Tuesday, April 12, 2011

ஓட்டு போடுங்க ப்ளீஸ்!

நாளை தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி அமைய போகின்றது என்பதற்கு உங்கள் பங்கை அளிக்கும் நாள். என்னத்த வோட்டு போட்டு என்னத்த ஆக போகுது என்று நம்மில் பல என்னத்த கண்ணையாக்கள் உள்ளன். இந்த கெடு கெட்ட அரசியல்வாதிகள் ஏன் சார் ஓட்டு போடனும் என்று ஆயிரம் காரணங்களை நம்மால் அடுக்க முடிகிறது. ஏன் ஓட்டு போட வேண்டும் என சிறிது சிந்தித்தால் ஆயிரத்து ஒரு காரணங்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். அந்த கெடு கெட்ட அரசியல்வாதிகளை புறம் தள்ள உங்கள் ஓட்டு அவசியம் என்பது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.

நம்மளில் பலர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை னு சொல்லி சொல்லியே இப்போ வானரங்களை ஆள விட்டு இருக்கிறோம். கோல்(ஓட்டு) எடுத்தால் ஆடும் வானரங்களாக இருந்தவர்கள் இன்று பணம் கொடுத்தால் ஓட்டு போடும் வானரங்களாக நம்மை மாற்றி விட்டார்கள். இதை களைய நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாத ஓட்டுப்பதிவு அவசியம்.

வக்கனையாக பல அரசியல் நிலைப்பாடுகளை அலசி ஆராய்ந்து விட்டு, ஆமாம் நான் ஒருத்தன் ஒரு வோட்டு போட்டு தான் இந்த நாடு மாற போகுதா என்று கூறும் ஒரு கூட்டம் உண்டு இங்கு. 5000 கோடி ஊழல் என்று பத்திரிக்கையில் வந்த தலைப்பை செய்தியை படித்து சார் இந்த நாடு உருபடவே உருப்படாது என்று பக்கத்து இருக்கையில் இருக்கும் சக அலுவலரிடம் சொல்லி விட்டு 500 ரூபாய் வாங்கி கொண்டு கோப்பில் கையெழத்து இடும் ஏதோ ஒரு அரசு ஊழியருக்கும் மேலே உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. ஒரு வோட்டு பல வரலாறுகளை புரட்டி போடலாம்.

யாருப்பா வொட்டு போடுற இடத்தை தேடி போய் வரிசையில் நிற்பது. வெயில் காலம் என்றால் வெயிலை காரணம் காட்டியும், மழை காலம் என்றால் மழையை காரணம் காட்டியும் விடுமுறையை மட்டும் அனுபவிக்கும் மக்களும் இங்கு உண்டு. அவர்களால்

பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பதற்க்கு முன்பே வரிசையில் நிற்க முடியும்.
விசா வாங்க தூதரக வாசலில் காவல் காக்க முடியும்.
தலைவர் படம் பார்க்க முதல் நாள் இரவே திரை அரங்கு வாயிலில் தவம் இருக்க முடியும்.
கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வாங்க பல மணி நேரம் வரிசையில் நின்று சீட்டு வாங்க முடியும்.
எல்.கே.ஜி. விண்ணப்பம் படிவம் வாங்க விடியும் முன்பே பள்ளி வாசலில் பலிகிடக்க முடியும்.
ஆனால் நம் உரிமையை நிலைநிறுத்த வரிசையில் நிற்க முடியாது. என்ன நியாயம் சார் இது?

கடமையை செய் பலனை எதிர்பாக்காதே னு கண்ணன் சொன்னாரு
கடமையை செய் பலனை எதிர்பார் னு தலைவர் சொன்னாரு
கடமையை செய்ய மாட்டேன், ஆனால் பலனை மட்டும் எதிர்பார்ப்பேனு நம்மில் பலர் சொல்லுறோம். என்னத்த பலனை அடைச்சேன் காரணமும் கேட்பார்கள். அரசாங்க சலுகைகளில் ஏதேனும் ஒன்றை அனுபவிக்காத மக்கள் மிக சொற்பமே. அந்த மிக சொற்பத்தில் நம்மவர்கள் வருவது அதை விட சொற்பமே.

நம்மளில் பலர் எனக்கு ஒட்டு இல்லை, ஓட்டு போட எல்லாமா ஊருக்கு போவது வேறு வேலை இல்லை என்று சொல்வதை ரொம்ப பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காதலன், காதலி யை பார்க்க முக்கியமான வேலை எதுவாக இருந்தாலும் விடுத்து பல மைல் பயணம் செய்ய தயாராக இருப்பார்கள், ஆனால் ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல முடியாது என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். வரி கட்டுவதற்கு என்ன என்ன சலுகைகள் இருக்கு என்பதை அறிந்து அதற்கு தேவையான எல்லாவற்றையும் முன் கூட்டிய செய்ய முடியும், ஆனால் வாக்காளர் அடையாள அட்டை வாங்க நேரமும், தேவையும் இருக்காது. இதில் ஏதுமே பெருமை பட வேண்டிய விசயம் இல்லை, சிறுமை கொள்ள வேண்டிய விடயங்கள் தான்.

என் தொகுதியில் நிற்பவர்கள் எல்லாம் மோசமானவர்கள், அயோக்கியர்கள், ஜெயித்து வந்தால் ஏதும் செய்ய மாட்டார்கள் இவர்களுக்கு ஏன் என் ஓட்டை போட்டு விரயம் பண்ண வேண்டும் என்று கேட்பவர்களுக்காக இந்த தடவை ஓ போடும் வசதியும் உண்டு. ஓ போடுவது மூலம் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்க வைக்க முடியும்.

விடியாத இரவு என்று எதுவும் இல்லை
முடியாத துயர் என்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாழாதா வாழ்க்கை என்று எதுவும் இல்லை

என்ற வைரமுத்து வரிகளை நினைவில் கொள்ளுவோம். அனைவரும் ஓட்டு சாவடிக்கு வந்தோம் என்பதே நாம் விரும்பும் விடியலுக்குக்கான முதல் படியாக இருக்கும், இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

So Please Cast your Vote!

20 comments:

G3 said...

//So Please Cast your Vote!//

நீங்க சொல்லிட்டீங்க இல்ல.. நாளைக்கு கண்டிப்பா ஓட்டு போட்டுடலாம் :)))

நாகை சிவா said...

பதிவை படிச்சிங்களா? இம்புட்டு சீக்கிரம் பின்னூட்டம் வந்ததால் கேட்கிறேன்.

ஒட்டு இருக்கா உங்களுக்கு ? ;)

கடைக்குட்டி said...

//பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பதற்க்கு முன்பே வரிசையில் நிற்க முடியும்.
விசா வாங்க தூதரக வாசலில் காவல் காக்க முடியும்.
தலைவர் படம் பார்க்க முதல் நாள் இரவே திரை அரங்கு வாயிலில் தவம் இருக்க முடியும்.............................................//


நச் நச் நச்... :-)

கடைக்குட்டி said...

போட்ருவோம் தல :-)

G3 said...

இப்போ தான் பதிவை படிச்சு முடிச்சேன் :)))

ஹிஹி.. வாங்கிட்டோமில்ல வாக்காளர் அட்டைய :))) என் முதல் ஓட்டு நாளைக்கு தான் போட போடறேன்.. நல்ல படியா போட்டுட்டு வரணும்னு சாமிய வேண்டிக்கோங்க :P

vasu balaji said...

நல்ல தீர்மானமான வாதம். போட்ருவோம். இடுகைக்கும் போட்டாச்சு.

Raz said...

yaruku vote podanumnu solluinga... :)

நாகை சிவா said...

@ கடைக்குட்டி & பாலா!

நன்றி :)))

நாகை சிவா said...

@ காயத்ரி!

ஸ்டார்ட் மீயூஜிக் :)))))))

@ RAZ!

உனக்கு தெரியாதா என்ன ;)))))

கோபிநாத் said...

இப்போத்தைக்கு இந்த பதிவுக்கு ஒட்டு போட்டேன் சகா!!

Divyapriya said...

எனக்கு ஊர்ல தான் ஓட்டு இருக்கு...எனக்கு லீவும் இல்லை :(

Vidhya Chandrasekaran said...

நாளைக்கு தட்டிடுவோம் பாஸ்:)

கவிதா | Kavitha said...
This comment has been removed by the author.
Unknown said...

இந்தியாவில் இருந்த வரையில் பொறுப்பா ஓட்டுப் போட்டேன். இப்போ முடியல :-(

Joe said...

நல்ல பதிவு.
நடுவில தலைவர் தலைவர்-ன்னு சொன்னீங்களே அது யாரு? ;-)

ராஜ நடராஜன் said...

//கோள்(ஒட்டு) எடுத்தால் ஆடும் வானரங்கள் இருந்தவர்கள் இன்று பணம் கொடுத்தால் ஒட்டு போடும் வானரங்களாக நம்மை மாற்றி விட்டார்கள். //

எப்படியெல்லாம் மாற்றிவிட்டார்கள்:(

உண்மைத்தமிழன் said...

நன்றி தம்பி..!

அவசியம் ஓட்டுப் போடச் சொல்லி சூர்யாவை பேச வைச்சதுக்கு உன்னைய பேச வைச்சிருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

ஜி-3.. எப்படி ஓட்டுப் போடப் போறாங்களாம்..?

பிரஸ்ஸல்ஸ்ல வாக்குச் சாவடி இருக்கா..?

ஆர்வலன் said...

ஆனா நீ மட்டும் வரமாட்ட!!!!

ST said...

Very well written! You should share this now..Would like to share it with your permission