Saturday, December 30, 2006

இது சரியா?

ஈராக் முன்னாள் அதிபர் திரு. சதாம் உசேன் இன்று தூக்கிலிடப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவருக்கு உலக பிரநிதிகள் நீதிமன்றத்தில்(இண்டர்நெஷனல் கோர்டில்) தீர விசாரித்து தக்க தண்டனை தந்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்ப்பின் மீது சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அவருக்கு நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை குறித்து இந்திய அரசாங்கம் உட்பட பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு உள்ளனர். அதே நேரத்தில் கீழே இருக்கும் இரு புகைப்படங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் எனக்கு சரியாக படவில்லை. நம் கண்டத்தை இப்படி தான் தெரிவிக்க வேண்டுமா? வேறு வழியே இல்லையா?

இது சரியா?

34 comments:

VSK said...

சதாம் கொன்றது ஹிட்லர், முஸோலினி போல பல நாட்டு மக்களை அல்ல!

உலகக் கோர்ட்டில் வழக்காட!

கொன்றது இராக்கிய மக்களை!

விசாரிக்கப்பட்டது இராக்கில்!

விசாரித்தது இராக்கிய நீதிபதிகள்!

சாட்சியம் சொன்னது இராக்கியர்!

தண்டனை நிறைவேற்றப்பட்டது இராக்கில்!

இதில் என்ன குற்றம் கண்டீர்கள்!

நாகை சிவா said...

//கொன்றது இராக்கிய மக்களை!

விசாரிக்கப்பட்டது இராக்கில்!

விசாரித்தது இராக்கிய நீதிபதிகள்!

சாட்சியம் சொன்னது இராக்கியர்!

தண்டனை நிறைவேற்றப்பட்டது இராக்கில்!//

இதில் அமெரிக்க நிர்பந்தம் சிறிது கூட கிடையாது என்று கூற வருகின்றீர்களா எஸ்.கே., குழந்தைக் கூட நம்பாது. அதை பற்றி நான் இப்பொழுது பேச வரவில்லை.

நம் மக்களில் சிலர் தங்கள் எதிர்ப்பை காட்டுக்கின்றேன் பேர்வழி என்று சில வாசகங்களை பல இடத்தில் ஒட்டி உள்ளார்கள். இது சரியா என்று தான் கேள்விக் கேட்டு உள்ளேன்.

Thamil said...

தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.

தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது, உண்மையில் முஸ்லீம்கலின் உணர்வு இந்த வகையானதே இது பொதுவாக அனைத்து முஸ்லீம்கலிடமும் கானப்படும் மனநிலை , உண்மையை உராய்ந்து பார்க்கவேண்டும் சதம் நல்லவனா? கெட்டவனா? அவன் கெட்டவன் கெட்வன் அழிக்கப்படவேண்டியவனே, மற்றப்படி அமெரிக்க நீதி வழங்கியதுதான் தவறு, அதற்காக கெட்டவனை மன்னிக்கமுடியாது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
VSK said...

குழந்தைக்கு என்ன தெரியும், திரு.சிவா!

அவர்களை ஏன் இதில் இழுக்கிறீர்கள்!

மற்றபடி, நீங்கள் குறிப்பிட்ட சுவரொட்டிகள் விஷமத்தனமானவையே!

Anonymous said...

// நம் கண்டத்தை இப்படி தான் தெரிவிக்க வேண்டுமா? வேறு வழியே இல்லையா?
//

நீங்களும் நானும் கண்டனம் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான், ஐ.நா. வும் இன்ன பிறவும் செய்து கொண்டிருந்தேயிருந்தது போல.

இஸ்ரேல் செய்கிற மாதிரி, ஒன்றுக்கு பத்தாக பதிலடி கொடுத்து, ஜப்பானை அப்பளம் ஆக்கியது, அன்கிள் சாமிற்கு நினைவிற்கு வர வைத்தால்தான் இந்த சாமியாட்டத்தை நிறுத்த முடியும் சாரே.

கேட்டா வன்முறை மாதிரிதான் தெரியுது. ஆனா என்ன செய்ய.., பேரழிவு ஆயுதங்கள் இருக்கப்ப, லட்சக்கணக்கில் மக்கள் இறக்கறதை தாங்கி குண்டு போட்டு ஜனநாயகத்த காப்பாத்தி ஆகனும்தானே சாரே!

என்னாது? இந்த போஸ்டர் போக்கிரிகளை கேட்டீங்களா? இவிங்க சும்மா புல்தடுக்கிங்க. பேசிக்கிட்டு மட்டும்தான் இருப்பாங்க. மோடி இன்னும் மஸ்தா தானே இருக்காரு. அதுக்கே இவிங்கிளுக்கு வக்கில்லே..

Anonymous said...

சிவா!!
அதுவும் சரியில்லை.(பணமும் ;பயமும் எந்தளவு விளையாடியுள்ளது,சந்தேகம் உள்ளது):ஆனால் இதுவும் சரியில்லை. எனவே!!எதுவுமே மாறப் போவதில்லை.ஈராக் மக்களே! பரிதாபத்துக்குரியவர்கள்.
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

சிவா. இது அமெரிக்க எதிர்ப்பிற்கு ஒரு வடிகால்.

Santhosh said...

எஸ்.கே,
நீங்க சொல்றது நல்ல காமெடியா இருக்கு. அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இந்த விசாரணை நடந்ததா என்ன?

புலி,
அந்த தட்டிகளில் உள்ள வார்த்தைகள் கண்டனத்துக்கு உரியவையே.

Anonymous said...

அமெரிக்க நிர்பந்தம் இருந்ததோ இல்லையோ, அதுவல்ல முக்கியம் - சதாம் ஹூசைன் தூக்கிலடப்பட்டது நியாயமே - சும்மா நீதிமன்றம் எல்லாமே நேர விரயம்.
இந்தியாவிலும் இந்த மாதிரி செய்ய வேண்டும். இப்போதே நெரி கட்டிக்கொண்டு சில அரசியல்வாதிகள் பினாத்துவதைப் பார்க்கலாமே!

Anonymous said...

// எஸ்.கே,
நீங்க சொல்றது நல்ல காமெடியா இருக்கு. //

அய்யய்யோ எஸ்கே அழுகுற மாதிரி பேசீட்டீங்களே.

அவர் பாட்டுக்கு அப்பப்போ 'எல்லாரும் இந்து', 'அமெரிக்கா அப்பாவிப் புள்ள' 'வர்ணப்படி கடமை செய். டோண்ட் எxபெக்ட் பிரதிபலன்' னு நெறய காமெடி பண்ணுவார். சிரிச்சுட்டு போயிரனும். இல்லனா வையறாங்கனு டென்சன் ஆயிடுவார்.

Anonymous said...

தனது நாட்டுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும், அதற்காக தனது நாட்டு மக்களையே விசவாயு அடித்து கொன்ற ஒரு கொடூரனுக்காக குரல் கொடுப்பது மடமைத்தனம், அந்த குழந்தைகளும் சதாமுக்கு எதிராக சதி செய்தார்கள் என்பது மடமையிலும் மடமை. எந்த ஒரு இனத்தை அழிக்கும் சர்வாதிகாரிக்கும் இதுதான் முடிவு. முஸ்லீம்களுக்காக இந்தியா குரல்கொடுக்கப்போய் சொந்த செலவில் சூனியம் வங்கிக்கொள்ளாது என நம்புவோம். ஏனெனில் முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை

விசவாயு அடித்துகொல்லப்பட்டது திரிபு என்பது, மனிதாபிமானமற்ற செயல், ஏனெனில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். சதாமின் சமுதாயத்தை சேர்த ஒருவனும் என்னுடன் வேலை செய்கிறான், அவனும் சதாம் செய்தது பிழை என்றுதான் கூறுகிறான், ஆனால் அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனப்பற்று காரனமாக சதாமை ஆதரிக்கிறான், பொதுவான முஸ்லீம்களும் இதேபோக்கு உடையவர்கள்தான். அவர்கள் ஏனோ உன்மையை உராய்ந்து பார்க்கமறுக்கிறார்கள்.

//அதற்காக கெட்டவனை மன்னிக்கமுடியாது. //

மன்னிக்க கூடாது என்பதும் என் கருத்து தான். ஆனால் அந்த தீர்ப்பை உலக பிரநிதிகள் சம்மத்துடன் வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.

நாகை சிவா said...

//குழந்தைக்கு என்ன தெரியும், திரு.சிவா!

அவர்களை ஏன் இதில் இழுக்கிறீர்கள்!//

வம்புக்கு எல்லாம் இழுக்கவில்லை. அந்த தூக்கு தண்டனையை நிறைவேற்ற அதிகம் காட்டிய நாடு ஏது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தானே....

நாகை சிவா said...

//ஈராக் மக்களே! பரிதாபத்துக்குரியவர்கள்.//

உண்மை தான். சபிக்கப்பட்டவர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சதாம் விழ்ந்தும் அவர்கள் நிம்மதியாக இல்லை என்பது தான் கசப்பான உண்மை.

நாகை சிவா said...

// பேரழிவு ஆயுதங்கள் இருக்கப்ப, லட்சக்கணக்கில் மக்கள் இறக்கறதை தாங்கி குண்டு போட்டு ஜனநாயகத்த காப்பாத்தி ஆகனும்தானே சாரே!
//

கடைசி வரை அந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் பெரிய காமெடி அதில்

நாகை சிவா said...

//தனது நாட்டு மக்களையே விசவாயு அடித்து கொன்ற ஒரு கொடூரனுக்காக குரல் கொடுப்பது மடமைத்தனம், //

அவர் செய்த காரியத்துக்கு நம் தற்போதைய முதல்வர் போல் நியாயம் கற்பிக்கவில்லை. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகனும். ஆனால் கோல் ஒருவன் கையிலே இருக்கே, இது சரியான போக்கு தானா?

Anonymous said...

\\// எஸ்.கே,
நீங்க சொல்றது நல்ல காமெடியா இருக்கு. //

அய்யய்யோ எஸ்கே அழுகுற மாதிரி பேசீட்டீங்களே.

அவர் பாட்டுக்கு அப்பப்போ 'எல்லாரும் இந்து', 'அமெரிக்கா அப்பாவிப் புள்ள' 'வர்ணப்படி கடமை செய். டோண்ட் எxபெக்ட் பிரதிபலன்' னு நெறய காமெடி பண்ணுவார். சிரிச்சுட்டு போயிரனும். இல்லனா வையறாங்கனு டென்சன் ஆயிடுவார்.
\\

இந்த அனானி சொன்னது தான் சிரிப்பா இருக்கு. சூப்பர் காமெடி. ஐயா பெயரில்லாதவரே. ஒரு மனுசனை இந்தளவுக்கு தப்பா எப்படிங்க ஐயா புரிஞ்சிக்கிறீங்க. வாழ்க உங்கள் தனிமனிதத் தாக்குதல். அவர் எப்ப அமெரிக்கா அப்பாவிப்புள்ளன்னு சொன்னார்? எப்ப 'வர்ணப்படி' கடமை செய். பலனை எக்பெக்ட் பண்ணாதேன்னு சொன்னார்? உங்க இணைய வாழ்க்கையே தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசுறதிலேயே போயிடுது போங்க.

-இன்னொரு அனானி.

Syam said...

ulaga makkalai ellam komaaligal nu ninaichitu iruku Amerikka arasaangam....

Syam said...

iniya puthaandu vaazhthukkal pangu...

sorry for thanglish...am still on travel...

VSK said...

இது சரியான போக்கு இல்லை என்பவர்கள் ஒருபோது நம் இலங்கைத் தமிழர்களின் ஆதரவுக்காகக் குரல் கொடுக்கத் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்!

நாளை மகிந்திராவைத் தூக்கில் போட்டாலும் இதுதான் உங்கள் நிலையா?

ஒரு நாட்டு நலனுக்காக அவர் செய்தது சையே எனச் சொல்லிட முடியுமா உங்களால்?

ஓஓ! .........முடியும்!
உங்களுக்குத்தான் நம்மைப் பாதிக்காத வரையில் எல்லாமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிதானே!

கொஞ்சம் மனசாட்சியையும் கேளுங்கள் நண்பர்களே!

கதிர் said...

இது சரியே இல்ல சிவா!

பொதுவா இந்த மாதிரி விஷயங்களை உணர்ச்சி மிகுதியில செஞ்சிட்டாங்க என்பதுதான் என்னோட புரிதல்.
இதையே ஆறுமாசம் கழிச்சி போஸ்டர் ஒட்டினவங்க கிட்ட கேளுங்க.

அட போங்க சார். மனுசனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு இப்ப வேற டாபிக் ஓடுது. அது ரொம்ப பழசுன்னு சொல்வாங்க.

மத்தபடி திருட வந்தவன் தீர்ப்பு கொடுத்தது தப்பு.

என்னதான் இராக்கிய நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பா இருந்தாலும் இந்த தீர்ப்பை எந்த இராக்கியனும் ஒத்துக்கவே மாட்டான்.

இப்பொழுது இந்திய & அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் சொல்லும் பல உண்மைகளை ஏன் யாருமே எதிர்க்கவில்லை?

குண்டூசிய நகர்த்தினா கூட எங்களுக்கு தெரியப்படுத்திட்டு செய்யின்னு ஒரு ஒப்பந்தம்.

ஒப்பந்தத்திற்கு முன்பு 7 ஆண்டுகளுக்கும் மேலாக அணுசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகிற போது. புதிதான இந்த ஒப்பந்தம் எதற்கு என்பதை யாருமே கேட்கவில்லை. வழக்கம்போலவே ஊடகங்களும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை பதிவு செய்ததோடு விட்டுவிட்டதும் ஒரு வேதனை.

பேருக்கு ஒரு எதிர்ப்பு அலை எல்லாம் கரையை தொடாதுங்க சிவா.

ஊருக்கு போறேன்னு ஒத்த வார்த்தையில சொல்லிட்டு போயிட்டியேலே!

புத்தாண்டு எல்லாம் எப்படி போச்சு?

Anonymous said...

என்னப் பண்றது சிவா அச்சாபீஸ்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டாமா?

Anonymous said...

என்னப் பண்றது சிவா அச்சாபீஸ்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டாமா?

வடுவூர் குமார் said...

பணத்துக்காக,பணத்துடன் வரும் மொழி வேறெப்படி இருக்கும்!!
ஆச்சரியமில்லை.
பயணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா?

நண்பன் said...

அன்புடன் சிவாவிற்கு,

நலம்,

நலம் தானே?

இங்கு, நண்பன் என்ற பெயரில் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அந்த நண்பன் நானில்லை.

ஏனோ நண்பன் பெயரில் கருத்து தெரிவிக்க சிலர் விரும்புகிறார்கள் போலிருக்கிறது.

நீங்கள் எடுத்து இட்டிருக்கும் சுவரொட்டிகள், உணர்ச்சி கொந்தளிப்பில் சிலர் வெளியிட்டிருக்கலாம். இந்த சிலர்.. பலராக வளாராதிருக்கும் வரை... ஆபத்தில்லை. இது ஒரு உணர்ச்சி வெளிப்பாடு தானேயன்றி வேறில்லை.

வாசகன் said...

//இது சரியான போக்கு இல்லை என்பவர்கள் ஒருபோது நம் இலங்கைத் தமிழர்களின் ஆதரவுக்காகக் குரல் கொடுக்கத் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்!

நாளை மகிந்திராவைத் தூக்கில் போட்டாலும் இதுதான் உங்கள் நிலையா?

ஒரு நாட்டு நலனுக்காக அவர் செய்தது சையே எனச் சொல்லிட முடியுமா உங்களால்?//

ஆகா..!! ஆகாகா! நம்ம SK ஐயா கடேசில தமிழ் சென்ட்டிமெண்ட்ட கைல எடுத்துட்டாருங்கோ!!

ஐயா,
ஜயவர்த்தனே தொடங்கி, மகிந்தா வரை இனப்படுகொலைக்காக தூக்கிலிடப்படணுங்கறதுல தப்பில்லே.. ஆனா அதையும் அமெரிக்கன் தன்னிஷ்டத்துக்கு செய்யாம முறையாக உலக நீதிமன்றத்தில ஒப்படைச்சு செய்யணும்.
இப்ப, ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் சாவுக்கு காரணமா இருந்தார்னு அமெரிக்கக்காரன் திடுதிப்புனு வந்து எதேச்சதிகாரமா அத்வானியப் பிடிச்சு தூக்குலப் போட்டா நம்ம இறையாண்ம போனாப் போகுதுன்னு சும்மா விட்ருவோமா..? சொல்லுங்க!

நாகை சிவா said...

நண்பன்,

உங்க பெயரில் முதலில் வந்த பின்னூட்டத்தை நீக்கி விடுகின்றேன். உங்கள் பெயர் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கின்றது போல, அதான் எல்லாரும் உபயோகப்படுத்திக் கொள்கின்றார்கள்.........

நாகை சிவா said...

//பயணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா? //

எல்லா விமான நிலையத்திலும் விமானம் தாமதமானது, மற்றபடி பயணம் இனிமை தான்.

நாகை சிவா said...

//என்னப் பண்றது சிவா அச்சாபீஸ்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டாமா? //

அச்சு ஆபிஸ்க்கு எங்க வேலை கொடுக்குறாங்க. 2 ரூபாய் செலவு பண்ணி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்குறாங்க. ஒரு காப்பிக்கு 30 பைசா அந்த பிரிண்ட் ஜெராஸ் பண்ணி போற வர ஒரு வாகனம் விடாமல் ஒட்டி விடுகின்றார்கள்.... என்னத்த சொல்ல.......

நாகை சிவா said...

//ஊருக்கு போறேன்னு ஒத்த வார்த்தையில சொல்லிட்டு போயிட்டியேலே! //

ஒரு பதிவே போட்டு விட்டேன், போதுமா தங்கம்.......

ஆங்கில புத்தாண்டுல நமக்கு என்ன விசேசம், ஒன்னும் இல்லப்பா