Tuesday, April 24, 2007

இந்தியாவின் மொழி இந்தி மட்டும் தானா?

இரு நாட்கள் முன்பு தோழி ஒருவரிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலின் சாரம்சம் : ஐ.நா.வின் ஆட்சி மொழியில் இந்தி மொழியை இந்தியாவின் சார்பாக தேர்ந்து எடுக்க கூடாது என்பது தான். அதற்காக ஒரு மனுவை தயாரித்து ஐ.நாவின் பொது செயலாளர் பான் கீன் மூன் மற்றும் நம் பிரதமர், ஜனாதிபதி அனுப்பவதாக உள்ளது. அதில் கூறி இருக்கும் விசயம் :

"A language is not just a medium for communication but represents the tradition, culture and history of that linguistic group. With this in mind, we have created this petition opposing the Indian Government’s policy to promote Hindi as another UN language."


இந்தியாவில் 23 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கும் போதும், இந்தியை விட பெங்காலி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி போன்ற பழமை வாய்ந்த மொழிகள் இருக்கும் போது, எப்படி இந்தியை மட்டும் மத்திய அரசு பரிந்துரைக்கிறது என்று கேள்வி எழுப்புகிறது.

இந்தியாவில் மொத்தம் இருக்கும் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மட்டும் தான் இந்தி ஆட்சி மொழியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1965 இந்தியை பிற மாநிலங்களில் திணிக்க முயன்ற அந்த நிலைமை இன்று உள்ளது என சாடிகிறது.

இந்தியை ஐ.நா.வின் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று உலகில் தவறாக புரிந்துக் கொள்ளப்படும். அது நம் இந்திய அரசியமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறுகிறது.


ஐ.நா பொது செயலாளரை இந்தியை இந்தியாவின் மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனக் கேட்குக் கொண்டு இச்செயல் இந்தி பேசும் அரசியல்வாதிகளின் ஒட்டு வங்கி அரசியல் என்று முடிகிறது.

முழுவதும் படிக்க, மனுவில் கையொப்பமிட - இங்கு செல்லவும்.

எனக்கு தெரிந்த சில விசயத்தை கூற விரும்புகிறேன்:

மொத்தம் 192 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நாவின் ஆட்சி மொழிகள் ஆறு. அவை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், சைனிஸ், ரஷ்யன் மற்றும் அரபி. கடைசியாக சேர்க்கப்பட்ட மொழி அரபி. இந்தி மொழியை ஆட்சி மொழியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாகவே உள்ளது. ஆறு மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தாலும், நடைமுறையில் (working Languages) உள்ளவை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகள் தான். இந்த இரண்டு மொழிகளில் பிரஞ்சு மொழியை செயல்பாட்டு மொழியில் இருந்து தூக்க வேண்டும் என்று ஒரு வாதம் மிக தீவிரமாக உள்ளது. ஸ்பானிஷ் மொழிக்கு ஐ.நா.வில் சரியான இடம் இல்லை என்ற வருத்தமும் அந்த மொழி பேசும் மக்களிடம் உண்டு. அவர்களும் பிரஞ்சு மொழிக்கு எதிராக தான் உள்ளார்கள்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்வது ஒரு புறம் இருந்தாலும் கண்டிப்பாக Working Language ஆக வராது என் எண்ணம்.

அது போக மேலே குறிபிட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டு வாதங்கள் எல்லாம் உண்மை மற்றும் ஏற்றுக் கொள்ளகூடியதும் கூட. அதே சமயத்தில், இன்று இந்தி மொழி பேசாதவர்கள் இந்தி மொழியை ஐ.நா.வின் ஆட்சி மொழியாக ஏற்க கூடாது என்று எதிர்கின்றோம், நாளை பல நாடுகளில் பேசப்படும் தமிழை அவ்வாறு ஏற்க கூடாது என்று அவர்களும் எதிர்ப்பார்கள். ஆக இந்தியாவில் இருந்து எந்த மொழியும் ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆகாமல் இருக்கும். ஏன் நம் நாட்டின் ஒரு மொழி ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆவதை கண்டு பெருமைப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.


மக்களே! உங்கள் கருத்து என்ன?

பின்குறிப்பு : இந்த Petition Online யில் மனு பதிவு செய்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்பது என் கருத்து. இது போல பல மனுகளில் கையொப்பம் இட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். நேரடியாக ஐ.நா.விற்கே இதை அனுப்பலாம்.

43 comments:

இலவசக்கொத்தனார் said...

alignment problem. cant read in fire fox

லொடுக்கு said...

ஐ.நா வில் ஆட்சி மொழியாவதால் என்ன பயன்? சிறிது விளக்க முடியுமா?

வல்லிசிம்ஹன் said...

இந்தியா ஒன்று என்று இருக்கிறது

என்றுஅங்கிகரிப்பதற்கே எத்தனையோநாட்கள் ஆகியது.
இதில் மொழிப் பிரச்சினையை நாமாக உருவாக்க வேண்டாம் என்றூதான் தோன்றுகிறது.

இலவசக்கொத்தனார் said...

என்னங்க இது? 105 பதிவுகள் படிக்கச் சொன்னா இப்படி பதிவு எழுதிக்கிட்டு இருக்கீங்க? சரி போகட்டும்.

இதுல ஹிந்தியைக் கொண்டு வருவதால் இந்தியாவின் மொழி அதுதான் எனச் சொல்வதில் எனக்கு உடன்படிக்கை இல்லை. நம்ம ஊர் மொழி ஒன்று வந்து விட்டுப் போகட்டும். இதனால் இந்தி வாழும் தமிழ் தேயும் எனச் சொல்வது எல்லாம் வெறும் அரசியல்.

இன்று பல முறை நீ இந்தியன் தானே உனக்கு இந்தி தெரியாதா என்ற கேள்வியை நானே ஹிந்தி பேசுபவர்களிடம் கேட்டு இருக்கிறேன். அந்த மாதிரி ஆட்களிடம் எனக்கு அரைகுறை ஹிந்தி கூட தெரியும் எனக் காட்டிக் கொள்ளாமல் அவர்களை ஆங்கிலத்தில் பேச வைப்பதில் ஒரு அற்ப சந்தோஷம்.

ஆனால் ஹிந்தி மட்டுமே இந்திய மொழி இல்லை, பல மொழிகள் செழிக்கும் நாடு இந்தியா என சொல்வதில் அலுத்துக் கொண்டதே இல்லை. அதற்கும் UNல் ஹிந்திக்கும் முடிச்சுப் போடுவதில் எந்த சம்பந்தமும் இல்லை.

சரி, எல்லாம் போகட்டும். UNல் எதற்கு ஹிந்தி? அதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? எல்லா அறிக்கைகளும் ஹிந்தியில் வருமா? அதனை எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்? அதற்கு என்ன செலவாகப் போகிறது? அதனை வேறு நல்வழியில் செலவழித்தால் எவ்வளவு நல்லது? இங்கு ஹிந்தி வருவதினால்தான் அது வாழப் போகிறதா?

இந்த வேலையே அனாவசியமான ஒன்று என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால் அதற்காக ஹிந்தி வந்தால் மற்ற ஆட்சி மொழிகளும் வர வேண்டும் என்பது அபத்தம்.

அறியாதவன் said...

இன்று இந்தியாவைப்பற்றி மேற்கு உலகத்தில் நிலவும் தவறான புரிதல்களுக்கு இது வகை செய்யும். இந்தி(மட்டுமே) இந்தியாவின் மொழி என்றும், ஹிந்துஸ்தானி(மட்டுமே) இந்தியாவின் இசை என்றும் ஒரு புரிதல் நிலவுகிறது. மொழியின் தொன்மை, பழமை மற்றும் இலக்கிய செரிவு என்றவற்றின் படி பார்த்தாலும் ஹிந்தி உதவாக்கரை தான். முதலில் அது ஒரு ஒரிஜினலான மொழிதானா? சமஸ்கிருதமும் உருதுவும் கலந்து உள்ள ஒரு குழப்படியான மொழி அது. அதிகபட்சமாக ஒரு 7 அல்லது 8 நூற்றாண்டுகள் தான் வழக்கத்தில் உள்ள மொழி. என் கருத்தில் ஹிந்தியை எந்த லெவலிலும் ஆதரிக்கக்கூடாது.

நாகை சிவா said...

//ஐ.நா வில் ஆட்சி மொழியாவதால் என்ன பயன்? சிறிது விளக்க முடியுமா? //

பல நன்மைகள் உண்டு. அதில் ஒன்று, உலகின் மிகப்பெரிய அமைப்பு ஆன ஐ.நா.வின் ஆட்சி மொழியாக ஒரு மொழி ஆவதால் அம்மொழியை பலர் கற்கும் வாய்ப்பு உள்ளது.(என்னை போன்ற விதிவிலக்கும் உண்டு)

ஆட்சி மொழியில் ஒன்று தெரிந்து இருப்பவர்களுக்கு ஐ.நா. மற்றும் அதன் பல துணை அமைப்புகளில் இருக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஜி said...

ada.. ithu nalla visyamthaane... eppadiyum oru moziyum vara mudiyaatha pathchathula Hindi yaavathu vanthuttu pohattume....

கீதா சாம்பசிவம் said...

A very nice post. Opinions are reserved. :D

பொன்ஸ்~~Poorna said...

இந்தி ஐநாவின் மொழியாகி என்ன பயன் என்ற கேள்வி எனக்கும்...

மத்தபடி, இந்தி ஐநா மொழியாகக் கூடாது என்று பெட்டிசன் போடுவதை விட,

பிராந்திய மொழியல்லாத, உலகின் பல்வேறு நாட்டிலும் தேசிய மொழியான தமிழும் ஐநாவின் ஆட்சிமொழியாக வேண்டும் என்று ஆக்கப்பூர்வமான பெட்டிசன் போடலாம்..

கவிதா|Kavitha said...

//ஆட்சி மொழியில் ஒன்று தெரிந்து இருப்பவர்களுக்கு ஐ.நா. மற்றும் அதன் பல துணை அமைப்புகளில் இருக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.//

அப்படீன்னா.. முன்னமே ஆங்கிலம் ஆட்சி மொழியா இருக்கு இல்லையா?
சரி ஐ.நா விற்கு நேரடியா இதை அனுப்ப வழி என்னான்னு சொல்லுங்க..

Thabotharan Kathiravelu said...

// இன்று பல முறை நீ இந்தியன் தானே உனக்கு இந்தி தெரியாதா என்ற கேள்வியை நானே ஹிந்தி பேசுபவர்களிடம் கேட்டு இருக்கிறேன். //

At least they have asked this question at an indian person. I am from Sri Lanka, and once in a western country I met an indian guy he told " You know what, you all have to learn hindi. Then we all can talk freely !!!"

What a disaster.

(Sorry for not writing in Tamil. One day I will)

இம்சை அரசி said...

இந்த ஹிந்தியாலதான் நான் அவ்ளோ பாடுபட்டேன். எங்க ஆப்பிஸ்ல எல்லாரும் என்னை நடுவுல வச்சு கூடி கும்மியடிச்சாங்க :(((

// ஆனால் ஹிந்தி மட்டுமே இந்திய மொழி இல்லை, பல மொழிகள் செழிக்கும் நாடு இந்தியா என சொல்வதில் அலுத்துக் கொண்டதே இல்லை. அதற்கும் UNல் ஹிந்திக்கும் முடிச்சுப் போடுவதில் எந்த சம்பந்தமும் இல்லை.
//

ஆனாலும் கொத்ஸோட இந்த கருத்துக்கு நானும் ஒத்து போறேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

105 போஸ்ட்டை எப்படி ஒரே நாளிலே படிச்சு முடிச்சீங்க.. நீங்க ஒரு நாலு நாளு கஷ்டப் படுவீங்கன்னுல நெனச்சேன்!!!!

:-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்தி மொழி வந்தாலும் எனக்கு புரியப் போவது இல்லையே!!

VSK said...

ஐ.நா.சபை என்பது பல்வேறு நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இதில் கலந்து கொள்லும் பிரதிநிதிகள், உரையாற்றும் போது அவரவர் நாட்டு மொழியிலும் பேசலாம்; அல்லது, பிறமொழிகளிலும் பேசலம்.
அப்படி அவர்கள் பேசுவது மற்ற பிரதிநிதிகளுக்கு அவர்கள் நாட்டுக்கென அங்கீகரிக்கப்பட்ட மொழியில் மொழிமாற்றம் செய்து கேட்கும் வசதி ஐ.நா.வில் உண்டு.
இதற்கென, இந்தியாவால் பரிந்துரை செய்யப்பட்ட மொழிதான் ஹிந்தி என எண்ணுகிறேன்.

மேலும், ஐ.நா.வின் சுற்றறிக்கைகள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் போது இம்மொழியில் அனுப்பப்படும்.

இதற்குத்தான், ஒரு மொழியை பரிந்துரை செய்ய வேண்டப்படுகிறது.

அது அங்கு!

அதே அறிக்கை நம் நாட்டிற்கு வருகையில், நமது மாநில் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லாருக்கும் அனுப்பப்படுகிறது.

இதில் எதற்கு கூச்சல் எனத் தெரியவில்லை.

இலவசக்கொத்தனார் said...

//இன்று பல முறை நீ இந்தியன் தானே உனக்கு இந்தி தெரியாதா என்ற கேள்வியை நானே ஹிந்தி பேசுபவர்களிடம் கேட்டு இருக்கிறேன். //

கொஞ்சம் சொதப்பி விட்டேன். இந்த வரி இப்படி வர வேண்டும் .

இன்று பல முறை நீ இந்தியன் தானே, உனக்கூ ஹிந்தி தெரியாதா என்ற கேள்வியை ஹிந்தி பேசுபவர்கள் பலர் என்னிடமே கேட்டுள்ளார்கள்.

கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் ஆப் தி இந்தியா ஆயிட்டேன் போல. ஆமாம் ஃபீலிங்க்ஸ் ஆப் இந்தியான்னு சொல்லிட்டேனே, என்னைத் தேசீயவாத கிருமின்னு சொல்லிடப் போறாங்க. :))

சந்தோஷ் aka Santhosh said...

புலி,
இப்படி சண்டை போட்டு போட்டு அவங்க போங்கடா நீங்களும் உங்க மொழியும் அப்படின்னு எல்லாத்தையும் வேண்டாம் அப்படின்னு சொல்லிட போறாங்க. சும்மா கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி அப்பாடி இப்படின்னு ஜல்லி அடிக்கிறத்துக்கு முன்னாடி அதை எத்தனை பேரு பேசுறாங்கன்னு பார்க்கணும். தமிழ்நாட்டிலேயே பாதி பேர் தமிழ் பேசுவது இல்ல. சும்மா பழைய கதையை பேசி ஒரு பிரயோஜினமும் இல்ல. எனக்கு தெரிந்து இந்தியாவில் பெரும்பான்மையானோர் (இப்படி இல்லாவிட்டாலும் நிறைய பேர் தெரிந்து வைத்து இருக்கும் மொழி என்பதால்) பேசுவதால் அதை கொண்டு வர முயற்சி செய்யலாம்.

இப்பவே நம்ம ஆளுங்க நிறைய பேர் இந்தியை கத்துக்க ஆரம்பித்துவிட்டார்கள், சும்மா திராவிட ஜல்லிகளை கேட்டு இத்தனை தலைமுறை கஷ்டப்பட்டது போதும். பல மொழி தெரிந்து கொள்வதில் தப்பே இல்ல. முதலில் ஒற்றுமையா இருந்து ஒரு காரியத்தை சாதிப்போம். தமிழ சேருங்க மலையாளத்தை சேருங்க தெலுங்கை சேருங்க அப்படின்னு சண்டை போட்டு எல்லாத்தையும் அவங்க நிராகரிப்பதற்கு பதில் முதலில் நம்ம நாட்டில் இருந்து முதலில் ஒரு மொழி உள்ள போகட்டும்.

//பிராந்திய மொழியல்லாத, உலகின் பல்வேறு நாட்டிலும் தேசிய மொழியான தமிழும் ஐநாவின் ஆட்சிமொழியாக வேண்டும் என்று ஆக்கப்பூர்வமான பெட்டிசன் போடலாம்..//
பொன்ஸ்
இது எல்லாம் உண்மை இல்ல. பல்வேறு நாடு எல்லாம் கிடையாது சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் தான் ஆட்சி மொழிகளுல் ஒன்றாக தமிழ் இருக்கிறது, இங்க பாருங்க. அதுலையும் இலங்கையில் தமிழ்ன படுகிற பாட்டை சொல்லி தெரியவேண்டியது இல்ல. இப்ப ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மேட்டர் தெரியாதுன்னு நினைக்கிறேன் தெரிஞ்சி இருந்தா அதையும் தூக்கி இருப்பாங்க :)). முதலில் நம்ம நாட்டுலையே அது ஆட்சி மொழியா இல்ல. அப்புறம் புலி சொல்லி இருக்குற மாதிரி இந்த petitiononline எல்லாம் எதுவும் உதவுற மாதிரி தெரியலை.

Hariharan # 03985177737685368452 said...

ஐநா வுக்குள்ளே இந்திய அரசியல் பாரம்பரியமான மொழிச் சண்டைக்கு ஸ்டார்ட் மீஜிக் சொல்லியாச்சா:-))

ஐநா வில் எடுத்துக்கொள்ளப்படும் ஒரு இந்திய மொழியால் கிடைக்கும் பயன்பாடு இருக்கட்டும்.

தமிழ் செம்மொழி ஆனது என்று சாதித்ததால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த பரவலான பயன்பாடுகள் லிஸ்ட் கொஞ்சம் சொல்லுங்க!

(தமிழ் செம்மொழி ஆனது தமிழ்நாட்டு அரசியல்வாதிக்கு அச்சீவ்டு லிஸ்ட் ஐட்டம் ஆனது எனும் பயன்பாடு தவிர்த்து :-))

Syam said...

//இந்தியை ஐ.நா.வின் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று உலகில் தவறாக புரிந்துக் கொள்ளப்படும்//

இப்பவே நிறைய முட்டாள் பசங்க அப்படிதான் நினைச்சுட்டு இருக்காங்க...வெளிநாட்டு காரங்கள விடு நம்ம நாட்டுகாரங்கள தான் சொல்றேன்...

Syam said...

//ஏன் நம் நாட்டின் ஒரு மொழி ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆவதை கண்டு பெருமைப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை//

ரொம்ப சரி...அரசியல், மொழிக்கு அப்பாற்பட்டு...நம்ம நாட்டோட representation இருக்கும்....

Syam said...

//இந்த Petition Online யில் மனு பதிவு செய்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்பது என் கருத்து//

ஆமா அதெல்லாம் டுபாக்கூர்....ஒருதரும் கண்டுக்க மாட்டாங்க....

Arunkumar said...

தமிழ் பழமை வாய்ந்தது-னு நாம தான் சொல்லிட்டு இருக்கோம். பொதுவா பாத்தா ஹிந்தி தான தெரிஞ்சிர்க்க வேண்டியிருக்கு இந்தியாவுலயே...

அதுனால ஹிந்தி வர்றது ஒன்னும் தப்பில்ல.. இந்திய மொழி ஒன்னு வருதுனு சந்தோஷம் தான் படனும். அரசியலாக்கக்கூடாது.

-my 2 cents

Arunkumar said...

//ஏன் நம் நாட்டின் ஒரு மொழி ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆவதை கண்டு பெருமைப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை//

கரெக்ட்

ulagam sutrum valibi said...

""unity takes precedence over all other considertions"

Om said...

சிவா, லொடுக்கு, வ‌ல்லி, கொத்த‌னார், அறியாத‌வ‌ன், ஜி, கீதா, பொன்ஸ், க‌விதா, இம்சை அர‌சி, க‌திர், vsk, ச‌ந்தோஷ், மை ப்ர‌ண்ட், சியாம், அருண், உங்க‌ள் கேள்வி/க‌ம‌ண்ட்ஸ்க்கு ம‌னுவை எழுதிய‌வ‌ன் என்ற‌ முறையில் என்னோட‌ ப‌தில்:

ஐ.நா மொழிகள் பற்றிய உங்கள் கருத்து உண்மையே. ஐ.நா‍ வின் ஆட்சி மொழியாக இந்தி பயண்ப்படுத்தப்படுவது குறைவாகவே இருக்கும்.

ஆனால், இது ஆட்சி மொழி என்ற நிலையை மட்டும் எதிர்த்து கொண்டுவரப்பட்ட மனு அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

http://vetri-vel.blogspot.com/2006/12/india-does-not-have-national-language.

இந்தியாவில் முத‌லில் த‌மிழ் ம‌ற்றும் பிற‌ மொழிக‌ளுக்கும், இந்திக்கு அளிக்க‌ப்படும் அதே அளவு $$$ அளிக்க‌ப்பட‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து.

ச‌ரி, அப்போ அதை எதிர்த்து ம‌னுப் போட‌ வேண்டிய‌து தானே, ஏன் ஐ.நா மொழியாக‌ இந்தி உய‌ர்வ‌தை எதிர்த்து ம‌னு என்ற‌ கேள்வி வ‌ரும்.


1) ஐ.நா வின் ஆட்சி மொழியாக‌ இந்தி மாறினால், இந்தியா என்றால் இந்தி, இந்தி என்றால் இந்தியா என்ற நிலமை உலகத்தில் உருவாகும்.

2)இப்போதே, தமிழுக்கு இந்தியாவில் என்ன‌ நில‌மை என்று இதில் விள‌க்கியுள்ளேன்.

http://vetri-vel.blogspot.com/2006/12/tamil-vs-sanskrit-discrimination-aட்.html
http://vetri-vel.blogspot.com/2007/03/tamil-tn-high-court-language.html

3) 1965 ல், இந்தியா முழுவ‌தும், ஆங்கில‌த்தை அக‌ற்றி விட்டு இந்தியை கொண்டு வர வேண்டும் என்று கூறிய‌வ‌ர்க‌ள், இந்தி ஐ.நா வின் ஆட்சி மொழி என்ற‌ நிலை வ‌ந்த‌ப்பின், இந்தியா முழுவ‌தும் இந்தி அவ‌சிய‌மாக‌ க‌ற்ப்பிக்க‌ வேண்டும் என்று கூறுவார்க‌ள்.
http://vetri-vel.blogspot.com/2006/12/articles-on-1965-hindi-imposition.html


4) உல‌க‌ நாடுக‌ளில் ந‌டக்க‌ கூடிய‌ மொழி மற்றும் மொழி சார்ந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளில், இந்திக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் இருக்கும். அத‌ற்க்கு கிடைக்க‌ கூடிய‌ $$$, உல‌க‌ அர‌ங்கில பெய‌ர் பிற‌ மொழிக‌ளுக்கு கிடைக்காது. சரி, கிடைத்தால் என்ன என்று என்னுபவர்கள், இதனை மனதில் கொள்ள வேண்டும்:


ஐ.நா என்ப‌து, "நாடுக‌ளின் கூட்ட‌மைப்பு". இதில், இந்திய அர‌சு சொல்லும் மொழிதான் ஆட்சி மொழியாக‌ வாய்ப்பு உண்டு. த‌மிழக‌ அர‌சு சொல்லும் மொழி ஆட்சி மொழி ஆக வாய்ப்பே இல்லை. த‌மிழ‌க‌ அரசு தமிழுக்காக குறள்க் கொடுத்தாலும், மத்திய அரசு அதை ஆதரிக்காது. அப்படி ஆதரித்தால் பிற மொழிகளும் தமிழுக்கு இனையான நிலயை கேட்கும் என்று காரணம் சொல்லும். மத்திய அரசு தமிழ் மொழியை ஆதரிக்காதப் போது, ஐ.நா வில், தமிழ் மொழி இடம் பெற வாய்ப்பே இல்லை. போட்டியில் தோற்றால் பிரச்சனை இல்லை, ஆனால் போட்டியில் பங்கு பெறவே இந்திய அரசு தடையாக இருக்கும் போது, எப்படி அது நியாயமான போட்டி ஆகும் ???

எப்படி, இந்திக்கு இவ்வளவு மவுசு இந்தியாவில் ?
இத‌ற்க்கும் கார‌ண‌ம் உண்டு.இதைப் படிக்கவும்:
http://vetri-vel.blogspot.com/2007_02_04_archive.html

Even in 1965, when the literacy rate was a paltry 24 % and when we were importing 2 shiploads of wheat/day to barely survive the govt spent 2.1 Million US dollars for hindi propagation. This was the time when shashtri gave the famous call for fellow Indians to skip one meal a day since we were short on food supplies - this is the best possible example of "forceful imposition / usurping common resources for the benefit of a single language"

To spread Hindi, the government is spending $2,100,000 this year. - this is in 1965 !!!
http://www.time.com/time/magazine/article/0,9171,839158,00.html
இந்த‌ மாதிரி, ஒரு மொழிக்கு ம‌ட்டும் செல‌வு செய்வ‌தனால் தான் இந்த‌ நிலை. இது மாற‌ வேண்டும், பிற‌ மொழிக‌ளுக்கும் ம‌த்திய‌ அர‌சு $$$ செல‌வு செய்ய‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து.

நான், இந்த‌ மனுவை எழுதும் போது, மேலே கூறியவற்றை ம‌னதில் வைத்து கொண்டு எழுதினேன்.மொழி பிரச்சனை பற்றி மேலும் படிக்க இந்த பதிவு:
http://vetri-vel.blogspot.com/


இந்தியாவில் முத‌லில் த‌மிழுக்கு ந‌ல்ல‌ நிலைக் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து. இப்போது, இந்தி ஐ.நா ஆட்சி மொழியாக‌ வ‌ருவ‌தை எதிர்ப்ப‌த‌ன் மூல‌ம், த‌மிழ்/த‌மிழர்க‌ளுக்கு உல‌க‌ள்வில்/இந்தியாவில் ஒரு குற‌ள்க் கிடைக்கும் என்பதும் என் ந‌ம்பிக்கை.

நான் ஏதாவ‌து கேள்விக்கு ப‌தில் அளிக்க‌வில்லை என்றால், திரும்ப‌ கேட்க‌வும். விறைவில் அத‌ற்கும் ப‌தில் அளிப்பேன்.


ந‌ன்றி,
விஜ‌ய்.

Om said...

http://vetri-vel.blogspot.com/2007/04/blog-post.html

answers have been compiled in this blog link for easy reading.

கோபிநாத் said...

\\ஏன் நம் நாட்டின் ஒரு மொழி ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆவதை கண்டு பெருமைப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.\\

எனக்கும் இதே எண்ணம் தான் புலி....எல்லா விஷயத்திலும் அரசியல் விளையாட்டுகள் விளையாடி கொண்டு இருப்பது சரியில்லை.

நாகை சிவா said...

வெற்றி வேல் வீர வேல்!

விஜய்! உங்களுக்கு முதலில் பதில்!

//ஐ.நா‍ வின் ஆட்சி மொழியாக இந்தி பயண்ப்படுத்தப்படுவது குறைவாகவே இருக்கும்.//

பயன்கள் அதிகம், பயன்பாடு குறைவு.

//ஆனால், இது ஆட்சி மொழி என்ற நிலையை மட்டும் எதிர்த்து கொண்டுவரப்பட்ட மனு அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//

ஐ.நா. செயலாளருக்கு அட்ரஸ் பண்ணியதால் அப்படி ஒரு எண்ணம் வந்தது.

//இந்தியாவில் முத‌லில் த‌மிழ் ம‌ற்றும் பிற‌ மொழிக‌ளுக்கும், இந்திக்கு அளிக்க‌ப்படும் அதே அளவு $$$ அளிக்க‌ப்பட‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து.//

இது உங்கள் கருத்து மட்டும் அல்ல, எங்கள் அனைவரின் கருத்தும் அதுவே!

//ச‌ரி, அப்போ அதை எதிர்த்து ம‌னுப் போட‌ வேண்டிய‌து தானே, ஏன் ஐ.நா மொழியாக‌ இந்தி உய‌ர்வ‌தை எதிர்த்து ம‌னு என்ற‌ கேள்வி வ‌ரும். //

கண்டிப்பா!


//1) ஐ.நா வின் ஆட்சி மொழியாக‌ இந்தி மாறினால், இந்தியா என்றால் இந்தி, இந்தி என்றால் இந்தியா என்ற நிலமை உலகத்தில் உருவாகும்.//

இப்பவே நிலைமை கிட்டதட்ட அப்படி தான்.

//2)இப்போதே, தமிழுக்கு இந்தியாவில் என்ன‌ நில‌மை என்று இதில் விள‌க்கியுள்ளேன்.//

சொல்லி தான் தெரியனுமா விஜய்! அந்த சோக கதை தான் அனைவரும் அறிந்தது தானே!

//3) 1965 ல், இந்தியா முழுவ‌தும், ஆங்கில‌த்தை அக‌ற்றி விட்டு இந்தியை கொண்டு வர வேண்டும் என்று கூறிய‌வ‌ர்க‌ள், இந்தி ஐ.நா வின் ஆட்சி மொழி என்ற‌ நிலை வ‌ந்த‌ப்பின், இந்தியா முழுவ‌தும் இந்தி அவ‌சிய‌மாக‌ க‌ற்ப்பிக்க‌ வேண்டும் என்று கூறுவார்க‌ள்.//

முயற்சி செய்வார்கள், அதை மீண்டும் தடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கட்டாயப்படுத்தி எந்த மொழியை கற்க சொன்னாலும் அது தவறு தான். (தாய் மொழிக்கு விதிவிலக்கு)

//நான், இந்த‌ மனுவை எழுதும் போது, மேலே கூறியவற்றை ம‌னதில் வைத்து கொண்டு எழுதினேன்.//

ஆனால் விஜய், இப்பிரச்சனை நமக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. இதை வெளியில் இருப்பவர்களுக்கு அனுப்பி அதனால் நமக்கு சிறுமை தானே தவிர பெருமை ஏதும் கிடைக்க போவது இல்லை.

//இந்தியாவில் முத‌லில் த‌மிழுக்கு ந‌ல்ல‌ நிலைக் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து. //

இதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

//இப்போது, இந்தி ஐ.நா ஆட்சி மொழியாக‌ வ‌ருவ‌தை எதிர்ப்ப‌த‌ன் மூல‌ம், த‌மிழ்/த‌மிழர்க‌ளுக்கு உல‌க‌ள்வில்/இந்தியாவில் ஒரு குற‌ள்க் கிடைக்கும் என்பதும் என் ந‌ம்பிக்கை.//

உங்கள் நம்பிக்கை பலிக்க வாழ்த்துக்கள்.

//நான் ஏதாவ‌து கேள்விக்கு ப‌தில் அளிக்க‌வில்லை என்றால், திரும்ப‌ கேட்க‌வும். விறைவில் அத‌ற்கும் ப‌தில் அளிப்பேன்.//

விஜய், ஒரே ஒரு கேள்வி தான், இந்த Petition Online எந்த அளவுக்கு தீர்வு அல்லது பிரச்சனையை உலக அளவில் எடுத்து செல்லும் என்று நினைக்கின்றீர்கள். பலரை சென்று அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக என்றால் சரி தான்.

நாகை சிவா said...

விஜய்!

இன்னும் ஒன்றை கூற மறந்துட்டேன், தமிழை செம்மொழி ஆக்கி விட்டோம், தமிழுக்கு இந்தியாவில் விடிவு காலம் பிறந்து விட்டது என வெட்டி பேச்சு பேசி தமிழின் தரத்தையும், அதன் பாராம்பரியத்தையும் விட்டு கொடுத்த நம் அரசியல்வாதிகள் பற்றி உங்களுக்கு ஏதும் கருத்து உள்ளது.

கருவீரசிங்கம் said...

இந்த விவாதத்தில் என்னுடைய கருத்தை வைக்க விழைகிறேன். நமது நிலையை சற்று சுயபரிசீலனைக்கு உட்படுத்துவோம்.

தமிழ் என்பது ஒரு மொழி, அது நம் தமிழ்ப்பண்பாட்டின் ப்ரதிபலிப்பாக இருக்கிறது என்று சொல்கிறோம். மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு பெருமை கொள்கிறோம். அதற்கு நாம் பயன்படுத்தும் காரணங்கள் என்ன?

1. தமிழ் நமது நாட்டிலேயே ஏன் உலகிலேயே மிகத்தொன்மையான மொழி.
2. தமிழரது கலாசாரம் உலகின் மிகப் பாரம்பரியம் மிக்கது. தனித்தன்மையானது.
3. உலகில் பல நாடுகளில் அது அங்கீகரிக்கப்பட்ட மொழி அல்லது ஆட்சிமொழியாக உள்ளது
4. தமிழில் உள்ளது போன்ற இலக்கியங்கள் வேறு மொழிகளில் இல்லை அல்லது அது காலத்தால் பிந்தியது அல்லது மிகக்குறைவு

தமிழை நமது அடையாளமாகக் காட்டிக்கொள்வதால் நமக்கு விளையும் நன்மை என்ன/ பெருமை என்ன?

1. மிகத்தொன்மையான மொழி என்று கூறிக்கொள்வது யார்? நாம் தான். மிஞ்சிப்போனால் சில வேற்று மொழி அறிஞர்கள் ஒப்புக்கொள்வார்கள். எனது கவலை அதுவன்று. பழமையானதால் பெருமை பழமையானதால் உயர்வு என்று சொல்ல தமிழென்ன வைனா(Wine)? மற்ற எல்லவற்றிலும் புதுமை வேண்டும் என்று விரும்பும் நாம் இதில் மட்டும் பழமை சிறந்தது என்று கொண்டாடுவது சற்றும் விளக்கமுடியாத ஒரு தத்துவம்.

2. தமிழரது கலாசாரம் என்று கூறும் போது, தமிழனின் எப்போதைய கலாசரத்தைப்பற்றிப் பேசுகிறோம் என்று ஒரு காலக்குறியீடிட்டு சொன்னால் சாலச்சிறந்தது. நிச்சயம் அதுவும் நாம் நமது பழம்பெருமை ஏடுகளில்தான் தேடுவோம். ஏனெனில், தற்போதைய தமிழனின் கலாசாரத்தைப்பற்றி என்ன சொல்வது? அல்லது தற்போது இருப்பதுதான் தமிழனின் உண்மையான கலாசரமென்றால், அதை நினைத்து நிச்சயமாக பெருமைப்பட இயலாது.

3. உலகில் பல நாடுகளில் அது அங்கீகரிக்கப்பட்ட மொழி அல்லது ஆட்சிமொழியாக உள்ளது எனும்போது, அந்நாட்டின் அரசியல்வாதிகளின் சூட்சுமம் மிக எளிதில் விளங்கும். இது ஒரு சாதாரண வாக்கு சேகரிப்பு யுக்தியாக ஒரு மொழியைப் பயன்படுத்துதலின் சாட்சி. அவ்வாறு தமிழ் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலும் நமது கண்போல் போற்றும் கலாசாரம் அப்படியே உள்ளதா? இது ஒரு பெரும்பாண்மை வாதத்தின் தொடர்ச்சியாகவே கருதுகிறேன்.

4. தமிழில் உள்ளது போன்ற இலக்கியங்கள் எனும்போதும் பழம்பெருமையைத்தான் தேடவேண்டியிருக்கிறது. கடந்த 50 வருடங்களில் ஒரு கம்பனைப்போல், வள்ளுவன்போல், பாரதி போல் ஏதேனும் ஒரு கவிஞன், உலகிற்கான இலக்கியங்கள் படைத்திருக்கிறானா? சினிமாத்துறையிலும் தமிழனின் சுவை உலகறிந்தது. தமிழனின் பாதி நேரம் தனிமனித வழிபாட்டிற்கே செலவாகிவிடுகிறது.

தமிழன் அல்லது தமிழச்சி எனப்படும் சொல்லாக்கம் ஏதாவது இலக்கியத்தில் காணப்படுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. Management துறையில் சொல்வார்கள் Identity Creation என்று. அதுபோல தமிழ் எனும் மொழி ஒரு identityயாக நிறுவப்பட்டு, அதை தாய் என்று சொல்லி, தெய்வம் என்று சொல்லி, அந்த காலத்தில் பார்ப்பனர்கள் நதியை தெய்வம், அரசனை தெய்வம் என்று சொல்லி உலகை ஏமாற்றி வந்ததுபோல இப்போது தமிழ் என்பது உனது அடையாளம் என்று அரசியல் லாபத்திற்காகவும், மற்ற பல நன்மைகளுக்காகவும் நம்மை ஏமாற்றி வருகிறது ஒரு கூட்டம்.

கடந்த 50 ஆண்டுகளில் உலகிற்கு இந்தியா எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்கியிருக்கிறது? தமிழன் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் 90 சதவிகிதம் வெளிநாட்டவர் கண்டுபிடித்ததே. வெளிநாட்டவர் கம்ப்யூட்டர் கண்டுபிடித்தால் அவர் அவரது கண்டுபிடிப்புக்கு பெயர்வைக்கிறார். அடுத்தவன் வீட்டுப் பிள்ளைக்கு நான் பெயர் வைப்பதுபோல கணினி அது இதுவென்று சகட்டுமேனிக்கு பெயர் வைத்துத்தள்ளுகிறோம். யார் வீட்டுப்பிள்ளைக்கு யார் பெயர்வைப்பது? தமிழில் பெயர்வைத்து தமிழில் அதை அழைத்தால் நிச்சயமாக தமிழுக்கும் பெருமையில்லை, தமிழனுக்கும் பெருமை இல்லை.

தமிழை ஐ.நா அங்கீகரித்தால் வரும் பலன் என்ன என்று கேட்டிருக்கிறார் ஒருவர். தமிழை செம்மொழியாக அறிவித்ததால் என்ன நன்மை விளைந்ததோ அதில் 100ல் ஒரு பங்கு கூட இல்லை. பெயருக்கு பெருமை பட்டுக்கொள்ளலாம். நாம் கேட்டுப் பெறுவது பெருமையாகாது அது இரத்தல். நம்மை வியந்து அவர்களாக பாராட்டுவது என்பது நமக்குத்தேவையில்லாதது என்றும் சொல்லலாம். நம்மை நமது அன்றாட ப்ரச்சனைகளிலிருந்தும், அவரது அசைவுகளை கவனிக்காமல் இருக்கும் பொருட்டும், மக்களை ஆட்டு மந்தைகளைப்போல் புத்திமழுங்கடிக்கும் பொருட்டும் எழுப்பப்படும் கூச்சல்தான் இது.

இன்று யோசித்தால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத்தெரியும், மார்கோனி,கிரஹாம்பெல்,மேரி க்யூரி, ரைட் சகோதரர்கள், எடிசன், ந்யூட்டன் யாரென்று. தமிழ் என்பது நமது அடையாளமல்ல. அது நமது மொழி. நமது அடையாளம், நாம் உலகிற்களிக்கும் கண்டுபிடிப்புகளும், நன்மைகளும் தான்.

சிறிய பதிலாகப்போடலாம் என்றுதான் தொடங்கினேன். ஏதோ சொல்கிறேன் என்று தொடங்கி இதுவரை வந்துவிட்டது. மன்னிக்கவும்.
இந்த பதில் பலருடைய கருத்துக்கு ஒவ்வாமலிருக்கலாம். ஆனால் என்ன சொல்ல... ஏதோ சொல்கிறேன் என்று விட்டுவிடுங்கள்.

செல்வன் said...

நல்ல பதிவு சிவா. உங்கள் கருத்துடனும், கொத்தனாரின் கருத்துடனும் ஒத்து போகிறேன்.

இந்திய மொழிகளுல் ஒன்று ஐநா சபையில் பிரதிநிதித்துவம் பெறுகிறது என்பது இந்தியன் என்ற முறையில் நாம் அனைவரும் பெருமைப்படவேண்டிய விஷயம்.நம் ஊர் சண்டைகளை அயலான் முன் அரங்கேற்றுவது மிக கேவலமான விசயம் என்பது எனது கருத்து.

வெற்றிவேல் சொல்லுகிற மாதிரி மத்திய அரசு இந்திக்கு செலவு செய்வது, இந்தியை திணிப்பது ஆகிய அனைத்தும் தடுக்கப்பட வேண்டிய விஷயம்.அதற்கான போராட்டங்கள் ஒருமுனையில் நடைபெற வேண்டும்.ஆனால் "இந்தி எதிர்ப்பு" மற்றும் "இந்தி திணிப்பு எதிர்ப்பு" ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் வேறுபாட்டை நாம் உணரவேண்டும்.இந்திக்கு நாம் எதிரி அல்ல.அது பலகோடி மக்களின் தாய்மொழி.ஆனால் இந்திதிணிப்புக்கு நாம் என்றும் எதிரியே.

பக்குவமான பதிவை இட்ட நாகையாருக்கு வாழ்த்துக்கள்

Om said...

///விஜய், ஒரே ஒரு கேள்வி தான், இந்த Petition Online எந்த அளவுக்கு தீர்வு அல்லது பிரச்சனையை உலக அளவில் எடுத்து செல்லும் என்று நினைக்கின்றீர்கள். பலரை சென்று அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக என்றால் சரி தான்.///

entha alavuku ithu payan endru theriyaathu.

ithai vaithu, nammoda karuthai inthiyargaluku therivikkum oru "tool" endrum ithai paarkiren :)

Om said...

karuveerasingham,

mozhi enbathu "communication" endru solvathil enakku udanpaadu illai.

"invention/science" la pinthangi irupathu ennavo unmai, aana atharkaaga thamizhai vittuta ellaam seriya poidum nu cholrathu konjam madathanam.

thamizhum valarpom, ariviyalum valarpom !!!

Om said...

//அதன் பாராம்பரியத்தையும் விட்டு கொடுத்த நம் அரசியல்வாதிகள் பற்றி உங்களுக்கு ஏதும் கருத்து உள்ளது. //

dravida katchiyin arasiyal thalaivargal rombo rombo nallavargal endru kooruvathu konjam muttaalthanam aagum.

"simple majority" endra adipadaiyil iyangum namma constitution la "numbers" favour hindi region.

Thamizh-ku classical language status kidaika koodathu nu murali manohar joshi la irunthu ellarume oppose pannanga.

In fact, eli-poonai mathiri irukura DMK-AIADMK ore vishayathula othu poraanga na athu "hindi imposition" ah ethirpathil thaan - google panna niraya info kidaikum.
http://www.tribuneindia.com/2003/20030306/nation.htm#3

conrgess/bjp ah vida, dravida katchigal evvalavo mel - dravida katchigal thaan thamizhagathin ethirkaalam nu naan rombove nambaren :)

Om said...

//ஆனால் விஜய், இப்பிரச்சனை நமக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை.//

Politics is about "negotiations", image is everything in it.

The MAIN point put forth by the hindi zealots is that it represents the second largest country/largest democracy.

We do not have anything to negotiate/bargain with them. They will not pay heed to us unless something drastically different is done - my personal opinion.

நாகை சிவா said...

//இந்தியா ஒன்று என்று இருக்கிறது
என்றுஅங்கிகரிப்பதற்கே எத்தனையோநாட்கள் ஆகியது.//

:-) இப்ப நம்ம நிலைமை வேற என்பதும் மறுக்க முடியாத உண்மை.

//இதில் மொழிப் பிரச்சினையை நாமாக உருவாக்க வேண்டாம் என்றூதான் தோன்றுகிறது. //

மொழியை வைத்து தான் இங்க அரசியலயே நடக்குது. வேணாம் சொன்னா எப்படி ;-)

நாகை சிவா said...

//என்னங்க இது? 105 பதிவுகள் படிக்கச் சொன்னா இப்படி பதிவு எழுதிக்கிட்டு இருக்கீங்க? சரி போகட்டும். //

கொஞ்சம் கவனத்தை திசை திருப்பினா நல்லா இருக்கும் தோனுச்சு, அதான்....

//அந்த மாதிரி ஆட்களிடம் எனக்கு அரைகுறை ஹிந்தி கூட தெரியும் எனக் காட்டிக் கொள்ளாமல் அவர்களை ஆங்கிலத்தில் பேச வைப்பதில் ஒரு அற்ப சந்தோஷம். //

எனக்கும் தான் .... வெறுப்பேத்தும் அளவுக்கு நான் பண்ணுவேன்.... :-)

balar said...

ஓரு இந்திய மொழி ஐ.நா வில் ஆட்சி மொழியாவதில் நமக்கு தான் பெருமை.இதில் மொழி அரசியல் பார்க்க வேண்டாமே.

@OM
//ஐ.நா வின் ஆட்சி மொழியாக‌ இந்தி மாறினால், இந்தியா என்றால் இந்தி, இந்தி என்றால் இந்தியா என்ற நிலமை உலகத்தில் உருவாகும்.//
ஐ.நாவில் பேசும்பொழுது இதுவரை நமது பிரதமர்கள் அனைவரும் ஹிந்தியில் தான் பேசி உள்ளனர்,அப்படி இருக்கும்பொழ்து ஆட்சிமொழி்யாவதில் என்ன தப்பு இருக்கிறது??

கீதா சாம்பசிவம் said...

I agree with Santhosh. It is true what he says. That is all for now.

Om said...

balar,

நீங்க கேட்ட கேள்விக்கு பதில் என்னுடைய பெரிய போஸ்ட்-ல இருக்கு. கொஞ்சம் படிச்சு பார்த்துட்டு போஸ்ட் பண்ணுங்க :)

Om said...

கீதா,

சந்தோஷ சொல்ற மாதிரி 1965-ல் இருந்திருந்தாம், இப்போ எந்த பிரச்சணயும் இருக்காது. Central govt சொல்ற மாதிரி, ஹிந்தி-ல் படிக்றது, exam எழுதுவது-னு எல்லாவற்றிலும் ஹிந்தி இருந்திருக்கும், அப்போ நாம் தமிழ்-அ பற்றி கவலை பட வேண்டியது இல்லை.

நாசமா போன தமிழர்கள், 1937/1965-ல ஹிந்தி எதிர்த்து சண்டை போட்டுட்டானுங்க - அவனுங்க மட்டும் இல்லை என்றாள், இப்போ நாம் எல்லாம் ஹிந்தி படிச்சிருப்போம்.

ஹிந்தி படிக்கிறது மூலம், தமிழ் வரலாறு, கலாசாரம், எல்லாம் தெரிஞ்சிருக்கும் ;)

Om said...

balar,

http://vetri-vel.blogspot.com/2007/04/blog-post.html

கோவி.கண்ணன் said...

//கருவீரசிங்கம் said... //

கருவீரசிங்கம் அண்ணாச்சி,

தாங்கள் தயைக் கூர்ந்து இந்த இடுகையைப் படித்து ... மேலும் உங்கள் பட்டியலை நீட்டித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்படுத்துதல்