு அளிக்கும் ஆதரவை விலகி கொள்ளா விட்டால் தலிபான் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. உண்மையில் பாகிஸ்தான் மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளது. ஒரே ஆறுதல் நம் புல்தடுக்கி பயில்வான் அரசு இது வரைக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்திலோ பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் நுழைந்து பிடிப்பது போன்ற எந்த ஒரு எண்ணத்திலும் இல்லை என்பதே.
*****

உலகமே பற்றி எரிந்தாலும் சரி, எவன் எக்கெடு கெட்டு போனாலும் சரி நம் அரசியல் நடந்தா சரி என்று இருக்கும் நம் தமிழக அரசியல் தலைவர்கள். சில நாள் வரை இலங்கை பிரச்சனை இப்பொழுது அருந்ததி பிரச்சனை. நல்லா இருங்கடே. உங்க பொழுப்பு நல்லாவே நடக்குது.
*****

நாகை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை மிக கடுமையாக தாக்கிய நிஷா (பெயர் நல்லா இருக்கு) நாகை அதன் சுற்று வட்டாரங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதை கேட்க நல்லாவே இல்லை. திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் பகுதிகளிலும் சீர்காழி பகுதிகளிலும் சிறிய வாகனங்கள் போக முடியாத அளவுக்கு இன்னும் நிலைமை நீடிக்கிறது. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் அளிக்கப்படும் என்று ஆறுதல் அளித்து உள்ளார். எவன் ஆட்சிக்கு வந்தாலும் நிவாரணம் அளிப்பதில் தான் குறியாக இருக்கானே தவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்த யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம். பணம் ஒட்டாக மாறும் வரை இதே நிலைமை தான் நீடிக்கும்.
*****

மழை இந்த கொட்டோ கொட்டு என்று கொட்டி உள்ளது. ஆனாலும் அடுத்த வருடம் வழக்கம் போல் தண்ணீருக்கு அடுத்த மாநிலங்களிடம் கை ஏந்தி கொண்டு தான் இருக்க போகிறோம். அவ்வளவு தண்ணீரும் வீணாக கடலில் கலப்பதை தடுத்து குறைந்தபட்சம் கடலோர நகரங்களில் ஆவது சில தடுப்புணைகளை உருவாக்கலாம். சிந்திப்பார்களா? சென்னையில் நிலைமை இன்னும் மோசம். ஏரி, குளங்களில் உள்ள ஆக்கரமிப்பை அகற்றியும், வடிக்காலை ஒழுங்குப்படுத்துவதையும் தவிர்த்து வேறு வழி இல்லை.
*****

குடும்ப சண்டைகளை விலக்கி, தமிழன தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து எழுதும் அறிக்கைகளை, கடிதங்களை நிறுத்தி தமிழக மேம்பாட்டிற்கு ஏதாவது உபயோகமாக செய்தால் புண்ணியமாக போகும் நமக்கு எல்லாம். எதிர்கட்சியும் எல்லாத்துக்கு நொண்டி நாட்டியம் ஆடாமல் உள்கட்சியை பலப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் இறங்கலாம்.
*****

இந்திய குண்டுவெடிப்பை தொடர்ந்து ஐ.நா. தன் கண்டத்தை பதிவு செய்து இருந்தது. அதை தொடர்ந்து ஐ.நா.விடம் எழுப்பட்ட கேள்விக்கு தொட்டும் தொடாமலும் தான் பதில் அளித்து உள்ளது. அதன் விபரம்

Question: In view of this weekend’s events in India, in which there is tension between India and Pakistan which has arisen, is the Secretary-General going to intervene at some point in time to caution, I mean some sort of, I mean talks between India and Pakistan, you know, to lessen the tension that has arisen over there?

Deputy Spokesperson: The Secretary-General, as you know, was one of the first to express his strong condemnation of these attacks, as well as his sympathy and solidarity with the Government and people of India. That solidarity extends to other nations who lost citizens in these heinous attacks. He reiterates his strong condemnation today. He also joins in the call, by Indian authorities, for full cooperation, by all concerned both inside and outside the country, with their investigation.

Question: What will he do, you know, to, because there are indications that India may, in an act of reprisal, attack? Pakistan fears it may attack Pakistan, because although it says it has nothing to do with those non-state actors, but still the responsibility is being pinned on Pakistan. What does the Secretary-General plan to do about that?

Deputy Spokesperson: I just read to you what the Secretary-General has said on the subject.

Question: Yes, following up on the India-Pakistan situation, the Pakistan Ambassador sent a letter to the Secretary-General yesterday. Does he have any comments on it?

Deputy Spokesperson: I have to follow up on the receipt of the letter. I am not aware of a receipt of a letter from Pakistan.
*****

15 comments:

ஆயில்யன் said...

//எவன் ஆட்சிக்கு வந்தாலும் நிவாரணம் அளிப்பதில் தான் குறியாக இருக்கானே தவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்த யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம்.//

ரொம்ப சோகமான விசயம்! நிவாரணம்ங்கற பேர்ல செலவழிக்கப்படும் பணத்தை அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக்கொண்டால் பல ஆண்டுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டிய நிலையே ஏற்படாது!

கபீஷ் said...

//அவ்வளவு தண்ணீரும் வீணாக கடலில் கலப்பதை தடுத்து குறைந்தபட்சம் கடலோர நகரங்களில் ஆவது சில தடுப்புணைகளை உருவாக்கலாம். சிந்திப்பார்களா? //

காமெடி பண்ணாதீங்க சிவா!

கபீஷ் said...

//ஆயில்யன் said...
நிவாரணம்ங்கற பேர்ல செலவழிக்கப்படும் பணத்தை அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக்கொண்டால் பல ஆண்டுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டிய நிலையே ஏற்படாது!//

இது பாயிண்ட்

நாகை சிவா said...

@ ஆயில்யன்

அதுக்கு திட்டம் எல்லாம் சரியா தான் போடுறாங்க. ஆனா அதுக்கு தேவையான நிதி ஒதுக்குவது இல்லை. அப்படியே ஒதுக்கினாலும் அதை இவனுங்க ஒதுக்கிட்டு திட்டத்தை அம்போனு விட்டூறாங்க...

என்னத்த சொல்ல..

நாகை சிவா said...

@ கபீஷ்!

எதை காமெடி பண்ணாதீங்க என்று சொல்லுறீங்க. தடுப்பணை கட்ட சொன்னதையா இல்ல சிந்திப்பீர்களா என கேட்டதையா?

கொள்ளிடம் பாலத்தை கடக்கும் போது எல்லாம் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வி தான் அது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கொள்ளிடம் பாலத்தை கடக்கும் போது எல்லாம் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வி தான் அது.//

நாட்டுக்கு நல்லதெல்லாம் சிந்திக்கிறீங்க..

நாகை சிவா said...

//நாட்டுக்கு நல்லதெல்லாம் சிந்திக்கிறீங்க..//

இது மாதிரி எல்லாம் சிந்திக்க கூடாது னு ஏதும் தடை உத்தரவு கொண்டு வந்து இருக்காங்களா...(தமிழகத்தில்)..

பண்ணுவதுக்கான வாய்ப்புகளும் இருக்கும், பண்ணக்கூடிய மக்களும் இருக்காங்க.. அதான் கேட்டேன்

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
\\கொள்ளிடம் பாலத்தை கடக்கும் போது எல்லாம் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வி தான் அது.//

நாட்டுக்கு நல்லதெல்லாம் சிந்திக்கிறீங்க..

//

பின்ன?
ஒரே மாவட்டத்துக்காரங்களாச்சே நாங்கள்லெல்லாம் இப்படித்தான் பாஸ்!

நாகை சிவா said...

//பின்ன?
ஒரே மாவட்டத்துக்காரங்களாச்சே நாங்கள்லெல்லாம் இப்படித்தான் பாஸ்! //

ஏன் பாஸ் அவங்களும் நம்ம மாவட்டம் தானே ;)

அப்புறம் அண்ணாச்சி.. உங்க எம்.பி. தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி தொகுதி முழுக்க டிஜிட்டல் போர்ட் வச்சு சிரிச்சுக்கிட்டு இருந்தார். அதை பத்தி கேள்வி பட்டீங்களா?

கபீஷ் said...

// நாகை சிவா said...
@ கபீஷ்!

எதை காமெடி பண்ணாதீங்க என்று சொல்லுறீங்க. தடுப்பணை கட்ட சொன்னதையா இல்ல சிந்திப்பீர்களா என கேட்டதையா?
//

சிந்திப்பார்களா என கேட்டதை.

நாகை சிவா said...

@ கபீஷ்!

தெளிவு படுத்தியமைக்கு நன்றி :))

சிந்திக்கனும்...

DHANS said...

அடிப்படை வசதிகளை பெருக்கினால் அடுத்தவருசம் மழையில் சேதமாகும் சாலைகளையும் ஏரிகளையும் சரி செய்வது என்று அடிப்பது எப்படி ? நிவாரணம் தருவதில் அடிப்பதையும் எப்படி செய்ய முடியும்?

gils said...

!!! sun newsla vara(atha) seithi arikkai mari iruku :)

//நிவாரணம்ங்கற பேர்ல செலவழிக்கப்படும் பணத்தை அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக்கொண்டால் பல ஆண்டுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டிய நிலையே ஏற்படாது!/

ada..antha vasathilam vellathula poiduchuna thirumba nivaranam thana ..atha thaan ipo seiaranga..ada..paravalaye naanum katchi arambikalam pola..2020la naan thaan adutha CM :D

நாகை சிவா said...

//DHANS said...
அடிப்படை வசதிகளை பெருக்கினால் அடுத்தவருசம் மழையில் சேதமாகும் சாலைகளையும் ஏரிகளையும் சரி செய்வது என்று அடிப்பது எப்படி ? நிவாரணம் தருவதில் அடிப்பதையும் எப்படி செய்ய முடியும்?//

நியாயமான கவலை :)

நாகை சிவா said...

//ada..antha vasathilam vellathula poiduchuna thirumba nivaranam thana ..atha thaan ipo seiaranga..ada..paravalaye naanum katchi arambikalam pola..2020la naan thaan adutha CM :D//

ரொம்ப லேட்டு அண்ணாத்த 2020 வரைக்கும் எல்லாம் 2011 ம் கதைக்கு ஆகாது. போட்டி பலமா இருக்கு... நாம 2015 யோசிப்போம்... என்ன சொல்லுறீங்க ;)