ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் கதாநாயகியை தவிர்த்து புதுமுகங்களை கொண்டு வெளி வந்துள்ள படம் கல்லூரி.
+ ஷங்கர், பாலாஜி சக்திவேல் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றிப்படம், எந்த ஒரு மசாலாத்தனம் இல்லாத படம். நம்பி குடும்பத்தினர் உடன் செல்லாம்.
+ பழைய கதையாக இருந்தாலும் அனைத்து இயக்குனர்களும் தொட்ட கல்லூரி களமாக இருந்த போதிலும் தன் திரைக்கதையின் மூலம் ஒரு புதிய விதயத்தை கொடுத்து உள்ளார் இயக்குனர்.
+ பெரும்பாலும் புதுமுகங்களா இருந்த போதிலும் காதல் படத்தை போலவே பல கதாபாத்திரங்கள் நம்மை கவருகின்றது. முக்கியமாக நாயகனின் தங்கை, நாயகனின் தோழர், தோழியர்கள்.
+ கல்லூரி கலாட்டக்களின் மூலம் நம் கல்லூரி வாழ்வை நினைத்து பார்க்க வைப்பது.
+ காதலா, நட்பா என பதிவுலகில் தற்சமயம் அடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஜல்லியை தானும் அடிக்காமல் நட்பில் இருந்து வரும் காதலை யதாத்தமாக சொல்லி இருக்கிறார்.
+ படத்தின் முதல் பாடல் ரசிக்க வைத்தது. அதே போல் இன்னும் இரு பாடல்கள் முதல் முறை கேட்கும் போதே கவர்ந்தது. எப்.எம். தயவில் இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆகி இருக்கும் என்று எண்ணுகிறேன்.
+ சண்டை, வில்லன் என படத்தை திசை திருப்பாமல் ஒரே கோட்டில் எடுத்து சென்றது.
+ கதாநாயகன், கதாநாயகி இருவரும் அவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகைப்படுத்தாமல் நடித்து இருப்பது.
+ காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் ரொம்பவே இயல்பாக கொண்டு சென்று இருப்பது.
- படத்தின் முடிவு. நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்க முடிவு செய்து திரைகதை அமைத்தது போல் படம் முடிந்த பிறகு யோசிக்க வைப்பதால் அவ்வளவு மெனக்கட்டு அமைத்த திரைகதையின் மேல் ஒரு மரியாதை வர மறுக்கிறது.
- முடிவை தவிர்த்து படத்தில் ஒரு பெரிய சுவாரச்சியம் இல்லை. இயல்பாக நகர்கின்ற போதிலும் அந்த உணர்வு ஏற்படுகிறது. கத்திரியை சரியாக போட்டு இருக்கலாமோ?
- நட்பை குறித்த படம் என்ற போதிலும் நட்பு நட்பு என்று கூறி சில இடங்களில் நெஞ்சை நக்கி விடுகிறார்.
- தாம்னாவை ரொம்பவே அழ விட்டுட்டாரோ? பல காட்சிகளில் கண்கள் சிவந்து கிளசிரின் ரொம்ப ஊத்திட்டாங்களோ என்று தோன்ற வைக்கிறது.
- நம் கல்லூரி வாழ்வை நினைத்து பார்த்த வைத்த இயக்குனர் இதை நம் கல்லூரியுடன் ஒப்பீட்டு பார்க்கும் விசயத்தில் சிறிதே ஏமாற்றம் தர வைத்தது.
மொத்ததில் கல்லூரி ஒரு நல்ல படம். காண வேண்டிய படமும் கூட. அதற்காக தமிழ் சினிமாவை புரட்டி போட வந்த படம் அப்படி இப்படினு ஏத்தி விட்டு பருத்தி வீரனை வம்புக்கு இழுப்பது எல்லாம் ரொம்பவே ஒவரா தான் படுது. பாலாஜி சக்திவேல் இதை விட நல்ல படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரை ஊசுப்பேத்தி இது போன்ற படங்களையை தொடர்ந்து எடுக்க வைக்காமல் சாமுராய் போன்ற படங்களை இன்னும் மிக சிறப்பாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
Thursday, December 20, 2007
கல்லூரி - என் பார்வையில்
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
சினிமா விமர்சனங்கள் எழுத வேண்டாம் என முடிவு பண்ணி அதை எழுதுவதை விட்டு பல மாதங்கள் ஆச்சு. அதற்கு பதில் என் முகப்பு பக்கத்தில் உள்ளூர் பொட்டி என்ற பகுதியில் பட்டியல் இட்டு வந்தேன்.
சிலர் எழுதும் சினிமா விமர்சனங்களை கண்டும், இந்த படத்திற்கான விமர்சனங்களை படித்தும் நாமும் எழுதுலாமே என்ற காரணத்தால் எழுதிய விமர்சனம் இது.
நல்லா இருக்கு. இதுக்காகவே இந்தப்படம் பார்க்கணும்..
உங்க உள்ளூர் பெட்டியும் நல்லா இருக்கு புலி. ;-)
உங்களது விமர்சனத்தின் பக்கச் சார்பின்மைக்கு பாராட்டுக்கள். சில முக்கியமான -களை தொட்டுள்ளீர்கள். ஜெயமோகன் தனது கருத்துக்களை சொல்லி ஒரு கட்டுரை வந்துள்ளது இப்படம் பற்றி. அநேகமாக அதில் அவர் சிலாகிகக்கும் விடயங்களை இயல்பான கலலூரி அனுபவம் என்பதை நீங்கள் மறுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
நானும் அரசியல் மற்றும் அழகியல் அடிப்படையில் சில கருத்துக்களை பதிவிடலாம் என்று உள்ளேன். பதிவிட்டபின் தொடுப்புத் தருகிறேன். இதனுடன் அழகியல்ரீதியாக ஒப்பிட்டால் 9ருபா நோட்டு நன்றாக வந்துள்ளது. அது குறித்து 'அவர்கள்' எழுதமாட்டார்கள்.
இப்படம் பார்ப்பனீய வெள்ளை மேட்டிமை அரசியலைப் பேசுகிறது. அதனை ரொமாண்டிசஸை பன்னுகிறது. இடையி்ல் இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் பற்றி பேசுகிறது. இது சராசரி படங்களைவிட மோசமான மனநிலையை கட்டமைக்கக் கூடியது.
சிவா,
நல்ல ரிவ்யூ....!!!!
ஜமலான்,
இவருடைய முந்தைய படமான, காதலிலுமே அது வெளிப்பட்டது (வேறு விதமாக).
உங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறேன்...
படம் பார்த்து நானும் எழுதுறேன்..
//இப்படம் பார்ப்பனீய வெள்ளை மேட்டிமை அரசியலைப் பேசுகிறது. அதனை ரொமாண்டிசஸை பன்னுகிறது. இடையி்ல் இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் பற்றி பேசுகிறது. இது சராசரி படங்களைவிட மோசமான மனநிலையை கட்டமைக்கக் கூடியது.//
படம் நல்லா இருக்கு :)
சில காட்சிகள் எம இளம் பருவத்தையும் ஞாபகப்படுத்திபார்க்கின்றன!
(ஹீரோயின் ரொம்ப நல்லா இருக்காங்க :)))))
//நட்பை குறித்த படம் என்ற போதிலும் நட்பு நட்பு என்று கூறி சில இடங்களில் நெஞ்சை நக்கி விடுகிறார்.//
என்ன சார் தமிழ் படத்துல இப்படிலாம் பன்னுறாங்க...
//:: மை ஃபிரண்ட் ::. said...
நல்லா இருக்கு. இதுக்காகவே இந்தப்படம் பார்க்கணும்..//
பாருங்கோ பாருங்கோ....
//உங்க உள்ளூர் பெட்டியும் நல்லா இருக்கு புலி.//
நன்றிங்கோ... :)
/இவருடைய முந்தைய படமான, காதலிலுமே அது வெளிப்பட்டது (வேறு விதமாக)./
tbcd, கொஞ்சம் விளக்க முடியுமா.? எனக்கு அந்தப் படம் வேறு மாதிரி புரிந்திருந்தது... ஆதிக்க ஜாதியின் வெறித் திமிரை முகத்திலறைந்தாற் போல சொல்லியிருந்த பிரதியாய் வாசித்திருந்தேன்...
ஜமாலன், உங்கள் விமர்சனத்தை எதிர்நோக்குகிறேன் - உங்களுடைய கற்றது தமிழ் விமர்சனம் சில புரிதல்களை ஏற்படுத்தியிருந்தன.
// பழைய கதையாக இருந்தாலும் அனைத்து இயக்குனர்களும் தொட்ட கல்லூரி களமாக இருந்த போதிலும
//
எல்லாருமே எல்லா கதையும் எடுத்து வச்சிட்டா அப்புறம் மக்கள் என்னதான் பண்ணுவாங்கப்பா???
natpu kaadhal padama..
super.. paakanum appadina :)
nalla vimarsanam.. padam paathutu meethiya sollaren :D
பார்ப்பனீயம் என்பது என்ன சுந்தர், சாதியயை வைத்து, இழிவுப் படுத்துவது தானே.. காதல் படமும் அதைத் தானே தூக்கிப் பிடிக்கிறது...
அதைத் தான் நான் சொன்னேன்..
//*இப்படம் பார்ப்பனீய வெள்ளை மேட்டிமை அரசியலைப் பேசுகிறது.*//
//*
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
tbcd, கொஞ்சம் விளக்க முடியுமா.? எனக்கு அந்தப் படம் வேறு மாதிரி புரிந்திருந்தது... ஆதிக்க ஜாதியின் வெறித் திமிரை முகத்திலறைந்தாற் போல சொல்லியிருந்த பிரதியாய் வாசித்திருந்தேன்...
*//
/பார்ப்பனீயம் என்பது என்ன சுந்தர், சாதியயை வைத்து, இழிவுப் படுத்துவது தானே.. /
டிபிசிடி, நீங்கள் சரியாகத் தான் சொல்கிறீர்கள். ஆனால் பிரதி யார் சார்பாகப் பேசுகிறது என்பது முக்கியமல்லவா...? அந்த விதத்தில் 'காதல்' ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவே பேசுகிறது தானே...
புலி,
இன்னும் படம் பார்க்கலை.... இங்க எங்க ரீலிஸ் ஆகிருக்குன்னும் தெரியல.. :)
நல்லதொரு திரைப்பட விமர்சனம்
நல்லதொரு விமர்சனம். +,- போட்டு பிரிச்சுட்டீங்க..ஆனா - வெயிட்டேஜ் நெறய இருக்கோ :))
என்னைப் பொறுத்தவரை //காண வேண்டிய படமும் கூட. // இல்ல..'ஒக்க சாரி பார்க்கலாம்' படம் தான் :)
பாலாஜி சக்திவேல் ஏமாத்திபுட்டாரு :))
சிவா நீங்க பார்த்த கல்லூரி படத்தோட கிளைமாக்ஸ் இன்னா?
(கிளை மாக்ஸ் மாறிப்போனது ஒரு சேதி அதான் :)
இதென்ன புதுக்கதை.. :) நீங்கள் சொன்னதுக்கு எதிர் மறையாக அல்லவா நான் நினைத்து வந்திருக்கிறேன். சுட்டி இருக்கும்மா நீங்க சொன்னதுக்கு. அது எப்படின்னு தெரிஞ்சிக்க ஆவலாகயிருக்கிறேன்.
//*ஜ்யோவ்ராம் சுந்தர் said...
/பார்ப்பனீயம் என்பது என்ன சுந்தர், சாதியயை வைத்து, இழிவுப் படுத்துவது தானே.. /
டிபிசிடி, நீங்கள் சரியாகத் தான் சொல்கிறீர்கள். ஆனால் பிரதி யார் சார்பாகப் பேசுகிறது என்பது முக்கியமல்லவா...? அந்த விதத்தில் 'காதல்' ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவே பேசுகிறது தானே...*//
ஒரு சந்தேகம். ஆனா இங்க இல்லை. மின்னரட்டையில் வெச்சுக்கலாம். :))
// - படத்தின் முடிவு. நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்க முடிவு செய்து திரைகதை அமைத்தது போல் படம் முடிந்த பிறகு யோசிக்க வைப்பதால் அவ்வளவு மெனக்கட்டு அமைத்த திரைகதையின் மேல் ஒரு மரியாதை வர மறுக்கிறது//
படத்தின் முடிவு எனக்கு ப்ளஸ்ஸா தெரிஞ்சது.
தைரியமா, அந்த சப்ஜெக்ட கையில் எடுத்துக்கிட்டு படமாக்கிய விதம் அருமை.
அந்த சம்பவத்துக்கு அழகான ஒரு பின்னணி கதை பின்னியிருப்பது அருமை.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் படம் பார்த்தால், அவர்கள் மனதில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்.
:)
\\காண வேண்டிய படமும் கூட\\
இறக்கி வச்சிருக்கு...இன்னும் பார்க்கல...
\\சாமுராய் போன்ற படங்களை இன்னும் மிக சிறப்பாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.\\
வழிமொழிகிறேன்...;))
நல்ல படம் தான்.
நல்ல ரிவ்யூ புலி.
புலி! இந்தப் படத்தைப் பத்திய விமர்சனத்தை நேத்து விஜய் டிவியில மதன்ஸ் திரைபார்வையில பாத்தேன். உன் பதிவைப் படிச்சதும் படம் பாக்கனும்ங்கிற ஆசை வந்துடுச்சு. சரி சூடான்ல இருக்கற நீ திருட்டு விசிடில பாக்கலையே? நேர்மையான முறையில தானே பாத்தே?
அப்போ படம் தேறும் பார்க்கலாம்ங்கிறீங்க...நானும் ஒரு பாட்டு மட்டும் தான் ட்ரையலர்ல பார்த்தேன். பாலாஜி சக்திவேலுக்காக பார்க்கலாம் என்று இருந்தேன். உங்க விமர்சனத்தை பார்த்தவுடன் உறுதியாயிற்று
மாமா நானும் கல்லூரி படம் பார்தேண்டா . எனக்கு என்னோமோ நீ சொல்ற பீலிங்க்ஸ் வரலடா.. ஒரு வேளை டவுன்லோட் பண்ணி பாத்ததால இருக்குமோ.. (இல்ல எனக்கு ரொம்ப வயசு அயிடுசோ????)
ஆனாலும் தமனா பாக்க நம்ம ஸ்கூல் பொண்ண நியாபக படுத்தல??
என்னவோ உன்னோட விமர்சனம் நன்றாகவே இருக்குது.. இருந்தது..
ஆனாலும் + அதிகமா இருக்கு.. பட் படத்துல - தான் நிறைய இருக்கு..
இது இப்படம் குறித்த எனது பதிவு வாய்ப்பிருந்தால் பார்க்கவும்:
http://espradeep.blogspot.com/2007/12/test.html
இது இப்படம் குறித்த எனது பதிவு வாய்ப்பிருந்தால் பார்க்கவும்:
http://espradeep.blogspot.com/2007/12/test.html
புலி அருமையான விமர்சனம் + - போட்டு கலக்கிட்டீங்க!
நேற்று ஏதோ ஒரு சானலில் (பையன் இருந்ததால்) இந்தப் படம் பற்றிய விமரிசனம் பார்த்தேன், ரொம்பவே இயற்கையான நடிப்பு, நடிப்புனு சொல்லக் கூடாது, எல்லாரும் அப்படி அப்படியே வந்திருக்காங்க, நல்லாவே இருக்கு, கட்டாயம் பார்க்கணும்னு நினைக்கிறேன், பார்க்கலாம். அது சரி, புலி குகையில் இருந்து வந்துடுச்சா என்ன? சொல்லவே இல்லையே? :(((((((
மத்த சினிமா மாதிரி கல்லூரின்னா வாத்தியார கிண்ட்ல் பண்ணற சீன் இல்லாம இயல்பான சின்ன ஊரு காலேஜ் எப்படி இருக்கு மோ அப்படி எடுத்ததே நிறைவா நினைக்கிறேன் இந்த படத்தை பத்தி..
Hm.. onnum puthusa illa pola irukey padathula :)
Post a Comment