Tuesday, April 17, 2007

ஆர்பாட்டம்!

மக்கா, உங்க எல்லாருக்கும் தெரியும் நம்ம வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் வரும் ஏப்ரல் 26 தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கின்றது. இந்த ஒரு வருடமும் உங்களை மகிழ்வித்து முக்கியமாக நாங்க மகிழ்ந்தது தான் எங்களின் வெற்றியாக கருதுகின்றோம். உங்களால் ஏற்பட்ட இந்த வெற்றியில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் வந்த காரணத்தால் சில விசயங்களை செய்து உள்ளோம். அதைக் குறித்து அறிவிப்பு தான் இந்த பதிவு.

சங்கத்தின் முதலாம் ஆண்டு ஆர்பாட்டத்தை பற்றிய சங்கப்பதிவு இது.

சிரித்து, சிரிக்க வைத்து கொண்டு இருந்த நாங்கள் மற்றவர்களை சிந்திக்க வைக்க, உலகமே அச்சத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கு விசயத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முதலாம் ஆண்டு நிறைவை "Global Warming Awarness" ஆக அறிவித்து உள்ளோம். சங்கத்துக்காக அதை குறித்த ஒரு தெளிவான பார்வை நம்ம விக்கி பசங்க பதிவில்.

சங்கத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற ஒரு "ஆப்பு"ரைசல் சுடர் கிளம்பி உள்ளது. அந்த சுடரை சோழ பேரசரர் மருத்துவர் ராமனாதன் தொடங்கி வைத்து உள்ளார். அதை காண இங்கு செல்லவும். அந்த சுடரை நம் இலவச கொத்தனார் தொடருவார். நம் பதிவுலகை அந்த சுடர் வெற்றிக்கரமாக சுற்றி உங்கள் அனைவரையும் தொட்டு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

சரி, பய புள்ளைங்க சிந்திக்க ஒரு மேட்டரு போட்டீங்க, உங்களுக்கு ஆப்புரைசல்னு சொல்லி ஒரு மேட்டரு போட்டீங்க, எங்களுக்கு ஏதும் இல்லையா என்ற கேள்வி வந்துட கூடாது பாருங்க, அதுக்காக இன்னொரு மேட்டரும் வச்சு இருக்கோம். அதுவும் 1000 பொற்காசுகள்(INR) மதிப்பு உள்ள புத்தகங்கள் பரிசாக தரும் போட்டி. இந்த போட்டியில் கலந்துக்கு பெரிசா ஒன்னும் தேவையில்லங்க, சிரிக்க வைக்கனும் அம்புட்டு தான். என்ன தான் நாங்க காமெடி பண்ணினாலும் போட்டினு வந்துட்டா சில விதிமுறைகள் இருக்கனும்ல. அந்த விதிமுறைகள்

1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.

2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.

3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை

4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.

5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.

6)பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.

7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஷிஹி)

கடைசி தேதி:-

21-04-2007 11.59 PM IST


அம்புட்டு பேரும் கலந்துக்குறீங்க, நீங்களும் சிரித்து எல்லாரையும் சிரிக்க வைக்குறீங்க.... சிரிச்சு சிரிச்சு நம்ம கண்ணுல இருந்து வர தண்ணீர வச்சு இந்த வருட கோடைக்கால தண்ணீர் பிரச்சனையை சமாளிக்குற அளவுக்கு சிரிக்க வைக்கனும் சொல்லிப்புட்டேன்.

இது வரை வந்த பதிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்! அடிச்சு பட்டய கிளப்புங்க....

11 comments:

நாமக்கல் சிபி said...

//சிரிச்சு சிரிச்சு நம்ம கண்ணுல இருந்து வர தண்ணீர வச்சு இந்த வருட கோடைக்கால தண்ணீர் பிரச்சனையை சமாளிக்குற அளவுக்கு //

சமுதாயத்துக்கு பயனுள்ள வழிகளைக் காட்டி வாழவைக்கும் நாகைப் புயல் சிவா வாழ்க!~

நாகை சிவா said...

//சமுதாயத்துக்கு பயனுள்ள வழிகளைக் காட்டி வாழவைக்கும் நாகைப் புயல் சிவா வாழ்க!~ //

தள, நான் சும்மா வழி மட்டும் தான் காட்டுறேன். ஆனால் இந்த சமுதாயத்துக்கு வாழும் வழிக்காட்டி இருக்கீங்களே.... நீங்க வாழனும் உங்க நிழலில் நாங்க வாழனும். :-)

Syam said...

//ஆனால் இந்த சமுதாயத்துக்கு வாழும் வழிக்காட்டி இருக்கீங்களே.... நீங்க வாழனும் உங்க நிழலில் நாங்க வாழனும்//

எல்லாம் வல்ல முருகனின் அருளினால் அவரும் வாழ்ந்து நமக்கும் பஞ்சாமிர்தம் வாங்கி குடுப்பார் :-)

Santhosh said...

//எல்லாம் வல்ல முருகனின் அருளினால் அவரும் வாழ்ந்து நமக்கும் பஞ்சாமிர்தம் வாங்கி குடுப்பார் :-)//
:)) கலக்கிட்டிங்க. பொதுவா ஆப்பும் அல்வாவும் இல்ல வாங்கித்தருவாரு அவரு.

நாகை சிவா said...

//எல்லாம் வல்ல முருகனின் அருளினால் அவரும் வாழ்ந்து நமக்கும் பஞ்சாமிர்தம் வாங்கி குடுப்பார் :-) //

நாட்டாமையே தீர்ப்பு சொன்ன பிறகு வேற என்ன இருக்கு.... பஞ்சாமிர்த்தை பகிர்ந்து கொடுக்கும் பொறுப்பையும் நம்ம பங்கே எடுத்துப்பார்.

நாகை சிவா said...

//கலக்கிட்டிங்க. பொதுவா ஆப்பும் அல்வாவும் இல்ல வாங்கித்தருவாரு அவரு. //

ஏதா இருந்தா என்ன பங்கு, ஆப்ப கைப்பூவிற்கு கொடுத்து விட்டு, அல்வாவு நாம் சாப்பிட வேண்டியது தான். என்ன நான் சொல்லுறது...

Geetha Sambasivam said...

sari, namakku appadiye oru petti anupicutu, ennoda pathivule poy ponnai parthutu ok sollunga. :)

Geetha Sambasivam said...

enna achu? comment moderation pannalai?

அபி அப்பா said...

நல்ல காமடி பதிவு:-))

அபி அப்பா said...

//கீதா சாம்பசிவம் said...
sari, namakku appadiye oru petti anupicutu, ennoda pathivule poy ponnai parthutu ok sollunga. :) //

பாத்துட்டு சாஞ்ச புலிதான் கீதா மேடம், இன்னும் சுவாதீனத்துக்கு வரலை:-))

நாகை சிவா said...

என்ன தொல்ஸ்,

நக்கல் ஜாஸ்தியா இருக்கு.....