Wednesday, July 04, 2007

சிந்தனைத் துளிகள்!

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது."

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."

"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".

"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."


"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."

"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".

"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்".

"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்

தொடர்புடைய பதிவுகள்:

கீதாவின் எண்ணங்கள்

39 comments:

நாகை சிவா said...

குருவே சரணம்!!!!!1

அபி அப்பா said...

நல்ல பதிவு சிவா! நான் கூட நெனச்சேன் இப்படி ஒரு பதிவு உங்க கிட்ட இருந்து வரும்ன்னு. கீதாம்மா பதிவ பார்த்ததுமே!

வடுவூர் குமார் said...

இளைஞர்கள் படித்து தெளிய வேண்டியது,இவர் கருத்துகளை.
சுலபமாக மொழிபெயர்த்து தமிழிலே நல்ல பல புத்தகங்கள் வந்துள்ளன்.

அய்யனார் said...

கண்ண கட்டுது புலி
:)

முத்துலெட்சுமி said...

நல்லபதிவு நாகை சிவா...அப்பப்ப நினைவூட்டிக்கணும்..இல்லயா./

ILA(a)இளா said...

// நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்//

:)

Anonymous said...

எழுந்திரு, விழித்துக் கொள்,
லட்சியத்தை அடையும் வரை
நில்லாதே!...,

எழுந்திரு, விழித்துக் கொள்,
லட்சியத்தை அடையும் வரை
நில்லாதே!...,

எழுந்திரு, விழித்துக் கொள்,
லட்சியத்தை அடையும் வரை
நில்லாதே!...,

குருவே சரணம்!.

இலவசக்கொத்தனார் said...

நல்ல கருத்துக்கள். இன்றும் பின்பற்ற வேண்டுய கருத்துக்கள். இப்படி ஒரே பதிவாகப் போடாமல் அப்பப்போ ஒன்று போட்டால் சாய்ஸில் விடாமல் படிக்கத் தோன்றும்.

கப்பி பய said...

meel pathivu? ;) aana thevayaanathu!!!

dubukudisciple said...

nalla karuthukal!!!
danks

நாகை சிவா said...

//நல்ல பதிவு சிவா! நான் கூட நெனச்சேன் இப்படி ஒரு பதிவு உங்க கிட்ட இருந்து வரும்ன்னு. கீதாம்மா பதிவ பார்த்ததுமே! //

நன்றி தொல்ஸ், இன்று உண்மையிலே நினைவு இல்லை எனக்கு, அவங்க பதிவை கண்ட பிறகு தான் ஞாபகத்திற்கே வந்தது. அவங்களுக்கு தான் நன்றி சொல்லனும்...

பதிவு வரும் என்று நினைத்தற்கு ரொம்ப நன்றி...

நாகை சிவா said...

//இளைஞர்கள் படித்து தெளிய வேண்டியது,இவர் கருத்துகளை.
சுலபமாக மொழிபெயர்த்து தமிழிலே நல்ல பல புத்தகங்கள் வந்துள்ளன். //

ஆமாம் குமார், தன்னம்பிக்கைக்கு இவரின் புத்தங்களை படித்தாலே போதும், வேற எந்த புத்தகமும் தேவையில்லை.

பல நேரங்களில் உற்சாகம் தரும் வார்த்தைகள் இவை....

நாகை சிவா said...

//கண்ண கட்டுது புலி
:) //

கண்ணை திறக்க போடப்பட்ட பதிவே கண்ணை கட்டினா என்ன பண்ணுவது அய்யனார்..... ;-)

நாகை சிவா said...

//நல்லபதிவு நாகை சிவா...அப்பப்ப நினைவூட்டிக்கணும்..இல்லயா./ //

கண்டிப்பா முத்துலெட்சுமி....

நினைவில் இருந்தால் சோதனைகளை சற்றே லேசாக முடியும் என்பது என் கருத்து...

நாகை சிவா said...

//// நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்//

:) //

இளா அண்ணன், இதுல உள்குத்து ஏதும் இல்லல...

நாகை சிவா said...

//எழுந்திரு, விழித்துக் கொள்,
லட்சியத்தை அடையும் வரை
நில்லாதே!...,

குருவே சரணம்!. //

யாருங்க இந்த அனானி...

நல்ல கருத்தை பதிந்து உள்ளீர்கள்... நன்றி....

நாகை சிவா said...

//நல்ல கருத்துக்கள். இன்றும் பின்பற்ற வேண்டுய கருத்துக்கள். இப்படி ஒரே பதிவாகப் போடாமல் அப்பப்போ ஒன்று போட்டால் சாய்ஸில் விடாமல் படிக்கத் தோன்றும். //

நன்றி கொத்ஸ், எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன் :-)

நாகை சிவா said...

//meel pathivu? ;) aana thevayaanathu!!! //

ஆமாம் கப்பி! நல்லா சுள்ளாப்பா இருக்கியே... ;-)

நாகை சிவா said...

//nalla karuthukal!!!
danks //

இதுல என் பங்கு என்ன இருக்கு சொல்லுங்க....

இருந்தாலும் வாழ்த்தியமைக்கு நன்றி....

கோபிநாத் said...

அருமையான பதிவு சிவா ;))

CVR said...

நல்ல பதிவு தலைவரே!! :-)

நாகை சிவா said...

@ கோபி!

நன்றி எசமான்!~

நாகை சிவா said...

@ CVR

நன்றி தொண்டரே!

Hasim said...

Enna Kodumai SIVA idhu..
Eppadi Unnalea Mattum ippadi..

கீதா சாம்பசிவம் said...

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும்."
ரொம்பவே தேவையான ஒன்று. நல்ல சிந்தனைகள். கூடவே என்னோட பதிவுக்கும் லிங்க் கொடுத்ததற்கு நன்றி.

நாகை சிவா said...

நாணா.... இந்த தடவை ஊருக்கு வந்த வுடன் முதல் பழி ஆடு நீ தான்...

போன தடவை உன்ன தி.நகர் கூட்டிட்டு போறேன் என்று சொர்க்கத்தின் வாசல் வரைக்கு இட்டுட்டு போனேன், இந்த தடவை உன்னைய பார்சலே பண்ணுறேன் பாரு.... என்ன வில்லத்தனமா பதில் போடுற நீ...

நாகை சிவா said...

//ரொம்பவே தேவையான ஒன்று. நல்ல சிந்தனைகள். கூடவே என்னோட பதிவுக்கும் லிங்க் கொடுத்ததற்கு நன்றி. //

எதுக்கு நன்றி எல்லாம்.... ஞாபகப்படுத்தியதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்....

காட்டாறு said...

ஒவ்வொன்றும் மணித்துளி. தனித்தனி பதிவா போட்டு, கதை சொல்லியிருக்கலாம். மனதில் பசக்கென ஒட்டியிருக்கும். ஒட்டு மொத்தமா அள்ளித் தெளிச்சிட்டீங்க.

நாகை சிவா said...

//ஒவ்வொன்றும் மணித்துளி. தனித்தனி பதிவா போட்டு, கதை சொல்லியிருக்கலாம். மனதில் பசக்கென ஒட்டியிருக்கும். ஒட்டு மொத்தமா அள்ளித் தெளிச்சிட்டீங்க. //

உண்மை தான்... உங்களை போல தான் காட்டாறா பாய்ச்சிடுச்சு.... அமைதியான நதியாக நாளாகும் போல இருக்கு... ;-)

அடுத்த தடவை கொஞ்சம் கவனமாக இருக்கேன், ரொம்பவே ஒவர் டோஸ்சா போயிடுச்சு என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியுது.. நன்றி...

மு.கார்த்திகேயன் said...

மாப்ஸ், சின்ன வயசில் போகும் இடங்களில் எல்லாம் விவேகானந்தர் பற்றிய கையடக்க புத்தகத்தில் படித்த விஷயங்கள்.. சில பேர் மட்டுமே அவரை நினைத்து கொண்டிருக்கின்றனர்.. அவரை இளைஞரின் விடிவெள்ளி என்று சொல்லாமல் இன்னும் வண்ணச் சாயம் பூசிக்கொண்டிருக்கின்றனர்

கதிரவன் said...

//காட்டாறு said... ஒவ்வொன்றும் மணித்துளி. தனித்தனி பதிவா போட்டு, கதை சொல்லியிருக்கலாம். மனதில் பசக்கென ஒட்டியிருக்கும்.//

வழிமொழிகிறேன் :)

உங்களிடமிருந்து இந்தக்கருத்துக்களுக்கான சில கதைகளை எதிர்பார்க்கிறேன்

மங்கை said...

//"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்///

எனக்கு பிடிச்ச வரிகள்

ரொம்ப நல்லா இருகு சிவா.. ஆர்வமா படிச்சேன்

Bharani said...

sindhanaigal anaithum arumai......

Priya said...

wow. Inspirational. எனக்கு இந்த நேரத்துல ரொம்ப தேவையான டானிக்.

Rodrigo said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso. (If you speak English can see the version in English of the Camiseta Personalizada. If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend).

தேவ் | Dev said...

நல்ல கருத்துக்கள் ஊக்கமளிக்கும் விதமான ஒரு நல்ல பதிவு சிவா

கீதா சாம்பசிவம் said...

தாய்நாடு திரும்பப் போகும் புலிக்கு வாழ்த்துக்கள்! :P சொல்லாட்டியும் தெரிஞ்சு போச்சே!

Anonymous said...

pothumda unnoda intha over buildup..
engairunthu da sutta???

கீதா சாம்பசிவம் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்!