Thursday, November 27, 2008

இந்திய பிரதமரே!

இந்திய பிரதமரே!

வணக்கம். இந்திய மக்கள் ஆகிய நாங்கள் நலமாக இல்லை. எங்களின் தலைவராகிய நீங்களாவது நலமாக உள்ளீர்களா? நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு எப்படி நலமாக இருக்க முடியும் என்று கேட்குறீர்களா.. அதுவும் சரி தான். இன்னும் சில நாட்களுக்கு உங்களை நாட்டில் உள்ள பிரதான எதிர்கட்சி முதல் கடைசி குடிமகன் வரை கேள்விகளாலும், விமர்சனங்களாலும் துளைத்து எடுக்க போகிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்ற கவலையே உங்களை வாட்டி எடுத்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நானும் என் பங்கிற்கு இரண்டு பைசாகளை கொடுத்து விட்டு போகிறேன்.

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு தடவையும் குண்டிவெடிப்பிற்கு பிறகு உரை தயாரிப்பதற்கு பதில் அனைத்திற்கும் பொருந்துகின்ற மாதிரி ஓரு உரையை உங்கள் துறையினரிடம் சொல்லி தயாரித்து வைத்து கொள்ளுங்கள். தேதி, இடம், வெடித்த குண்டுகள், இறந்தவர்கள் எண்ணிக்கை, நிவாரண தொகை ஆகிய இடங்களை மட்டும் காலியாக விட்டு அந்தந்த குண்டுவெடிப்புக்கு ஏற்ற மாதிரி நிரப்பி கொள்ளலாம். ஏன்னென்றால் குண்டுவெடிப்புகளும் நிகழாமல் இருக்க போவது இல்லை. உங்கள் அறிக்கையும் வராமல் இருக்க போவது இல்லை.

நீங்களும் எப்பொழுது போல எந்த விதமான பயங்கரவாதத்தையும் இந்தியா சகித்து கொள்ளாது, இதற்கு காரணமானவர்களை கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். புதிதாக எந்த ஒரு சட்டம் தேவையில்லை. உலக நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வோம். பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். blah.. blah.... இதை தவிர வேறு என்ன சொல்லி இருக்கீங்க அல்லது செய்து இருக்கீங்க. இந்த தடவையும் அதே பல்லவி தானே?

எதிர்கட்சிகள் உங்கள் அரசு அனைத்து வகையிலும் தோற்று விட்டது அதற்கு பொறுப்பு ஏற்று உங்களை பதவி விலக சொல்லும். நீங்கள் பதவி விலகினாலும் ஒன்றும் ஆக போவது இல்லை என்ற நிதர்சனம் அறிந்தே அவர்களும் குரல் எழுப்புகிறார்கள் என்று அறிந்து தான் உள்ளோம். இருந்தாலும் கேள்வி எழுப்ப வேண்டியது அவர்கள் கடமை. அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் உங்கள் உள்துறை அமைச்சர் பதில் விதாண்டவாதம் பேசுவார். இந்த வருடத்தில் மட்டும் எத்தனை குண்டுகள் நம் நாட்டில் வெடித்து உள்ளது, எத்தனை இந்திய மக்கள் இறந்து உள்ளார்கள் என்பதை ஒரு முறை எண்ணி பார்த்து அவர் தன் வாயை திறப்பது சால சிறந்தாக இருக்கும்.

உண்மை தான், இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியாவில் மட்டும் இல்லை உலகெங்கும் தான் நடக்கிறது. அமெரிக்காவில் இல்லையா, இங்கிலாந்தில் இல்லையா என கேள்வி எழுப்பவது நியாயம் தான். ஆனால் அங்கு ஒரு முறை நடந்ததுக்கே செய்தவனின் டவுசரை கழுற்றினார்கள். ஆனால் நாமோ ஒவ்வொரு முறையும் நம் டவுசரை அல்லவா கழுற்றி விட்டு காட்டி கொண்டு இருக்கிறோம். அதை ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறோம்.

ஆனாலும் இதில் ஒரு பெருமை பட விசயம் உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனுக்கு அடுத்தபடி நம் நாட்டில் தான் அதிக குண்டுவெடிப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது என்ற பெருமைதான் அது. முதல் ஐந்து இடங்களுக்குள் வருவது என்பது சதாரணமான விசயமா என்ன? அதற்கு ஒரு பூச்செண்டு உங்கள் அரசாங்கத்துக்கு. அது மலர் வளையமாக தெரிந்தால் அதற்கு நீங்களும் உங்கள் அரசும் தான் முழு பொறுப்பு.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் நம் பாராளுமன்றம் வரை வந்தும் நமக்கு புத்தி வரவில்லை. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் பயங்கரவாதம் எப்படி எல்லையை தாண்டி உள்ளே வருகிறது. சந்திரன் வரைக்கும் சென்ற நம்மால், இதை கண்டு பிடிக்கவோ தடுக்கவோ முடியவில்லை என்றால் எல்லையை பலப்படுத்தாமல் என்ன மயிற்றுக்கு நிலாவ நொண்டிக்கிட்டு இருக்க என்ற கேள்வி வருது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.

எல்லை தாண்டி வந்தவர்களால் மட்டும் இவ்வளவு அருமையாக திட்டமிட்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதை நான் மட்டும் அல்ல நீங்களும் ஒற்றுக் கொள்வீர்கள். அப்ப இங்கு இருக்கும் சிலரும் அதற்கு துணை போகின்றாகள். குறைந்தபட்சம் அவர்களையாவது கண்டுபிடித்து வேரறுத்தால் என்ன? அது எப்படி முடியும் நாம் தான் ஜனநாயக நாடு ஆச்சே. கூடவே சகிப்புதன்மையின் ஒப்பற்ற பிதாமகன்களாக வேறு திகழ்ந்து கொண்டு இருக்கிறோம். கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம், ஆனால் சட்டம் தன் கடமையை செய்ய விடாமல் மனிதாபிமானம் என்ற வார்த்தையை பிடித்து தொங்குவோம். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. அது சரி நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொல்ல உதவியே மக்களுக்கே கருணை காட்டிய மக்கள் ஆச்சே நாம். வாழ்க.

பாக்தாத், காபூல், மும்பை என்ற வரிசையில் அடுத்து எந்த இந்திய மாநகரம் சேர போகிறது என்ற வாக்கெடுப்பு நடப்பதாக கேள்வி. வாக்கெடுப்பு முடிவுக்காக காத்து இருக்க போகின்றீர்களா இல்லை வேறு ஏதும் செய்யும் எண்ணம் உள்ளதா? சொரணையற்ற தேசமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் என் தேசம் இருக்க போகிறது. நீங்களும் இந்த நாடும் ஏன்றைக்கு சுயமாகவும் தைரியமாகவும் முடிவுகளை எடுக்க போகின்றது.

சரி வெட்டி கதை எதற்கு, இது வரை நடந்தற்கு என்ன பண்ண போகின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நாளை இந்திய மண்ணில் வாழ எங்களுக்கு பாதுகாப்பாக வாழ வழி இருக்குமா என்ற கேள்வி மட்டும் தான் உள்ளது.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்புக்கு பின், இந்திய மக்கள் தங்கள் ஒற்றுமையை பறை சாற்ற வேண்டிய நேரம் இது, பயம் கொள்ள தேவையில்லை அமைதி காக்கவும் என்று சொல்லி சொல்லி உங்களுக்கும் அலுத்து விட்டது எங்களுக்கும் அலுத்து விட்டது. வேற எதாச்சும் செய்யுங்க எஜமான்!

இப்படிக்கு,

இன்னுமாடா இந்த நாடு நம்மள நம்புது என கேட்கும் குரலை அலட்சியப்படுத்தி கொண்டே இந்திய அரசாங்கத்தின் மூலம் இந்த நாட்டின் எந்த பகுதியிலும் பாதுகாப்பாக வாழ முடியும் என்று இன்னமும் நம்பும் ஒரு இந்திய குடிமகன்.

ஜெய்ஹிந்த்!

22 comments:

Unknown said...

உண்மையான ஒவ்வொரு இந்திய பிரஜையின் உள்ளக்கிடக்கையை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். ஒட்டு பொறுக்கி நாய்களான கருணாநிதிகள், கம்நிச்ட்கள், காங்கிரஸ் பொட்டைகள், லாலு/முலாயம்/பஸ்வான் போன்ற பதர்கள் தான் இதற்க்கெல்லாம் காரணம்.

Senthil said...

This article most reflects
many of my views.
Aren't these guys ashamed of being
in power...??

சிவகுமார் சுப்புராமன் said...

நண்பர் வணங்காமுடி சொன்னது சாலப் பொருத்தம். எங்கள் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியுள்ளீர்கள் நாகை சிவா.

அது என்ன

//கருணாநிதிகள்//

ஒருவர் தானே?

ஹா ஹா ஹா, மேலே படித்த வேதனையை போக்க சும்மா தமாஷ்!!!

வடுவூர் குமார் said...

நடந்ததை நினைக்கும் போது கஷ்டமாக இருந்தாலும் நம் கையாலாகதனத்தை நினைக்கும் போது இன்னும் எரிச்சலாக இருக்கு.

Anonymous said...

உண்மையான ஒவ்வொரு இந்திய பிரஜையின் உள்ளக்கிடக்கையை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். ஒட்டு பொறுக்கி நாய்களான கருணாநிதிகள், கம்நிச்ட்கள், காங்கிரஸ் பொட்டைகள், லாலு/முலாயம்/பஸ்வான் போன்ற பதர்கள் தான் இதற்க்கெல்லாம் காரணம்.

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு சிவா!

அருமையான கேள்விகள்!

கபீஷ் said...

வடுவூர் குமார் said...
நடந்ததை நினைக்கும் போது கஷ்டமாக இருந்தாலும் நம் கையாலாகதனத்தை நினைக்கும் போது இன்னும் எரிச்சலாக இருக்கு.
//

I second this.
(Sorry i have some problem in tamil editor)

na.jothi said...

இந்த அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டாங்க
இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர்
வரும் நாடாளும் மன்ற கூட்டத்தில் பெரும் பிரச்சினையை மும்பை வெடிப்பை பற்றி
பெரும் பிரச்சினை கிளப்புவோம் என்று கூறியுருக்கிறார்
ஏன் இந்த இவர் இந்த நாட்டின் பிரதிநிதி இல்லையா இதற்க்கு ஒரு முடிவு காண்போம்
என்று சொல்லாமல் அரசாங்கத்தை குறை கூறுவதே எதிர் கட்சிகளின் வேலை யாக போய்விட்டது நீங்க சொல்லுகிற மாதிரி மனிதாபிமானம் சட்டம் தன் கடமையை செய்யும் என்று போகிறார்கள் இதே நிலை நீடித்தால் நாடு எங்கு போகும் ???

ராஜேஷ், திருச்சி said...

நடுநிலையான அனைவரின் மனதிலும் ஒடும் கேள்விகள் இவை.. நறுக்கென்று கேட்டுள்ளீர்கள்.. உன்மையிலேயே சிவராஜ் பாட்டில், உள்துறை அமைச்சகம், உளவுப்பிரிவு எல்லாம் என்ன செய்கிறது..

ஆனால் , இந்த வேதனையையே சாக்காக எடுத்துக்கொண்டு அரசியல், மதம் சார்ந்து குளிர் காய நினைக்கும் சில வனங்ககாடிகளின் காயடித்தால் தான் என்ன என்று தோன்றுகிறது..
எரிகிற வீட்டில் இயன்ற வரை புடுங்கும் இவர்களை நினைத்தால் சீ என்கிறது..

தனிப்பட்ட தன் அரசியல் அபிலாஷைகளை இங்கே மற்றும் அனைத்து பதிவுகளிலும் அவிழ்த்துவிடும் நாய்கள்..

Anonymous said...

ஒட்டு பொறுக்கி நாய்களான கருணாநிதிகள், கம்நிச்ட்கள், காங்கிரஸ் பொட்டைகள், லாலு/முலாயம்/பஸ்வான் போன்ற ///

சூப்பர், நச்.. சில ஓட்டு பொறுக்கிகளை விட்டுடீங்க வனங்கமுடி, ஓட்டு எச்ச பொறுக்கி ஜெயலலிதா,, விஜயகாந்த், அத்வானி, மோடி, எலக்கட கனேஷன், தெரு நாய் எச் ராஜா , ராமதாஸ், திருமா, உள்ளிட்ட பொறம்போக்கு நாய்களும் இந்த லிஸ்டில் போட்டால் தான் சரியாக இருக்கும்

ராஜாபரமசிவன்

நாகை சிவா said...

PM's statement on Mumbai terror attacks

Dear Citizens,

The dastardly terror attacks that took place in Mumbai last night and today leading to the loss of many precious lives and injuries to many others have deeply shocked the nation. I strongly condemn these acts of senseless violence against innocent people, including guests from foreign countries. I offer my deepest condolences to the bereaved families and sympathies to those injured. The government will take all necessary measures to look after the wellbeing of the affected families, including medical treatment of injured.

The well-planned and well-orchestrated attacks, probably with external linkages, were intended to create a sense of panic, by choosing high profile targets and indiscriminately killing foreigners.

I salute the courage and patriotism of the police officers, including the Chief of the Anti-Terror Squad, Shri Hemant Karkare [Images] and men who have laid down their lives in fighting these terrorists. I assure the country that we will attend in an urgent and serious manner to police reform so that the law and order authorities can work unitedly, effectively and in a determined manner to tackle such threats to national integrity.

We are not prepared to countenance a situation in which the safety and security of our citizens can be violated with impunity by terrorists. It is evident that the group which carried out these attacks, based outside the country, had come with single-minded determination to create havoc in the commercial capital of the country.

We will take the strongest possible measures to ensure that there is no repetition of such terrorist acts. We are determined to take whatever measures are necessary to ensure the safety and security of our citizens.

Instruments like the National Security Act will be employed to deal with situations of this kind. Existing laws will be tightened to ensure that there are no loopholes available to terrorists to escape the clutches of the law. Most importantly, it is essential to immediately set up a Federal Investigation Agency to go into terrorist crimes of this kind and ensure that the guilty are brought to book.

We will take up strongly with our neighbours that the use of their territory for launching attacks on us will not be tolerated, and that there would be a cost if suitable measures are not taken by them. We will take a number of measures to strengthen the hands of our police and intelligence authorities. We will curb the flow of funds to suspect organizations. We will restrict the entry of suspects into the country. We will go after these individuals and organizations and make sure that every perpetrator, organizer and supporter of terror, whatever his affiliation or religion may be, pays a heavy price for these cowardly and horrific acts against our people.

In this hour of tragedy, I appeal to the people to maintain peace and harmony so that the enemies of our country do not succeed in their nefarious designs. All concerned authorities are on alert and will deal sternly with any attempts to disturb public order.

I am confident that the people of India will rise unitedly to face this grave challenge to the nation's security and integrity.

Jai Hind!

Source : Rediff

ஆயில்யன் said...

நீங்க சொன்னமாதிரியே டெம்ப்ளட்தனமான ஒரு அறிக்கை நேரடியாக படித்துவிட்டு தன் அலுவல்களை தொடர்கிறார் பாரத பிரதமர்!


வல்லரசு நாடாக மாறுவது மட்டுமே ஆசையாக இருக்கிறது அனைவருக்கும்! ஆனால் அதற்கேற்ற வகையிலான நடவடிக்கைகள் எடுக்கும் அளவுக்கு நம்ம அரசியல்வாதிகளிடம் அவசரகாலங்களில் நாட்டினை நிர்வகிக்கும் அளவுக்கு திறமை இருக்கா....?

:((((((

Unknown said...

வாங்க உலக மகா நடுநிலமையாளர் ராஜேஷ், திருச்சி அவர்களே, உங்களுக்குரிய கோப்பையை பின் லேடேன் வழங்குவார், வந்து வாங்கி செல்லுங்கள்.

நாகை சிவா said...

@ வணங்காமுடி & ராஜேஷ் திருச்சி

தயவு செய்து தனி மனித தாக்குதல்கள் வேணாமே!

நன்றி

சின்னப் பையன் said...

நல்ல கேள்விகள்.... நல்ல பதிவு...

//எல்லையை பலப்படுத்தாமல் என்ன மயிற்றுக்கு நிலாவ நொண்டிக்கிட்டு இருக்க என்ற கேள்வி வருது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்//

இதுதான் டாப்....

அசோக் said...

உண்மையான ஒவ்வொரு இந்திய பிரஜையின் உள்ளக்கிடக்கையை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

Anonymous said...

இந்தியாவில் குடிமகனாக இருப்பதை விட கல்லறையில் பிணமாக இருப்பதே மேல்

Anonymous said...

சரியாகச் சொல்லியுள்ளீர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த இஸ்லாதியத் தீவீரவாதத் தாக்குதல்கள் கீழே. இன்னும் எத்தனை லட்சம் உயிர்களை நாம் இழக்க வேண்டும்? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் இப்படி அஞ்சி அஞ்சிச் சாகப் போகிறோம்?

கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதம்., அனைத்தும் முஸ்லீம்களால் நடத்தப் பட்ட படுகொலைகள்.

இதற்கு முடிவு என்ன?

இந்துக்கள் என்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறார்கள்?
எப்படி?

இன்னும் எத்தனை லட்சம் இந்துக்கள் கொல்லப் பட வேண்டும்?

இந்தப் படுகொலைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு?

சிந்தியுங்கள் இந்துக்களே. விழித்தெழுங்கள். உங்கள் எதிரிகளை இனம் கண்டு கொள்ளுங்கள். அடுத்த தேர்தலில் அந்த எதிரிகளைப் புறக்கணியுங்கள் அது ஒன்றுதான் நம்மால் வன்முறையற்ற வழியில் நம் பாதுகாப்பைச் செய்து கொள்ளக் கூடிய ஒரே வழி.

இஸ்லாமிய வர்த்தகத் தளங்கள் அனைத்தும் தீவீரவாதிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியும் ஆதரவு செலுத்தியும் வருகின்றன. நாம் அவர்கள் கடையில் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 20 பைசா நம்மை அழிக்கவே பயன் படுத்தப் படுகின்றன.

ஆம் இஸ்லாமியக் கடைகள் இந்தப் பயங்கரவாதிகளின் வழக்குகளை நடத்த பணம் அளிக்கின்றன. இவர்களுக்குத் தண்டனை கொடுத்தால் தங்கள் கடைகளை அடைத்து தீவீரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அடுத்த முறை முஸ்லீம் கடையில் சாமான் வாங்கும் முன்னால் நன்கு தீர விசாரித்த பின் வாங்குங்கள் அல்லது முற்றிலும் தவிர்த்து விடுங்கள்

தீவீரவாதத்திற்கு நாம் கொடுக்கும் வியாபார ஆதரவும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து செயல் படுங்கள்.

இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு அரசியல்வாதிகளான சோனியா, மன்மோகன், லல்லு, முலயம், கருணாநிதி ஆகியோரை இனம் கண்டு புறக்கணியுங்கள்

இஸ்லாமியத் தீவீர்வாதிகளை ஆதரிக்கும் வர்த்தக நிலையங்களை புறக்கணியுங்கள்

இந்த்துக்களே ஒன்று படுங்கள் நம் குழந்தைகள் இனியும் நம் சொந்த நாடிலேயே அநாதைகளாக மாற வேண்டாம். விழிப்புணர்வு கொள்ளுங்கள். இந்தப் பட்டியல் இனியும் நீள நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்களா அல்லது முற்றுப் புள்ளி வைக்கப் போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள்.

அடுத்த தேர்தலில் ஒற்றுமையுடன் இந்த பயங்கரவாத ஆதரவு அரசியல் கட்சிகளை தோற்கடியுங்கள் இல்லா விட்டால் உங்கள் உயிர் உங்கள் கையில் இல்லை. உறங்கியது போதும். இனிமேலும் நம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது.

Following is a chronology of some of the major attacks in India in the past five years:

March 13, 2003 - A bomb attack on a commuter train in Mumbai kills 11 people.

Aug. 25, 2003 - Two car bombs kill about 60 in Mumbai.

Aug. 15, 2004 - A bomb explodes in Assam, killing 16 people, mostly schoolchildren, and wounding dozens.

Oct. 29, 2005 - Sixty-six people are killed when three blasts rip through markets in New Delhi.

March 7, 2006 - At least 15 people are killed and 60 wounded in three blasts in the northerly Hindu pilgrimage city of Varanasi.

July 11, 2006 - More than 180 people are killed in seven bomb explosions at railway stations and on trains in Mumbai that are blamed on Islamist militants.


May 18, 2007 - A bomb explodes during Friday prayers at a anti-wahhabi mosque in Hyderabad, killing 11 worshippers.


Aug. 25, 2007 - Three coordinated explosions at an amusement park and a street stall in Hyderabad kill at least 40 people.

May 13, 2008 - Seven bombs rip through the crowded streets of Jaipur, killing at least 63 people in markets and outside Hindu temples.

July 25 - Eight small bombs hit the IT city of Bangalore, killing at least one woman and wounding at least 15.

July 26 - At least 16 small bombs explode in Ahmedabad killing 45 people and wounding 161. A little-known group called the "Indian Mujahideen" claims responsibility for the attack and the May 13 attack in Jaipur.

Sept 13 - At least five bombs explode in crowded markets and streets in the heart of New Delhi, killing at least 18 people and injuring scores more. The Indian Mujahideen again claim responsibility.

Nov 26 - At least 80 people were killed in a series of attacks apparently aimed at tourists in India's financial capital Mumbai on Wednesday. Police said at least 250 people had been wounded.


25 August 2004: 6 People died in two car bomb blasts in Mumbai.
5 July 2005: Terrorists attacked Ram Janma Boomi, Ayodhya.


28 July 2005: 13 killed and 50 injured in an explosion on board Shramjivi Express at Jaunpur Uttar Pradesh.


8 September 2006: 38 people killed and more than 100 injured when three bombs simultaneously exploded, including one in a Mosque at Malegon in Maharashtra.


19 February 2007: 68 people killed and dozens injured after four explosions on board the Lahore bound Samjhauta Express.


23 November 2007: 13 people killed and 40 wounded in a serial blast outside Courts in three cities of Uttar Pradesh.


1 October 2008 – Tripura - 5 dead and over 100 injured

30 October 2008 – Assam – 75 dead and over 200 injured

சரவணகுமரன் said...

சரியா கேட்டு இருக்கீங்க...

Unknown said...

//இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு அரசியல்வாதிகளான சோனியா, மன்மோகன், லல்லு, முலயம், கருணாநிதி ஆகியோரை இனம் கண்டு புறக்கணியுங்கள்//

பக்கா பா ஜ க ஆதரவாளரே, ஏன் இந்த நஞ்சு கலப்பு?? ஏன் ஜெயலலிதா பெயரெல்லாம் இங்கே இல்லை??
ஒரு வேளை அவர் முஸ்லீம்களை ஆதரிக்கவே இல்லை என்று சொல்லவருகின்றீரா??

உங்கள் அரசியல் சாக்கடைகளை இங்கே தெளிக்கவேண்டாம்..

ambi said...

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் நண்பா! :((

//உண்மையான ஒவ்வொரு இந்திய பிரஜையின் உள்ளக்கிடக்கையை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.//

Amen.

பாச மலர் / Paasa Malar said...

எல்ல்லோர் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் நல்ல பதிவு..

எவ்வளவு பாதுகாப்பற்ற நிலைமையில் இருக்க்கிறோம் நாம்?!