Tuesday, November 18, 2008

டைரிக் குறிப்பு - 1

தீபாவளிக்கு ஊருக்கு செல்லாம் என்று முடிவு எடுத்த அன்றே டிக்கெட் புக் பண்ணி அடுத்த நாளே கிளம்பினேன். ஊரில் யாருக்கும் முன்கூட்டியே சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் என்று முடிவு எடுத்த காரணத்தால் யாரிடம் தெரிவிக்காமல் நான் இருந்த இடத்தில் இருந்து தலைநகரத்துக்கு பயணமானேன். அன்று இரவு மலேசிய தமிழர் அளித்த விருந்தில் உண்டு மகிழ்ந்து அடுத்த நாள் நண்பர்களை சந்தித்து ஏர்போர்ட் க்கு கிளம்பும் நேரத்தில் வண்டி மக்கர் செய்ய, அதை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறேன் பேர்வழி என்று ஒருவனின் கையை நசுக்கி பின் அடுத்த வண்டியில் இருந்து ஒயர் போட்டு ஸ்டார்ட் பண்ணி ஏர்போர்ட்க்கு அரக்க பறக்க சென்று செக்-இன் செய்வதுக்குள் ஒரு வழி ஆகி விட்டது. இந்த கடைசி நேர பரபரப்பை என்று தான் தவிர்க்க போறேனோ?

*****

சார்ஜா விமான நிலையத்தில் உடனடியாக Transit Visa வாங்கி வெளியே செல்லலாம் என்ற எண்ணத்தை தவிடுபொடி ஆக்கினார்கள் அங்கு இருந்த மக்கள். 4 மணி நேரம் ஆகும் என்று கூறி வியாழன் இரவு அதனால் இன்னும் தாமதமாக ஆகும் என்று இழுத்து அடித்து, பிறகு சண்டை பிடித்து விசா வாங்க 11 மணி நேரம் ஆனது.(இதுக்கு எங்க ஊர் தேவலை) அதுக்கு மேல என்னத்த வெளியே போய் வந்து அடுத்த பிளைட் பிடிப்பது. இருந்தாலும் ஒரு நண்பரை மட்டும் சந்தித்து மறுபடியும் சென்னைக்கு பயணம். (Transit Visa சார்ஜாவிற்கு செல்வதற்கு முன்பே வாங்குவது நலம். )
*****

சென்னையில் மழை பொழந்து கட்டுது என்ற அறிவிப்புடன் பிளைட் புறப்பட்டது, என்னடா இது வம்பா இருக்கு என்று சென்னையில் இறங்கினால் மிக மெலிதான தூறல் மட்டும் தான். சென்னை விமான நிலையம் கோயம்பேடு மார்க்கெட் விட மோசமாக இருந்தது அன்று. பெங்களூரில் இருந்து 3 மணிக்கு எல்லாம் வந்து விடுகிறேன் என்ற சொன்ன நண்பன் 7 மணிக்கு தான் வந்தான். சார்ஜாவிலும் சென்னையிலும் தேவுடு காக்கனும் என்று விதி இருந்து இருக்கும் போல. அவன் வந்ததும் அந்த தூறலும் நின்னு போச்சு.
*****

Coffee Day ல காபி குடித்து விட்டு(நான் மட்டும் தான் அவன் ஒரு சிப் போடு நிறுத்திடான், அதுவே 110 ரூபாய்)அப்படியே பொறுமையாக கிளம்பி பாண்டி சென்று அங்கு ஒரு 2, 3 மணி நேரம் செலவழித்து விட்டு மதியம் உணவு சிதம்பரத்தில் சாப்பிடும் போது தான் மொபைலை சார்ஜ் ல போட்டேன். அடுத்த 5 நிமிடத்தில் தந்தையிடன் இருந்து அழைப்பு. அதிர்ச்சி நம்ம கொடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நமக்கு கொடுக்குறாங்களே என்று எடுத்தால் பாசமோ பாசம் அம்புட்டு பாசத்தை கொட்டிப்புட்டாங்க. சொல்லாம வந்ததுக்கு. இதுக்கு எல்லாம் யார் காரணம் என்று பார்த்தால் நண்பன் என்கிற பெயரில் இருக்குற எதிரி தான். என் மொபைல் எடுக்கல என்பதால் வீட்டிற்கு அடிச்சு இருக்கான். அதை வைத்து அப்படியே மோப்பம் பிடித்து நம்மளையும் பிடித்து விட்டார்கள் வீட்டில்.
*****

அதை தொடர்ந்து பல அழைப்புகள் நண்பர்களிடம், டேய் நான் அழுதுடுவேன் என்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க. 45 நாட்களில் ஊருக்கு மறுபடியும் வருகிறேன் என்ற ஒரே காரணத்தை வைத்து வேலையை விட்டுட்டு வந்துட்டேன் என்ற புரளியும் சேர்ந்து கிளம்பிடுச்சு. இப்ப உலகம் இருக்குற நிலைமையில் அதை எல்லாம் செய்வோமா என்ன என்று சொன்னாலும் கேட்கல...
*****

அப்படியே வெட்டி அரட்டையுடன் பொறுமையாக வண்டி ஒட்டிக் இல்லை நடத்திக் கொண்டே சீர்காழி சாலையில் சென்றோம். "என்னிக்கு தாண்டா அந்த சாலைக்கு விடிவு காலம் கிடைக்கும்" என்ற ரொம்பவே பேசி பார்த்தோம். இப்போதைக்கு விமோசனம் இல்லை என்பது மட்டும் முடிவாச்சு. தரங்கம்பாடியில் கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு பங்களாவில் டீ குடிக்க சென்றால் வாசலில் இருந்து உள்ளே ஆர்டர் எடுக்கும் வரை 4 பேர் டீ 40ரூபாய் என்பதை பறைசாற்றினார்கள். என்னத்த சொல்ல, வேணுமா காசை முன்னாடியே கொடுத்து விடுகிறோம் என்று சொன்ன பிறகு தான் நம்பின மாதிரி இருந்துச்சு. எங்க தோற்றம் அப்படி இருந்துச்சோ? இருக்கும். நாகை அடைந்து நண்பனை பஸ் ஏத்தி விட்டு வீட்டுக்கு போகும் போது மணி 7.
*****

இரண்டு வருடங்களுக்கு பிறகு தீபாவளிக்கு ஊரில். வழக்கம் போல லேட்டாவே குளித்து (அதிகாலை என்பது எல்லாம் தாத்தாவோடு போச்சு) கோவிலுக்கு சென்று வந்து, சிறப்பு நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் பாத்து, இனிப்புகளை பறிமாறிக் கொண்டு, I will call Police போன்ற நச்சல் பிடுங்கல் இல்லாமல் ஏராளமான வெடிகளுடன் மிக சிறப்பாகவே போச்சு. நண்பர்களும் ஒன்று சேர்ந்து எங்கள் வீட்டில் முதலில் வெடித்து பிறகு அவர்கள் வீட்டில் என்று நேரம் மிக வேகமாகவும் மகிழ்வாகவும் ஒடியது. அதிலும் கூடுதலாக எங்கள் தாத்தா காலத்தில் வீட்டில் வேலை செய்த லட்சுமிம்மா, தீபாவளி அன்று வீட்டிற்கு வர அன்று மாலையில் அவர்களையும் கூட்டு கொண்டு அம்மாவுடன் அவர்கள் கூடி இருக்கும் சுனாமி வீடுக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எங்களை விட லட்சுமிம்மாவிற்கு ரொம்பவே மகிழ்ச்சி.
*****

4 வருடங்களுக்கு பிறகு மிகவும் நெருக்கமான பல கல்லூரி நண்பர்களை சந்திக்க முடிந்தது இந்த வருடம். 10 வருடங்களுக்கு பிறகு பள்ளி நண்பர்கள் பலரும் எங்கள் வீட்டில் ஒன்று கூடினோம். பழைய நட்புகளை சந்திப்பதில் இருக்கும் சுகமே தனி சுகம் தான். அரைத்த அதே மாவை மறுபடியும் அரைப்பதில் அப்படி என்ன தான் சுகமே நமக்கு. அதிலும் பாருங்க நம்ம பசங்க எனக்கு ஆப்பு அடிச்சுட்டாங்க. இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். நான் என்னனு சொல்லி சமாளிக்க. தீபாவளிக்கு ஊருக்கு வந்தது ஒரு குற்றமாடா? Every Dog has its own day.
*****

நான் போய் இருந்த நேரம் தீபாவளி நேரம் என்பதால் மின் வெட்டு இல்லை. ஆற்காட்டார் வாழ்க. இது இப்படியே தொடருமா????????? இப்பொழுது 2 மணி நேரம் மின் வெட்டு என்று வீட்டில் சொன்னார்கள்.
*****

போன தடவை போலவே இந்த தடவையும் பல இடங்களில் போராட்டம். போன தடவை மின் வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைகள். இந்த தடவை இலங்கை பிரச்சனை. பெரிதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வில்லை என்னுள். நாகையில் இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கொல்லப்படும் போது எல்லாம் இது போன்ற போராட்டத்தை பார்த்தே வளர்ந்த காரணத்தால் இருக்கலாம். முடிவு தான் இது வரை கிடைக்கவில்லை. அரசியல் செய்பவர்களுக்கு இது அடிக்கடி கை கொடுக்கும் விசயம். இந்த தடவை ராஜினமா என்று எல்லாம் பேசி ஒரு வேலை செய்துடுவாங்களோ னு நான் கூட கொஞ்சம் நம்பிட்டேன். சே.. எவ்வளவு பெரிய மடத்தனம். நான் திருந்தவே மாட்டேன். நல்லா இருங்கடா.
*****

காந்தியை பற்றி ஏதாவது ஒரு விமர்சனத்தை வைத்தால் எப்படி நம் தேசப்பத்தியை குறி வைப்பார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் விடுதலை புலிகளை பற்றி ஒரு வார்த்தை தவறாக கூறினாலே தமிழன விரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. இது நல்லதுக்கு இல்ல சாமிகளா.
*****

தமிழனுக்கு இந்த தடவை தொலைக்காட்சி மூலம் சரியான கொண்டாட்டம் தான். சினிமா கலைஞர்களின் இலங்கை பிரச்சனை போராட்டம், ரஜினியின் ரசிகர்கள் சந்திப்புனு நல்லா போகுதுடா பொழுது. இந்த தடவை தான் ரஜினி தெளிவா பேசினா மாதிரி எனக்கு பட்டது ஆனா அதுக்கு உல்டாவா தான் மத்தவங்க சொன்னாங்க. அப்பால ஒபாமா. அமெரிக்காவில் கூட இந்த அளவுக்கு மீடியாவில் அலசி இருப்பார்களா என்று தெரியவில்லை. இங்கு அலசி பிழிந்து காய போட்டு விட்டார்கள். மீடியாவுக்கு நல்ல கொண்டாட்டம் தான்.
*****

கத்திப்பாரா மேம்பாலத்தை பாத்து அப்பாடா ஒரு வழியா முடிச்சிங்களேனு தோன்றியது. மீனம்பாக்கம், பாடி மேம்பாலமும் விரைவில் முடியும் என்ற நம்பிக்கை வந்து இருக்கு. பின்ன அடுத்த வருசம் தேர்தல் வருதுல. என்னத்துக்கு தான் திட்ட கால அளவு எல்லாம் வைக்குறாங்களோ, எல்லாத்துக்கு இனிமேல் 5 வருசம் என்று பொதுவாக வைத்து விடலாம். நம்ம அலுவலகத்திலும் இருக்காங்களே 1 வாரத்தில் செய்யனும், 1 மாதத்தில் செய்யனும் உயிர எடுக்குறாங்க. முடிக்காம அவனுங்களுக்கு விளக்கம் சொல்லுறதுக்கு பதில் சோறு தண்ணி இல்லாம வேலை முடிச்சிடலாம். ஹும்ம்ம் அதுக்கு எல்லாம் "பாலு" யோகம் வேணும்.
*****

மாயவரத்துக்கு இரு முறை பயணம், காரைக்காலுக்கு இரு முறை பயணம், திருவாரூர், வேளாங்கண்ணி க்கு ஒரு முறை பயணம், நண்பர்களுடன் கப்பலுக்கு
ஒரு பயணம்(கடல் பயணம் என்றுமே இனிமை தான்) என்று நாகையில் இருந்த நாட்கள் மிக வேகமாகவே சென்றது. ஊருக்கு செல்லும் தேதி நெருங்க பாண்டியில் ஒரு நாள் இருந்து வங்கியில் ஒரு கையெழுத்து வாங்கி கொடுத்து சென்னைக்கு பயணம். (அந்த ஒத்த கையெத்த எத்தன நாளா போட்டானுங்க) இங்கு இருக்கும் மக்கள் கொடுத்த லிஸ்டில் இருப்பதை வாங்கவே ஒரு நாள் ஒடியது. அதிலும் Debonair புக் எல்லாம் ரொம்பவே ஒவர். என்ன பண்ண. அடுத்த நாள் சில நண்பர்களை சந்தித்து விட்டு சென்னையில் விண்ணப்பித்து இருந்த விசாவிற்கான ரசீதை பெற்றுக் கொண்டு சார்ஜாவிற்கு பயணம். சென்னையில் அருளின் அருள் மட்டும் கிடைக்கவே இல்லை.
*****

சார்ஜாவில் விசாவை 10 நிமிடத்தில் பெற்றுக் கொண்டு 2 மணி நேரத்தில் அக்கா வீட்டை அடைந்து விட்டேன். மாப்பிள்ளையுடன் ஒரு நாள் செலவழித்து சூடானுக்கு அடுத்த நாள் அதிகாலையில் வந்து ஒரு நாள் ஒய்வு எடுத்து பணியிடத்திற்கும் திரும்பியாச்சு. அடுத்த நாளே நம்ம தல கேட்டான் பாருங்க ஒரு கேள்வி. அடுத்து எப்ப ஊருக்கு போகலாம் என்று இருக்க என்று சொல்லு அதுக்கு தகுந்த மாதிரி நான் என் விடுப்பை மாத்திக்குறேன் என்று. ரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்க........
*****

(அக்டோபர் 23 - நவம்பர் 9)

50 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டு :))))

ஆயில்யன் said...

//அதிர்ச்சி நம்ம கொடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நமக்கு கொடுக்குறாங்களே என்று எடுத்தால் பாசமோ பாசம் அம்புட்டு பாசத்தை கொட்டிப்புட்டாங்க. சொல்லாம வந்ததுக்கு. இதுக்கு எல்லாம் யார் காரணம் என்று பார்த்தால் நண்பன் என்கிற பெயரில் இருக்குற எதிரி தான். என் மொபைல் எடுக்கல என்பதால் வீட்டிற்கு அடிச்சு இருக்கான். அதை வைத்து அப்படியே மோப்பம் பிடித்து நம்மளையும் பிடித்து விட்டார்கள் வீட்டில்.//


எனக்கும் இதேமாதிரி டெரரா ஒரு எண்ணம் இருக்கு! பட் எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகும்ன்னு தெரியல :((

ஆயில்யன் said...

அட எங்க ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்தாச்சா சூப்பரூ! :)))

ஆயில்யன் said...

//இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். நான் என்னனு சொல்லி சமாளிக்க. தீபாவளிக்கு ஊருக்கு வந்தது ஒரு குற்றமாடா?//


பிறகு என்ன ஆச்சு பாஸ்!

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுல்ல :)))

//அடுத்து எப்ப ஊருக்கு போகலாம் என்று இருக்க என்று சொல்லு அதுக்கு தகுந்த மாதிரி நான் என் விடுப்பை மாத்திக்குறேன் என்று. ///


ஹய்ய்ய் நல்லபடியாவே முடிஞ்சுருக்கு

அப்புறம் எப்ப பாஸ் திரும்ப ???

:)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நண்பர்களா இருக்காங்க உங்க நண்பர்கள்.. நண்பன்னா இப்படித்தான் இருக்கனும்.. எப்படியோ சேர்ந்து கொண்டாடி இருக்கீங்கள்ள... :)

கோபிநாத் said...

வா சகா வா ;))

காண்டீபன் said...

நல்ல பயணகுறிப்பு.

//இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். //
வாழ்க்கை நண்பர்களுடன் சேர்ந்தால் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகிவிடுகின்றது :)

Divya said...

பயண குறிப்பு சுவரஸியமாக இருந்தது படிப்பதற்கு:))

Divya said...

\இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். \\


அட.....சொல்லவே இல்ல??????

வாழ்த்துக்கள் சிவா:)))

CVR said...

Kathipara flyover thirappadharkku munnadiyae meenambakkam flyover thirandhutaanga annachi :)

கப்பி | Kappi said...

தீபாவளிக்கு ஊருக்கா...இது எப்ப நடந்துச்சு?? :))

//இந்த கடைசி நேர பரபரப்பை என்று தான் தவிர்க்க போறேனோ?//

தவிர்த்துட்டா அப்புறம் என்ன சுவாரசியம் இருக்கு?? :))


//ஒரு பங்களாவில் டீ குடிக்க சென்றால் வாசலில் இருந்து உள்ளே ஆர்டர் எடுக்கும் வரை 4 பேர் டீ 40ரூபாய் என்பதை பறைசாற்றினார்கள்//

எங்களை உள்ளயே விடமாட்டேன்னுட்டானுங்க :))

கைப்புள்ள said...

பயணக் குறிப்பு நல்லா இருந்துச்சுப்பா புலி படிக்கறதுக்கு.

//நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் பாத்து, இனிப்புகளை பறிமாறிக் கொண்டு, I will call Police [Photo]போன்ற நச்சல் பிடுங்கல் இல்லாமல் ஏராளமான வெடிகளுடன் மிக சிறப்பாகவே போச்சு.//

பட்டாசு வெடிச்சா போலீஸைக் கூப்பிடுவாங்களா? இது எந்த ஊருல?
:)

Geetha Sambasivam said...

அட, போஸ்ட் போட்டா ஒரு மெயில் அனுப்பக் கூடாது? க்ர்ர்ர்ர்ர் படிச்சுட்டு வரேன், மெதுவா!

http://urupudaathathu.blogspot.com/ said...

உள்ளேன் நண்பா.

நாகை சிவா said...

@ ஆயில்யன்

//மீ த பர்ஸ்ட்டு :))))//

என்னது மை ஃபிரண்ட் போல ;)

//எனக்கும் இதேமாதிரி டெரரா ஒரு எண்ணம் இருக்கு! பட் எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகும்ன்னு தெரியல :((//

டெரராவா... பாத்து அண்ணாச்சி... பேக் ப்யர் ஆகிட போகுது....

நாகை சிவா said...

//எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுல்ல :)))//

நண்பர்களை சந்தித்தது நல்லப்படியா முடிஞ்சது

//அப்புறம் எப்ப பாஸ் திரும்ப ???//

எல்லாம் அவன் கையில்... எது எப்பபோ நடக்கனுமோ அது அப்ப அப்ப தானா நடக்கும்... (ரஜினி பேட்டியை இதுக்கு தான் பாக்க கூடாது என்பது)

விரைவில்.......

நாகை சிவா said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நல்ல நண்பர்களா இருக்காங்க உங்க நண்பர்கள்.. நண்பன்னா இப்படித்தான் இருக்கனும்.. எப்படியோ சேர்ந்து கொண்டாடி இருக்கீங்கள்ள... :)//

இறைவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று.. எதிரிகளை நான் பாத்துக் கொள்கிறேன் என்று வேண்ட வைக்கும் அளவுக்கு நல்ல நண்பர்கள் நம்ம மக்கள்....

நேத்து என்னைய மன்னிச்சு விட்டததுக்கு ரொம்ப நன்றிங்க.. :)

நாகை சிவா said...

//கோபிநாத் said...
வா சகா வா ;))//

எங்க சகா... சார்ஜாவுக்கு.. விரைவில் வருகிறேன்...

கெட் ரெடி மக்கா...

நாகை சிவா said...

//காண்டீபன் said...
நல்ல பயணகுறிப்பு.//

வாங்க காண்டீபன். நன்றி...

//வாழ்க்கை நண்பர்களுடன் சேர்ந்தால் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகிவிடுகின்றது :)///

அந்த சுவாரஸ்யம் இருப்பதால் வாழ்வு தொய்வு இல்லாமல் போய்க்கிட்டு இருக்கு(குறைந்தப்பட்சம் என்னை பொறுத்தவரை ;)

நாகை சிவா said...

//Divya said...

அட.....சொல்லவே இல்ல??????

வாழ்த்துக்கள் சிவா:)))//

ஒன்னும் சொல்வதற்கு இல்லை... என் நண்பர்களுக்கு சொன்னதே தான்.. Every dog has its own day... will wait for my day...

நாகை சிவா said...

//CVR said...
Kathipara flyover thirappadharkku munnadiyae meenambakkam flyover thirandhutaanga annachi :)//

அப்படியா அண்ணாச்சி... நடு ராத்திரியில் போய் வந்ததால் கவனிக்கவில்லை. கிண்டியில் இருந்து வந்து மறுபடியும் கிண்டி வழியாகவே கி.க.சா. பிடித்தால் வந்த குழப்பம் போல.

இருந்தும் மீனம்பாக்கம் கிட்ட அதே பழைய தடுப்புகள், மோசமான ரோடுமா தானே இருந்துச்சு...

நாமக்கல் சிபி said...

//இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம்//

ஆஹா! நல்ல சந்தோஷமான விஷயம் புலி!

வாழ்த்துக்கள்!

இவ்ளோ பெரிய பதிவுல சின்னூண்டா மேட்டரை சொல்லி இருக்கீங்களே!

நாகை சிவா said...

//கப்பி | Kappi said...
தீபாவளிக்கு ஊருக்கா...இது எப்ப நடந்துச்சு?? :))//

பதிவுலே தேதி போட்டு இருக்கேனே... போன மாதம் தான் ;)

//தவிர்த்துட்டா அப்புறம் என்ன சுவாரசியம் இருக்கு?? :))//

அதுவும் சரி தான் :))


//எங்களை உள்ளயே விடமாட்டேன்னுட்டானுங்க :))//

என்ன கொடுமை இது... டாலர் ராஜ் க்கே இந்த கொடுமையா... எந்த இடம்னு சொல்லுங்க அண்ணனே.. வாங்கிடுவோம்...

நாகை சிவா said...

//கைப்புள்ள said...
பயணக் குறிப்பு நல்லா இருந்துச்சுப்பா புலி படிக்கறதுக்கு.//

நன்றி தல :)

//பட்டாசு வெடிச்சா போலீஸைக் கூப்பிடுவாங்களா? இது எந்த ஊருல?
:)//

எங்க ஊருல... எங்க தெருல... ஒரு நல்லவர் இருக்காரு...என்ன பண்ண... பட்டாசு மட்டும் வெடிச்சா சும்மா இருப்பாங்க.. ஆனா பட்டாசை விட நம்ம பசங்க சத்தம் பெரிசா இருக்கும்.... அந்த கடுப்பில் இது போல ஏதாச்சும் நடக்கும்...

நாகை சிவா said...

//கீதா சாம்பசிவம் said...
அட, போஸ்ட் போட்டா ஒரு மெயில் அனுப்பக் கூடாது? க்ர்ர்ர்ர்ர் படிச்சுட்டு வரேன், மெதுவா!//

ஒ..... அது எல்லாம் வேற பண்ணனுமா... சரி பண்ணிடுறேன் இனிமேல்... ;)

நாகை சிவா said...

//உருப்புடாதது_அணிமா said...
உள்ளேன் நண்பா.//

நோட் பண்ணியாச்சு நண்பா :))

நாகை சிவா said...

//ஆஹா! நல்ல சந்தோஷமான விஷயம் புலி!

வாழ்த்துக்கள்!//

யூ டூ ........ :(((

//இவ்ளோ பெரிய பதிவுல சின்னூண்டா மேட்டரை சொல்லி இருக்கீங்களே!//

அந்த மேட்டரை ஏண்டா போட்டோம் இருக்கு இப்ப

Geetha Sambasivam said...

இவ்வளவு நடந்திருக்கு, ரொம்ப கமுக்கமா ஒரு பதிவு மட்டும் போட்டிருக்கீங்க? எப்போ, எங்கே, என்னிக்கு நிச்சயதார்த்தம்? எப்போ கல்யாணம், உண்மையிலே உங்களைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம், நானும், வேதாவும், நீங்க என்னன்னா, சொல்லாம, கொள்ளாமல் வந்துட்டு திரும்பிட்டீங்க? :(((((((((((((((

இலவசக்கொத்தனார் said...

என்ன இம்புட்டு லேட்டு!!!

Raz said...

hey!

1.kandipa nee ennaikum seekiram airport poga mate...
may be kalyanam anathuku appuram ava anupi vacha undu...

2. book vanginiya illaiya?

3. kappal payanamaa??? itha pathi nee sonnathe illaiye...

4.machan! onnu therinchiko! unnaku nambarnu yarum kidaiyathu:) all of us are agmark yethirikal.

5.appuram....flyover, inflation, election, tamil ellam.. nu romba pesureee nee...

6.he he... nee antha ponna pathi yethum mention pannave illaiye... ;)

7. ( un mappillai, en mappillai). nan wait pannren...

நாகை சிவா said...

//கீதா சாம்பசிவம் said...
இவ்வளவு நடந்திருக்கு, ரொம்ப கமுக்கமா ஒரு பதிவு மட்டும் போட்டிருக்கீங்க? எப்போ, எங்கே, என்னிக்கு நிச்சயதார்த்தம்? எப்போ கல்யாணம், //

எவ்வளவு நடந்து இருக்கு? ஒன்னுமே நடக்கல என்பது தான் உண்மை. சொன்னா நம்பணும்ம்...

//உண்மையிலே உங்களைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம், நானும், வேதாவும், நீங்க என்னன்னா, சொல்லாம, கொள்ளாமல் வந்துட்டு திரும்பிட்டீங்க? :(((((((((((((((//

இந்த தடவை நான் ஊருக்கு வந்ததே என் பழைய நண்பர்கள் ஊருக்கு வந்து இருக்காங்க என்பதால் தான். அதுவும் இல்லாமல் கடைசி நிமிடத்தில் முடிவு எடுத்து மிக சொற்ப நாளுக்கு வந்து இருந்தேன். அடுத்த தடவை வரும் போது கண்டிப்பாக உங்க வீட்டில் ஒரு டிகிரி காபி குடிச்சுட்டு தான் வேலை.

சிஷ்யயை கேட்டதா சொல்லுங்க :)

நாகை சிவா said...

//இலவசக்கொத்தனார் said...
என்ன இம்புட்டு லேட்டு!!!//

லேட்டா வந்தாலும்.. வேணாம்... ஏதோ இப்பவாச்சும் வந்தேனே... அத சொல்லுங்க.. :)

நாகை சிவா said...

// Raz said...
hey!

1.kandipa nee ennaikum seekiram airport poga mate...
may be kalyanam anathuku appuram ava anupi vacha undu...//

அவள் வருவாளா?

//2. book vanginiya illaiya? //

வாங்கினேன்.. செம காமெடியா போச்சு...

//3. kappal payanamaa??? itha pathi nee sonnathe illaiye... //

சொல்லல.. உண்மையாவ சொல்லுற...

//4.machan! onnu therinchiko! unnaku nambarnu yarum kidaiyathu:) all of us are agmark yethirikal.//

உன்னை போலவே .....

//5.appuram....flyover, inflation, election, tamil ellam.. nu romba pesureee nee... //

குறைச்சுக்குறேன்...

//6.he he... nee antha ponna pathi yethum mention pannave illaiye... ;)//

ஏதுனு இன்னும் முடிவு ஆகல ஆனதும் சொல்லுறேன்..

//7. ( un mappillai, en mappillai). nan wait pannren...//

Dont put words in my mouthssssssssss

நீ திருந்தவே மாட்ட...

நாகை சிவா said...

@ மை ஃபிரண்ட்

அந்த மர்ம புன்னகைக்கு என்ன அர்த்தம்?

Unknown said...

ஒரு அதிகாலையில் எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு அப்ஸ்காண்ட் ஆனவனுக்கு என்ன ஆச்சுன்னு ரொம்ப நாளா என் மண்டையைக் குடைஞ்ச கேள்விக்கு விடைக் கிடைச்சிருச்சுப்பா... வெல்கம் பேக் புலி

பாச மலர் / Paasa Malar said...

தீபாவளிக்கு ஊரிலிருப்பது என்பது ஒரு பெரிய கொடுப்பினைதான்..

பயண அனுபவம் படிக்க நல்லாருந்துச்சு..நண்பர்கள் சொன்ன பொய் சிக்கிரம் மெய்யாக வாழ்த்துகள்..

Have your day soon..

shree said...

sweet!:)

வண்ணான் said...

அப்படியே வெட்டி அரட்டையுடன் பொறுமையாக வண்டி ஒட்டிக் இல்லை நடத்திக் கொண்டே சீர்காழி சாலையில் சென்றோம்
//

பைக்குல சென்னை டூ நாகை போனதை எம்புட்டு கூவுனாலும் மக்கள் கண்டுல போல தெரியுதே... :)

வண்ணான் said...

சூடான் பொண்ணுக்கும் உங்களுக்கும் "எதோ" கசமுசாவாமே...

அதனால தான் நீங்க கல்யாணமே வேண்டாம் என்று வீட்டில் சொல்லிட்டதா சொல்றாங்களே உண்மையா..?

வண்ணான் said...

காரைக்காலுக்கு இரு முறை பயணம்,
//


ம் ம் நடக்கட்டும்... :)

வண்ணான் said...

அம்மாவுடன் அவர்கள் கூடி இருக்கும் சுனாமி வீடுக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எங்களை விட லட்சுமிம்மாவிற்கு ரொம்பவே மகிழ்ச்சி.
//

சுனாமி சோகம் இன்னும் மிச்சம் இருக்கு அவர்கள் கண்களில்.. :(

நாகை சிவா said...

//தேவ் | Dev said...
ஒரு அதிகாலையில் எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு அப்ஸ்காண்ட் ஆனவனுக்கு என்ன ஆச்சுன்னு ரொம்ப நாளா என் மண்டையைக் குடைஞ்ச கேள்விக்கு விடைக் கிடைச்சிருச்சுப்பா... வெல்கம் பேக் புலி//

நன்றி அண்ணாத்த.

அவசர கதியாலும் அந்த நேரத்தில் தகவல் மட்டும் தான் அனுப்ப முடியும் என்பதால் தான்.

நாகை சிவா said...

//பாச மலர் said...
தீபாவளிக்கு ஊரிலிருப்பது என்பது ஒரு பெரிய கொடுப்பினைதான்..//

கண்டிப்பா... எனக்கு அது அமைந்தது இந்த தடவை :)

//பயண அனுபவம் படிக்க நல்லாருந்துச்சு..நண்பர்கள் சொன்ன பொய் சிக்கிரம் மெய்யாக வாழ்த்துகள்..//

நடக்கும் போது நடக்கட்டும் என்ன அவசரம் இப்போ. இருந்த போதிலும் உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

நாகை சிவா said...

// shree said...
sweet!:)
//

நன்றி :))

நாகை சிவா said...

// வெடிகுண்டு முருகேசன் said... //

யாருக்கு குண்டு வைக்க இந்த அவதாரம்... எடுத்தவரும் யாரோ?

//பைக்குல சென்னை டூ நாகை போனதை எம்புட்டு கூவுனாலும் மக்கள் கண்டுல போல தெரியுதே... :)//

பைக் இல்ல கார் தான். கண்டுக்கனும் என்பதுக்கு இல்லை. அந்த ரோடு அவ்வளவு மோசம் என்பதால் தான் நடத்தி கூட்டிட்டு போனோம் என்று சொன்னேன். பொதுவாக இது வாகன ஒட்டுனர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை.

//சூடான் பொண்ணுக்கும் உங்களுக்கும் "எதோ" கசமுசாவாமே...அதனால தான் நீங்க கல்யாணமே வேண்டாம் என்று வீட்டில் சொல்லிட்டதா சொல்றாங்களே உண்மையா..?
//

அப்படியா.. எனக்கே இது புதுசா இருக்கே.. உண்மையா பொய்யானு விசாரிச்சு சொல்லுறேன். ;)

நாகை சிவா said...

// வெடிகுண்டு முருகேசன் said...
காரைக்காலுக்கு இரு முறை பயணம்,
//
ம் ம் நடக்கட்டும்... :)//

இதை வைத்து தான் ஆவி கோஷ்டியா இருக்குமோ என்று டவுட்டா இருக்கு...

காரைக்கால் சென்றது நண்பர்களை சந்திக்க மக்கா :)


//சுனாமி சோகம் இன்னும் மிச்சம் இருக்கு அவர்கள் கண்களில்.. :(

உண்மை தான் :((

G3 said...

Inga oru half century adikka vaaipirukkum pola irukkae :)

G3 said...

Adichida vendiyadhu dhaan (Naan half centurya sonnen :) )

G3 said...

50 :)

G3 said...

51-aavadhu moiyum naanae vechidaren..

Modhal comment potta puliyodharai parcel vaanganumnu enga naataamai solli irukkar.. half centuryae pottirukken.. atleast oru chicken briyaniyaavadhu kedaikkuma ;)