இன்று என்ன நாள், பொன் எழுத்துகளால் சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட நாள். மனிதர் குல மாணிக்கம் நம் மண்ணில் பல பல வருடங்களுக்கு முன்பு அவதரித்த நாள். தமிழ் வலையுலகை எல்லாம் பெருமைப்பட வைத்த சிங்கம். மாபெரும் கர்மவீரன். யார் அந்த மாமனிதன் என்பதை கண்டுப்பிடித்தீர்களா இல்லையா? இன்னுமா கண்டுபிடிக்கவில்லை.என்ன போங்க நீங்க?
சரி மேலும் சில குறிப்புகள் கொடுகின்றேன் முயற்சி செய்து பாருங்கள்.
"தமிழ் வலையுலகிலே முதன் முதலாக தனக்கு என ரசிகர் மன்றம் கண்டு வெற்றி வேந்தன்."
"கவுஜ் அவருக்கு பிடிக்காது என்றாலும் கவுஜ் படைப்பதில் அவர் ஒரு படையப்பா." அவர் எழுதிய கவுஜ்ல ஒன்னு இங்க சாம்பிளுக்கு
சரி மேலும் சில குறிப்புகள் கொடுகின்றேன் முயற்சி செய்து பாருங்கள்.
"தமிழ் வலையுலகிலே முதன் முதலாக தனக்கு என ரசிகர் மன்றம் கண்டு வெற்றி வேந்தன்."
"கவுஜ் அவருக்கு பிடிக்காது என்றாலும் கவுஜ் படைப்பதில் அவர் ஒரு படையப்பா." அவர் எழுதிய கவுஜ்ல ஒன்னு இங்க சாம்பிளுக்கு
" பார்த்திரு.
காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!"
"அனைத்து ஆப்புகளை சில வாரங்களுக்கு தோளில் தாங்கிய தியாக செம்மல்"
இன்னுமா கண்டுபிடிக்கவில்லை. சரி அவரின் பட்டப்பெயர்களை சொல்கின்றேன். அப்பவாது தெரியுதா என்று பாருங்கள்.
"பின்னூட்ட புயல்"
"வெண்பா வேந்தன்"
"புரோட்டா பாவலர்"
"அறுசுவை தமிழன்"
"கடமை கண்ணாயிரம்"
"இலவச நடமாடும் இலக்கியம்"
போதும் அவர் வாங்கிய பட்டப்பெயர்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நம்ம பாலைய்யா போல "இன்று ஒரு நாள் போதுமா? இன்று ஒரு நாள் போதுமா? அவர் வாங்கிய பட்டங்களை எல்லாம் சொல்ல இன்று ஒரு நாள் போதுமா? என்று பாட ஆரம்பிக்க வேண்டியது தான். நமக்கு வேற குரல் வளம் அம்புட்டு நல்லா இருக்காது. அதனால அத விட்டு விடுவோம்.
சரி அவருடைய படத்தை காட்டுறேன். அதை பார்த்தாவது கண்டுபிடிச்சு அவருக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவரே தான்!!!
இப்ப தான் உங்களுக்கு ஒரு சவால். இவரின் வயதை சரியாக கணித்துக் கூற வேண்டும். சரியாக சொல்வர்கள் பதிவிற்கு சே.. வீட்டிற்கு வந்து இலவசமாக அவர்களின் தோட்டங்களை கொத்தி தரப்படும். ஒரு சின்ன க்ளு அவர் இன்னும் 60 வயதை கடக்கவில்லை.
இவர் பிறந்த சாதனை திருநாளில் பிறந்த பெருமை அடைந்த மற்றவர்கள்
http://www.nndb.com/lists/751/000106433/
164 comments:
தலைவா!
மற்றவர்கள் சொல்வதற்கு முன்பு நான் கூறி விடுகின்றேன்.
இந்த உலகம் நிலைத்து இருக்கும் வரை நீயும் நிலைத்து இருக்க வேண்டும். உன் புகழ் அந்த வானை கடந்து பிற கிரகரங்களுக்கும் பரவ வேண்டும். உன்னை வாழ்த்த வயது இல்லாத காரணத்தால் உன் பொற் பாதங்களை தொட்டு வணங்கி கொள்கின்றேன்.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
ஆங் தலைவா, காலுக்கு நீ ஏதும் செண்ட் அடிப்பது இல்லையா. இந்த வீச்சு வீசுது.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள்" நம்ம தலைவருக்கு தானுங்கோ.
Happy birth day Free kothanar :))
இளாவின் "மணக்கும்" பிறந்த நாள் வாழ்த்துகளைத் தொடர்ந்து, நானும் வாழ்த்துகிறேன்!
"பிறந்தநாள் வாழ்த்துகள்"
இளாவின்...மன்னிக்கவும்,,,,நாகை.சிவாவின் மணக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தொடர்ந்து, நானும் வாழ்த்துகிறேன்!
"பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
கொத்ஸ்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
சிவா,
அனைவருக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்தியதற்காக மிக்க நன்றி
இலவசக்கொத்தனார்
வயது - 36
பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ன ஒரு 33/34 இருக்குமா? நம்மாளூக்கு
ஏம்ப்பா நம்ம கொத்ஸ்க்குப் பிறந்தநாளா?
பளிச்சுன்னு தேங்காய் ஒடைச்சதைப் போலச் சொல்லாம, காலையிலே இப்படி ''சிந்திக்க' வச்சிட்டீரே!
கொத்ஸ்,
பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.
கொத்சுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
பேரன்பிற்குப் பாத்திரமான மூதறிஞரே,மொழி ஞாயிறே, புரோட்டா வித்தகரே!
ஐயா வாழ்க நீவிர்! வளர்க நிம் கொற்றம்!! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தோளுக்கு மிஞ்சின பையன் இருக்கான் உங்களுக்கு...என்ன குத்து மதிப்பா ஒரு நாப்பத்தி சொச்சம் இருக்குமா?
:)
//என்ன மாதிரி பெரிய ஆளுங்க பிறந்த தினமும் அது தான்:)//
வேதா! தங்களுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நேற்றைய தினம் இனிதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
நேத்து ஜெயா டிவி பாத்து தெரிஞ்சிக்கிட்டது ஆகஸ்டு மாசம் 21 ஆம் தேதி பிறந்த இன்னொரு பிரபலம் கம்யூனிஸ்டு தலைவர் "தோழர் ஜீவா"
அன்பு நண்பர் இலவசக் கொத்தனாருக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
(வாழ்த்தெல்லாம் சொல்லியாச்சு! டிரீட் எங்கே எப்போ?வழக்கம் போல கரும்பு ஜீஸ் தானா?)
அனைவருக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்தி புலிப்பாண்டி நாகை சிவா விற்க்கு நன்றி!
veda said...
//என்ன மாதிரி பெரிய ஆளுங்க பிறந்த தினமும் அது தான்:) //
வேதா அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புடன்...
சரவணன்.
கொத்ஸூ.. நேத்து அரட்டை அடிச்ச போதும் சொல்லலியே!!! பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எங்க பாட்டி சொல்வாங்க, 40க்குப் பின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு வயசு குறையுமாம்.. அந்த வகையில் கொத்ஸ், உங்க வயசு, சரியா.. -5 கரீகிட்டா? ;)
தானைத் தலைவரின் (2*6*6/3/1.5+8௭*6/2.25*5.5- 9/.0001*6.21) பிறந்த நாளுக்கு வாழ்த்தி தனிப் பதிவு கண்ட பாசக்காரப் புலிக்குட்டிக்கு எம் மனமார்ந்த நன்றிகள்.
இவண்
தேவ்
அகில உலக பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவ்சங்களின் இமயம் அறுசுவைத் தமிழன் இலவசக்கொத்தனார் ரசிகர்கள் தலைமை மன்றம் சென்னை.
தலைவரின் பிறந்த நாளில் ஏழைப் பதிவர்களுக்கு தலைவரின் கனவுத் திட்டமான இலவசப் பின்னூட்டத் திட்டத்தின் படி இலவசப் பின்னூட்டங்கள் அள்ளி அளிக்குமாறு தலைவரின் அன்பு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்
கொத்தனாருக்கும் வேதவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
"கொத்தனார்" - பெயர்க்காரணம்?
//எங்க பாட்டி சொல்வாங்க, 40க்குப் பின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு வயசு குறையுமாம்..//
அப்படியா பொன்ஸ்? அவங்க வயசு என்ன அப்ப? :-)
HAppy Birathday Free Mason. Many more happy returns of the day.
வாழ வாழ்த்துக்கள்!
கொத்தஸை வாழ்த்திய இளா, மகேந்திரன், எஸ்.கே, வெட்டி பாலாஜி, கோவி கண்ணன் ஆகியோர்களூக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் அவரின் ஆசிர்வாதம் என்றும் உண்டு.
//இலவசக்கொத்தனார்
வயது - 36 //
யாருப்பா இந்த அனாமி?
யாருக்காக இருந்தாலும் சரி, உங்க கணிப்பு தப்பு. இன்னும் அதிகமாவே யோசிங்க. :)
//பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ன ஒரு 33/34 இருக்குமா? நம்மாளூக்கு//
சிவா அண்ணன், நீங்க தான் சொல்லனும். எங்களயே திருப்பி கேள்வி கேட்க கூடாது. நீங்க வேற நேரா பாத்து இருக்கீங்க. அப்படி இருந்தும் இவ்வளவு குறைத்து கணிப்பதின் மர்மம் என்ன?
//பளிச்சுன்னு தேங்காய் ஒடைச்சதைப் போலச் சொல்லாம, காலையிலே இப்படி ''சிந்திக்க' வச்சிட்டீரே!//
ஆகா துளசி, நீங்க சிந்திக்கும் அளவுக்கு நம்ம போஸ்ட் இருந்துச்சா?
நீங்க டீச்சர், உங்க மாணவனின் பிறந்த நாளை தெரிந்து வைத்து இருந்து முதலில் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும்.
//என்ன மாதிரி பெரிய ஆளுங்க பிறந்த தினமும் அது தான்:)//
ஆகா வேதா உங்களுக்கும் நேற்று தான் பிறந்த நாளா? முன்னாடியே சொல்லி இருந்தால் உங்களுக்கு ஒரு தனி போஸ்ட் போட்டு இருக்கலாம். சரி அடுத்த வருசம் பாத்துக்கலாம்.
பெரிய ஆளுனு சொன்னீங்களா, எவ்வளவு உயரம் நீங்க?
//பேரன்பிற்குப் பாத்திரமான மூதறிஞரே,மொழி ஞாயிறே, புரோட்டா வித்தகரே!
ஐயா வாழ்க நீவிர்! வளர்க நிம் கொற்றம்!! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.//
ஆகா, அவரின் பட்டங்களின் தொடர்ச்சியா?
வழிமொழிகின்றேன்!!!
// தோளுக்கு மிஞ்சின பையன் இருக்கான் உங்களுக்கு...என்ன குத்து மதிப்பா ஒரு நாப்பத்தி சொச்சம் இருக்குமா?//
இருக்கும் இருக்கும்
//(வாழ்த்தெல்லாம் சொல்லியாச்சு! டிரீட் எங்கே எப்போ?வழக்கம் போல கரும்பு ஜீஸ் தானா?)//
அட என்ன சரவணா இன்னும் நீ கரும்பு ஜீஸ்லே இருக்க. கொத்துஸ் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கொத்து புரோட்டா......
//கொத்ஸூ.. நேத்து அரட்டை அடிச்ச போதும் சொல்லலியே!!! பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எங்க பாட்டி சொல்வாங்க, 40க்குப் பின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு வயசு குறையுமாம்.. அந்த வகையில் கொத்ஸ், உங்க வயசு, சரியா.. -5 கரீகிட்டா? ;) //
அது எப்படிங்க பக்கத்தில் வர்காந்து கேட்ட மாதிரி அப்படியே சொல்லுறீங்க. நேற்று இவர் இதையே தான் சொன்னார், இளமை திரும்புதாம் அதுனால் அவர் வயசு இப்ப ரிவர்ஸ்ல போயிகிட்டு இருக்குனு. அது - போச்சா என்னனு எனக்கு தெரியாது. நீங்க அவர தான் கேட்கனும்.
//தானைத் தலைவரின் (2*6*6/3/1.5+8௭*6/2.25*5.5- 9/.0001*6.21) பிறந்த நாளுக்கு வாழ்த்தி தனிப் பதிவு கண்ட பாசக்காரப் புலிக்குட்டிக்கு எம் மனமார்ந்த நன்றிகள்.
இவண்
தேவ்
அகில உலக பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவ்சங்களின் இமயம் அறுசுவைத் தமிழன் இலவசக்கொத்தனார் ரசிகர்கள் தலைமை மன்றம் சென்னை. //
எல்லாம் உன்னால தான், நீ மறந்துட்டு போயிட்ட, அவர் மனசு உடைந்து போயி ஒரமாக வர்கார்ந்துட்டார். அதை காண பொருக்காம தான் இந்த பதிவே!
//கொத்தனாருக்கும் வேதவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
"கொத்தனார்" - பெயர்க்காரணம்? //
என்னய்யா ஹமீது, இப்படி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்பி விட்டாய். போய் சங்க பக்கங்களை புரட்டி பாரு. அவரின் வீர வரலாறுகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உள்ளது.
//என்னய்யா ஹமீது, இப்படி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்பி விட்டாய். போய் சங்க பக்கங்களை புரட்டி பாரு. அவரின் வீர வரலாறுகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உள்ளது. //
அடப்போய்யா.. இத வச்சு பதில் சொல்ல, அதுக்கு நாலு பேரு விளக்கம் கேக்க / விவாதம் பன்ன .. அப்படின்னு கொண்டு போவியா... அத விட்டுட்டு...
//HAppy Birathday Free Mason. Many more happy returns of the day. //
ஏனுங்க கீதா இப்படி பீட்டர் விட்டா எப்படி. சரி நீங்க வாழ்த்து தான் சொல்லுறீங்க என்று எடுத்துக் கொள்கின்றேன்.
வேதாவை கண்டுக்காம வீட்டீங்க. உங்க சிஷ்யை மேல அப்படி என்ன கோபம் உங்களுக்கு. உங்க மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் கண்டிப்பாக அவங்களுக்கு தேவை.
வேதா நான் சொன்னது சரி தானே
//எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி:) //
ஆமாங்க எல்லாருக்கும் நன்றிங்க. நீங்களும் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க
//வாழ வாழ்த்துக்கள்! //
வாங்க ஜி.ஜி. உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி
:)
//அடப்போய்யா.. இத வச்சு பதில் சொல்ல, அதுக்கு நாலு பேரு விளக்கம் கேக்க / விவாதம் பன்ன .. அப்படின்னு கொண்டு போவியா... அத விட்டுட்டு... //
என்ன பண்ணுறது. எனக்கு அம்புட்டு விபரம் பத்தாது. ;(
//என்ன பண்ணுறது. எனக்கு அம்புட்டு விபரம் பத்தாது. ;( //
ம்ஹும்.. இந்த தன்னடக்கம்???? ஏதோ வில்லங்கம் பன்னப்போரன்னு தெரியுது...நான் இந்த ஆட்டத்துக்கு வரல.. பை பை...அப்புரம் பாக்கலாம்..
யார் மறந்தா.. இது அபாண்டமானக் குற்றச்சாட்டு.. நேற்று தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் தலைமை மன்றம் சார்பாக ரத்த தானம் செய்து விட்டு இரவு முழுக்க காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை த்லைவரின் போஸ்ட்டர்களை ஓட்டி விட்டு ஓடோடி வந்து ஆன்லைனில் நான் வாழ்த்துச் சொன்னால் வசைப் பாடுகிறாயே இது நியாமா?
தலைவருக்கு என் மனம் தெரியும் ( இப்படி எதையாவது சொல்ல வேண்டியிருக்கு என்னப் பண்ண?)
//ம்ஹும்.. இந்த தன்னடக்கம்???? ஏதோ வில்லங்கம் பன்னப்போரன்னு தெரியுது...நான் இந்த ஆட்டத்துக்கு வரல.. பை பை...அப்புரம் பாக்கலாம்.. //
என்ன நீ நம்பவே கூடாது என்று முடிவு எடுத்த விட்டாய். அதுக்கு அப்புறம் நான் என்ன பண்ணுறது.
:(
//நான் வாழ்த்துச் சொன்னால் வசைப் பாடுகிறாயே இது நியாமா?//
நியாயம் இல்ல தான். இந்த பதிவு நீ போட்டு இருக்க வேண்டும். மிஸ் பண்ணிட்ட.
//தலைவருக்கு என் மனம் தெரியும் ( இப்படி எதையாவது சொல்ல வேண்டியிருக்கு என்னப் பண்ண?) //
நல்லாவே சமாளிக்குற அப்பு. தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே.
கொத்ஸ்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
நம்ப ஊர் காரரு அவரு! அதனால வழக்கம் போல எல்லாருக்கும் டிரீட் அல்வா தான் குடுப்பாரு! ;)
////கொத்ஸூ.. நேத்து அரட்டை அடிச்ச போதும் சொல்லலியே!!! பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எங்க பாட்டி சொல்வாங்க, 40க்குப் பின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு வயசு குறையுமாம்.. அந்த வகையில் கொத்ஸ், உங்க வயசு, சரியா.. -5 கரீகிட்டா? ;) //
அது எப்படிங்க பக்கத்தில் வர்காந்து கேட்ட மாதிரி அப்படியே சொல்லுறீங்க. நேற்று இவர் இதையே தான் சொன்னார், இளமை திரும்புதாம் அதுனால் அவர் வயசு இப்ப ரிவர்ஸ்ல போயிகிட்டு இருக்குனு. அது - போச்சா என்னனு எனக்கு தெரியாது. நீங்க அவர தான் கேட்கனும்.//
சிவா, இன்னாபா இதுல உள்குத்து தெரீலியா?!! நாப்பதுக்கப்பால ரிவர்ஸுல மைனஸ் அஞ்சு வராங்காட்டி, ஒரிஜினல் ஏஜு இன்னாது? கண்டுபிடி நைனா..
//அப்படியா பொன்ஸ்? அவங்க வயசு என்ன அப்ப? :-) //
மனதின் ஓசை, பாட்டி வயசு, - 36.8 ஓகேவா?
//நேற்று தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் தலைமை மன்றம் சார்பாக ரத்த தானம் செய்து விட்டு //
என்னைக் கூட நேற்று ஒரு கொசு கடித்தது.. நான் கூட ரத்த தானம் செய்தேன்..
தானைத் தலைவர் தேவின் ஆசைப்படி, இலவசப் பின்னூட்ட திட்டத்தின் கீழ் நாகை சிவாவின் இந்தப் பதிவுக்கு நான் இடும் நாலாவது பின்னூட்டம்
ஷீக்ரமேவ நூறு ப்ராப்தி ரஸ்து..
ஏலேய் புலி,
இதெல்லாம் மொதல்ல சொல்லாபிடாதா... அவருக்கு பெசலா ஜிகர்தண்டா போட்டு அனுப்பிருக்கலாமே....:-))))
கொத்து தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//இதெல்லாம் மொதல்ல சொல்லாபிடாதா... //
இதெல்லாம் நீ மொதல்லயே கேட்க கூடாதா?????
//அவருக்கு பெசலா ஜிகர்தண்டா போட்டு அனுப்பிருக்கலாமே....:-))//
யாரு அவருக்கு ஜிகர்தண்டா வா.... அவரு ஊரில் இருக்கும் எல்லாரும் ஜில் ஜில் ஜிகர்தண்டா போட்டு கொடுத்துக் கிட்டு இருக்காரு. வேற ஏதாவது அனுப்பு.
//கொத்து தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//
யோவ் அவரு தாத்தாவிற்கு நேற்று பிறந்த நாள் கிடையாதுய்யா. கொத்துஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா அவங்க தாத்தாவுக்கு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க. இது நல்லாவா இருக்கு.
:)
//சிவா, இன்னாபா இதுல உள்குத்து தெரீலியா?!! நாப்பதுக்கப்பால ரிவர்ஸுல மைனஸ் அஞ்சு வராங்காட்டி, ஒரிஜினல் ஏஜு இன்னாது? கண்டுபிடி நைனா.. //
பொன்ஸ்க்கா,
நான் கண்டுபிடிச்சிட்டேன்...
//நம்ப ஊர் காரரு அவரு! அதனால வழக்கம் போல எல்லாருக்கும் டிரீட் அல்வா தான் குடுப்பாரு! ;) //
கொத்துஸ் நீங்களும் தொல்லை தானா சீ சீ நெல்லை தானா?
////அப்படியா பொன்ஸ்? அவங்க வயசு என்ன அப்ப? :-) //
மனதின் ஓசை, பாட்டி வயசு, - 36.8 ஓகேவா? //
என்னய்யா இது அநியாயமா இருக்கு
உங்க பாட்டிக்கு இன்னும் + ல தான் வயசு. எங்க கொத்துஸ்க்கு மட்டும் - சா. இதை இங்கு கேட்பாரே கிடையாதா?
என்னாத்துக்கு தேவை இல்லாம வயசு ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு... 45 க்கு மேல போனா யாரும் வயச சொல்ல விரும்ப மாட்டாங்க... :-)
கொத்ஸ் பிளேட்டட் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)
கொள்கை வேந்தர்
இலவச இமயம் கொத்ஸ்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
நல்லா இருங்க..நல்லாவே இருங்க :)
//யாரு அவருக்கு ஜிகர்தண்டா வா.... அவரு ஊரில் இருக்கும் எல்லாரும் ஜில் ஜில் ஜிகர்தண்டா போட்டு கொடுத்துக் கிட்டு இருக்காரு. வேற ஏதாவது அனுப்பு.//
புலி,
ஜிகர்தண்டா மதுரையிலே ரொம்ப பேமஸ்... அதுனாலதான் அப்பிடி சொன்னேன். அது அவருக்கே தெரியும், உனக்கு வேணாமின்னா அவருக்கிட்டே கேட்டுப்பாரு ஆமான்னு சொல்லுவார்.
ஹீக்கும் நீ வேற குடுன்னு சொல்லிறீயக்கும்..
சிவா, உங்க கண்ணுக்கு மைனஸே தெரியாதா?!! அநியாயத்துக்குப் பாஸிடிவ் அப்ரோச் தல...
அப்புறம், அந்த ஆசீர்வாதம் உங்க கமென்ட்ஸுக்கு.. கொத்ஸுக்கு இல்லை ;)
//பொன்ஸ்க்கா,
நான் கண்டுபிடிச்சிட்டேன்... //
கண்டுபிடிச்சிட்டேன் சொன்னா... பதில் சொல்லுய்யா......
அது சரியா தப்பானு நாங்க சொல்லுறோம்
//யோவ் அவரு தாத்தாவிற்கு நேற்று பிறந்த நாள் கிடையாதுய்யா. கொத்துஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா அவங்க தாத்தாவுக்கு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க. இது நல்லாவா இருக்கு.
:) //
அப்பா புலிச்சாமி,
இப்பிடியெல்லாம் அந்த தாத்தாவை ஐஸ் வைக்கமுடியாது... எப்பிடி இருந்தாலும் உண்மை உண்மைதான்....
:-)
//பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ன ஒரு 33/34 இருக்குமா? நம்மாளூக்கு//
சிவா அண்ணன், நீங்க தான் சொல்லனும். எங்களயே திருப்பி கேள்வி கேட்க கூடாது. நீங்க வேற நேரா பாத்து இருக்கீங்க. அப்படி இருந்தும் இவ்வளவு குறைத்து கணிப்பதின் மர்மம் என்ன?//
இந்த மாதிரி பெரியவங்களை கேள்விக் கேட்டு நோகடிக்க கூடாது. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு அவர் வயதை குறைத்து சொல்லி பரஸ்பர ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன்...ஹி..ஹி..
எங்கே நம்ம ஹீரோ லாஸ்வேகாஸ்லே ப்ளாக் ஜாக் ஆடிகிட்டு இருப்பார் என நினைக்கிறேன்
//என்னைக் கூட நேற்று ஒரு கொசு கடித்தது.. நான் கூட ரத்த தானம் செய்தேன்.. //
பொன்ஸ் வேணாம் இந்த கொசு மேட்டர ஆரம்பிக்காதீங்க. அப்புறம் நானும் தல கைப்பூ பண்ணின ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட வேண்டியது இருக்கும். :)
இலவச பின்னூட்ட திட்டம் ஒரு பக்கம் இருக்க, பங்கு நமக்கு நாமே திட்டம் வேற அமல்ல இருக்கும் போல இருக்கு :-)
அந்த அனானி வேற யாரும் இல்ல கொத்ஸ் தான் :-)
//இலவச பின்னூட்ட திட்டம் ஒரு பக்கம் இருக்க, பங்கு நமக்கு நாமே திட்டம் வேற அமல்ல இருக்கும் போல இருக்கு :-) //
அது எல்லாம் கிடையாது பங்காளி. பின்னூட்டங்களை மீண்டும் ஒரு முறை நல்லா படித்து பாரு. நாங்க எல்லாம் யோக்கினுங்க.
//அந்த அனானி வேற யாரும் இல்ல கொத்ஸ் தான் :-) //
சே...சே....,அவரும் யோக்கியன் தான்ய்யா. நம்பு பங்காளி
//இந்த மாதிரி பெரியவங்களை கேள்விக் கேட்டு நோகடிக்க கூடாது. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு அவர் வயதை குறைத்து சொல்லி பரஸ்பர ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன்...ஹி..ஹி..//
நீங்க சொல்லுறது சரி தான் அண்ணாத்த. பெரியவர் மனசு நோகடிப்பது தவறு தான். கொத்துஸ் என்னை மட்டும் மன்னியுங்கள். மற்றவர்களை விடாதீங்க
//இப்பிடியெல்லாம் அந்த தாத்தாவை ஐஸ் வைக்கமுடியாது... எப்பிடி இருந்தாலும் உண்மை உண்மைதான்..//
உண்மை என்னிக்குமே உண்மையாக இருக்காது அது தெரியுமா உனக்கு.
திரும்பவும் சொல்லுறேன் கொத்துஸ்சின் தாத்தாவை ஐஸ் வைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது
//சிவா, உங்க கண்ணுக்கு மைனஸே தெரியாதா?!! அநியாயத்துக்குப் பாஸிடிவ் அப்ரோச் தல... //
ஹிஹி ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு அதான். மறுபடியும் ஹிஹி...
//அப்புறம், அந்த ஆசீர்வாதம் உங்க கமென்ட்ஸுக்கு..//
ஹிஹி தாங்கஸ்
// கொத்ஸுக்கு இல்லை ;) //
ஒவர் டூ கொத்துஸ்
//உண்மை என்னிக்குமே உண்மையாக இருக்காது அது தெரியுமா உனக்கு.
திரும்பவும் சொல்லுறேன் கொத்துஸ்சின் தாத்தாவை ஐஸ் வைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது //
நீ எதையும் ஏத்துக்க மாட்டே போலிருக்கு சரி போ....
பிறந்தநாளுன்னா அவங்களுக்கு நீதான்ப்பா கிப்ட் வாங்கிதரணும்... ஆனா நீ பண்ணுற இந்த தொண்டு'ல அவரு உனக்கு எதானச்சும் தருவார் போ.... :-)))))
//என்னாத்துக்கு தேவை இல்லாம வயசு ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு... 45 க்கு மேல போனா யாரும் வயச சொல்ல விரும்ப மாட்டாங்க... :-)//
அப்படியா பங்காளி !!!!!!!!
சரி உன் வயசு என்ன.... ???
//ஜிகர்தண்டா மதுரையிலே ரொம்ப பேமஸ்... அதுனாலதான் அப்பிடி சொன்னேன். அது அவருக்கே தெரியும், உனக்கு வேணாமின்னா அவருக்கிட்டே கேட்டுப்பாரு ஆமான்னு சொல்லுவார்.//
ஏனப்பா நாங்க முன்ன பின்ன ஜிகர்தண்டா குடிக்காத மாதிரி சொல்லுற. நாங்களும் மதுரைக்கு வந்து இருக்கோம். என்னா ரொம்ப பேமஸ், அவருக்கிட்ட ஜிகர்தண்டா பிடிக்குமா லஸி பிடிக்குமா என்று நீயே கேட்டு பாரு.
எனக்கு ஜிகர்தண்டா எல்லாம் வேணாம். உன்கிட்ட ஏற்கனவே சொன்ன மாதிரி சிம்பிளா, அடக்கமா, மல்லி வச்சு... அதே அதே தான்.
//எனக்கு ஜிகர்தண்டா எல்லாம் வேணாம். உன்கிட்ட ஏற்கனவே சொன்ன மாதிரி சிம்பிளா, அடக்கமா, மல்லி வச்சு... அதே அதே தான். //
அடபாவி.... அவிங்க காதில விழுத்துச்சுன்னு வச்சுக்கோ.... அவ்வளவுதான் அப்புறம் உனக்கு லக்'தான் போ.....!
என்னானா இம்பூட்டு அழகா ஒரு புலிக்குட்டி கிடைக்கிதுன்னு தூக்கிட்டு போயிருவாளுக...சாக்கிரதை ராசா....
//பின்னூட்டங்களை மீண்டும் ஒரு முறை நல்லா படித்து பாரு//
பாத்தேன் பாத்தேன் முதல் பின்னுட்டம் யாருதாம் :-)
//சரி உன் வயசு என்ன.... ???
//
நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு அதுதான் உன் புரபொய்ல்ல இருக்கே :-)
//நீ எதையும் ஏத்துக்க மாட்டே போலிருக்கு சரி போ....//
ஏத்துக்க மாட்டேனும் எப்ப சொன்னேன்?
//பிறந்தநாளுன்னா அவங்களுக்கு நீதான்ப்பா கிப்ட் வாங்கிதரணும்... ஆனா நீ பண்ணுற இந்த தொண்டு'ல அவரு உனக்கு எதானச்சும் தருவார் போ.... :-))))) //
நாங்கள் கிடைத்தே அவருக்கு கிப்ட் தான். எதாச்சும் தருவாரா, இப்ப பட்டய கிளப்பிட்டு வருவார் பாரு. நீ தாண்டி முதல் போணியே.:)
//பாத்தேன் பாத்தேன் முதல் பின்னுட்டம் யாருதாம் :-)//
பங்கு, முதல் பின்னூட்டம் முதல் வாழ்த்து சொல்லனும் என்ற அவரசத்தில் போட்டது. அதை தவறாக எடுத்துக் கொள்ளாதே. இந்த பதிவில் ஒன்றுக்கு ஒன்று என்ற விதியை கூட நான் கடைப்பிடிக்கவில்லை. மறுபடியும் நீ வேணும் என்றால் பாரு.
//நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு அதுதான் உன் புரபொய்ல்ல இருக்கே :-) //
பொய் சொல்லு, நான் வேண்டாம் என்று சொல்லல. கொஞ்சமாச்சும் பொருந்துவது மாதிரி சொல்லு என்ன?
//பாத்தேன் பாத்தேன் முதல் பின்னுட்டம் யாருதாம் :-) //
என்னா ஸ்யாம் இது சின்னபுள்ளதனமா... உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு ஒரு பின்னூட்ட களவாணிதனம் கூட பண்ணமுடியாது போலிருக்கு.... :-)))))
என்னா புலி நான் சொல்லுறது.
//என்னானா இம்பூட்டு அழகா ஒரு புலிக்குட்டி கிடைக்கிதுன்னு தூக்கிட்டு போயிருவாளுக...சாக்கிரதை ராசா.... //
ஹிஹி
அது தானே ராசா நானும் வேண்டுவது. பாண்டி எங்கன இருக்க ஒடி வா. மதுரைக்கு இரண்டு டிக்கெட் போடு.....
//கொள்கை வேந்தர்
இலவச இமயம் கொத்ஸ்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
நல்லா இருங்க..நல்லாவே இருங்க :)
ஏன் கப்பி, இப்படி ஒரு பாசம் உனக்கு கொத்துஸ் மேல. அவர் என்றும் நல்லா இருக்கனும். அப்ப தானே நாம நல்லா இருக்க முடியும். :)
//நாங்கள் கிடைத்தே அவருக்கு கிப்ட் தான். எதாச்சும் தருவாரா, இப்ப பட்டய கிளப்பிட்டு வருவார் பாரு. நீ தாண்டி முதல் போணியே.:) //
நினைச்சேன் புலி நீ இத்தனை நேரம் செவனேன்னு உன்னோட வாலை சுருட்டிக்கிட்டு இருக்கீயேன்னு..
ஆரம்பிச்சிட்டியே உன்னோட ரவுசு'ஆ... போணி.. பாணின்னு படுத்திறியே....
பதிவு போட்டு ஊரைக் கூட்டி இப்படி ஆப்பு அடிப்பதற்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள், நாகை சிவா அவர்களே!
இளா வாழ்த்துக்களுக்கு நன்றி.
Thanks for your wishes Mahendran.
எஸ்.கே. அவர்களே, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வெ.பை, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
//என்னா ஸ்யாம் இது சின்னபுள்ளதனமா... உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு ஒரு பின்னூட்ட களவாணிதனம் கூட பண்ணமுடியாது போலிருக்கு.... என்னா புலி நான் சொல்லுறது. //
ராம், நீ என்ன சொல்ல வரேனு எனக்கு புரியல. அது என்ன பின்னூட்ட களவாணி தனம். கொஞ்சம் விளக்கமாக சொல்லேன்.
அனானி, என் வயது 36ஆஆஆஆ..... சரி, எனக்கு 36 வயசு ஆகும் போது உங்க வாழ்த்தை எடுத்துக்கறேன். அது வரை அட்வான்ஸ் அக்கவுண்டில் இருக்கட்டும். இப்போ இந்த பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுங்க.
//ஹிஹி
அது தானே ராசா நானும் வேண்டுவது. பாண்டி எங்கன இருக்க ஒடி வா. மதுரைக்கு இரண்டு டிக்கெட் போடு..... //
ஏலேய் புலி,
உனக்கு சூடான்'ல இருந்து மதுரைக்கு பஸ் இருக்கா என்னா.... இதிலே எங்கண்ணே பாண்டியை வேறே ஏமாத்த பார்க்கிறியா... பாண்டி அண்ணனுக்கு மஞ்சு இல்லாகாட்டியும் சுமோ... சாரி சுமா இருக்காங்க....
:-)))
மதுரைக்கு நீயே தனியா வந்து நாலு சாத்து வாங்கு அப்புறமா தெரியுமில்லேய் எங்க ஊருக்காரங்ய கஷ்டம் உனக்கு....
//ராம், நீ என்ன சொல்ல வரேனு எனக்கு புரியல. அது என்ன பின்னூட்ட களவாணி தனம். கொஞ்சம் விளக்கமாக சொல்லேன்//
புலி,
ஓப்பாட்டுக்கு செவனேன்னு போப்பே... இதிலே என்னா விளக்கமா சொல்லனும்... இல்லன்னாலும் யாருக்கும் தெரியாது பாரு.....
//பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ன ஒரு 33/34 இருக்குமா?//
கால்கரியார் நீங்களுமா? என்னதான் என் இளமையைப் பார்த்து உங்களுக்கு கொஞ்சம் பொறாமையா இருந்தாலும் அதை இப்படியா சொல்லிப் பழிவாங்கறது?
டீச்சர் உங்களை 'சிந்திக்க' வைத்த நாகையாருக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போடட்டுமா? :)
உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோவியாரே, வாழ்த்துக்களுக்கு நன்றி.
//என்ன மாதிரி பெரிய ஆளுங்க பிறந்த தினமும் அது தான்:)//
வேதா நீங்களுமா? வெரி குட் வெரி குட். உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்குன் என் வாழ்த்துக்கள்.
//நினைச்சேன் புலி நீ இத்தனை நேரம் செவனேன்னு உன்னோட வாலை சுருட்டிக்கிட்டு இருக்கீயேன்னு..
ஆரம்பிச்சிட்டியே உன்னோட ரவுசு'ஆ... போணி.. பாணின்னு படுத்திறியே.... //
ராம், இப்ப பெரிய கை வந்தாச்சு. அதனால நான் வாலை சுருட்டிக்கிட்டு ஒரமா போயி வர்காருறேன்.
//மதுரைக்கு நீயே தனியா வந்து நாலு சாத்து வாங்கு அப்புறமா தெரியுமில்லேய் எங்க ஊருக்காரங்ய கஷ்டம் உனக்கு.... //
மதுர எங்களுக்கும் ஒன்னும் புதுசு இல்லப்பு. அங்கனயும் நாங்க சேட்ட செய்து இருக்கோம். நாங்க எல்லாம் சிங்கம் அப்பு சிங்கம்.
இந்த மைதானத்துக்கு எதிரில் ஒரு பாலிடெக்னிக் இருக்கே. :)
//டீச்சர் உங்களை 'சிந்திக்க' வைத்த நாகையாருக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போடட்டுமா? :) //
வேணாங்க கொத்துஸ். தொண்டன் தான் தலைவனுக்கு பதிவு போடனும். தலைவர் இந்த அளவுக்கு எல்லாம் இறங்கி வர வேண்டாம். அதுவும் இல்லாம நமக்கு இந்த விளம்பரம் என்றால் கொஞ்சம் அலர்ஜி. :)
கொத்ஸ் சொல்லவே இல்ல.
பிறந்தநாள் வாழ்த்துகள்.
கடைசியா வாழ்த்து சொல்கிறேனோ
சரி பரவாயில்லை.
அடுத்த பிறந்த நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் முதலாவதா சொல்வதா எடுத்துக்கலாம்.
//வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தோளுக்கு மிஞ்சின பையன் இருக்கான் உங்களுக்கு...என்ன குத்து மதிப்பா ஒரு நாப்பத்தி சொச்சம் இருக்குமா?//
வாழ்த்த வயதில்லை. அப்படின்னா என்ன அர்த்தம், நீங்க வாழ்த்தற அளவு எனக்கு வயசாகலையா? சரி.
வணங்குகிறீங்களா? நானும் பதில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு தொளுக்கு மேல பையனா? அந்த மைக் பிடிக்கிற பையனைப் பார்த்து சொல்லறீங்களா? அவன் நம்ம பையன் இல்லீங்க.
40த்துச் சொச்சமா? நல்லா இருங்க சாமீ.
//அன்பு நண்பர் இலவசக் கொத்தனாருக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...//
ரொம்ப நன்றி சரவணன்.
//(வாழ்த்தெல்லாம் சொல்லியாச்சு! டிரீட் எங்கே எப்போ?வழக்கம் போல கரும்பு ஜீஸ் தானா?)//
வழக்கம் போல கரும்பு ஜூஸா? உமக்கு நான் எப்போ தந்தேன்? சங்கத்தையும் நம்மளையும் கன்பியூஸ் பண்ணிக்கக் கூடாது. புரியுதா?
கொத்ஸ்,
வேதா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
/./
என்னாத்துக்கு தேவை இல்லாம வயசு ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு... 45 க்கு மேல போனா யாரும் வயச சொல்ல விரும்ப மாட்டாங்க... :-)
/./
சில பேரு இன்னும் 16 னு சொல்றாங்க..:))
/./
ஆகா துளசி, நீங்க சிந்திக்கும் அளவுக்கு நம்ம போஸ்ட் இருந்துச்சா?
நீங்க டீச்சர், உங்க மாணவனின் பிறந்த நாளை தெரிந்து வைத்து இருந்து முதலில் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும்.
/./
அப்ப கொத்ஸ் வயசோட 40 வயச கூட்டுனா டீச்சர் வயசு கிடைக்குமா?
இப்படி ஒரு உள்குத்து இதுல இருக்கா???
/./
Anonymous said...
இலவசக்கொத்தனார்
வயது - 36
/./
தவறுக்கு வருந்துகிறேன்
வயது 63
(நல்லா இரு அனானி:::::))) )
எப்ப பாத்தாலும் 90 to 99 ல நிப்பாட்டிட்டு போறியே என்னாயிது????
6 அடிச்சி சதம் போடவா????
//கொத்ஸூ.. நேத்து அரட்டை அடிச்ச போதும் சொல்லலியே!!! பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. //
ஒரு பொண்ணுக் கிட்ட சொல்லக்கூடாத விஷயம் வயசுன்னு சொல்லியிருக்காங்களே. என்னாது? அது கேட்டக்கூடாத விஷயமா? சரி விடுங்க ஒரே கன்பியூசன். அது மட்டுமில்லாம நமக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காது. இந்தப் பசங்கதான் இப்படியெல்லாம் பண்ணி.....
வாழ்த்துக்களுக்கு நன்றியக்கோவ்.
//தலைவரின் பிறந்த நாளில் ஏழைப் பதிவர்களுக்கு தலைவரின் கனவுத் திட்டமான இலவசப் பின்னூட்டத் திட்டத்தின் படி //
தேவுத்தம்பி, அதான் இப்போ எல்லாரும் நல்லா கத்துக்கிட்டாங்களே. இன்னும் என்ன கனவுத் திட்டம். எல்லாம் நனவு ஆகியாச்சு. அடுத்த திட்டங்களைப் பார்க்கலாம் என்ன?
//கொத்தனாருக்கும் வேதவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
"கொத்தனார்" - பெயர்க்காரணம்?//
நன்றி மனதின் ஓசை. பெயர்க் காரணத்துக்கு நம்ம முதல் மூன்று பதிவுகளைப் பார்க்கவும். :)
//அப்படியா பொன்ஸ்? அவங்க வயசு என்ன அப்ப? :-)//
அட என்ன ம.ஒ. நீங்க. இந்த பசங்களோட சேர்ந்துக்கிட்டு அப்போ என்ன வயசு, இப்போ என்ன வயசுன்னுக்கிட்டு. விடுங்க கழுத. நான் 25ன்னு சொன்னாக்கூட நம்பாத அளவுக்குப் பண்ணிட்டாங்களே.
//HAppy Birathday Free Mason. Many more happy returns of the day.//
Thanks a lot sangath thalaivali Geetha avargale.
நன்றி கௌதம்.
//எல்லாம் உன்னால தான், நீ மறந்துட்டு போயிட்ட, அவர் மனசு உடைந்து போயி ஒரமாக வர்கார்ந்துட்டார். அதை காண பொருக்காம தான் இந்த பதிவே!//
தம்பி தேவு. நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவன் நீ. உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? கவலைப்படாதே, உன்னைப் பற்றித் தப்பாய் நினைப்பவன் இல்லை இந்த இ.கொ.
இந்த மாதிரி சந்தில் சிந்து பாடும் பிரிவினை சூழ்ச்சிகளுக்கு நீ பலியாகாதே.
//கொத்ஸ்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
நம்ப ஊர் காரரு அவரு! அதனால வழக்கம் போல எல்லாருக்கும் டிரீட் அல்வா தான் குடுப்பாரு! ;)//
அல்வாதானே. குடுத்துட்டா போச்சு. என்னடா அல்வாங்கறான். ஒண்ணும் வரலையேன்னு பாக்குறவங்களுக்கு. அதாங்க அல்வா.
//ஷீக்ரமேவ நூறு ப்ராப்தி ரஸ்து..//
உங்க வாய் முஹூர்த்தம். பலிச்சிடுச்சே!!!
//இதெல்லாம் மொதல்ல சொல்லாபிடாதா... அவருக்கு பெசலா ஜிகர்தண்டா போட்டு அனுப்பிருக்கலாமே....:-))))//
இப்பவும் அனுப்புங்க. நான் வேண்டமுன்னா சொல்லறேன். தாராளமா அனுப்புங்க. :)
//கொத்து தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//
இலவசமாக் குடுக்கறதுனால நம்மளைச் சுத்தி மக்கள் தா தான்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதைக் கேட்டு நானே ஒரு தாத்தான்னு முடிவு பண்ணிட்டீங்களா? புரியாத ஆளா இருக்கீங்களே.
//கொத்துஸ் நீங்களும் தொல்லை தானா சீ சீ நெல்லை தானா?//
என்னய்யா சிவா, இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டுட்டு. நம்ம பழைய பதிவு எல்லாம் ஒண்ணு விடாம படிக்கணும். அடுத்த வாரம் டெஸ்ட் வைப்பேன். பாஸாகலை.... அப்ப இருக்குடி ஆப்பு....
//கொத்ஸ் பிளேட்டட் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)//
ஷ்யாம். வாழ்த்துக்களுக்கு நன்றி. அதென்ன பிளேட்டட்? பிலேட்டட்?
//இந்த மாதிரி பெரியவங்களை கேள்விக் கேட்டு நோகடிக்க கூடாது. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு அவர் வயதை குறைத்து சொல்லி பரஸ்பர ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன்...ஹி..ஹி..//
அதான் கால்கரி பதிவுல சொன்னதுக்குத் தானே நீர் இப்போ செஞ்சது. அடுத்த முறை பாத்துக்கறேன்.
//எங்கே நம்ம ஹீரோ லாஸ்வேகாஸ்லே ப்ளாக் ஜாக் ஆடிகிட்டு இருப்பார் என நினைக்கிறேன்//
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.....
//ராம், நீ என்ன சொல்ல வரேனு எனக்கு புரியல. அது என்ன பின்னூட்ட களவாணி தனம். கொஞ்சம் விளக்கமாக சொல்லேன்.//
அது என்னாதுப்பா என்னமோ புதுசா பேசறீங்க? என்னன்னு சொல்லிட்டுச் செய்யலாமுல்ல. நாங்களும் சேர்ந்துக்குவோமே.
Siva,
Romba late a vandhu vittaen. Ungal nanbar ukku ennoda belated birthday wishes..
//இலவச பின்னூட்ட திட்டம் ஒரு பக்கம் இருக்க, பங்கு நமக்கு நாமே திட்டம் வேற அமல்ல இருக்கும் போல இருக்கு :-)//
:-) சூப்பர் சியாம்.. அருமையான திட்டம் எல்லாம் சிவாகிட்ட இருக்கு போல.. வெரி குட்..
ஆமா இந்த "அனானிகள் ஆட்டம்" திட்டம் இங்கன இல்லயா?
//ஆமா இந்த "அனானிகள் ஆட்டம்" திட்டம் இங்கன இல்லயா? //
கிடையாது நண்பா. :)
எதுக்கு அந்த அனாமி வேசம் எல்லாம். பெயரை போட்டே போடலாமே.
//என்னய்யா சிவா, இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டுட்டு. நம்ம பழைய பதிவு எல்லாம் ஒண்ணு விடாம படிக்கணும். அடுத்த வாரம் டெஸ்ட் வைப்பேன். பாஸாகலை.... அப்ப இருக்குடி ஆப்பு.... //
உங்கள் உத்தரவுபடி செய்து விடுகின்றேன் தலைவரே!
//சில பேரு இன்னும் 16 னு சொல்றாங்க..:)) //
மின்னுல யாருமா அது?
//எப்ப பாத்தாலும் 90 to 99 ல நிப்பாட்டிட்டு போறியே என்னாயிது????//
அதான் நீ வந்துட்டில அப்புறம் என்ன சதம் தான்.
சிவா,
என்னோட சிஷ்யை என்னை விட்டுக் கொடுக்கலை பாருங்க,
@மின்னல், என்ன ரொம்பவே சூடா இருக்கீங்க? என்ன விஷயம்? வலைப்பக்கத்துக்கும் வரதில்லை. :D
@மின்னல், என்ன ரொம்பவே சூடா இருக்கீங்க? என்ன விஷயம்?
/./
எவ்வளவு ஆப்பு வாங்குனாலும் சிரிச்சிகிட்டே இருக்குறவங்க நாங்க.
நாங்க ஏன் சூடா...??
/./
வலைப்பக்கத்துக்கும் வரதில்லை. :D
/./
தப்புதான் என்ன பண்ணுறது..
இங்ககூடதான் ரெண்டு பதிவுக்கு வரல..
வலைக்குள் விழுந்தா எங்கையாவது கொண்டுபோய் விட்டு விடுகிறது...
கால் போன போக்கில் மேய்கிறேன். திரும்பிபாத்தா வேலை வந்து விடுகிறது..!!!!!!!!!
//தப்புதான் என்ன பண்ணுறது..
இங்ககூடதான் ரெண்டு பதிவுக்கு வரல//
ஊர்ஸ், நான் என்றுமே உன்ன தப்பா நினைக்க மாட்டேன். ஆனா அந்த இரண்டு பதிவையும் நீ கண்டிப்பா படிக்கனும். சொல்லிட்டேன்.
அடடே,
புலிமாதிரி பாய்ஞ்சு பதிவே போட்டுட்டீங்களா?
கொத்ஸூக்கு வாழ்த்துகள். கூடவே பிறந்த நாள் கண்ட வெண்பா வித்தகர் எங்கள் கழகக் கண்மணி ஜீவ்ஸுக்கும் வாழ்த்துகள்!
//எனக்கு ஜிகர்தண்டா எல்லாம் வேணாம். உன்கிட்ட ஏற்கனவே சொன்ன மாதிரி சிம்பிளா, அடக்கமா, மல்லி வச்சு... அதே அதே தான்//
சிம்பிளா, அடக்கமா, மல்லி வைச்சு சூடா , காரமா ஆஹா அந்த சுக்கு மல்லி காபி சூப்பர்
நம்ம கைப்பு சொன்னது கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவா அவர்களை. நம்ம வெண்பா வித்தகர் பிறந்தது வேற மாதம். ஆகஸ்ட் கிடையது. ஜீவான்னு சொன்னாலே இவர் ஞாபகம்தான் வருதா? உங்க பாசம் புல்லரிக்க வைக்குதப்பா.
//சிம்பிளா, அடக்கமா, மல்லி வைச்சு சூடா , காரமா ஆஹா அந்த சுக்கு மல்லி காபி சூப்பர் //
சிவா அண்ணன், இந்த லந்து தானே வேணாங்குறது. ஒரு வயசு பையன்கிட்ட போய் சுக்கு மல்லி காபினு
அப்புறம் நான் அழுதுடுவேன்.
//நம்ம கைப்பு சொன்னது கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவா அவர்களை. நம்ம வெண்பா வித்தகர் பிறந்தது வேற மாதம். ஆகஸ்ட் கிடையது. ஜீவான்னு சொன்னாலே இவர் ஞாபகம்தான் வருதா? உங்க பாசம் புல்லரிக்க வைக்குதப்பா. //
அவரு எதாச்சும் கட்சி பாசத்தில் சொல்லி இருப்பார். விடுங்க.
//சிம்பிளா, அடக்கமா, மல்லி வைச்சு சூடா , காரமா ஆஹா அந்த சுக்கு மல்லி காபி சூப்பர் //
எந்த கடை சுக்குமல்லி காப்பி.... தெற்குமாசி வீதி கடையா இல்ல வேற கடையா...?
சிவா..
உங்க கிட்ட நாலு கேள்வி கேக்க சொல்லி ஒரு வேலை வந்திருக்கு..
எந்த மாதிரி கேள்வி வேணும்??
//அதென்ன பிளேட்டட்? பிலேட்டட்?//
ஆரம்பிச்சுடாங்கையா ஆரம்பிச்சுடாங்க :-)
//சிவா..உங்க கிட்ட நாலு கேள்வி கேக்க சொல்லி ஒரு வேலை வந்திருக்கு..எந்த மாதிரி கேள்வி வேணும்?? //
கப்பி நாலு என்ன, நாற்பது கேள்வியாவே கேளு. கேள்வி பொறுத்து அத இங்க பதில் சொல்வதா, இல்ல தனி பதிவு போடுவது என்று முடிவு செய்கின்றேன்.
ஆனா இந்த கேள்வி கேட்கும் வேலையை செய்வதற்கு முன்னாடி அமெண்ட் சரியா பேசு. அது எல்லாம் களவாணிப்பய கூட்டம். சொல்லிட்டேன்
////சிம்பிளா, அடக்கமா, மல்லி வைச்சு சூடா , காரமா ஆஹா அந்த சுக்கு மல்லி காபி சூப்பர் //
எந்த கடை சுக்குமல்லி காப்பி.... தெற்குமாசி வீதி கடையா இல்ல வேற கடையா...? //
மதுர கார பசங்க எல்லாம் சேர்ந்துக்கிட்டு விளையாடுறீங்களா....
ராம் இந்த கேள்வி ரொம்ப முக்கியம் இப்ப இல்ல?
//சிவா..
உங்க கிட்ட நாலு கேள்வி கேக்க சொல்லி ஒரு வேலை வந்திருக்கு..
எந்த மாதிரி கேள்வி வேணும்?? //
ஏலேய் கப்பி,
நீ ஒருத்தன் போதும்.... :-)))
//கேள்வி பொறுத்து அத இங்க பதில் சொல்வதா, இல்ல தனி பதிவு போடுவது என்று முடிவு செய்கின்றேன்.
///
எந்த மாதிரி கேள்விக்கு தனி பதிவு?? எந்த மாதிரி கேள்விக்கு இங்கயே பதில்???
//இந்த கேள்வி கேட்கும் வேலையை செய்வதற்கு முன்னாடி அமெண்ட் சரியா பேசு. அது எல்லாம் களவாணிப்பய கூட்டம். சொல்லிட்டேன் //
எல்லாம் செட்டில் ஆயாச்சு ;)
//கப்பி நாலு என்ன, நாற்பது கேள்வியாவே கேளு. கேள்வி பொறுத்து அத இங்க பதில் சொல்வதா, இல்ல தனி பதிவு போடுவது என்று முடிவு செய்கின்றேன்.//
புலி ஆரம்பிச்சிட்டியா உன்னோட வேலையே.... மறுபடியும் கொசு ஆராய்ச்சியெல்லாம் பண்ணாதே...
//ஆனா இந்த கேள்வி கேட்கும் வேலையை செய்வதற்கு முன்னாடி அமெண்ட் சரியா பேசு. அது எல்லாம் களவாணிப்பய கூட்டம். சொல்லிட்டேன் //
அந்த கூட்டத்திலே நீ இருக்கேலே....
//மதுர கார பசங்க எல்லாம் சேர்ந்துக்கிட்டு விளையாடுறீங்களா....//
விளையாட்டு அது எப்பிடி இருக்கும்... கருப்பா வெள்ளையா.. உயரமா,குள்ளமா... ஆம்பிளையா.. இல்ல பொம்பளையா...:-)))
//ராம் இந்த கேள்வி ரொம்ப முக்கியம் இப்ப இல்ல? //
பின்னே உனக்கு தெரியாது புலி,
மதுரை'ல ரெண்டு மூணு பேமஸ் சுக்குமல்லி காப்பி கடை இருக்கு..! அதுதான் கேட்டு பார்க்கலாமின்னு...!
//எந்த மாதிரி கேள்விக்கு தனி பதிவு?? எந்த மாதிரி கேள்விக்கு இங்கயே பதில்???//
அது உன் கேள்வியை பொறுத்து என்று தான் முன்னமே கூறி விட்டேனே அப்புறம் என்ன மறு கேள்வி. ஒரு கேள்வி ஆச்சா? ஒகே
கப்பி: காப்பி :: ராம்:ரம்
இப்படி எல்லாம் பேசிக்கிட்டே இருங்க.
வாழ்க வளமுடன்...
//கப்பி: காப்பி :: ராம்:ரம்
இப்படி எல்லாம் பேசிக்கிட்டே இருங்க. //
கொத்ஸ்,
என்னா சொல்லவர்றீங்க புரியலேயே... எனக்கு ரம் பிடிக்காது... கப்பிக்கும் காப்பி பிடிக்காது.... :-))))
மூனாவது கேள்வி: 'வாழ்த்த வாருங்கள்', 'காலை(லெக்கு) வாருங்கள்' - இது இரண்டுக்கும் ஆறு வித்தியாசங்கள் என்ன??
கொசுறு கேள்வி: இதுக்கு இங்கயே பதிலா இல்ல தனி பதிவா??
அவர் பெயர் போட்டலே இவ்வளவா இதை அவரே போட்டிருந்தால்...... நினைக்கவே பயமாயிருக்கிறது
//என்னா சொல்லவர்றீங்க புரியலேயே... எனக்கு ரம் பிடிக்காது... கப்பிக்கும் காப்பி பிடிக்காது.... :-)))) //
ராம் உனக்கு ரம் பிடிக்காது சரி.
கப்பிக்கு காப்பி பிடிக்காதுனு எப்படி சொன்னேன். கப்பிக்கு காப்பினா உயிருப்பா.
கப்பியும் காப்பியும் அப்படினு ஒரு பதிவு போடும் ஐடியாவில் இருக்காரு நம்ம கப்பி!
வந்துட்டம்ல!
எல்லோரும் நேத்து வாழ்த்தி இருப்பாங்க! எல்லாரும் கரெக்டா வந்தாங்களான்னு பார்க்குறதுதான் என் வேலை!
அதான் லேட்டு. ஹி.ஹி..
அப்படியே பின்னூட்டப் புயலாருக்கு என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துச் சொல்லிடுங்க!
//... கப்பிக்கும் காப்பி பிடிக்காது.... //
யப்பா ராமு...தவறு திருத்திக்கோ...
//கப்பிக்கு காப்பினா உயிருப்பா.
கப்பியும் காப்பியும் அப்படினு ஒரு பதிவு போடும் ஐடியாவில் இருக்காரு நம்ம கப்பி!
//
நல்லா எடுத்து சொல்லு புலி :))
ஆழியூரான்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
//என்னா சொல்லவர்றீங்க புரியலேயே... எனக்கு ரம் பிடிக்காது... கப்பிக்கும் காப்பி பிடிக்காது.... :-))))//
ஆஹா ரம் பிடிக்காதான்னு கேட்டா, அதுவும் புரியாம ஆகரம் பிடிக்காதுன்னு சொல்லவேயில்லையேன்னு வந்து எதாவது சொல்லுவீரு.
கப்பிக்கு காப்பி பிடிக்காதுன்னு சொல்ல நீங்க யாரு? (ஒரு வேளை நீங்கதான் கப்பியா?)
//மூனாவது கேள்வி: 'வாழ்த்த வாருங்கள்', 'காலை(லெக்கு) வாருங்கள்' - இது இரண்டுக்கும் ஆறு வித்தியாசங்கள் என்ன??//
காப்பிக்கு காலை வாரினா கப்பி. காலைக் காப்பிக்கு கால்கள் வாரினா அது ஒரு கலை கப்பி.
காலை வாரினா இவ்வளவு விஷயம் இருக்கு, தலையை வாரினா?
//கொசுறு கேள்வி: இதுக்கு இங்கயே பதிலா இல்ல தனி பதிவா??//
இப்போதைக்கு பின்னூட்ட கயமைத்தனம் மட்டும் செய்யறதுனால பதில் இங்கதான். இதுவே பதிவு கயமைத்தனம் பண்ண ஆரம்பிச்சா மாறலாம்.
//அவர் பெயர் போட்டலே இவ்வளவா இதை அவரே போட்டிருந்தால்...... நினைக்கவே பயமாயிருக்கிறது//
நான் போட்டா என்ன, நம்ம சிங்கம்புலி போட்டா என்ன? எல்லாம் ஒண்ணுதான். அதான் அவர் அளவுக்கு நானும் கயமைத்தனம் பண்ணியாச்சே அப்புறம் என்ன?
//எல்லோரும் நேத்து வாழ்த்தி இருப்பாங்க! எல்லாரும் கரெக்டா வந்தாங்களான்னு பார்க்குறதுதான் என் வேலை! //
லேட்டா வந்ததுக்கு இப்படி ஒரு சாக்கா? சரி விடுங்க. வரவேண்டியவங்க எல்லாம் வந்தாச்சா? அந்த ரிப்போர்டையாவது சரியா குடுங்க. ரொம்ப இழுத்து அடிச்சீங்க, அப்புறம் உங்களுக்கு எதாவது விசாரணைக் கமிஷன் தலைவரா பதவி வந்துரப் போகுது. ஆமா.
//அப்படியே பின்னூட்டப் புயலாருக்கு என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துச் சொல்லிடுங்க!//
நானும் இங்கதானே இருக்கேன். நேராவே சொல்லலாமில்ல. இருக்கட்டும். வாழ்த்துக்களுக்கு நன்றி.
என்ன சிங்கம்புலி, உங்க பழைய ரெக்கார்டை கிராஸ் பண்ணியாச்சா இல்லையா? கொஞ்சம் சொல்லுமய்யா....
//என்ன சிங்கம்புலி, உங்க பழைய ரெக்கார்டை கிராஸ் பண்ணியாச்சா இல்லையா? கொஞ்சம் சொல்லுமய்யா.... //
ஆச்சு.... ஆச்சு.... நீங்க வந்தும் கிராஸ் ஆகாம இருக்குமா என்ன?
//நான் போட்டா என்ன, நம்ம சிங்கம்புலி போட்டா என்ன? எல்லாம் ஒண்ணுதான்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அதான் அவர் அளவுக்கு நானும் கயமைத்தனம் பண்ணியாச்சே அப்புறம் என்ன?//
:((
//'வாழ்த்த வாருங்கள்', 'காலை(லெக்கு) வாருங்கள்' - இது இரண்டுக்கும் ஆறு வித்தியாசங்கள் என்ன??//
1, லெக்கு என்பது ஆங்கில வார்த்தை
2, காலை(லெக்கு) பிராக்ட்டில் இருப்பதை எடுத்து விட்டால் காலையில் வாருங்கள் என்ற பொருள் வரும்.
3, 9 எழுத்து - 7 எழுத்து
4, முன்னது என்னது - பின்னது உன்னுது
5, நல்ல எண்ணத்துடன் வளிக்கப்பட்டது - கயவர்களின் சூழ்ச்சியால் கேட்கப்பட்டது
6, இது அன்பின் வெளிப்பாடு - கூலிக்கு மாறடிப்பது.
போதுமா கப்பி
நெக்ஸ்ட் ? ப்ளிஸ்
//கப்பிக்கு காப்பி பிடிக்காதுன்னு சொல்ல நீங்க யாரு? (ஒரு வேளை நீங்கதான் கப்பியா?)
//
இப்படி கப்பித்தனமான கேள்வி கேக்கத்தான் நாங்க இருக்கோம்ல..நீங்க கேள்வியெல்லாம் கேட்கப்படாது ;)
//காப்பிக்கு காலை வாரினா கப்பி. காலைக் காப்பிக்கு கால்கள் வாரினா அது ஒரு கலை கப்பி.
காலை வாரினா இவ்வளவு விஷயம் இருக்கு, தலையை வாரினா?
///
வித்தியாசம் கேட்டா விளக்கம் சொல்லிட்டு போயிட்டாரு :(
//5, நல்ல எண்ணத்துடன் வளிக்கப்பட்டது - கயவர்களின் சூழ்ச்சியால் கேட்கப்பட்டது
6, இது அன்பின் வெளிப்பாடு - கூலிக்கு மாறடிப்பது.//
ஏஏஏய்ய்...ஒண்டிக்கு ஒண்டி வர்றியா???
:)))))
//ஆஹா ரம் பிடிக்காதான்னு கேட்டா, அதுவும் புரியாம ஆகரம் பிடிக்காதுன்னு சொல்லவேயில்லையேன்னு வந்து எதாவது சொல்லுவீரு. //
ஹீ ஹீ அப்பிடியெல்லாம் சொல்லமாட்டேன் தாத்தா.... நம்ம ஊருக்கு வர்றெப்போ நல்ல கம்பெனி சரக்கா வாங்கிட்டு வாங்க...:-))))
//கப்பிக்கு காப்பி பிடிக்காதுன்னு சொல்ல நீங்க யாரு? (ஒரு வேளை நீங்கதான் கப்பியா?) //
சேச்சே அந்தமாதிரி கப்பிதனமெல்லாம் நான் செய்யமாட்டேன்.... :-((((
//5, நல்ல எண்ணத்துடன் வளிக்கப்பட்டது - கயவர்களின் சூழ்ச்சியால் கேட்கப்பட்டது
6, இது அன்பின் வெளிப்பாடு - கூலிக்கு மாறடிப்பது.//
ஏலேய் புலீ,
என்னா நினைச்சிட்டு இருக்கே.... கப்பி மதுரைகார பையனா கொஞ்சநாளா இருத்துருக்கான்.. என்னா சேட்டையா, வகுத்திருவோமிலே.. சாக்கிரதை...
//இப்படி கப்பித்தனமான கேள்வி கேக்கத்தான் நாங்க இருக்கோம்ல..நீங்க கேள்வியெல்லாம் கேட்கப்படாது ;) //
கப்பி, உன் பிரச்சனைய விடு, அடுத்த கேள்வி உண்டா இல்லையா.
//வித்தியாசம் கேட்டா விளக்கம் சொல்லிட்டு போயிட்டாரு :( //
அவருக்கு தெரிந்ததை அவரு சொல்லி இருக்காரு. விடு.
//ஏஏஏய்ய்...ஒண்டிக்கு ஒண்டி வர்றியா???//
என்னய்யா வித்தியாசம் கேட்டுட்டு இப்படி ஒண்டிக்கு ஒண்டி வர்றியானா என்ன அர்த்தம். ஓ இதானா அந்த நாலவது கேள்வி. என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது, வேணுமுனா நீ இங்கன வா. ஒகே எல்லா கேள்வியும் முடிச்சுச்சா ஒரு வழியா!
//என்னா நினைச்சிட்டு இருக்கே.... கப்பி மதுரைகார பையனா கொஞ்சநாளா இருத்துருக்கான்.. என்னா சேட்டையா, வகுத்திருவோமிலே.. சாக்கிரதை...
//
விடு ராமு...மன்னிச்சிருவோம் :D
//கப்பி, உன் பிரச்சனைய விடு, அடுத்த கேள்வி உண்டா இல்லையா.
//
அதான் நாலு கேட்டாச்சே..இன்னொன்னு வேணுமா??
//என்னா நினைச்சிட்டு இருக்கே.... கப்பி மதுரைகார பையனா கொஞ்சநாளா இருத்துருக்கான்.. //
இருந்தா? என்னனு கேட்டேன். இந்த ரவுச எல்லாம் வேற எங்கயாச்சும் காட்டு நைனா.
//என்னா சேட்டையா, //
ஆமாம், யாரு இல்லனா :)
//வகுத்திருவோமிலே.. சாக்கிரதை. //
நீ எப்ப கணக்கு வாத்தியார் ஆன, வகுத்தல், பெருக்கல் சொல்லிகிட்டு ....
கூட்டல், கழித்தலும் உண்டுல :)))
//விடு ராமு...மன்னிச்சிருவோம் :D //
இத பாருடா.... என்ன விளையாட்டு இது ?
//அதான் நாலு கேட்டாச்சே..இன்னொன்னு வேணுமா?? //
ஆசை இருந்தால், மனதில் தெம்பு இருந்தால் கேள், பதில் சொல்ல நான் இங்கு ரெடி. :)
Post a Comment