Thursday, December 04, 2008

Gender Based Violence (டைரிக் குறிப்பு - 3)

சில நாட்களுக்கு முன்பு அலுவலக வேலையாக அலைந்து கொண்டு இருக்கும் போது Gender Affairs பிரிவில் இருக்கும் பாகிஸ்தான் நண்பரை எதிர்கொள்ள, என்ன சிவா நீ வெள்ளை ரிப்பன் இல்லாமல் இருக்க எனக் கேட்க, என்ன விசயம் னு கேட்க, கையில் ஓரு பேப்பரை திணிக்க அதில் உள்ள மேட்டரு கீழே.

16 days of activism against Gender Based Violence
This year marks the 18th annual 16 Days of Activism Against Gender
based Violence Campaign (Campaign originated from the first Women's Global Leadership Institute sponsored by the Center for Women's Global Leadership in 1991). The Campaign links issues concerning violence against women, gender and sexual based violence and human rights and emphasizes that all forms of violense, whether perpetrated in the public or private sphere, are a violation of human rights. The dates chosen for the campaign symbolically indicate this link : November 25 markes International day Against Women (officially declared by UN in 1999) and December 10 is International Human Rights Day. The sixteen-day period also hightlights other significant dates, including December 1 (World Aids Day) and December 6 (the anniversary of the Montreal Massacre).

Wearing a white ribbon is a personal pledge to never commit, condone or remain silent about violence against woment and girls.


ஒரு சின்ன சந்தேகம், Gender Based Violence னு சொல்லிட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு உறுதிமொழி இருக்கே. ஏன் இந்த ஒரவஞ்சனை நான் பொங்க, நீ கேட்பது நியாயம் தான் ஆனாலும் கேளுனு சில கதைகளை எடுத்து விட்டான். அவன் கூறிய பதிலில் எனக்கு திருப்தி இல்லை. விவாதம் முற்றியதும், வேலை அதிகம் இருப்பதால் நம் இரவு உரையாடலின் போது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டு ரிப்பனை அணிவதும் அணியாததும் உன் விருப்பம் என்று கூறி ரிப்பனையும் ஊசியையும் கொடுத்துட்டு அவன் எஸ்கேப்.

பெண் உரிமையை பற்றி பேச புதுசா ஏதும் இல்லை. ஏற்கனவே வாங்கிய MCP பட்டம் போதும். ஆண் பெண் பேதம் இல்லை அனைவரும் சமம் என போர்க்கொடி தூக்கும் பல பெண்கள், பெண் என்பதால் மட்டும் கிடைக்கும் ஒரு சலுகைகளை பெற்றுக் கொள்ள தான் முயல்கிறார்கள். அது தவறா இல்லையா என்ற விவாதம் தேவையில்லை. அவர் அவர்கள் எண்ணங்கள் அவரவர்களுக்கே. சொல்வதால் மட்டும் ஏதுவும் மாறிட போவது இல்லை. தானாக உணர்ந்து மனம் மாற்றம் அடைவது தான் பயன் அளிக்கும்.

பெண்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்ட கூடாது என்று இயற்றப்பட்ட சட்டங்களை தங்களின் சுயலாபங்களுக்காகவும், ஆண்களை மிரட்டுவதற்காகவும் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்பது என் எண்ணம். உண்மையில் அநீதியில் அல்லல் பெறும் பெண்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் சென்று அடையவில்லை. அதை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதை பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்வதும் இல்லை. இது நம் நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. உலகம் முழுவதும் இது தான் நிலைமை. ஏதாவது ஒரு விசயத்தை செய்யும் போது அது பெண்களுக்கு பிடிக்காமல் போனாலும், முக்கியமாக அவர்கள் ஏதாவது கேட்டு வரும் போது முடியாது அல்லது இல்லை என்று கூறினால் போதும் அவர்கள் வைக்கும் முதல் வாதமே நான் பெண் என்பதால் தான் நீ இல்லை, முடியாது என்று கூறுகின்றாய் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிப்பார்கள். இன்னமும் அதான் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. (என்னளவில்)

மொத்ததில் பெண்களுக்கு பெண் உரிமை பற்றி சரியான புரிதல் இல்லை என்பது என் வாதம். பெண்களுக்கே இல்லாத போது இது வரை அவர்களை அடக்கியே பழகி வந்த ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுத்த அறிவிலித்தனமாக எனக்கு படுகிறது.

நிற்க. மேலே சொன்னவை எல்லாம் சரியாகப்பட்டாலும் நம் நாட்டின் சில இடங்களிலும், ஹத்தி, உகாண்டா, சூடான் (டார்பூர்) போன்ற இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் மிக அதிகம். அங்கே ஆண்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், அதை இல்லை என்று மறுக்க முடியாது ஆனாலும் சகவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தான் அதிகம். ஒவ்வொரு 30 நிமிடத்தில் இந்தியாவில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு(பெரும்பாலும் கற்பழிப்பு) ஆளாகிறாள். சூடானில் (டார்பூர்) இன்னும் கொடுமை ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பெண் / குழந்தை என்ற அளவில் உள்ளது. அதை எல்லாம் கணக்கில் கொண்டு நான் அந்த வெள்ளை ரிப்பனை அணிந்து என் ஆதரவையும் உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டேன்.


அதே வேளையில் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. 2000ம் ஆண்டு என்று நினைக்கிறேன், மார்ச் 8 ஆம் அன்று கல்லூரியில் பெண்கள் தின விழா எடுக்கப்பட்டது. அதற்காக கல்லூரியில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியயைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஆஹா நமக்கு எல்லாம் கண்கொள்ளா காட்சி தான் என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்த எங்களை ஒரு அறிக்கை கடுப்பேத்தியது. அது அந்த விழாவிற்கு பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று. என்ன கொடுமை இது என்று அதை மீற எவ்வளவோ முயற்சி செய்து அதற்கு அவர்கள் டவுன் ஹாலில் கதவை அடைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த கருப்பு ரிப்பன் அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம்.

காலம் மாறுகிறது. காட்சியும் மாறுகிறது. பல வருடங்களுக்கு முன் வேதவாக்காக தெரிந்த பல விசயங்கள் இன்று படு அபத்தமாக தெரிகின்றது. கருப்பு கொடி இன்று வெள்ளை கொடியாக மாறி உள்ளது.

பின்குறிப்பு : Montreal Massacre பற்றி அறிய ஆர்வமாக இருந்தால் இந்த லிங்கை தொடரவும்.

55 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பழய டைரியும் புதிய டைரியும் .. :)

Divya said...

டைரிக் குறிப்பு.....நல்லா எழுதியிருக்கிறீங்க:)

\\ஏற்கனவே வாங்கிய MCP பட்டம் போதும். \\

MCP = ?

இலவசக்கொத்தனார் said...

சிவா, இப்படி எல்லாம் எழுதினா என்ன நடக்கும்ன்னு தெரியுமில்ல.... :)

கப்பி | Kappi said...

இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ் :))

நல்லா இருங்க :))

ஆயில்யன் said...

//காலம் மாறுகிறது. காட்சியும் மாறுகிறது. பல வருடங்களுக்கு முன் வேதவாக்காக தெரிந்த பல விசயங்கள் இன்று படு அபத்தமாக தெரிகின்றது. கருப்பு கொடி இன்று வெள்ளை கொடியாக மாறி உள்ளது.
//

நாம டெவலப் ஆகிட்டோம்ன்னு அர்த்தம் பாஸ்!

சின்னவயசுல டவுசர் போட்டுக்கிட்டு திரிஞ்சதை நினைச்சு பார்த்தா எப்படி இருக்குமோ அப்படித்தான்!

டைரிக்குறிப்பு
சட்டையில அழகாய் ரிப்பன்
அப்புறம் அந்த சட்டை இப்படி எல்லாமே நல்லா இருக்கு :))

நாகை சிவா said...

//முத்துலெட்சுமி-கயல்விழி
பழய டைரியும் புதிய டைரியும் .. :)//

பழய டைரினு எல்லாம் எதும் இல்லை. இப்ப தானே இந்த கிறுக்குற பழக்கம் எல்லாம் வந்து இருக்கு. அப்ப நல்லா தெளிவா தான் சுத்திக்கிட்டு இருந்தோம் :))

நாகை சிவா said...

@ திவ்யா

//டைரிக் குறிப்பு.....நல்லா எழுதியிருக்கிறீங்க:)//

நன்றி :))

//ஏற்கனவே வாங்கிய MCP பட்டம் போதும்.

MCP = ? //

அட இது தெரியாதா உங்களுக்கு.. என்ன பெண்ணியவாதி நீங்க...

Male Chauvinistic Pig

நாகை சிவா said...

@ கொத்துஸ்

//சிவா, இப்படி எல்லாம் எழுதினா என்ன நடக்கும்ன்னு தெரியுமில்ல.... :)//

அது தெரியாமலா... அன்று ஒரு நாள் கரம் பிடித்து களத்தில் இறக்கி விட்டவரே நீர் தானே... :))

என்ன பண்ண... சொல் புத்தியும் கிடையாது, சுய புத்தியும் கிடையாது நமக்கு... இப்படி தான் எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு சொல்லிக்கிட்டு திரியுறோம்... :)))

நாகை சிவா said...

@ கப்பி!

// இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ் :))//

அனுபவஸ்தர் நீங்க சொன்னா சரி தான் அண்ணாச்சி :)

//நல்லா இருங்க :))//

இது யாருக்கு அவங்களுக்கா? இல்லை எனக்கா?

நாகை சிவா said...

@ ஆயில்யன்

//நாம டெவலப் ஆகிட்டோம்ன்னு அர்த்தம் பாஸ்!//

நாம மட்டும் தான் ஆகி இருக்கோம் என்ற சொல்ல வருறீங்களா பாஸ்... ;)

//சின்னவயசுல டவுசர் போட்டுக்கிட்டு திரிஞ்சதை நினைச்சு பார்த்தா எப்படி இருக்குமோ அப்படித்தான்!//

அது ஒரு கனாக் காலம் ;)

//டைரிக்குறிப்பு
சட்டையில அழகாய் ரிப்பன்
அப்புறம் அந்த சட்டை இப்படி எல்லாமே நல்லா இருக்கு :))//

நன்றி அண்ணாச்சி :)

இராம்/Raam said...

ஏலேய் புலி,

அந்த பட்டம் வாங்கின பதிவுக்கு லிங்கு கொடுத்தா எல்லாரும் படிச்சு தெரிஞ்சுக்குவாங்கள்ளே? நான் வேணுமின்னா அதுக்கு உதவி பண்ணாட்டா... :)

இராம்/Raam said...

//இலவசக்கொத்தனார் said...
சிவா, இப்படி எல்லாம் எழுதினா என்ன நடக்கும்ன்னு தெரியுமில்ல.... :)//

hehehe... :)

மங்கை said...

///பெண் என்பதால் மட்டும் கிடைக்கும் ஒரு சலுகைகளை பெற்றுக் கொள்ள தான் முயல்கிறார்கள்//

200%..சரியா சொன்னீங்க... சில இடங்களில் பெண்களுக்கென்று இருக்கும், க்யூ, இது எல்லாம் எனக்கு மிகுந்த சங்கோஜத்தை குடுக்கும்... அளைந்து திரிந்து, டென்ஷன்ல பேங்க்ல நின்னுட்டு இருப்பாங்க ஆண்கள்.. கஷ்டப்பட்டு செக் பாஸ் பண்ணுமே.. இது முடிச்சுட்டு இனி அடுத்த பேமெண்ட்டுக்கு ஓடனுமே.. நாளைக்கு பிரச்சனைக்கு என்ன பண்ண ன்னு தலைய பிச்சுட்டு இருப்பு கொள்ளாமல் நின்னுட்டு இருக்கும் போது... அம்மினி ஸ்டைல்லா நேரா முன்னாடி போய் நின்னா எரிச்சல் வருமா வராதா...எனக்கு வந்திருக்கு...

எனக்கு சில சமயம் ரொம்ப embaressing ஆ இருக்கும் சிவா...

எங்க chartered பஸ்ல பெண்களுக்கென்று 3 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கு..அது கூட பரவாயில்லை...இதுல என்ன கொடுமைன்னா...சில சமயம் அதிகமான பெண்கள் ஏறும்போது, அவர்களுக்கு உட்கார இடம் இருக்காது.. நின்னுட்டு வர வேண்டி இருக்கும்..முதல் நிறுத்தத்துல ஏறுகிற அம்மணிக இந்த மூனு இருக்கையில ஒரு இருக்கையில உட்கார மாட்டாங்க.. மற்ற இருக்கையில் உட்கார்ந்துட்டு வேற ஸ்டாப்ல ஏற தோழிகளுக்கு இடம் பிடிக்கறாங்களாம்... இதுல என்னையும் மற்ற இருக்கையில உட்கார சொல்லி அடம் பிடிப்பாங்க.. மகா கேவலமா இருக்கும்.. இவர்களை விட அதிக வயதுடைய ஆண்கள் நின்னுட்டு வருவாங்க... இதுக கால் மேல் கால் போட்டுட்டு இளிச்சிட்டு வர்ரத பார்த்தா எனக்கு ரை ரை னு அறையலாம் போல இருக்கும்..

நிஜமாவே ஆதரவு வேண்டியிருக்கும் பெண்களுக்கு எந்த விதமான ஆதரவும் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை... அவர்கள் அடிமை பட்டு இருக்காங்க ன்னு கூட அவர்களுக்கு தெரியாது... அதான் கொடுமை...

Good one Siva...

{யார் கிட்ட வாங்க போறனோ தெரியலை...:-))}

நாகை சிவா said...

@இராம்!


//அந்த பட்டம் வாங்கின பதிவுக்கு லிங்கு கொடுத்தா எல்லாரும் படிச்சு தெரிஞ்சுக்குவாங்கள்ளே? நான் வேணுமின்னா அதுக்கு உதவி பண்ணாட்டா... :)//

நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும். நடப்பவை இனி நன்றாக இருக்கட்டும்.

என்ன நான் சொல்லுறது...

இராம்/Raam said...

மங்கை மேடம் வந்ததுக்கப்புறம் இந்த இடம் களை கட்ட ஆரம்பிச்சிருக்கு.... :)

கைப்புள்ள said...

//அது அந்த விழாவிற்கு பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று. என்ன கொடுமை இது என்று அதை மீற எவ்வளவோ முயற்சி செய்து அதற்கு அவர்கள் டவுன் ஹாலில் கதவை அடைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த கருப்பு ரிப்பன் அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம்.
//

இப்படியெல்லாம் பண்ணிட்டு அதை தெகிரியமா ப்ளாக்லயும் எழுதி வச்சா MCPன்னு பட்டம் குடுக்காம ஒன்னை கொஞ்சுவாங்களா?

கைப்புள்ள said...

//பெண்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்ட கூடாது என்று இயற்றப்பட்ட சட்டங்களை தங்களின் சுயலாபங்களுக்காகவும், ஆண்களை மிரட்டுவதற்காகவும் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்பது என் எண்ணம். உண்மையில் அநீதியில் அல்லல் பெறும் பெண்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் சென்று அடையவில்லை. அதை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதை பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்வதும் இல்லை. இது நம் நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. //

இது மிகமிகச் சரி. நீ எழுதுனதுலேயே இது என்னை ரொம்ப கவர்ந்துச்சு. Feminism, பெண்ணியம் இதை எல்லாம் விடு, தங்களோட அடிப்படை உரிமைகள் என்னன்னு தெரியாம கூட நிறைய பெண்கள் நம்ம நாட்டுலேயே இருக்காங்கன்றது தான் உண்மை.
:(

மங்கை said...

//மங்கை மேடம் வந்ததுக்கப்புறம் இந்த இடம் களை கட்ட ஆரம்பிச்சிருக்கு.... :)//

மேடம் னு சொல்றவுங்கள எல்லாம் புடிச்சிட்டு போறாங்களாம்...

கைப்புள்ள said...

//மேடம் னு சொல்றவுங்கள எல்லாம் புடிச்சிட்டு போறாங்களாம்...//

சாரி மேடம். சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்...மன்னிச்சு விட்டுடச் சொல்லுங்க.

கோபிநாத் said...

அது எப்படி சகா உனக்கு மட்டும் இப்படிபட்ட பதிவா வந்து மாட்டுது..!!!! ;)))

மாப்பி ராம் சொன்னது போல லிங் கொடுத்த இன்னும் உன் புகழ் எட்டுதிக்கும் பரவும்ல...:))

நாகை சிவா said...

////மேடம் னு சொல்றவுங்கள எல்லாம் புடிச்சிட்டு போறாங்களாம்...//

சாரி மேடம். சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்...மன்னிச்சு விட்டுடச் சொல்லுங்க.//

தல.. இதை தான் வன்மையாக கண்டிக்கிறேன். அவன் தோள் அளவுக்கு வளர்ந்த பையன் ஒருத்தன் இருக்கான் ... அவன போய் சின்ன பையனு சொல்லுறீங்களே...

ராம் - நோ ஹார்ட் பீலிங்க்ஸ் ப்ளீஸ்..

மங்கை said...

//கைப்புள்ள said...
சாரி மேடம். சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்...மன்னிச்சு விட்டுடச் சொல்லுங்க.//

இதை ஆரம்பிச்சதே நீங்க தானே... முதல்ல உங்களை புடிச்சுட்டு போகச் சொல்லனும்...:-)

ராம் சின்ன பையன் தான் விட்டுட சொல்றேன்... கைப்புள்ளன்னு பேர் இருந்தா மட்டுமே சின்ன பையன் ஆகிட முடியுமா... be ready..:-))

இதான் சொ. செ.சூ...

நாகை சிவா said...

@ மங்கை!

இது மாதிரி பதிவு போட்டா தான் வந்து தலைய காட்டுவீங்க போல... உங்களுக்காகவே இது போல போஸ்ட் அப்ப அப்ப போடனும் போல...

நீங்க சொன்ன கருத்துகளை அப்படியே ஒத்துக்குறேன். நீங்க சாதாரணமாக நடப்பவைகளை மட்டும் தான் சொல்லி உள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் யோசித்தால் இன்னும் பல விடைகள் கிடைக்கும்.

இருந்தாலும் உங்களை போன்றவர்கள் தான் பெரிய ஆறுதல். தொடர்ந்து உங்கள் பணிகளை(சேவைகளை) தொடருங்கள்.

//{யார் கிட்ட வாங்க போறனோ தெரியலை...:-))}//

என்க்கிட்ட தான். என்னனு கேட்குறீங்களா....

இன்னிக்கு International Volunteer Day. இந்த நாளில் உங்கள் சேவைகளுக்கு வாழ்த்து சொல்லாட்ட்டி எப்படி.

வாழ்த்துக்கள் மங்கை :)

நாகை சிவா said...

@ கைப்புள்ள

//இப்படியெல்லாம் பண்ணிட்டு அதை தெகிரியமா ப்ளாக்லயும் எழுதி வச்சா MCPன்னு பட்டம் குடுக்காம ஒன்னை கொஞ்சுவாங்களா?//

செய்ததை ஒத்து கொள்ளும் தைரியம் இருக்கிறது என்ற வகையில் இதை நீங்க பாராட்டனும்..

இதை எல்லாம் எழுதுறதுக்கு முன்னாலே பட்டம் வாங்கியாச்சு. அதான் முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்குனு களத்தில் இறங்கியாச்சு.

//Feminism, பெண்ணியம் இதை எல்லாம் விடு, தங்களோட அடிப்படை உரிமைகள் என்னன்னு தெரியாம கூட நிறைய பெண்கள் நம்ம நாட்டுலேயே இருக்காங்கன்றது தான் உண்மை.//

I second this... அவர்களை கணக்கில் கொண்டு தான் இவர்களை விட்டு தொலைக்க வேண்டியது இருக்கு

நாகை சிவா said...

@ கோபிநாத்

//அது எப்படி சகா உனக்கு மட்டும் இப்படிபட்ட பதிவா வந்து மாட்டுது..!!!! ;)))//

தானா வருது சகா ;)

//மாப்பி ராம் சொன்னது போல லிங் கொடுத்த இன்னும் உன் புகழ் எட்டுதிக்கும் பரவும்ல...:))//

புகழை தேடி நம்ம அலைய கூடாது அதுவா நம்மள வந்து அடையனும்.

நாகை சிவா said...

@ மங்கை

//இதை ஆரம்பிச்சதே நீங்க தானே... முதல்ல உங்களை புடிச்சுட்டு போகச் சொல்லனும்...:-)//

ஆரம்பிச்சு வைத்ததா? இதுல ஏகப்பட்ட உள்குத்து இருக்கும் போல இருக்கே.. பழச கிளற மாதிரி இருக்கே ;)

//ராம் சின்ன பையன் தான் விட்டுட சொல்றேன்... கைப்புள்ளன்னு பேர் இருந்தா மட்டுமே சின்ன பையன் ஆகிட முடியுமா... be ready..:-))
இதான் சொ. செ.சூ...//

இது எங்க தல க்கு புதுசா என்ன... அவரு எப்பவுமே இப்படி தான் :))

மங்கை said...

//அவர்களை கணக்கில் கொண்டு தான் இவர்களை விட்டு தொலைக்க வேண்டியது இருக்கு//

Ithaan highlight...ha ha ha.... pathivu sollaatha vishyangalai ithu solleeduchu...

thanks for the vaazhthukkal...:-)

கைப்புள்ள said...

//இதை ஆரம்பிச்சதே நீங்க தானே... முதல்ல உங்களை புடிச்சுட்டு போகச் சொல்லனும்...:-)//

என்ன இது அபாண்டம்? முதன்முதலில் ஆரம்பிச்சது இராம்ங்கிற பையன் தான் மேடம்...நான் இல்லை. கொஞ்சம் சரியாப் பாருங்க.

//ராம் சின்ன பையன் தான் விட்டுட சொல்றேன்... கைப்புள்ளன்னு பேர் இருந்தா மட்டுமே சின்ன பையன் ஆகிட முடியுமா... be ready..:-))

இதான் சொ. செ.சூ...//

ராமை விடப் பெரிய பையன்னாலும் நானும் இன்னும் சின்னப் பையன் தான். என் பொண்ணுக்கு வயசு மூனு மாசம் தான். அதனால அவளோட அப்பாவுக்கு வயசு மூனு மாசம் தான். கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா இருக்கும்.

மங்கை said...

//என்ன இது அபாண்டம்? முதன்முதலில் ஆரம்பிச்சது இராம்ங்கிற பையன் தான் மேடம்///

ippo ram thaan..ithukku munnaadi... yaaru sirrrrrrrr

இராம்/Raam said...

மங்கை மேடம் ,

உங்கள மாதிரி பெரிய ஆளுக எல்லாரையும் மரியாதையா கூப்பிடமின்னு எங்க ஸ்கூல் வாத்தியார் சொல்லி கொடுத்திருக்காரு....

அதுனாலேதான் உங்களை மேடமின்னு சொல்லி மரியாதையா கூப்பிட்டேன் மேடம்... :)

இராம்/Raam said...

//ராமை விடப் பெரிய பையன்னாலும் நானும் இன்னும் சின்னப் பையன் தான். என் பொண்ணுக்கு வயசு மூனு மாசம் தான். அதனால அவளோட அப்பாவுக்கு வயசு மூனு மாசம் தான். கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா இருக்கும்.//

தல,


இது பெரிய்ய மொக்கை போங்காட்டாமா இருக்கே? :)

ஆமாம் டயபர் மாத்துற டியூட்டிய விட்டுட்டு இங்க என்ன வேலை??

அவந்திகா said...

anna i have tagged u also... i had tagged 4..now let it be 5..

annaa..pls dont mind that i tagged u lately...

pls annaaaaaaaaaa.. write soon before everything goes silent...

Divya said...

\\அட இது தெரியாதா உங்களுக்கு.. என்ன பெண்ணியவாதி நீங்க...\\


ஹலோ ஷிவா.....நான் பெண்ணியவாதி ன்னு எப்போ சொன்னேன்???

நாகை சிவா said...

@ அவந்திகா!

கண்டிப்பாக எழுதுறேன் :)

நாகை சிவா said...

@ திவ்யா!

//ஹலோ ஷிவா.....நான் பெண்ணியவாதி ன்னு எப்போ சொன்னேன்???//

MCP னா என்னனு கேட்டப்பவே நீங்க பெண்ணியவாதி இல்லங்குறது தெரிந்துடுச்சு திவ்யா... :)

அது சும்மா உல்லூயிக்கு கேட்டது.

No Offense :)))

(வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்து இருக்கலாம் இப்ப கலைஞர் நிலைமை ஆச்சு எனக்கும் :(( )

usha said...

naanga ponnu-nradhaladhane indha post potrukeenga, vagundhuruvom vagundhu ;-)

But really, I dont understand why there are feminists, naama ozhunga irundha males-um nalladhan treat panvanga....avangalai thittite irundha avangaluku vera madhiri complex aayidum - so where comes feminism?

கவிதா | Kavitha said...

//மொத்ததில் பெண்களுக்கு பெண் உரிமை பற்றி சரியான புரிதல் இல்லை என்பது என் வாதம். பெண்களுக்கே இல்லாத போது இது வரை அவர்களை அடக்கியே பழகி வந்த ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுத்த அறிவிலித்தனமாக எனக்கு படுகிறது.//

ம்ம் பெண் உரிமை பற்றிய புரிதல் இல்லை தான்...எங்களை விட நீங்க எல்லாம் புத்திசாலிகள் ஆச்சே வெளிஉலகம் தெரிந்தவர்கள் ஆச்சே, அதனால் உங்களிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்...

நாங்கள் அறிவிலிகளாகவே இருந்துவிட்டு போகிறோம் நீங்கள் அறிவாலிகளாக இருக்கலாம் அல்லவா..?!!

கவிதா | Kavitha said...

//பெண் உரிமையை பற்றி பேச புதுசா ஏதும் இல்லை. ஏற்கனவே வாங்கிய MCP பட்டம் போதும். //

சிவா.... யாரோ ஒருவர் அப்படி சொல்லிவிட்டார் என்பதற்காக உங்களுடைய நியாமான ஆதங்கத்தையும், புரிதல்களையும், கோபத்தையும் சொல்லாமல் விட்டுவிடுவீர்களா?

வாழ்க்கையை இழக்கும் இன்றைய மங்கைகள் என்ற பதிவில் பெண்களுகளின் போக்கை எதிர்த்து ஒரு பதிவிட்ட போது, பெண்களே எனக்கெதிராக ஒரு பதிவிட்டு விட்டு கடைசியாக சிரிப்பான் போட்டு இருந்தார்கள். அந்த பதிவை படித்து வராத கோபம் அவர்களின் சிரிப்பானை பார்த்து வந்தது எனக்கு.

எனக்கே அப்படி என்றால் உங்களை எம்.சி.பி என்ன அதற்கு மேலே கூட விமர்சனம் செய்வார்கள். Take it easy Man! :)

மங்கை said...

ப்ச்...சூடு பிடிக்கலையா சிவா...

கவிதா | Kavitha said...

//ப்ச்...சூடு பிடிக்கலையா சிவா...//

மங்கைஜி, "Gender Based Violence (டைரிக் குறிப்பு - 3)"இப்படி எல்லாம் தலைப்பிட்டா எங்க சூடு பிடிக்கும் சொல்லுங்க..இதுல ப்ளாக் வேற "ஏதோ சொல்கிறேன்" ன்னு இருந்தா??!!

சிவா தலைப்பு வைக்க தெரிஞ்சிக்கணும்.. :)

நாகை சிவா said...

@ usha!

//But really, I dont understand why there are feminists, naama ozhunga irundha males-um nalladhan treat panvanga....avangalai thittite irundha avangaluku vera madhiri complex aayidum - so where comes feminism?//

நியாயமான பேச்சு.. உங்களுக்கு தெரியுது. பலருக்கு தெரியலையே... அதான் கொடுமையே :)

நாகை சிவா said...

@ கவிதா!

//ம்ம் பெண் உரிமை பற்றிய புரிதல் இல்லை தான்...எங்களை விட நீங்க எல்லாம் புத்திசாலிகள் ஆச்சே வெளிஉலகம் தெரிந்தவர்கள் ஆச்சே, அதனால் உங்களிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்... //

இது விதாண்டவாதம் :) ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி என்னிக்குமே பதில் ஆகாது கவிதா !

//நாங்கள் அறிவிலிகளாகவே இருந்துவிட்டு போகிறோம் நீங்கள் அறிவாலிகளாக இருக்கலாம் அல்லவா..?!!//

ஏன் இப்படி சபைல சொல்லிக்கிட்டு... அடுத்தவங்க எப்படி இருக்கனும் என்று யோசிப்பதே அறிவிலித்தனமாக தான் எனக்குப் படுகின்றது. அதை தான் நான் சொல்லி இருக்கேன்.

நாகை சிவா said...

//எனக்கே அப்படி என்றால் உங்களை எம்.சி.பி என்ன அதற்கு மேலே கூட விமர்சனம் செய்வார்கள். Take it easy Man! :)//

அதுக்கு எல்லாம் வருத்தப்படு ஜன்மம்னு நினைக்குறீங்களா? சான்ஸ்சே இல்ல...

இருந்தாலும் நன்றிகள் பல :)

நாகை சிவா said...

//ப்ச்...சூடு பிடிக்கலையா சிவா...//

பனி விழும் டிசம்பர் மாதம் எதுக்கு தேவையில்லாம சூடு பிடிச்சுக்கிட்டு.... அப்படியே போகட்டும்...

நாகை சிவா said...

//மங்கைஜி, "Gender Based Violence (டைரிக் குறிப்பு - 3)"இப்படி எல்லாம் தலைப்பிட்டா எங்க சூடு பிடிக்கும் சொல்லுங்க..இதுல ப்ளாக் வேற "ஏதோ சொல்கிறேன்" ன்னு இருந்தா??!! //

வேற எப்படி இருக்கனும்.. சொல்லுங்கோ?

//சிவா தலைப்பு வைக்க தெரிஞ்சிக்கணும்.. :)//

பெண்கள் என்னும் மிருகங்கள் சரியா வரும் கவிதா ;)

கவிதா | Kavitha said...

/சிவா தலைப்பு வைக்க தெரிஞ்சிக்கணும்.. :)//

பெண்கள் என்னும் மிருகங்கள் சரியா வரும் கவிதா ;)//

நக்கலு?!! வேணாம் சரியா..!! நாங்களா பஸ்ல..உங்க பின்னாடி முன்னாடி நின்னுகிட்டு அசிங்கம் பண்றோம்..? அந்த தலைப்பு பதிவுக்காக பதிவு சம்பந்தமாக வைத்தது..

வேணும்னு ஹிட்காக வைத்தது இல்ல சரியா.. அப்படின்னு பார்த்தா என்னோட அணில் குட்டியோட "தல உய்ய்.." என்ற பதிவுக்கு தான் செம ஹிட் வந்தது..

டென்ஷன் பண்ணாதீங்க.. பெண்ணை மிருகம்னு சொல்ல நினைக்கிற முதல் ஆணா உங்களைததான் பார்க்கிறேன்.

என்னை சொல்லனும்னா.. தனியா சொல்லுங்க தனியா திட்டு வாங்குங்க..

பாச மலர் said...

//உண்மையில் அநீதியில் அல்லல் பெறும் பெண்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் சென்று அடையவில்லை//

உண்மைதான்..பெண்னுரிமை..ஆண் பெண் பேதம் இவையெல்லாம் என்னவென்று யோசிக்கக் கூட நேரமில்லாமல், வழியில்லாமல் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது..

உருப்புடாதது_அணிமா said...

எனக்கு புரியாத/தெரியாத/தேவை இல்லாத/தேவைப்படாத (எதுக்கு தேவை) ..

நான் இந்த ஆட்டைக்கு வரல அப்படின்னு சொல்ல தான் இதன பில்ட் அப்பு ??

உருப்புடாதது_அணிமா said...

வந்ததுக்கு ஒரு அம்பது போட்டுட்டு போறேன்

உருப்புடாதது_அணிமா said...

50

உருப்புடாதது_அணிமா said...

நண்பு..

சொல்ல வந்தது புரியுது ...

(அப்படின்னு சொல்ல ஆசை தான்.. என்ன பண்றது )

செல்வன் said...

நாகையாரே

நலமா?

பதிலை எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. உங்கள் முதல் கேள்வியிலிருந்து துவங்குகிறேன்.

//ஒரு சின்ன சந்தேகம், Gender Based Violence னு சொல்லிட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு உறுதிமொழி இருக்கே. ஏன் இந்த ஒரவஞ்சனை?//

அந்த பெயரே குறிப்பிடுவது போல் அது பாலினம் சார்ந்த வன்முறை.பெண்களின் உரிமை மீறப்படுவதற்கு காரணம் அவர்கள் பெண்கள் என்பதுதான். கற்பழிப்பு, வரதட்சிணை,மனைவியை அடித்தல், ஈவ் டீஸிங்..இதுபோன்ற வன்முறைகள் பெண்கள் மீது நடத்தப்பட காரணம் அவர்கள் பெண்கள் என்பதுதான். போர்குற்றங்களில் கூட பிடிபடும் ஆண்கள் கொல்லப்படுவதும், பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும் வாடிக்கை.அதனால் தான் இது gender based violence எனப்படுகிரது.

//ஆண் பெண் பேதம் இல்லை அனைவரும் சமம் என போர்க்கொடி தூக்கும் பல பெண்கள், பெண் என்பதால் மட்டும் கிடைக்கும் ஒரு சலுகைகளை பெற்றுக் கொள்ள தான் முயல்கிறார்கள்.//

இது நம் நாட்டில் காணப்படும் ஒரு தவறான அணுகுமுறை.பெண்களுக்கு பார்லிமெண்டில் 33% இடம் ஒதுக்குவதாலும், பஸ்ஸில் தனி சீட்டு ஒதுக்குவதாலும், தனி கியூ ஒதுக்குவதாலும்,பெண்கள் கல்லூரி கட்டுவதாலும் பெண்ணுரிமை என்பது வந்துவிடாது. இவற்றில் சில முறைகள் (பெண்களுக்கு தனி கல்லூரி,பள்ளி) மிகவும் ஆபத்தானவை. நம் அரசியல்வாதிகள் பெண்களை ஓட்டுவங்கியாக கருதி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இது எனக்கு உடன்பாடான விஷயமல்ல.இது நீண்டநாள் தீர்வுமல்ல.

//பெண்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்ட கூடாது என்று இயற்றப்பட்ட சட்டங்களை தங்களின் சுயலாபங்களுக்காகவும், ஆண்களை மிரட்டுவதற்காகவும் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்பது என் எண்ணம். உண்மையில் அநீதியில் அல்லல் பெறும் பெண்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் சென்று அடையவில்லை. //

இந்த சட்டங்கள் காப்பாற்றிய பெண்கள் எண்ணிக்கைமுன் இந்த துஷ்பிரயோகம் செய்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதுதான் என் கருத்து.உடனடியாக பலன் வருகிரதோ இல்லையோ, சட்டபுத்தகத்தில் முதலில் உரிமை ஏறவேண்டும்.பிறகு அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.சாரதா சட்டம், விதவை மறுகல்யானம்,தேவதாசி ஒழிப்பு போன்ர பல விஷயங்கள் முதலில் சட்டபுத்தகத்தில் ஏறி அதன்பின் பல வருடங்கள் கழித்துதான் மக்களை சென்று அடைந்தன.

//மொத்ததில் பெண்களுக்கு பெண் உரிமை பற்றி சரியான புரிதல் இல்லை என்பது என் வாதம். பெண்களுக்கே இல்லாத போது இது வரை அவர்களை அடக்கியே பழகி வந்த ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுத்த அறிவிலித்தனமாக எனக்கு படுகிறது.//

இல்லை சிவா. ஆதிக்கம் செலுத்தும் இனத்துக்கு தான் செய்யும் அடக்குமுறையை பற்றிய புரிதலை ஏற்படுத்துதல் தான் முதன்மையான பணி.தான் செய்வது தவறு என்று தோன்றிவிட்டால் அதன்பின் அதை செய்வதை நிறுத்துகிறானோ இல்லையோ,செய்யும்போது லேசாக குற்ற உணர்ச்சியாவது அவன் மனதில் தோன்றும்.மனமாற்ரத்துக்கு அதுதான் முதல்படி,.

ஆசிரியப்பணி, மக்கள் சேவை, தொலைதொடர்பு,அரசியல்,ஊடகங்கள் என்று பொதுக்கருத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆண் இனத்தின் மத்தியில் பெண்விடுதலை பற்றிய புரிதலை ஏற்படுத்துதல் மிக முதன்மையானது.

மற்றபடி ஆண்/பெண் என்று பிரித்து பார்த்து பேதமை பாராட்டுவதே பலவிதங்களில் தவறுதான்.பெண்ணியம் என்பது மானுட விடுதலையின் முக்கிய குறிகோள்.மனித இனத்தின் சரிபாதியை அடிமையாக வைத்துக்கொண்டு மனித விடுதலை பற்றி பேசுவது முட்டாள்தனம்.

கீதா சாம்பசிவம் said...

விழிப்புணர்வு பத்தி எல்லாம் எழுதிட்டு, நீங்க தூங்கிட்டீங்க போல!
உங்கள் கருத்துகளை முழு மனதோடு ஆமோதிக்கின்றேன். நன்றி, வணக்கம்! சே, மேடைனு நினைச்சுட்டேன் போல!
என்ன அப்புறம் ஆளே காணோம்????????? அதைக் கேட்க வந்துட்டு.....

Syam said...

என்ன பங்கு கடை நடத்திட்டு தான் இருக்கியா...எப்ப தான் இந்த லேடீஸ் கொடுமைல இருந்து நமக்கு விடிவு கிடைக்குமோ :-)

Syam said...

நான் லேடீஸ் அப்படின்னு சொன்னது எங்க வீட்டு லேடிய பத்தி மட்டும் தான் :-)