ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் கதாநாயகியை தவிர்த்து புதுமுகங்களை கொண்டு வெளி வந்துள்ள படம் கல்லூரி.
+ ஷங்கர், பாலாஜி சக்திவேல் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றிப்படம், எந்த ஒரு மசாலாத்தனம் இல்லாத படம். நம்பி குடும்பத்தினர் உடன் செல்லாம்.
+ பழைய கதையாக இருந்தாலும் அனைத்து இயக்குனர்களும் தொட்ட கல்லூரி களமாக இருந்த போதிலும் தன் திரைக்கதையின் மூலம் ஒரு புதிய விதயத்தை கொடுத்து உள்ளார் இயக்குனர்.
+ பெரும்பாலும் புதுமுகங்களா இருந்த போதிலும் காதல் படத்தை போலவே பல கதாபாத்திரங்கள் நம்மை கவருகின்றது. முக்கியமாக நாயகனின் தங்கை, நாயகனின் தோழர், தோழியர்கள்.
+ கல்லூரி கலாட்டக்களின் மூலம் நம் கல்லூரி வாழ்வை நினைத்து பார்க்க வைப்பது.
+ காதலா, நட்பா என பதிவுலகில் தற்சமயம் அடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஜல்லியை தானும் அடிக்காமல் நட்பில் இருந்து வரும் காதலை யதாத்தமாக சொல்லி இருக்கிறார்.
+ படத்தின் முதல் பாடல் ரசிக்க வைத்தது. அதே போல் இன்னும் இரு பாடல்கள் முதல் முறை கேட்கும் போதே கவர்ந்தது. எப்.எம். தயவில் இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆகி இருக்கும் என்று எண்ணுகிறேன்.
+ சண்டை, வில்லன் என படத்தை திசை திருப்பாமல் ஒரே கோட்டில் எடுத்து சென்றது.
+ கதாநாயகன், கதாநாயகி இருவரும் அவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகைப்படுத்தாமல் நடித்து இருப்பது.
+ காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் ரொம்பவே இயல்பாக கொண்டு சென்று இருப்பது.
- படத்தின் முடிவு. நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்க முடிவு செய்து திரைகதை அமைத்தது போல் படம் முடிந்த பிறகு யோசிக்க வைப்பதால் அவ்வளவு மெனக்கட்டு அமைத்த திரைகதையின் மேல் ஒரு மரியாதை வர மறுக்கிறது.
- முடிவை தவிர்த்து படத்தில் ஒரு பெரிய சுவாரச்சியம் இல்லை. இயல்பாக நகர்கின்ற போதிலும் அந்த உணர்வு ஏற்படுகிறது. கத்திரியை சரியாக போட்டு இருக்கலாமோ?
- நட்பை குறித்த படம் என்ற போதிலும் நட்பு நட்பு என்று கூறி சில இடங்களில் நெஞ்சை நக்கி விடுகிறார்.
- தாம்னாவை ரொம்பவே அழ விட்டுட்டாரோ? பல காட்சிகளில் கண்கள் சிவந்து கிளசிரின் ரொம்ப ஊத்திட்டாங்களோ என்று தோன்ற வைக்கிறது.
- நம் கல்லூரி வாழ்வை நினைத்து பார்த்த வைத்த இயக்குனர் இதை நம் கல்லூரியுடன் ஒப்பீட்டு பார்க்கும் விசயத்தில் சிறிதே ஏமாற்றம் தர வைத்தது.
மொத்ததில் கல்லூரி ஒரு நல்ல படம். காண வேண்டிய படமும் கூட. அதற்காக தமிழ் சினிமாவை புரட்டி போட வந்த படம் அப்படி இப்படினு ஏத்தி விட்டு பருத்தி வீரனை வம்புக்கு இழுப்பது எல்லாம் ரொம்பவே ஒவரா தான் படுது. பாலாஜி சக்திவேல் இதை விட நல்ல படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரை ஊசுப்பேத்தி இது போன்ற படங்களையை தொடர்ந்து எடுக்க வைக்காமல் சாமுராய் போன்ற படங்களை இன்னும் மிக சிறப்பாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
Thursday, December 20, 2007
கல்லூரி - என் பார்வையில்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, December 20, 2007
31
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Saturday, December 15, 2007
பாலைவன பூக்கள்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Saturday, December 15, 2007
24
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் புகைப்படம், போட்டி
Subscribe to:
Posts (Atom)