Monday, April 16, 2007

அழகோ அழகுகள்!!!

என் பார்வையில் அழகை பற்றி எழுத சொல்லி வல்லியம்மாவும், வெட்டியும் அழைத்து உள்ளார்கள். நம்ம ஜியும் கூப்பிட்டதா பேச்சு. அழகை பற்றி முதல் பதிவு போட்டவுடன் எது அழகு என்று யோசித்ததில் நாம் என்றும் சூச்ச்....சூ என்றும் சொல்லும் கவுஜு எனக்கே வந்துச்சுனா பாத்துக்கோங்களேன். நான் அழகை பற்றி பேச ஆரம்பித்தால் ஆர்பரிக்கும் கடல் அலையில் ஆரம்பித்து ஸ்டெபியின் குதிரை வாலை பிடித்து நேதாஜியின் பேச்சு வரைக்கும் போகும். அதனால் நம்ம கொத்துஸ் கொடுத்த ஆறு அழகையையே நானும் என் பார்வையில் கூற முற்படுகிறேன்.

1, முகம்

எல்லா முகமும் ஒரு வகையில் அழகு தான். சில முகங்களை வாழ்வில் மீண்டும் சந்திக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அதில் கன்னுக்குட்டியும் உண்டு கன்னியரும் உண்டு. நான் என்றும் ரசிக்கும் சில முகங்கள்.

எம்.எஸ். - நிறைவாழ்வு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது. இவரின் "குறை ஒன்றும் இல்லை" பாடலை கேட்டாலே இவர்களின் சாந்தமான முகம் தான் முதலில் நினைவுக்கு வரும்.

சுபாஷ் - நேதாஜியை பெரும்பாலும் ராணுவ உடையில் பார்த்து தான் நமக்கு பழக்கம். அந்த உடையில் அவர் படத்தை காணும் போதே ஒரு மிடுக்கு தெரியும். அவரின் மிடுக்கையே மிஞ்ச வைத்து என்னை ரசிக்க வைத்த முகம் இந்த முகம்.

இது போக பல முகங்கள் - ரமணர், குழந்தை கிருஷ்ணர், அரவிந்தர்/மதர், தெரசா, நாகை அழகியார் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

2, இடம்

பிடித்த இடம், ரசித்த இடம் என ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும் என்றும் மனதிற்கு அழகான இடம் என்றால் நாகையில் இருக்கும் என் பழைய வீடு மற்றும் புது வீடும் தான். பல விதமான அனுபவங்களை தந்த இடங்கள் அவை. வீட்டை விட்டு பார்த்தால் நாகை கடற்கரை - யாரும் அற்ற இரவில் தனிமையில் யோசிப்பது அல்லது உற்ற தோழர்களுடன் அமர்ந்து உப்புக் காற்று முகத்தில் அறைய நடிகை ஜோவில் ஆரம்பித்து மைக்கெல் ஜோர்டன் வரை பேசுவது இருக்கே.... ஆஹா.... அது போக நாகை புதிய பஸ் நிறுத்தம் - பல வகையான மனிதர்களை காணலாம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், குல தெய்வ கோவில், கல்லூரி கட்டை சுவர், பள்ளி கூடைப்பந்து மைதானம், பாண்டி கடற்கரை, நைல் நதி - உகாண்டா, ஹைத்தியில் என் அறை பால்கனி என இதற்குக்கும் ஒரு பெரிய பட்டியல் நீளுகிறது.

3. நிகழ்வு

அக்காவின் திருமணம், அக்கா பையன் வரவு சொல்லாம். இதில் அக்கா பையன் பிறக்கும் போது நான் பாண்டியில் இருந்தேன், மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள் என்று செய்திக் கேட்டவுடன் புறப்பட தயார் ஆனேன். டெலிவரிக்கு குறிப்பிட்ட நேரம் குறைவாக இருந்ததால் திட்டத்தை கைவிட்டுட்டு கடற்கரை சென்று 5 நிமிடத்திற்கு ஒரு முறை தந்தைக்கும், தம்பிக்கு மாற்றி போன் அடித்த போது ஏற்பட்ட ஒரு பரபரப்பு, குழந்தை பிறந்த செய்தி கேட்ட பிறகு பெற்ற மகிழ்ச்சி. சரி காலையில் ஊருக்கு போகலாம் என்று நினைத்து படுத்து தூக்கம் வராமல் நடுராத்திரியில் ஊருக்கு கிளம்பி 4 மணிக்கு மருத்துவமனைக்கு போக வேண்டும், உள்ள விட மாட்டாங்கடா சொன்ன தந்தையுடன் ஒரு ஜாலி சண்டை போட்டு ஐந்து மணிக்கு நம்ம மாப்ஸ்ச பார்த்த நேரம் இருக்கு பாருங்க, அதாங்க அழகு. அது போக அன்று எனக்கு பிறந்த நாள், எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் இந்த செய்தியை சொல்லி இரட்டை மகிழ்ச்சி வேற.

4, குறும்பு

என்ன பாத்தா குறும்பு செய்றவன் மாதிரியாங்க இருக்கு. நான் ரொம்பவே அப்பாவிங்க. கல்லூரியில் படிக்கும்(???) போது என்.ஐ.ஐ.டி. க்கும் போய் கிட்டு இருந்தோம். அங்கு நமக்கு கிளாஸ் எடுக்கும் ஒரு மேடம் ரொம்பவே தோஸ்த், ஒரு 3,4 வயசு தான் வித்தியாசம். நம்ம கெட்ட பழக்கம் என்னான நம்ம நெருங்கிய தோஸ்துங்க பேக்கை நொண்டுவது. அது ஏன்னென்றால் ஆரம்பித்துல் இருந்து கோ-எட் படிச்சாச்சா, அப்படியே பழகி போச்சு. (அந்த பழக்கம் இப்ப இல்லனு சொன்னா நம்பனும்). பெரும்பாலும் சாக்லெட் கிடைக்கும், ஒரு நாள் அவரின் அழகிய புகைப்படம் நம்ம கையில் கிடைத்தது. ஒரு நாள் அவங்கிட்ட போய் மேடம், நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன், அவ இல்லாம் என் வாழ்க்கையே இல்லைனு சொல்லி இத்தனை நாள் நாம் பார்த்த நோட் பண்ணி வச்சு இருந்த அத்தனை சினிமா டயலாக்கையும் சொல்லி அவங்களை நம்ப வைத்தேன். அவங்களும் நம்பி உனக்கு என்ன உதவி வேணுமானலும் சொல்லு செய்ய நான் தயார், அது போக அப்ப அப்ப அட்வைஸ் வேற. போட்டோ காட்டுனு பல முறை கேட்டும் பார்த்தா பொறாமை படுவீங்கனு கையில் வைத்துக் கொண்டே போக்கு காட்டிக்கிட்டு வந்தேன். ஒரு நாள் அவங்க கிட்ட போய் மேடம் அந்த பொண்ண தூக்கலாம் முடிவு பண்ணிட்டேன், என்ன சொல்லுறீங்க கேட்டேன், அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்க அவங்க கேட்க, அவங்க அப்பா, அம்மா, தம்பி அத்தனை பேரையும் சமாளிக்க நான் ரெடி, அந்த பொண்ணு மட்டும் ஒகே சொன்னா போதும் சொல்ல, அதுக்கு நான் பண்ணனும் சொல்லு கேட்க, ஒகே சொல்லுங்க னு சொன்னேன். ஒன்னும் புரியலனு அவங்க விழிக்க, நான் ரொம்ப சீரியஸா போட்டோவ காட்டினா விழந்து விழந்து இல்ல குனிஞ்சு குனிஞ்சு சிரிக்குறாங்க. அவங்களை கூப்பிட வந்த தம்பிக்கிட்ட சொல்ல அவனும் சிரிக்குறான், டேய், இது சீரியஸ்டா, டேய் இது சீரியஸ்டா கவுண்டமணி மாதிரி எல்லாம் சவுண்டு விட்டேன், ஆனா காமெடி ஆனது தான் மிச்சம். சச்சின் கதையை எல்லாம் சொல்லியும் கூட வேலைக்கு ஆகல. சில வருடங்கள் கழித்து அவர் திருமணம் பத்திரிக்கை கொடுக்கும் போது கூட கேட்டேன், ஹும் வேலைக்கு ஆகல.

5, பரிசு

இந்த மேட்டருல நான் கொஞ்சம் குறும்பு பண்ணுவேன்ங்க. காமெடியான வாழ்த்து அட்டை வாங்குவது, வித்தியாசமான பரிசு வாங்கி தருவது, இல்ல நண்பனை கடைக்கு பரிசு வாங்கி தரேன் என்று கூப்பிட்டு போய் மச்சி எது வேணுமானும் வாங்கிகோ பட்ஜெட் 10 ரூபாய் என்பது, நானே உனக்கு ஒரு மிக பெரிய பரிசு இதை விட வேற என்ன வேணும் என்பது, வாழ்த்து அட்டை வழங்கும் போது ரொம்பவே யோசித்து, பெறுபவர்கள் ரசித்து பார்க்கும்படி வாங்குவேன். நம்ம பசங்க எல்லாம் கிப்ட் இல்ல கார்ட் வாங்க நம்மள தான் கூப்பிடுவாங்கனா பாத்துக்கோங்களேன். குடுக்கின்ற பரிசு ஏதாக வேண்டுமானலும் இருக்கலாம் ஆனால் பரிசு அவர்கள் மனதை தொடுவது மாதிரி குறைந்தப்பட்சம் ஒரு புன்சிரிப்பை வர வைக்கும் மாதிரி இருக்க வேண்டும். அது போன்று நான் கொடுத்த பரிசும் அனேகம், பெற்ற பரிசும் அனேகம். இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் தினமும் பார்க்கும் பரிசு இது, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அழகா தெரியும் பரிசு.

6, இல்லாத அழகு

தனி மனித ஒழுக்கம். இது நம் மக்கள் கிட்ட ரொம்பவே வளரனும் என்பது என் விருப்பம்.(நான் உட்பட). இது எந்த விசயத்தில் வேண்டுமானுலும் இருக்கலாம். ஏதாவது ஒரு விசயத்தில் நான் இனிமேல் ஒழுக்கமாக நடந்து கொள்வேன், எக்காரணம் கொண்டும் மீற மாட்டேன் என்ற உறுதியுடன் ஒரு காரியத்தில் ஒழுக்கமாக இருக்க ஆரம்பித்தால் சில நாள் கழித்து அது பழகி விடும். கண்டிப்பாக மீற மாட்டோம், பிறகு வேற ஒரு விசயத்தை எடுத்துக் கொள்ளலாம். உ.தா. ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பது, சிக்னலை மதிப்பது, அடுத்தவர்களுக்கு மரியாதை குடுப்பது(முக்கியமாக பெற்றோர்க்கு), தவறாமல் ஒட்டு போடுவது, குப்பையை குப்பை தொட்டியில் கொட்டுவது, வருமான வரி கட்டுவது, பெற்ற கடனை திரும்ப செலுத்துவது, அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பது, சமுதாய வேறுபாடு பார்க்காமல் இருப்பது, மொபைல் போனை தியேட்டர், கோவில், மீட்டிங், மருத்துவமனையில் நிறுத்தி / சைல்ண்டில் போடுவது போன்று எவையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏதாவது செய்யனும். செய்தாகவே வேண்டும் என் சமுதாயம் நம் சமுதாயம் உயர்வடைய.



நான் அழைக்கும் அழகான மூவர்

1, மருத்துவத்துறையின் விடிவெள்ளி சின்னய்யா டாக்டா இராமனாதன்
2, அஞ்சாநெஞ்சன் டாலர் செல்வன்
3, கொள்ளை சுனாமி லக்கிலுக்
தேவ் அழைத்து உள்ளார், அதனால்
4,கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி

67 comments:

அபி அப்பா said...

அழகு பதிவு:-))))

அபி அப்பா said...

மைபிரண்டுக்கா! நான் தான் பஸ்ட்:-))

மனதின் ஓசை said...

:-)

Geetha Sambasivam said...

puli, arumaiyaana azaghu. athu sari, enna photo anuppittu poodavee didalai? :D

Ayyanar Viswanath said...

/டேய், இது சீரியஸ்டா, டேய் இது சீரியஸ்டா கவுண்டமணி மாதிரி எல்லாம் சவுண்டு விட்டேன், ஆனா காமெடி ஆனது தான் மிச்சம். சச்சின் கதையை எல்லாம் சொல்லியும் கூட வேலைக்கு ஆகல. சில வருடங்கள் கழித்து அவர் திருமணம் பத்திரிக்கை கொடுக்கும் போது கூட கேட்டேன், ஹும் வேலைக்கு ஆகல./


அடப்பாவமே புலிக்கு பின்னால இப்படி ஒரு சோகமா ..:)

அபி அப்பா said...

//அடப்பாவமே புலிக்கு பின்னால இப்படி ஒரு சோகமா ..:) //

புலிக்கு முன்னால இப்படி ஒரு சோகம். இப்ப இல்ல, இப்ப உகாண்டாவிலே ஒரு பெண்புலி கூட சகவாசம், அதனால சந்தோஷமா இருக்கு புலி:-)

வல்லிசிம்ஹன் said...

சிவா,லேட்&லேட்டஸ்ட்?

அக்கா பையனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
அழகான இடங்கள் மனசில நிறைய இருந்தா,
வாழ்க்கையும் அழகாயிடும் சொல்லுவாங்க.
புதுமொழி.:))

நாகை சிவா said...

தொல்ஸ்,

என்ன இரண்டே வார்த்தையில் முடித்து வீட்டிர்கள். பதிவு பெரிசா இருக்குனு படிக்காம விட்டுடீங்களா?

மைபிரண்டுக்கிட்ட அசிஸ்டெண்டா எப்ப சேர்ந்தீங்க...

கோபிநாத் said...

எல்லா அழகும் நல்லா இருக்கு புலி ;)

குறும்புன்னு சொல்லிட்டு ஒரு சோகத்தை சொல்லிட்டிங்களே

ஜி said...

kadaisila neenga sonnatja onnu onna kadai pudikirathukke oru 5-6 varusam venum polirukuthe

sari muyarchi pannithaan paapoam

ஜி said...

azagaana azagu pathivu... etho solkirennu ennanamo solreenga...

நாமக்கல் சிபி said...

//டேய், இது சீரியஸ்டா, டேய் இது சீரியஸ்டா கவுண்டமணி மாதிரி எல்லாம் சவுண்டு விட்டேன், ஆனா காமெடி ஆனது தான் மிச்சம்.//

அடப் பாவமே!

சங்கத்து ஆளுன்னு ஏற்கனவே தெரிஞ்சிடுச்சு போல!

நாமக்கல் சிபி said...

எல்லா அழகுமே அழகுதான் நாகையாரே!

குறிப்பாக உங்கள் குறும்பு மிகவும் அழகு!

இலவசக்கொத்தனார் said...

புலி,

பார்மேட் (Bar Mat இல்லை Format) மாறாம அ.ஆ. போட்டதுக்கு நன்றி.

1. கன்னியர், கன்னுக்குட்டி எல்லாம் சொல்லிட்டு அந்த கன்னியர் போட்டோ போடாம உங்க சங்க ரூல்ஸை மீறிட்டீங்களே!

2. இப்போ போயிட்டு வந்த உகாண்டா கூட லிஸ்டில் சேர்ந்தாச்சு! கீதாம்மா என்னடான்னா வேற மாதிரி சொல்லறாங்க? :))

3. அந்த சுகம். அது தனிதாங்க.

4. அடப்பாவி! ஆனாலும் இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியலை? நானும் இப்படி எல்லாம்....ஹிஹி.

5. பரிசின் விலை முக்கியமில்லை. அது எப்படி குடுக்கப்படறவங்களைக் சந்தோஷப்படுத்துதுன்னுதான் பார்க்கணும். உகாண்டாவுக்கு என்ன பரிசு கொண்டு போன?

6. ஆமாம். உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

சூப்பர் அழைப்புகள். :))

வடுவூர் குமார் said...

டீச்சர் விஷயம் - டீச்சருக்கு அழகாக இருந்திருக்கும்.
:-))

வடுவூர் குமார் said...

பிறந்த குழந்தையை பார்பது,அதன் பிஞ்சு கால்,கை என்று பார்க்கப்பார்க்க இயற்கையின் அதிசியத்தை காண கண் கோடி வேண்டும்.சூப்பர் அழகு.

மு.கார்த்திகேயன் said...

அருமையான தொகுப்பு மாப்ஸ்..

நல்லாவே அனுபவிச்சு எழுதி இருக்கப்பா..

மு.கார்த்திகேயன் said...

சுபாஷை பற்றியது உச்சகட்ட அழகு, மாப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

உகாண்டாவுல என்ன நடக்குது? உண்மையிலே எங்க பாத்தாலும் அந்த செய்தியாகவே இருக்கு

rv said...

அழகோ அழகுகள் நல்லா வந்திருக்கு...

எம்.எஸ் முகம் உண்மைதான். அப்படியொரு சாந்தி தவழும் முகம். அதேபோல ரமணரும் என் லிஸ்டில் உண்டு.

இந்த நாகை அழகியார்கறது யாரு???? :))

ஹூம்.. குழந்தைகள் என்றைக்குமே அழகு. நீங்க போய் பார்த்தவிதமும் அழகா இருக்கு.

யோவ்.. குறும்புன்னா நிஜமாவே லவ் பண்ணீரா இல்ல தமாசுக்கு சொல்லிப்பாத்தீங்களா??? விபரீதமான விளையாட்டுபா இது..

பரிசு.. ரொமாண்டிக்கான புலியை கற்பனை செய்து பார்க்கிறேன்... :))

தனிமனித ஒழுக்கம், சுத்தம்லாம் சரி..கண்டிப்பா நீங்க சொல்றா மாதிரி வளத்துக்கவேண்டியதுதான். ஆனா சில ச்மயங்கள்ல இந்த chaos தான் இந்தியாவின் ஸ்பைஸ்னு எனக்குத் தோணுது..

நல்ல பதிவு.. என்னையும் கூப்பிட்டதுக்கு நன்னி. சீக்கிரமே போடுறேன்.

கதிர் said...

எலே புலி

நல்லா இருக்கு அம்புட்டுதான் சொல்வேன்.

ILA (a) இளா said...

மருமகன் பத்தின அழகு, அழகோ அழகு.
குறும்பு - இல்லீங்க. அது குசும்பு

தென்றல் said...

/.......
நடுராத்திரியில் ஊருக்கு கிளம்பி 4 மணிக்கு மருத்துவமனைக்கு போக வேண்டும், உள்ள விட மாட்டாங்கடா சொன்ன தந்தையுடன் ஒரு ஜாலி சண்டை போட்டு ஐந்து மணிக்கு நம்ம மாப்ஸ்ச பார்த்த நேரம் இருக்கு பாருங்க.../

நான் ரொம்ப இரசித்த அழகு-ங்க! அன்பான பந்தமே அழகுக்கு அழகு சேர்க்கும் தானே!

ஆனா, அந்த குறும்பு-ல ஏதோ ஒரு 'மெல்லிய' சோகம் இருக்கிற மாதிரி ......

வெட்டிப்பயல் said...

புலி,
நீ சொன்னது எல்லாமே அழகு தான்...

//சில வருடங்கள் கழித்து அவர் திருமணம் பத்திரிக்கை கொடுக்கும் போது கூட கேட்டேன், ஹும் வேலைக்கு ஆகல.//
உன் வாழ்க்கைல இப்படி ஒரு சோகம் இருக்கும்னு இத்தன நாள் தெரியாம போச்சு...

உள்ளுக்குள்ள இவ்வளவு சோகத்தை வெச்சிக்கிட்டு நீ எப்படி இவ்வளவு கலகலப்பா இருக்க???

நாகை சிவா said...

@ மனதின் ஒசை - வெறும் புன்னகை தானா?

@ கீதா - நன்றிங்க, போட்டோ நீங்களே போடுங்க, நான் அங்க வந்து பாத்துக்குறேன்.

நாகை சிவா said...

//அடப்பாவமே புலிக்கு பின்னால இப்படி ஒரு சோகமா ..:) //

அய்யனார், எம் குல தெய்வமே, ஏன் இந்த விபரீதம். நான் அதை குறும்பு என்று தானே சொல்லி இருக்கேன். ஒரு சோகப்பான் கூட போடலயே, அப்புறம் என்ன....

நாகை சிவா said...

//புலிக்கு முன்னால இப்படி ஒரு சோகம். இப்ப இல்ல, இப்ப உகாண்டாவிலே ஒரு பெண்புலி கூட சகவாசம், அதனால சந்தோஷமா இருக்கு புலி:-) //

அட அநியாயத்தின் உச்சக்கட்ட ஆபிஸர்களா.... நடத்துங்க நடத்துங்க.... உங்க விருப்பம் போல நடத்துங்க..... இன்னும் கொஞ்சம் காலம் தான் பூமா தேவி சிரிக்க போறா, அப்ப இருக்கு உங்களுக்கு எல்லாம்.

நாகை சிவா said...

//சிவா,லேட்&லேட்டஸ்ட்?//

கேள்விக்குறி போட்டு இருக்கீங்களே, நீங்க தான் சொல்லனும்.

பதிவு ஒகேவா... ரொம்பவே லேட் போல...

பழமொழியோ புதுமொழியோ நீங்க சொல்வது உண்மையான வாழ்க்கை மொழி.

நாகை சிவா said...

//எல்லா அழகும் நல்லா இருக்கு புலி ;)//

தாங்க்ஸ் கோபி!

//குறும்புன்னு சொல்லிட்டு ஒரு சோகத்தை சொல்லிட்டிங்களே //

யோவ் ஒரம்போ கோபி, அது உனக்கு சோகமா தெரிந்தா நான் என்ன பண்ணுவது.....

நாகை சிவா said...

//kadaisila neenga sonnatja onnu onna kadai pudikirathukke oru 5-6 varusam venum polirukuthe
sari muyarchi pannithaan paapoam //

வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை ஜி. முயன்றால் கண்டிப்பாக முடியும். முயன்று தான் பாப்போமே...

//azagaana azagu pathivu... etho solkirennu ennanamo solreenga... //

என்ன என்னமோ சொல்ல தானே ஏதோ சொல்கிறேன் ;-)

நாகை சிவா said...

//சங்கத்து ஆளுன்னு ஏற்கனவே தெரிஞ்சிடுச்சு போல! //

இது எல்லாம் சங்கத்துக்கான பேசிக் டிரெயின்ங் தானே!


//எல்லா அழகுமே அழகுதான் நாகையாரே!
குறிப்பாக உங்கள் குறும்பு மிகவும் அழகு! //

தளயின் வாழ்த்து என் பாக்கியம்!

நாகை சிவா said...

@ கொத்துஸ்,

//பார்மேட் (Bar Mat இல்லை Format) மாறாம அ.ஆ. போட்டதுக்கு நன்றி. //

இத நீங்க விளக்கி இருக்கவே வேணாம்...

//கன்னியர், கன்னுக்குட்டி எல்லாம் சொல்லிட்டு அந்த கன்னியர் போட்டோ போடாம உங்க சங்க ரூல்ஸை மீறிட்டீங்களே!//

அந்த போட்டோ எல்லாம் இருந்தா நான் ஏன் மறுபடியும் பாக்கனும் என்று ஏங்குறேன்.

//இப்போ போயிட்டு வந்த உகாண்டா கூட லிஸ்டில் சேர்ந்தாச்சு! கீதாம்மா என்னடான்னா வேற மாதிரி சொல்லறாங்க? :))//

பின்ன. அதை பற்றி விரிவாக உகாண்டா பதிவில். கீதா சொல்வது எல்லாம் சும்மா.....

//நானும் இப்படி எல்லாம்....ஹிஹி//

நீரும்மா!!! :-)

//உகாண்டாவுக்கு என்ன பரிசு கொண்டு போன? //

யு.எஸ். டாலர் எடுத்துட்டு போனேன், அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த. அதுவே நான் உகாண்டாவுக்கு கொடுத்த பரிசு.
;-)

நாகை சிவா said...

//டீச்சர் விஷயம் - டீச்சருக்கு அழகாக இருந்திருக்கும்.//

ஹிஹி... குமார்.... ரொம்பவே அழகு.

//இயற்கையின் அதிசியத்தை காண கண் கோடி வேண்டும்.சூப்பர் அழகு. //

நூற்றுக்கு நூறு உண்மை.

நாகை சிவா said...

//உகாண்டாவுல என்ன நடக்குது? உண்மையிலே எங்க பாத்தாலும் அந்த செய்தியாகவே இருக்கு //

மாம்ஸ், நாம ஒரு இடத்துக்கு போயிட்டு வந்தாலே அது கலவர பூமி தானே!

//சுபாஷை பற்றியது உச்சகட்ட அழகு, //

:-)

//நல்லாவே அனுபவிச்சு எழுதி இருக்கப்பா.. //

எல்லாமே அனுபவம் தந்த அழகு தான் மாம்ஸ்!

நாகை சிவா said...

//இந்த நாகை அழகியார்கறது யாரு???? :))//

திருசெளந்திராஜப் பெருமாள்.

//யோவ்.. குறும்புன்னா நிஜமாவே லவ் பண்ணீரா இல்ல தமாசுக்கு சொல்லிப்பாத்தீங்களா??? விபரீதமான விளையாட்டுபா இது..//

விளையாட தெரிந்து விட்டால் விபரீதம் ஆகாம பாத்துக்கலாம். வெறும் தமாசு தான்....

//பரிசு.. ரொமாண்டிக்கான புலியை கற்பனை செய்து பார்க்கிறேன்... :))//

வேணாம்.. விட்டுட்டுங்க....

//தனிமனித ஒழுக்கம், சுத்தம்லாம் சரி..கண்டிப்பா நீங்க சொல்றா மாதிரி வளத்துக்கவேண்டியதுதான். ஆனா சில ச்மயங்கள்ல இந்த chaos தான் இந்தியாவின் ஸ்பைஸ்னு எனக்குத் தோணுது..//

அதுவும் தான்!

சீக்கிரம் பதிவை போடுங்க...

நாகை சிவா said...

//எலே புலி

நல்லா இருக்கு அம்புட்டுதான் சொல்வேன். //

கதிரு, அதாச்சும் சொன்னியே அது வரைக்கும் சந்தோஷம்.

நாகை சிவா said...

//மருமகன் பத்தின அழகு, அழகோ அழகு.//

:-)

//குறும்பு - இல்லீங்க. அது குசும்பு//

குறும்போ இல்ல குசும்போ அழகா இருந்துச்சா இல்லையா?

நாகை சிவா said...

//நான் ரொம்ப இரசித்த அழகு-ங்க! அன்பான பந்தமே அழகுக்கு அழகு சேர்க்கும் தானே!//

கண்டிப்பா, நம் கலாச்சாரத்தின் பலமே பந்தம் தானே!

//ஆனா, அந்த குறும்பு-ல ஏதோ ஒரு 'மெல்லிய' சோகம் இருக்கிற மாதிரி ...... //

மெல்லிய இல்ல வல்லிய நக்கல் இருந்துச்சு.... சோகம் கிடையவே கிடையாது.

நாகை சிவா said...

//உன் வாழ்க்கைல இப்படி ஒரு சோகம் இருக்கும்னு இத்தன நாள் தெரியாம போச்சு...//

என் சோகம் உன்னை தாக்கி அது தாங்காம நீ பீல் ஆகி, ஏன் தேவையில்லாத கஷ்டம் உனக்கு என்று தான் இது வரைக்கும் சொல்லல.

//உள்ளுக்குள்ள இவ்வளவு சோகத்தை வெச்சிக்கிட்டு நீ எப்படி இவ்வளவு கலகலப்பா இருக்க??? //

எல்லாம் உன்க்கிட்ட கத்துக்கிட்டது தான். என் சோகம் என்னப்பா கொஞ்சம் ஜுஜுபி உன் சோகத்துடன் கம்பேர் பண்ணும் போது... என்னை போன்ற பல இளைஞர்களுக்கு நீ வாழும் வழிக்காட்டி..... உன் வழி நடக்கும் சாதாரண தொண்டர்கள் நாங்கள்.

காட்டாறு said...

அழகா இருந்தது அழகு பதிவு. மாப்ஸ் பிறக்குறதுக்குள்ள நீங்க பட்ட பாடு... அந்த பரபரப்பு ரொம்ப அழகுங்க!

துளசி கோபால் said...

//டீச்சர் விஷயம் - டீச்சருக்கு அழகாக இருந்திருக்கும்.:-))//

அப்படியா? :-))))


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது:-))))

Unknown said...

நாகை சிங்கமே, சூடான் தங்கமே

அழகைப்பற்றி அழகாக ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.அழைப்புக்கு மிக்க நன்றி தலைவா

http://holyox.blogspot.com/2007/04/270.html

நாகை சிவா said...

//அழகா இருந்தது அழகு பதிவு. மாப்ஸ் பிறக்குறதுக்குள்ள நீங்க பட்ட பாடு... அந்த பரபரப்பு ரொம்ப அழகுங்க! //

உண்மை தாங்க.... அந்த பரபரப்புக்கு பிறகு கிடைத்த பரவசம் இருக்கு பாருங்க... சான்ஸ்சே இல்ல. எங்கள் வீட்டில் எங்களுக்கு நினைவு தெரிந்து வந்த முதல் குழந்தை... அதனால் பரபரப்பு ரொம்பவே!

நாகை சிவா said...

//அப்படியா? :-))))//

அப்படி இருக்கலாம் என்பது என் எண்ணம் டீச்சர்.....

//புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது:-)))) //

இந்த உவமை இப்ப எதற்க்குனு புரியல

ஏதும் உள்குத்து இருக்கோ!

நாகை சிவா said...

//நாகை சிங்கமே, சூடான் தங்கமே

அழகைப்பற்றி அழகாக ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.அழைப்புக்கு மிக்க நன்றி தலைவா//

என் அழைப்பை ஏற்று மிக அழகாக பதிவு இட்டதற்கு நன்றி டாலர் செல்வன்.

Anonymous said...

அழகுன்னு என்ன நீங்க லவ் பண்ணிய கதை எல்லாம் அவிழ்த்து விடுகின்றீர்கள்.அட உங்க உகண்டா கேர்ள் ஃபிரண்ட் முகமும் அழகா?அதைப் பற்றி சொல்லவே இல்லையே

Anonymous said...

எனக்கும் எனது சொந்த ஊர் பிடிக்கும் சிங்கப்பூர் வந்த பிறகு.ஹ்ம்ம்ம் அது எல்லாம் ஒரு அழகான காலம்

Anonymous said...

உங்களுக்கும் உங்க மருமகன் மீது கொள்ளை பிரியமோ?நானும் அப்படிதான்.என்ன இருந்தாலும் அத்தை மடிதான் மெத்தைன்னு சொல்லுறாங்க.நீங்க எப்படி?நல்ல மாமாவாக உங்க மாப்பிள்ளை கிட்ட உதையும் வாங்கவும்.அதுவும் அழகுதான் ;-)

Anonymous said...

உங்களுக்கும் உங்க மருமகன் மீது கொள்ளை பிரியமோ?நானும் அப்படிதான்.என்ன இருந்தாலும் அத்தை மடிதான் மெத்தைன்னு சொல்லுறாங்க.நீங்க எப்படி?நல்ல மாமாவாக உங்க மாப்பிள்ளை கிட்ட உதையும் வாங்கவும்.அதுவும் அழகுதான் ;-)

Anonymous said...

6வது அழகு தனி மனித ஒழுக்கம் படித்து grass itching.சொறிந்து கொண்டேன் சிவா :-)
50வது மறுமொழி.சென்று வருகின்றேன்

மங்கை said...

6 ஆவது மனதை தொட்டது... இந்த அழகு இல்லைனா வேற என்ன அழகு இருந்து பிரயோஜனம் இல்லை.. அழகு பதிவு

நாகை சிவா said...

//6 ஆவது மனதை தொட்டது... இந்த அழகு இல்லைனா வேற என்ன அழகு இருந்து பிரயோஜனம் இல்லை.. அழகு பதிவு //

சரியா சொன்னீங்க.... அந்த அழகும் இருந்து விட்டால் சொர்க்கம்(இந்தியா) இன்னும் சொர்க்கத்தின் சொர்க்கமாகும்.

நாகை சிவா said...

//அழகுன்னு என்ன நீங்க லவ் பண்ணிய கதை எல்லாம் அவிழ்த்து விடுகின்றீர்கள்.//

அதுக்கு பேரு லவ்... அட ஆண்டவா.... அப்படி பாத்த இதுக்கு ஒரு பெரிய லிஸ்டே இருக்கும்.

//அட உங்க உகண்டா கேர்ள் ஃபிரண்ட் முகமும் அழகா?அதைப் பற்றி சொல்லவே இல்லையே //

அதுவும் அழகு தான். நிறைய பேர் இருக்காங்க, எல்லாரையும் சொல்ல இடம் பத்தாது பாருங்க அதான் சொல்லல ;-)

நாகை சிவா said...

//உங்களுக்கும் உங்க மருமகன் மீது கொள்ளை பிரியமோ?நானும் அப்படிதான்.//

இல்லையா பின்ன, நம்ம மாப்ஸ் ஆச்சே...

//என்ன இருந்தாலும் அத்தை மடிதான் மெத்தைன்னு சொல்லுறாங்க.//

அத்தை மடி மெத்தைனா, மாமா படி சோபா இருந்துட்டு போகட்டும், அதுக்கு என்ன இப்ப?

//நீங்க எப்படி?நல்ல மாமாவாக உங்க மாப்பிள்ளை கிட்ட உதையும் வாங்கவும்.அதுவும் அழகுதான் ;-) //

ஹும், அது எல்லாம் வாங்கியாச்சு. இப்ப மழலை மொழியை ரசித்து கொண்டு இருக்கிறேன்.

நாகை சிவா said...

//6வது அழகு தனி மனித ஒழுக்கம் படித்து grass itching.சொறிந்து கொண்டேன் சிவா :-)//

உங்களுக்கு அடிக்கடி itching வருது, நல்ல மருத்துவரா பாருங்க சீக்கிரம்.
:-)

Syam said...

அழகான அழகு பதிவு....பங்கு :-)

Syam said...

//அதில் கன்னுக்குட்டியும் உண்டு கன்னியரும் உண்டு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....எப்புடி பங்கு....:-)

Syam said...

//என்ன பாத்தா குறும்பு செய்றவன் மாதிரியாங்க இருக்கு//

யாரு சொன்னா அப்படின்னு :-)

Syam said...

//இது சீரியஸ்டா, டேய் இது சீரியஸ்டா கவுண்டமணி மாதிரி எல்லாம் சவுண்டு விட்டேன், ஆனா காமெடி ஆனது தான் மிச்சம்//

அது என்னமோ நம்ம ப்ரபோஸ் பண்ணா மட்டும் காமெடி பண்ணிடுறாங்க....:-)

Syam said...

ரவுண்டா 60 :-)

MyFriend said...

//அபி அப்பா said...
மைபிரண்டுக்கா! நான் தான் பஸ்ட்:-))
//

அனக்காக என் வேலையை கரெக்ட்டா செஞ்சுட்டீங்க.. :-)

நன்றி.. ஹீஹீ

(எப்படியெல்லாம் இவங்களை சமாளிக்க வேண்டியிருக்கு... இப்பவே கண்ண கட்டுதே!)

MyFriend said...

ஆகா.. உங்களை மீட் பண்ணும்போது என்னுடைய பேக்கை பத்திர படுத்திதான் வைகணும் போல...

MyFriend said...

மத்தவங்க ஒரே அழகை பத்தியே திரும்ப திரும்ப பேசும்போது, நீங்க வித்தியாசமா பேசியிருக்கீங்க புலி. வாழ்த்துக்கள். :-)

Radha Sriram said...

அழகுகள் நல்ல அழகு சிவா!

நேத்தாஜிய இந்த படத்துல பாத்தா அப்படியே இன்னொரு விவேகாநந்தர பாக்கர மாதிரி இருக்கு இல்ல??!!

நாகை சிவா said...

//நேத்தாஜிய இந்த படத்துல பாத்தா அப்படியே இன்னொரு விவேகாநந்தர பாக்கர மாதிரி இருக்கு இல்ல??!! //

அந்த சாந்தம் தான் எனக்கு மிகவும் பிடித்தது ராதா.

நாகை சிவா said...

//ஆகா.. உங்களை மீட் பண்ணும்போது என்னுடைய பேக்கை பத்திர படுத்திதான் வைகணும் போல... //

அட.... என்னய நீங்க நம்பலாம்ங்க... நான் என்ன பேக்கை தூக்கிட்டா ஒடப் போறேன்.

//மத்தவங்க ஒரே அழகை பத்தியே திரும்ப திரும்ப பேசும்போது, நீங்க வித்தியாசமா பேசியிருக்கீங்க புலி. வாழ்த்துக்கள். :-) //

இது என்ன நீங்க ஒரு புது குண்டை வீசிட்டு போறீங்க....

நாகை சிவா said...

////அதில் கன்னுக்குட்டியும் உண்டு கன்னியரும் உண்டு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....எப்புடி பங்கு....:-) //

என்ன நொப்புடி, உன் நெஞ்சுல கை வச்சு சொல்லு, அது மாதிரி ஏதும் இல்லனு... ஏகப்பட்டது இருக்கும், நம்ம ஏத விட்டு இருக்கோம் சொல்லு....

//அது என்னமோ நம்ம ப்ரபோஸ் பண்ணா மட்டும் காமெடி பண்ணிடுறாங்க....:-) //

நாம் வாங்கி வந்த வரம் அப்படி இருக்கோமோ, இதுவும் நல்லது தான் பங்கு, யார்கிட்டயும் கமிட் ஆக வேண்டாம் பாரு....