
இந்தியாவில் இருந்த வரை ஒரு முறை கூட இத்திருவிழாவை தவற விட்டதில்லை. எங்கு இருந்தாலும், எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வந்து விடுவேன். போன வருடமும், இந்த வருடமும் அயல்நாட்டில் இருப்பதால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக என்னால் திருவிழாவில் பங்கேற்க முடியவில்லை. இதில் வருத்தம் தான். தீபாவளி, பொங்கல் எவ்வளவு முக்கியமோ அது போல அவர், அவர்களின் சொந்த ஊர் திருவிழாக்களும் முக்கியம் தான். அதில் இருக்கும் ஆனந்தமே தனி தான். இவ்விழாக்களின் போது மனதில் தோன்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
பல்லாயிரகணக்கான மைல்கள் தள்ளி இருந்தாலும் மனது என்னவோ திருவிழாவை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தது. அதிலும் இன்று நம்ம மாப்பிள்ளை செல்வன் நீரஜ்சனை செடில் வைத்து உள்ளார்கள். வீட்டிற்கு தொலைப்பேசியில் அழைத்து தேர் நிலையை அடைந்து விட்டதா? எனக் கேட்ட பிறகு தான் மனம் சிறிது அமைதி அடைந்து. நம்ம மாப்பிள்ளையும் செடில் ஏறும் போது அழுதும் இறங்கும் போது சிரித்தும் மறுபடியும் ஏற வேண்டும் என அடம் பிடித்து உள்ளார். தொலைப்பேசியில் கேட்கும் போதே மனத்திரையில் காட்சிகள் ஒடியது. மனம் மகிழ்ச்சி அடைந்தது. இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தானே நம் வாழ்வின் உற்சாக டானிக்.
ஆகா இவன் ஒவரா அறுவைய போட ஆரம்பிச்சிட்டான் யாரும் சொல்லுறத்துக்கு முன்னால் நானே ஜகா வாங்கிறேன்.
இன்று பிறந்த நாள் காணும் புதுவை திரு. அரவிந்த் யாதவ் அவர்க்களுக்கு இந்த வலைப்பதிவின் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரை பற்றி சுருக்கமாக - சொந்தத்தில் உள்ள நண்பர்களில் ஒருவர். விரிவாக எதிர்க்காலத்தில்.
நாகை நெல்லுக்கடை ஸ்ரீ மாரியம்மன் அருளால் எல்லூரும் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வேண்டுகிறேன்.
அன்புடன்,
நாகை சிவா