Monday, April 23, 2007

முனி - சனியா?

சரணின் ஜெமினி புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் ராகவா லாரான்ஸ் இயக்கத்தில் என்ற எதிர்பார்ப்புடன் முனி படத்தை பார்த்தேன். இப்படி எல்லாம் உன்னை எவன் எதிர்பார்க்க சொன்னது என்பது மாதிரி இருந்தது முனி. கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தன் சேரி மக்களின் ஆதரவோடு தண்டபாணியை எம்.எல்.ஏ. ஆக்குகின்றார் ராஜ்கிரண். இவன் மக்களிடம் செல்வாக்கு பெற்று விட்டான் இவனை இப்படியே விட்டால் அடுத்த எலெக்சனில் நம்மையே வென்று விடுவான் என்று கருதி ராஜ்கிரனையும் அவர் மகளையும் கொன்று விடுகிறார். ஊர் மக்களிடமும் ராஜ்கிரன் பணத்தை எடுத்துக் கொண்டு ஒடி விட்டார் என்று கூறி அவர்களை நம்ப வைக்கின்றார். சாயங்காலம் 6 மணிக்கு மேல் இருட்டை கண்டாலே பயப்படும் லாரன்ஸ் உடலில் ராஜ்கிரன் ஆவியாக புகுந்து தண்டபாணி & கோ வை கொன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி லாரன்ஸ் உடலில் இருந்து வெளியேறுகிறார். நான் ரொம்ப சுலபமா சொல்லிட்டேன், ஆனா கதையை அங்கு அங்கு சுத்தி நம்மள சுத்த வச்சுடுறாங்க.

லாரன்ஸ் முதலில் பயந்தப்பிள்ளையாக நன்றாகவே நடித்து இருக்கிறார். அவரின் வாய்ஸ் மாடுலேஷன் தான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. பின் ராஜ்கிரன் ஆவி அவர் உடம்பில் ஏறியவுடன் ஆவேசமாக நடித்து உள்ளார். வழக்கம் போல ரொம்ப அருமையாகவே டான்ஸ் ஆடி உள்ளார்.

ராஜ்கிரன், வழக்கம் போல் தொடைக்கு மேல் ஏத்தி கட்டிய லுங்கி, களைந்த தலைமுடி, முறுக்கிய மீசை, சிவந்த கண்கள், கொஞ்சம் ஒவர் ஆக்டிங், பாசத்தின் பிறப்பிடம், கூறு கட்டி அட்டிக்கும் சாப்பாடு என்று கனசச்சிதமாக அவர் பாத்திரத்தை செய்து உள்ளார்.


வேதிகா, ஹீரோயின் ஜோ சாயல்ல இருக்காங்க, நல்லாவே இருக்காங்க பார்க்க, பாட்டுக்கு டான்ஸ் நல்லா ஆடுறாங்க. நடிக்க தெரியுமா அப்படினு யாரு கேட்க கூடாது. அதை பற்றி நமக்கு என்ன கவலை.

இவர்கள் போக வினுசக்கரவத்தி, கோவை சரளா கொடுத்த பாத்திரத்தை சரியா செய்து இருக்காங்க. அதுவும் சரளாவின் அய்யய என்ற அடிக்கடி கூறுவது ரசிக்கும் படி உள்ளது. தண்டபாணி தான் வில்லன், அண்ணாத்த வர வர ஒரே மாதிரி நடிக்குறீங்க. போர் அடிக்க வைக்குறீங்க. இது போக இரு மந்திரவாதிகள் ஒருவர் நாசர், இன்னொருவர் ராகுல். ரொம்ப படுத்தவில்லை நம்மை.

இந்த காலத்தில் பேய் கதையா என்பதை ஒதுக்கி விட்டு பார்த்தால், இந்த படத்தை ஒரு நல்ல திரில்லராகவோ இல்லை முழு நீள காமெடியாகவோ எடுத்து இருக்கலாம். இரண்டையும் கலக்கி தரலாம் என்று நினைத்து சொதப்பி இருக்காங்க. நடிகராக, டான்ஸ்ராக இந்த படத்தில் ஜொலித்த லாரான்ஸ் இயக்கத்தில் சிறிதே கோட்டை விட்டு விட்டார். காமெடியராக வரும் வடிவேலு ஜெராக்ஸ் சிரிப்புக்கு பிறகு கோபத்தை வர வைக்கிறார். ஒரு நடிகரின் ஜெராக்ஸ் நாடக மேடைக்கு உதவும், வெள்ளித்திரைக்கு உதவாது என்பதை புரிந்துக் கொள்ள ஏனோ நம் கோடம்பாக்கம் நினைக்க தவறுகிறது.
அது போக தேர்தலில் ஜெயிக்கும் தண்டபாணி தொகுதிக்கு வேண்டிய நலத்திட்டங்களை நிறைவேற்ற பணம் தருகிறேன், வந்து வாங்கிக் கொள் என சொல்ல, ராஜ்கிரணும் அதை வாங்க சைக்கிளில் தனியாக போக,யோவ் என்னய்யா நக்கல் அடிக்குறீங்க. படம் பாக்குறவன் எல்லாம் முட்டாள் என்று முடிவு பண்ணி தான் நீங்க படமே எடுப்பீங்களா?

இசை பரத்வாஜ், மிகுந்த ஏமாற்றம். வரேண்டா முனி அப்படிங்குர ஒரு குத்து பாட்டு கொஞ்சம் பரவாயில்லை. மற்ற பாடலகள் எல்லாம் மனதில் நிற்க ரொம்பவே சிரம்மாக இருக்கு.ஒளிப்பதிவு சற்றே ஆறுதல் தருகிறது.

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் ஒரளவு ரசிக்கலாம். மொத்ததில் முனி சனி அல்ல

அடுத்த திரைப்பட விமர்சனம் - இலக்கணம்

61 comments:

VSK said...

அப்படியெல்லாமாவாவது இதை ரசிக்கணுமா என்பதுதான் கேள்வி.

லாரன்ஸ் எதுனாச்சும் சூட்கேஸ் அனுப்பினாரா?
:))

2 நல்ல படம் வந்தால், 40 படம் சறுக்குதே!

இலவசக்கொத்தனார் said...

தங்கமணி இந்தப் படத்தைப் பார்க்கணமுன்னு சொல்லறாங்க. என்ன செய்யலாம்?

அ) அப்படியே அல்வா குடுத்து சமாளியுங்கள்
ஆ) காஸெட் எடுத்துக் குடுத்துவிட்டு அப்பீட் ஆகிவிடுங்கள்
இ) கூட உக்கார்ந்து பார்க்கிற மாதிரி பாவலா காண்பித்துக் கொண்டு மடிக்கணினியில் தமிழ்மணம் பாருங்கள்
ஈ) நீங்களும் சேர்ந்தே பார்க்கலாம்

MyFriend said...

Naanum parthen.. Lawrence & Kovai Sarala Comedy superungga.. Padam comedykkaaka maddume paarkkalaam.. second half mukkaal vaasi forward pannithaan paarthen.. ;-)

MyFriend said...

Aduththa vimarsanam Ilakkanamaa?

SunTV rangele poyiddu irukkeengga polirukkE?

Anonymous said...

உங்கள் சமூக சேவையை நான் பாராட்டுகின்றேன்.ஏனென்றால் இந்த படத்தை எல்லாம் நீங்கள் முதலில் பார்த்து எங்களை எல்லாம் காப்பாற்றும் நல்லவர் நீங்கள்தான்

MyFriend said...

but Ilakanam oru nalla padamthaan.. kathaiyai vida antha padaththil ubayOkikkappadda thamilai naan rasiththen. ;-)

ஜி said...

vimarsanamnaa ippadilla irukanum

ஈ) நீங்களும் சேர்ந்தே பார்க்கலாம் வேதிகா வரும் காட்சிகளை மட்டும் :))

rv said...

சனியத் தேடிப் போய் பார்க்கணுமின்னு புலிக்கு தலையெழுத்தா...

இந்த லட்சணத்துல நாங்களும் எதிர்பார்ப்பில்லாம போனா பாக்கலாம்னு வேற மாட்டிவிடுற?

//ஆவி அவர் உடம்பில் ஏறியவுடன் ஆவேசமாக நடித்து உள்ளார். வழக்கம் போல ரொம்ப அருமையாகவே டான்ஸ் ஆடி உள்ளார்.//
இதெல்லாம் நக்கல் தானே? பார்த்தாலே பரவசம் பார்த்த ஷாக்கே கலையாம இருக்கோம் நாங்கல்லாம்...

//வழக்கம் போல் தொடைக்கு மேல் ஏத்தி கட்டிய லுங்கி, களைந்த தலைமுடி, முறுக்கிய மீசை, சிவந்த கண்கள், கொஞ்சம் ஒவர் ஆக்டிங், பாசத்தின் பிறப்பிடம், கூறு கட்டி அட்டிக்கும் சாப்பாட//
:)))

இதையும் ஒரு படம்னு மதிச்சு போய் பார்த்ததுக்காகவே பாசக்கார புலின்னு சரணே பட்டம் கொடுப்பாருன்னு நினைக்கிறேன்.

Arunkumar said...

//
படம் பாக்குறவன் எல்லாம் முட்டாள் என்று முடிவு பண்ணி தான் நீங்க படமே எடுப்பீங்களா?
//
புதுசா கேக்குறீங்க.. லாஜிக் எல்லாம் யோசிச்சி படம் எடுத்த காலமெல்லாம் மலயேரிப்போச்சு :(

Arunkumar said...

வேதிகா அழகா தான் இருக்காங்க.. படம் பாக்குறேன் ஜி சொன்ன மாதிரி வேதிகா வரும் காட்சிகளை மட்டும் :))

மு.கார்த்திகேயன் said...

சொல்லிக்கொள்ளும்படி படம் சூப்பரா இல்லை மாப்ஸ்..

ஜனங்களை படம் முடியும்வரைகூட உட்கார வைக்க ஏதும் இருப்பதாக தெரியவில்லை..

லாரன்ஸுக்கு தமிழ் ராசி இல்லை

கதிர் said...

உங்கிட்ட எனக்கு பிடிச்ச குணமே இதான் புலி. மொக்கை படத்த பாத்ததுமில்லாம அதவிட மொக்கையா எழுதி யாரும் பாக்கவேணாம்னு விழிப்புணர்வு கொண்டு வர்ற பாரு உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

இருந்தாலும் டூ லேட், இந்த மொக்க படத்த உனக்கு முன்னாடியே பாத்த மொக்கசாமி நானு. இனிமேல் இந்த மாதிரி சேவைகள முன்கூட்டியே செய்யணும்.
புர்தா...

Santhosh said...

புலி,
மக்கள் மேல என் உனக்கு இந்த கொலை வெறி. பயந்த சுபாவமா அதுக்காக நாலு கழுதை வயசு ஆன பின்னாடியும் ராத்திரி டாய்லெட்டுக்கு போறத்துக்கு கூட அம்மாவை எழுப்புறது எல்லாம் ரொம்ப ஓவர். கண்றாவியா இருக்கு முதல் பாதி. நம்ம ராம்ஸ் சூப்பரா சொல்லி இருக்காரு பாரு.


புலி,
சாரிமா இலக்கணத்துக்கு நம்ம முந்திட்டோம் இல்ல
இங்க பாரு நம்ம விமர்சனம் இலக்கணத்தை பத்தி.

கொத்ஸ்,
அ) அப்படியே அல்வா குடுத்து சமாளியுங்கள்
ஆ) காஸெட் எடுத்துக் குடுத்துவிட்டு அப்பீட் ஆகிவிடுங்கள்

இப்படி முயற்சி செய்யுங்கள். ஆமா நீங்க காஸெட் வாங்கி பார்க்கும் அளவுக்கு ரொம்ப நல்லவரா கொத்ஸ்.

Syam said...

என்ன ஆச்சு பங்கு அடிக்கடி இந்த மாதிரி தற்கொலை முயற்சில எறங்கற
:-)

Syam said...

//வழக்கம் போல ரொம்ப அருமையாகவே டான்ஸ் ஆடி உள்ளார்.
//

டான்ஸ் நல்லாதான் ஆடி இருக்கார்...ஆன அதே மாதிரி பாத்து பாத்து போர் அடிச்சு போச்சு...

வல்லிசிம்ஹன் said...

நல்ல தமிழ்ப் படம்னு கடைலே கூட சொன்னாங்க.
இன்னும் பத்துனு ஏத்ஹொ படம் பெரு சொன்னாரு.லேசில பார்ப்போமா.
பின்ன எதுக்கு காத்திட்டு இருக்கோம்.
ஒரு புலி விமரிசனம் எழுதும்.
அப்புறம் அதைப் படிச்சுட்டு போக வேணானு தீர்மானிக்கலாம் என்கிற ஒரு நினைப்புதான்.
கோடி வணக்கம். யாரும் மாயக்கண்ணாடி பாக்கலியா. :-)

Syam said...

//அடுத்த திரைப்பட விமர்சனம் - இலக்கணம்//

நீ 200 வருசத்துக்கு நல்லா இருக்கனும் ராசா...எத்தன பேர காப்பாத்தற :-)

கோவி.கண்ணன் said...

//ந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் ஒரளவு ரசிக்கலாம்.//

சிவா, நல்ல விமர்சனம்.

நான் சிவாஜி படத்தையும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பார்கனும்னு நினைச்சிருக்கேன்

Anonymous said...

Thambi chumma browse pannumbothu unga blog parthen.Nalla irukuthu.
entha school la padichinga?
Elementary, middle, mattrum higher secodary school kalai iyum pathi koncham eluthungo. enna indha payanum london vanthathu antha schools la onnula padichi than.

Alfred-London

Anonymous said...

Thambi chumma browse pannumbothu unga blog padichen.Unga blog nalla irukuthu.
Yenakum nagai than.entha school la padichinga?
Elementary, middle, mattrum higher secodary school kalai iyum pathi koncham eluthungo.
yenna indha payanum london vanthathu antha schools la onnula padichi than.

Alfred

Geetha Sambasivam said...

ungalai yaru muni sani ellam parkka chonnathu? pesamal nan parthu vacha ponnai kalyanam senjittu ukandavum ponga, sudanukkum ponga yaru vendamnu solrathu? :))))))))))))))))

ALIF AHAMED said...

எலே இப்ப போயி போடுரீயலே....::(((

துளசி கோபால் said...

நானே 'முனி'யடிச்சுப்போய்த்தான் ஒண்ணும் சொல்லாம கிடந்தேன்.

லாரன்ஸ் நடனம்தான் கொஞ்சம் பரவாயில்லை. ஆமாம். இவரை வச்சு ஆளுங்க படமெல்லாம்
எடுக்கறாங்களா? **** பிடிச்சுக்கிச்சு.

Syam said...

//pesamal nan parthu vacha ponnai kalyanam senjittu//

அதுக்கு அப்புறம் உகாண்டா,சூடான்லாம் எங்க போறது, காசி,ராமேஸ்வரம் னு பேசிக்கறாங்க :-)

ulagam sutrum valibi said...

siva thambi,ellarum ungala kalyanam senjuka solraga pesama syam parthu vacha ponnai senjukaga en manamatha aasirgal

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜி
ஈ) நீங்களும் சேர்ந்தே பார்க்கலாம் வேதிகா வரும் காட்சிகளை மட்டும் :))//

அடா அடா அடா...ஜி பின்னறீங்க
விமர்சனத்துக்குள் ஒரு விமர்சனமா? :-)
பாருங்க, புலியும் கரெக்டான படம் சுட்டிப் பொருள் விளக்கறார் :-)

balar said...

சிவா..விமர்சனத்துக்கு மிக்க நன்றி...
உங்களது பொது தொண்டு பாரட்டத்தக்கது..:)

கப்பி | Kappi said...

யோவ்..படத்தோட ட்ரைலரே முழுசா பார்க்க முடியல..இதுல படத்தைப் பார்க்கலாம்னு வேற எழுதி எதுக்குய்யா இப்படி புரளிய கிளப்பறீங்க? ;)))

Unknown said...

விட்டலாச்சார்யா கதை மாதிரி இருக்கு நாகையாரே. நல்லவேளை எச்சரிக்கை செய்தீர்கள்.$10 மிச்சம் புடிச்சேன்

அபி அப்பா said...

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பாட்டு சூப்பரா இருக்கு. மத்தபடி படம் வேஸ்ட். நல்ல வேலை தப்பிச்சோம்டா சாமீ!

அபி அப்பா said...

பூஜாவுக்கு என்ன குறைச்சல், அவங்களுக்காகவே படத்தை பார்க்கலாம்!

அபி அப்பா said...

மக்களே! நான் இப்பதான் பொறி பட விமர்சன்ம் படிச்சேன். அதன் பின்னூட்டம்தான் இது. இந்த படத்து பின்னூட்டம் இலக்கணம் விமர்சனத்துல....மீண்டும் சந்திப்போம்:-))

கோபிநாத் said...

\\எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் ஒரளவு ரசிக்கலாம். மொத்ததில் முனி சனி அல்ல\\

என்னமோ நீயும் சொல்லற நானும் நம்புரேன் ;)

நாகை சிவா said...

//அப்படியெல்லாமாவாவது இதை ரசிக்கணுமா என்பதுதான் கேள்வி.//

இருக்கப்பட்டவங்க குறிப்பிட்ட படத்தை பாக்கலாம். நாம அப்படியா, எல்லா படத்தையும் பார்த்து ஆக வேண்டிய கட்டாயம்.

//2 நல்ல படம் வந்தால், 40 படம் சறுக்குதே! //

இதுல பாருங்க VSK, அந்த சறுக்குன 40 யும் நம்ம பாத்துட்டு அந்த 2 நல்ல படத்த விட்டுவோம்.

(மேல சொன்னதை V.K.R மாதிரி படிக்கனும்) ;-)

நாகை சிவா said...

//தங்கமணி இந்தப் படத்தைப் பார்க்கணமுன்னு சொல்லறாங்க. என்ன செய்யலாம்? //

இத முன்னாடியே கேட்டுட்டீங்க, நானும் அப்ப சொன்னேன், மறுக்காவும் சொல்லுறேன்.

"ஆ" சரியாக உமக்கு பொருந்தும். "அ" வை பல காலத்துக்கு செய்ய முடியாது என்ற காரணத்தால் ;-)

நாகை சிவா said...

//second half mukkaal vaasi forward pannithaan paarthen.. ;-)//

கொடுத்து வச்சவங்க நீங்க...

//Aduththa vimarsanam Ilakkanamaa?/

பங்கு போட்டு விட்டதால் அனேகமா இருக்காது...

//SunTV rangele poyiddu irukkeengga polirukkE? //

என்ன பண்ணுறது, கால கொடுமை சில சமயம் நாமும் சன் டிவி பார்க்க நேர்ந்தது... அதன் தாக்கம் ரொம்பவே இருக்கு...

நாகை சிவா said...

//உங்கள் சமூக சேவையை நான் பாராட்டுகின்றேன்.ஏனென்றால் இந்த படத்தை எல்லாம் நீங்கள் முதலில் பார்த்து எங்களை எல்லாம் காப்பாற்றும் நல்லவர் நீங்கள்தான்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். என்ன பாத்து நல்லவன் சொல்லிட்டீங்களே...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

நாகை சிவா said...

//but Ilakanam oru nalla padamthaan.. kathaiyai vida antha padaththil ubayOkikkappadda thamilai naan rasiththen. ;-) //

நல்ல படம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. என்னையும் அந்த தமிழ் நிமிர்ந்து வக்கார வைத்தது. ஆனால் சில இடங்களில் ரொம்பவே நாடகத்தனமாக இருப்பது தான் கொஞ்சம் சலிப்புட்டும் விசயம்.

நாகை சிவா said...

//vimarsanamnaa ippadilla irukanum//

சிரிப்பான் ஏதும் இல்ல, நம்புறேன்.

//ஈ) நீங்களும் சேர்ந்தே பார்க்கலாம் வேதிகா வரும் காட்சிகளை மட்டும் :)) //

என் இனம்டா நீ! :-)

நாகை சிவா said...

//சனியத் தேடிப் போய் பார்க்கணுமின்னு புலிக்கு தலையெழுத்தா...//

விதி வலியது இராம்ஸ்....

//இதெல்லாம் நக்கல் தானே? பார்த்தாலே பரவசம் பார்த்த ஷாக்கே கலையாம இருக்கோம் நாங்கல்லாம்...//

அந்த படத்தை பாக்கல, கே.பி படமனாலே அதுல தாலி கழட்டி வீசுற சீன் இருக்கும், பாத்து பசங்கிட்ட அது இருக்கா கேட்டேன் இருக்குனு சொன்னாங்க, சோ நான் எஸ் ஆயிட்டேன்.

//இதையும் ஒரு படம்னு மதிச்சு போய் பார்த்ததுக்காகவே பாசக்கார புலின்னு சரணே பட்டம் கொடுப்பாருன்னு நினைக்கிறேன். //

கொடுத்தா வேணாம்னா சொல்ல போறோம்.

நாகை சிவா said...

//புதுசா கேக்குறீங்க.. லாஜிக் எல்லாம் யோசிச்சி படம் எடுத்த காலமெல்லாம் மலயேரிப்போச்சு :( //

அதுக்குனு எம்.எல்.ஏ. நலப்பணி திட்டத்துக்கு மக்கள் கிட்ட பணம் கொடுப்பது ரொம்பவே ஒவர் அருண்.

//வேதிகா அழகா தான் இருக்காங்க.. படம் பாக்குறேன் ஜி சொன்ன மாதிரி வேதிகா வரும் காட்சிகளை மட்டும் :)) //

இல்லையா பின்ன, உங்களுக்காக தான் தேடி பிடிச்சு அவங்க படம் போட்டு இருக்கேன். ;-)

நாகை சிவா said...

//ஜனங்களை படம் முடியும்வரைகூட உட்கார வைக்க ஏதும் இருப்பதாக தெரியவில்லை..//

உண்மை தான் மாம்ஸ்!

//லாரன்ஸுக்கு தமிழ் ராசி இல்லை //

இந்த சரக்கு எல்லாம் தெலுங்க்கு தான் சரிப்படும் மாம்ஸ்

நாகை சிவா said...

//உங்கிட்ட எனக்கு பிடிச்ச குணமே இதான் புலி. மொக்கை படத்த பாத்ததுமில்லாம அதவிட மொக்கையா எழுதி யாரும் பாக்கவேணாம்னு விழிப்புணர்வு கொண்டு வர்ற பாரு உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.//

என்ன பண்ணுறது தம்பிண்ணன், நல்ல படத்தை பத்தி விமர்சனம் எழுத நிறையா பேர் இருக்காங்க.... அதான் இப்படி....

//இந்த மொக்க படத்த உனக்கு முன்னாடியே பாத்த மொக்கசாமி நானு. இனிமேல் இந்த மாதிரி சேவைகள முன்கூட்டியே செய்யணும்.
புர்தா... //

நம் கையில் என்ன இருக்கு சொல்லுங்க, எல்லாம் படத்தை ரீலிஸ் பண்ணுற சர்வர் கையில தான் இருக்கு.... சீக்கிரம் வந்தா சீக்கிரம் போட போறோம்...

நாகை சிவா said...

//கண்றாவியா இருக்கு முதல் பாதி. //

முதல் பாதி மட்டும் தானா பங்கு!

//இப்படி முயற்சி செய்யுங்கள். ஆமா நீங்க காஸெட் வாங்கி பார்க்கும் அளவுக்கு ரொம்ப நல்லவரா கொத்ஸ். //

சும்மா இப்படி வெளியில் சீன் போடுறார். சும்மா....

//புலி,
சாரிமா இலக்கணத்துக்கு நம்ம முந்திட்டோம் இல்ல
இங்க பாரு நம்ம விமர்சனம் இலக்கணத்தை பத்தி. //

ஒகே விடு, அடுத்த படம் ஏதும் பாப்போம்.

நாகை சிவா said...

//எப்பவும் போல விமர்சனம் போட்டு நம்மள காப்பாத்திட்டீங்க வாழ்க உங்க பொது தொண்டு:)//

எல்லாம் உங்களுக்காக தான்!

//இலக்கணமா? அப்டின்னு ஒரு படம் வந்ததா? //

நேரம் அமைந்தால் இதை பாருங்கள் வேதா!

நாகை சிவா said...

//என்ன ஆச்சு பங்கு அடிக்கடி இந்த மாதிரி தற்கொலை முயற்சில எறங்கற //

வேற என்ன பண்ணுறது பங்கு, சில சமயம் நம்ம நிலைமை அப்படி ஆயிடுது.

//டான்ஸ் நல்லாதான் ஆடி இருக்கார்...ஆன அதே மாதிரி பாத்து பாத்து போர் அடிச்சு போச்சு... //

உண்மை தான் பங்கு, ஆனா இந்த படத்துல கூட வேதிகா ஆடுறாங்க, அதை மட்டும் பாரு....

நாகை சிவா said...

//பின்ன எதுக்கு காத்திட்டு இருக்கோம்.
ஒரு புலி விமரிசனம் எழுதும்.
அப்புறம் அதைப் படிச்சுட்டு போக வேணானு தீர்மானிக்கலாம் என்கிற ஒரு நினைப்புதான்.//

அப்ப எனக்கு ஒரு முத்திரை இதுக்கும் முத்தியாச்சா? :-(

//யாரும் மாயக்கண்ணாடி பாக்கலியா. :-) //

யாராச்சும் பாத்து நல்லா இருக்குனு ஒரு 10 பேராவது சொன்னா தான் நான் பாப்பேன்.

நாகை சிவா said...

//நீ 200 வருசத்துக்கு நல்லா இருக்கனும் ராசா...எத்தன பேர காப்பாத்தற :-) //

உன் வாக்கு பழிக்கட்டும் பங்கு, அடுத்த சமுதாயத்துக்கு இது போல பல படங்களை பார்த்து நம் சேவையை தொடருவேன்.

நாகை சிவா said...

//சிவா, நல்ல விமர்சனம்.//

நன்றி கண்ணன்,

//நான் சிவாஜி படத்தையும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பார்கனும்னு நினைச்சிருக்கேன் //

என்ன கண்ணன், சிவாஜியுடன் போய் இதை எல்லாம் கம்பெர் பண்ணிக்கிட்டு... அது ரேஞ்சே வேற....

நாகை சிவா said...

//Thambi chumma browse pannumbothu unga blog parthen.Nalla irukuthu.//

ரொம்ப நன்றிங்க அண்ணாத்த

//entha school la padichinga?//

நேரு, அப்புறம் சி.எஸ்.ஐ.

//Elementary, middle, mattrum higher secodary school kalai iyum pathi koncham eluthungo. enna indha payanum london vanthathu antha schools la onnula padichi than.
Alfred-London //

ரொம்ப சந்தோஷம். விரைவில் எழுதிடுவோம். நீங்க எந்த பள்ளி!

நாகை சிவா said...

//ungalai yaru muni sani ellam parkka chonnathu? pesamal nan parthu vacha ponnai kalyanam senjittu ukandavum ponga, sudanukkum ponga yaru vendamnu solrathu? :)))))))))))))))) //

இதுக்கு அந்த முனி எம்புட்டோ தேவலையை...

நாகை சிவா said...

//எலே இப்ப போயி போடுரீயலே....::((( //

மின்னல் சேதாரம் ரொம்ப அதிகமா?

நாகை சிவா said...

//நானே 'முனி'யடிச்சுப்போய்த்தான் ஒண்ணும் சொல்லாம கிடந்தேன்.//

நீங்களுமா....

//லாரன்ஸ் நடனம்தான் கொஞ்சம் பரவாயில்லை. ஆமாம். இவரை வச்சு ஆளுங்க படமெல்லாம்
எடுக்கறாங்களா? **** பிடிச்சுக்கிச்சு. //

சரணுக்கு இவர் மேல ஒரு அபார நம்பிக்கை போல. கே.பி. பேமிபில

நாகை சிவா said...

//அதுக்கு அப்புறம் உகாண்டா,சூடான்லாம் எங்க போறது, காசி,ராமேஸ்வரம் னு பேசிக்கறாங்க :-) //

சரியா சொன்ன பங்கு, வர வர அவங்களுக்கு ரசனையே இல்லாம போச்சு.

நாகை சிவா said...

//siva thambi,ellarum ungala kalyanam senjuka solraga pesama syam parthu vacha ponnai senjukaga en manamatha aasirgal //

பங்கு, எனக்காக நீ பொண்ணு பாத்து இருக்கியா, இத நீ என்கிட்ட நீ சொல்லவே இல்லையே....

உங்க ஆசிர்வாதங்கள் ஸ்டாக் வச்சுக்கோங்க, பண்ணும் போது வாங்கிக்குறேன் வாலிபி.

நாகை சிவா said...

//அடா அடா அடா...ஜி பின்னறீங்க
விமர்சனத்துக்குள் ஒரு விமர்சனமா? :-)
பாருங்க, புலியும் கரெக்டான படம் சுட்டிப் பொருள் விளக்கறார் :-) //

படம் எப்படினு நீங்க சொல்லவே இல்லையே ரவி. ;-)

நாகை சிவா said...

//சிவா..விமர்சனத்துக்கு மிக்க நன்றி...
உங்களது பொது தொண்டு பாரட்டத்தக்கது..:) //

ரொம்ப நன்றி பாலர், பொது வாழ்விற்கு வந்துட்டுட்டா இத எல்லாம் செய்து தானே ஆக வேண்டும்.

நாகை சிவா said...

//யோவ்..படத்தோட ட்ரைலரே முழுசா பார்க்க முடியல..//

அது எல்லாம் பாத்து இருந்தா நாங்க ஏன் இந்த படத்தை பார்க்க போறோம்.

//இதுல படத்தைப் பார்க்கலாம்னு வேற எழுதி எதுக்குய்யா இப்படி புரளிய கிளப்பறீங்க? ;))) //

யோவ் நீ கூடல் நகர் படம் பார்த்தவன் தானே, அதுக்கு இது தேவலையா இல்லையா அத மட்டும் சொல்லு

நாகை சிவா said...

//விட்டலாச்சார்யா கதை மாதிரி இருக்கு நாகையாரே.//

அது எல்லாம் தேவலை செல்வன்

// நல்லவேளை எச்சரிக்கை செய்தீர்கள்.$10 மிச்சம் புடிச்சேன் //

அந்த படத்தை யாரும் 10 $ கொடுத்து பாக்க சொன்ன கூட பாக்காதீங்க....

நாகை சிவா said...

//பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பாட்டு சூப்பரா இருக்கு. மத்தபடி படம் வேஸ்ட். நல்ல வேலை தப்பிச்சோம்டா சாமீ! //

தப்பிக்க வைத்தற்க்கு நன்றி சொல்லுங்க சாரே!

//பூஜாவுக்கு என்ன குறைச்சல், அவங்களுக்காகவே படத்தை பார்க்கலாம்! //

ஏதுமே குறைச்சல், அம்மனை தவறாக சொல்லுவேன் தொல்ஸ்.. ;-)

நாகை சிவா said...

//என்னமோ நீயும் சொல்லற நானும் நம்புரேன் ;)//

இம்புட்டு சொல்லியும் நீ நம்பலனா உன்ன யாராலையும் காப்பாத்த முடியாது