Saturday, December 16, 2006

வெற்றித் திருநாள்

இதே நாள் 1971 ஆம் ஆண்டு பங்காளத்தேஷ் சுகந்திரம் அடைந்த நாடாக இந்த உலகத்தில் வெளி வந்தது. 3 மில்லியன் மக்களை இழந்து சுகந்திரம் அடைந்த நாடு அது. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க......

இந்த வெற்றித் திருநாளை குறித்து சிலர் பலரிடம் சொல்லிய போது, எனக்கு சில குறள்கள் ஞாபகம் வந்தது. அவை

செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.


உரை:

தான் ஒர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.


எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


உரை:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.


அந்த குறள்களை நினைத்து பிறகு அந்த சிலரை பார்த்து சிரிக்கும் போது இன்னும் ஒரு குறள் ஞாபகம் வந்தது. அது


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று


உரை:

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.


மறந்து விட்டேன். நல்லா இருங்கடே

12 comments:

கதிர் said...

இப்ப என்ன சொல்ல வறீங்க சார்?

மு.கார்த்திகேயன் said...

மாம்ஸ், முதல்ல பங்களாதேஷ் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்..

மாம்ஸ், ஏன் இத்தனை குறள்கள்..என்ன ஆச்சு

Anonymous said...

வாழ்த்துக்கள். வாழ்க வளர்க......

கால்கரி சிவா said...

நாகை சிவா, நன்றல்லதை மறந்துவிடலாம் ஆனால் வளர்த்த கடா முட்ட வந்த அதை அறுத்து பிரியாணி போடுவதுதான் சரி

கோவி.கண்ணன் [GK] said...

தம்பி சிவா,

நீண்ட நாட்களாக ஆளைக் காணூம் ?

நாகைக்கு சென்றீர்களா ?

நாகை சிவா said...

தம்பி, கார்த்திக்,

இன்னுமா புரியல உங்களுக்கு?

அவர்களின் வெற்றிக்கு யாரு காரணம்?

நாகை சிவா said...

//வளர்த்த கடா முட்ட வந்த அதை அறுத்து பிரியாணி போடுவதுதான் சரி
//

சரி தான். ஆனால் யாரிடம் மோதுகின்றோம் என்று தெரியாமல் மோதுவது சரியா அண்ணாத்த....

நாகை சிவா said...

சூடானில் சில பிரச்சனைகள் கண்ணன், நாகைக்கு இந்த மாதத்தில் செல்லுகின்றேன்.

Syam said...

பங்காளி வெல்கம் பேக்...வந்த வேகத்துல குறள் எல்லாம் சொல்லி அசத்திட்ட... :-)

Syam said...

//வளர்த்த கடா முட்ட வந்த அதை அறுத்து பிரியாணி போடுவதுதான் சரி //

அதை எல்லாம் முட்ட வர வரைக்கும் வெயிட் பண்ணாம முட்டனும்னு நினைக்கும் போதே பிரியாணி போட்டுறனும் :-)

rv said...

ஹூம்..

பங்களாதேஷிடம் நன்றி பற்றி வள்ளுவர் சொன்னதெல்லாம் சொல்லலாம்னு சொல்றீங்களா?

என்னவோ

//நாகைக்கு இந்த மாதத்தில் செல்லுகின்றேன்.

//
சூடாங்கொண்டானே! (சூடான் கொண்டான் தான்.. சேர்ந்திருச்சு.. வேற எதுனாச்சும் அர்த்தம் பண்ணிக்காதீங்கப்பு!) ஊருக்கு வருகையில் ஒரு மயில் தட்டிவிடுங்கள்!

Geetha Sambasivam said...

நல்லா இருங்க, வாழ்த்துக்கள்.