Friday, November 30, 2007

யுவதிகளின் எதிர்பார்ப்பு - இளைஞர்கள் கவனிக்க



நோ கமெண்ட்ஸ்!



சில சந்தேகங்கள் மட்டுமே


  • மீண்டும் மீசையை பெரிசு ஆக்கிடவா?


  • குறுந்தாடி வைக்கவா?


  • காதில் கடுக்கன் போடவா?


  • கொஞ்சம் தடி ஆகவா?


  • இன்னும் உசரமாக வளரவா?


  • நீளமா முடி வளர்கவா?


  • ஐ.ஐ.டி, என்.ஐ.டி யில் சேர்ந்து படிக்கவா?


  • எம்.பி.ஏ. சேரவா?


  • சாப்ட்வேர் ல சேரவா?

இல்லை மேற்சொன்ன எல்லாத்தையும் செய்யவா? முடியுமா? நடக்குமா?

Wednesday, November 28, 2007

தமிழை நேசிக்க வைப்பார்களா?

இன்று வடவூர் குமார் மற்றும் இட்லி வடையின் பதிவுகளை பார்க்க நேர்ந்த பிறகு எழுத தோன்றிய பதிவு இது.

தமிழை செம்மொழி ஆக்கி விட்டோம், தமிழை கட்டாயப்பாடமாக்கி விட்டோம் இனி தமிழுக்கு என்றுமே வளர்ச்சி மட்டும் தான் என்று நம் அரசியல் தலைவர்களின் தேர்தல் அறிக்கைகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் பார்த்து இருக்கலாம். அதை செய்தது நாங்கள் தான், திட்டத்தை முதலில் கொண்டு வந்தது நாங்கள் என்று அதிலும் சண்டையிட்டு நாம் பார்த்து இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் அனனவரும் கண்டிப்பாக தமிழில் தான் படிக்க வைக்க வேண்டும் என முழக்கிட்டு விட்டு தன் பேத்திய வேற மொழியில் படிக்க வைத்து பிரச்சனை பெரிதான பிறகு அந்த பள்ளியில் தமிழையும் ஒரு பாடமாக சேர்க்க வைத்த கதையும் நமக்கு தெரியும். அது எல்லாம் அரசியல், நமக்கு தேவையில்லாத விசயமும் கூட.

செம்மொழி என மார்தட்டிக் கொள்ளும் நம் மொழியை ராஜ்யசபாவில் பேச முடியவில்லை. காரணம், மொழி பெயர்ப்பாளர் இல்லை. இந்த பிரச்சனைக்கு பல மாதங்கள் ஆகியும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதை குறித்து ராஜ்யசபாவில் பேசுவதையே பூனைக்கு மணிய கட்டிய பழமொழியுடம் உதாரணப்படுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது என்றால் இதுக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது. அதை பற்றிய இட்லிவடையின் பதிவை படிக்க இங்கு செல்லவும்.

அது ஒரு பக்கம் இருக்கு, இன்று தமிழில் தொடர்ந்து பலர் எழுதுவதற்கு பதிவுலகமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதற்கு நாம் எல்லாமே ஒரு உதாரணம் தான். இதே போல் வரும் சமுதாயமும் இருக்குமா? அவர்களில் பலரை(சிலரை) பொறுத்த வரை தமிழ் ஒரு பேச்சு மொழியாக மட்டும் தான் இருக்கிறது என்பது கண்க்கூடான உண்மை. அதை மாற்ற அரசாங்கமோ, தமிழ் வளர்ச்சி துறை, செம்மொழிக்கான துறையோ ஏதும் திட்டம் வைத்து செயல்ப்படுத்துகிறதா என்று எனக்கு தெரியலை. தெரிந்தவர்கள் கூறலாம்.

அப்படி ஏதும் இல்லை என்றால் சிங்கையில் செயல்படுத்துவதை போன்ற திட்டங்களையும் நம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது மிக சிறந்த வழியாக எனக்கு படுகின்றது. "வாசிப்பை நேசிப்போம்" என்ற பெயர்யிட்டு தமிழ் மொழியை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். முதலில் 48 பள்ளிகள் ஆரம்பித்து, இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் 100 பள்ளிகளில் செயல்படுத்து உள்ளார்கள். அந்த திட்டத்தை பற்றியும் அதில் பயன்பெற்ற மாணவிகளின் பேச்சும் அடங்கிய வீடியோ கிளிப்


இந்த வீடியோவை வடவூர் குமார் அவர்கள் பதிவாக இட்டு உள்ளார்.

இதே போன்ற திட்டத்தை நம் அரசு மாநகராட்சிகளில் தொடங்கி எல்லா இடங்களில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழை எங்கள் சுவாசம் என மேடைக்கு மேடை கூறிக் கொள்ளும் நம் மக்கள்பிரநிதிகள் வருங்கால சமுதாயத்தை தமிழை வாசிக்கவும், நேசிக்கவும் வைப்பார்களா?

Monday, November 26, 2007

இந்தியா வெற்றி + கருத்து கந்தசாமி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனில் கும்பளே கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலே இந்த வெற்றி வந்தது அவருக்கு மிகவும் உற்சாகம் தரும் விசயமாக இருக்கும். கும்பளே கேப்டனாக தகுதியானவர் தானா என்ற கேள்விகள் சில காலத்துக்கு எழாது. குறைந்தபட்சம் இந்த மாதம் முடியும் வரை ஆச்சும்.

நமீதா போல் நச்னு இருக்கும் 20/20 போட்டிகள் வந்த பிறகும் இன்னுமா டெஸ்ட் போட்டி பாக்குறீங்க என்றால் நச்சு நமீதா அழகு என்பதை போலவே சினேகாவின் சிம்பிள் அழகும் அம்சமான அழகு தான். 20/20 - ஹைக்கூ கவிதை, ஒரு நாள் போட்டி - புது கவிதை, டெஸ்ட் போட்டி - மரபு கவிதை. வீசப்படுகின்ற ஒவ்வொரு பந்துகளும் பவுண்டரிக்கோ அல்லது விக்கெட்டாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல் பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன் களும் தங்கள் முழுத் திறமையையும் காட்டும் டெஸ்ட் போட்டிகள் பல சமயங்களில் அழகான மரபு கவிதைகள் தான்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையான போட்டியில் இருக்கும் சூடு இந்த போட்டியில் ரொம்பவே கம்மி தான். இருந்த போதிலும் இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் கூடவே பல தவறுகளையும்.

இந்திய அணி :

- முதல் இன்னிங்ஸ் ல் பாகிஸ்தான் 8 விக்கெட் இழந்த போது தாக்குதல் ஆட்டத்தை தொடுக்காமல் விட்டது.

- முதல் இன்னிங்ஸ் ல் தெண்டுல்கர் ரன் அவுட். பந்தை பாக்காமலே ஒடினா

- டெயில் எண்ட் பேட்ஸ்மேன் ஆளுக்கு இரு ஒவர்கள் கூட பேட் செய்ய மாட்டேன் என அடம் பிடிப்பது

- முனாப் படேல் பவுலிங்

+ சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தானை தடுமாற வைத்தது

+ கார்த்திக்கை தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டம்

+ துல்லியமான பவுலிங், சரியான நேரத்தில் பவுலிங் மாற்றம்.

+ போனஸாக அமைந்த கங்குலியின் பவுலிங்

+ பீல்டிங் + அனுபவ வீரர்கள்

பாகிஸ்தான் அணி :

- கேப்டன் மாலிக். கேட்ச் தவற விட்டதுக்கு, பீல்டிங் மிஸ் க்கு எல்லாம் கத்தினா வேலைக்கு ஆவாது. கிரவுண்ட் ல கேப்டனாக நடந்துக் கொள்வது எப்படி என்று பாடம் பயில வேண்டும்.

- இந்திய அணியை விட நல்ல பவுலர்கள் அமைந்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாது.

- 5 பந்துகள் நல்லா போட்டு 6 வது பந்தை காலில் போடுவது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் காலில் போட்டா துவம்சம் பண்ணுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியே போட்டாலும் அதுக்கு தகுந்த மாதிரி பீல்டிங் நிப்பாட்டிட்டு போடனும்.

- இரு இன்னிங்ஸ்லிலும் மிசாப் உல் ஹக் யின் எந்த நேரத்தில் எதை செய்வது எனப் புரியாமல் எடுத்த முடிவுகள்

- அனுபவமின்மை

+ சோயிப் அக்தர், தன்வீர் பவுலிங்

+ சல்மான் பட், மிசாப் பேட்டிங்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்து வரும் இரு போட்டிகளும் சுவாரஸ்சியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆக மொத்தத்தில் மூத்த ஆட்டக்காரர்களில் தயவில் தான் இந்த போட்டியை இந்திய அணி வெற்றிக் கொண்டு உள்ளது. அதனால் அவர்கள் மூலமாக எழும் சலசலப்பு சில காலமாவது அடங்கும். ஒரு ஆட்டத்தில் சரியாக ஆடவில்லை என்றால் ஆட்டத்தை குறித்து பேசாமல் வயதை குறித்து பேசுவதை நாமும் நிறுத்த வேண்டும். கூடவே இந்த போட்டியில் சரியாக விளையாடாத காரணத்தால் கார்த்திக்கை நீக்கி யுவராஜ் துவக்க ஆட்டக்காராக அனுப்பது என்னை பொறுத்த வரை மடத்தனம். இந்த தொடரில் யுவராஜ் உள்ளே வருவதறகான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. லட்சுனமனை துவக்கத்தில் அனுப்பவதும் தேவையற்ற வேலையாக தான் முடியும். இரண்டாவது போட்டியிலும் கார்த்திக் விளையாடி குறைந்த ரண்களில் அவுட் ஆனால் அடுத்த டெஸ்ட்க்கு காம்பீரை எடுத்து அவரும் டக் அடிச்சா ஆஸ்தி தொடருக்கு புதுசாக ஒரு துவக்க வீரரை தேடுவார்கள் நம் தேர்வு குழுவினர். அதுக்கு பதிலாக இந்த தொடர் முழுவதும் கார்த்திக் கு ஒரு வாய்ப்பு கொடுப்பதும், ஆஸ்தி தொடருக்கும் காம்பீர் + கார்த்திக் (மாற்று கீப்பராக) எடுப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும். சேவாக் என்ன ஆவார் என்பது கேள்வி குறி தான். கூடவே யுவராஜ் மேலும் சில காலம் காத்துக் இருக்க வேண்டும். (வேறு வழி இப்போதைக்கு இல்லை) அடுத்த போட்டியில் முனாப் க்கு பதில் ஆர்.பி. சிங் க்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய தெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள். ஆட்டநாயகனாக கும்பளே தேர்ந்துதெடுக்கப்பட்டார்.

Thursday, November 15, 2007

சாலைகள் பலவிதம்































Monday, November 05, 2007

புலி கதை / காதல் / கேள்வி - 3 இன் ஒன்

மகாஜனங்களே வணக்கம்.

இன்னிக்கு நம்ம சுயபுராணம் தான். புராணம் என்றாலும் இது உண்மையிலே நடந்த சம்பவம் தான். கற்பனை காவியம் அல்ல. இன்னிக்கு நம்ம சுய புராணத்தில் காண்டம் எல்லாம் பிரிக்கல. நேரா பள்ளி வாழ்க்கைக்கு போறோம், சரியா?

நேருவில் படிக்கும் வரை வெறும் சிவாவாக இருந்த என்னை சி.எஸ்.ஐ யில் 6 ஆம் வகுப்பு சேர்ந்த பிறகு இன்சியல் போட்டு கூப்பிட ஆரம்பித்தார்கள். T என்ற இன்சியலை வைத்து Tension சிவா னு அழைக்க ஆரம்பித்தார்கள். அப்ப தலையில், முதுகில் தொட்டால் லைட்டா கோவம் வரும், அதான். பெயர் நல்லா இருந்தாலும் நெகடிவ்வா இருக்கேனு யோசிச்சு அந்த சமயத்தில் வந்த நம்ம தலைவர், சிவா படத்தில் டைகர் னு சொல்ல ஆஹா நம்ம பெயரும் சிவா நம்ம தேசிய விலங்கு டைகர் அந்த பெயரை தலைவரே வச்சிக்கிட்டார், அதன் முதல் எழுத்தும் T தான் பல விதங்களில் யோசித்து ( அந்த வயசுலே என்ன மாதிரி எல்லாம் யோசிச்சு இருக்கேன் பாருங்க) டைகர் சிவா னு கூப்பிடுங்கடானு நம்ம பசங்க கிட்ட சொல்ல அவங்களும் சில நாள் கூப்பிட்டாங்க. நாமளும் நோட், புக் இன்ன பிற பேப்பர்களிலும் டைகர் சிவா னு எழுத ஆரம்பிக்க தொடங்கியதில் இருந்து நமக்கும் இந்த புலிக்கும் உறவு ஸ்டார்ட் ஆச்சுங்க.

அதன் பிறகு வீட்டில் வளர்க்க தொடங்கிய முதல் நாய்க்கு டைகர் பெயர் வச்சி மகிழ்ந்து கொண்டேன். எட்டாவது வரும் பெயர மாத்திட்டாங்க. என்ன என்னவோ பெயர் எல்லாம் வச்சி கடைசியில் அரிசினு கூப்பிட்ட தொடங்க அது இன்னிய வரைக்கும் பள்ளி நட்பு வட்டாரங்களில் தொடருது. நமக்கும் கொஞ்சம் கொஞ்சமா இந்த டைகர் மறந்து போச்சு. பட்னு பாத்தா 10வது படிக்கும் போது ஆங்கிலத்தில் தி டைகர் என்று ஒரு பாடல் பாடமா இருந்துச்சு. அதை மிக அழகாக நடத்திய நம்ம ஆசிரியர் ரிச்சர்ட்சன் மறுபடியும் இந்த புலி மேல் இருந்த ஆர்வத்தை கிளறி விட்டுட்டார். வீட்டில் எல்லாம் புலி படத்ததின் போஸ்டர் வாங்கி ஒட்டி இருந்தேன். தேர்வில் அந்த பாடலை பற்றி எந்த கேள்வியையும் விடாமல் பதில் அளித்து விடுவேன்.

வில்லியம் பிளேக் எழுதிய அந்த பாடல்

The Tiger - William Blake

Tiger Tiger. burning bright,
In the forests of the night;
What immortal hand or eye.
Could frame thy fearful symmetry?

In what distant deeps or skies.
Burnt the fire of thine eyes?
On what wings dare he aspire?
What the hand, dare seize the fire?

And what shoulder, & what art,
Could twist the sinews of thy heart?
And when thy heart began to beat.
What dread hand? & whatdread feet?

What the hammer? what the chain,
In what furnace was thy brain?
What the anvil? what dread grasp.
Dare its deadly terrors clasp?

When the stars threw down their spears
And watered heaven with their tears:
Did he smile His work to see?
Did he who made the lamb make thee?

Tiger Tiger burning bright,
In the forests of the night:
What immortal hand or eye,
Dare frame thy fearful symmetry?

கல்லூரியில் சேர்ந்த பிறகு நமக்கு பல பெயர் வைக்கும் படலங்கள் நடந்து கடைசியில் 8 Guys மற்றும் அஞ்சு என்ற பெயர் நிலைத்து விட்டது. இன்னிக்கும் கல்லூரி நட்புகளிடம் இது தான் பெயர். புலிக்குட்டி என்று வேற ஒருத்தன் இருந்தான் எங்கள் கூட்டத்திலே, அதனால் புலி கல்லூரியில் மிஸ் ஆயிடுச்சு. அந்த நேரத்தில் நம்ம தோஸ்து ஒருத்தன் வண்டி வாங்க, அப்ப எல்லாம் வண்டியில் ஏதாச்சும் ஸ்டிக்கர் ஒட்டுவது தான் ஃபேஷன். அவன் என்னைய கேட்க விடுதலை புலிகளின் சின்னத்தை போட்டு "தொட்டவனை விட்டதில்லை" னு ஸ்டிக்கர் ஒட்டி விட்டேன். ஒட்டின ஒரே மாசத்தில் புலிகளை பற்றி பேசினாலே பொடானு சட்டம் கொண்டு வந்துட்டாங்க. அலறி அடிச்சு ஒடியாந்தான். ஒன்னும் பயப்படாத மச்சினு ஒரு மாதிரி தேத்தி அனுப்பியது தனிக் கதை.

அப்படி போயிக்கிட்டு இருந்த நம்ம புலி ஆர்வம், பதிவுலகம் வந்த பிறகு கன்னாபின்னானு பத்திக்கிச்சு. நம்ம படத்தை போட்டு தான் முதலில் பதிவு எழுத ஆரம்பிச்சேன். அதை பாத்து எனக்கே போர் அடிக்க வேற எந்த படம் போடலாம் என்று யோசித்தவுடன் பட்னு புலி நினைவுக்கு வர சட்னு போட்டாச்சு. அன்னில இருந்து இன்னிய வரைக்கும் அந்த படம் இருக்கு. கூடவே ஆர்குட், ஜி டாக், யாஹு னு எங்கும் புலிப்படம் தான். அதோட ஒரு படி மேல போய் இப்ப புலியையே டெம்பிளேட்டாக மாத்தியாச்சு. நல்லா இருக்கா.

பதிவுலகம் வந்த பிறகு சிவா, நாகை சிவாவாக மாறி நாகை புலியாகி இப்ப வெறும் புலி ஆகிட்டேன். எங்குட்டு போனாலும் ரொம்ப பாசமா எல்லாம் புலி புலி னு கூப்பிடுறாங்க. ஆக மனுசனா மதிப்பது இல்லை என்பது வேற விசயம். அதிலும் ஒரு வலைப்பதிவர் அவர் வனவிலங்கு சரணாலயத்துக்கு போயிட்டு வந்ததும் இல்லாம அங்கன பிடிச்ச புலி படத்தை எல்லாம் எனக்கு மெயில் பண்ணி பாசத்தை கொட்டிட்டார். அத்தோட விட்டு இருந்தால் பரவாயில்லை. கூடவே சிங்கத்தை விட பல விதத்தில் உயர்ந்தது புலி. பின் ஏன் புலியை விட்டுட்டு சிங்கத்தை எல்லாரும் காட்டு ராஜா, விலங்குகளின் அரசன் என்று சொல்லுறாங்கனு ஒரு கேள்வி கனைய வீச வந்தது வில்லங்கம்.

நம்ம அறிவுக்கு எட்டின வரைக்கும் சிங்கத்தை விட புலி எந்த விதத்திலும் குறைந்தது இல்லை, இன்னும் சொல்ல போனால் புலி தான் சிங்கத்தை விட திறமை வாய்ந்தது, காட்டுல மட்டும் இல்லை நாட்டிலும் கூட. அப்புறம் ஏன் இப்படி தோணுச்சு. அதுவும் போக ஆப்பிரிக்க நாட்டவர்களை கேட்டால் அவர்கள் புலியும் இல்லை சிங்கமும் இல்லை யானை தான் விலங்களின் அரசன், காட்டு ராஜானு சொல்ல மண்ட காய்ந்து போச்சு.

இதுக்கு எப்படி தான் விடை கண்டுபிடிப்பதுனு யோசிச்சு நம்ம விக்கி பசங்க கிட்ட கேட்டா சொல்லிட போறாங்கனு, அதில் உள்ள முக்கியமான இருவரிடம் கேட்க போக வந்துச்சு அடுத்த வினை. இரண்டில் எது பெருசு, ஏன் புலிய விட்டுட்டு சிங்கத்தை காட்டு ராஜானு சொல்லுறாங்கனு கேட்க, அவங்க கேள்விய திரிச்சு ஏதுக்கு பெரிசுனு ஒரு பெரிய விவாதமே நடத்தி என்னய நோகடிச்சதும் இல்லாம, என்ன நீ இம்புட்டு வெள்ளந்தியா இருக்கனு கிண்டல் வேறு. அதுக்கு அப்புறமும் அவங்க கிட்ட சாட்ட நான் என்ன லூசா. உடனே எஸ்கேப் ஆயிட்டேன்.

அதனால் மக்களே, இதுக்கு நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க. சிங்கமா.. புலியா. விக்கியில் இருக்கும் மற்ற பதிவர்கள் உதவினாலும் சரி.

டிஸ்கி : இது நம்மளோட சதம் அடிக்கும் பதிவு. அவன் அவன் 400, 500 னு சிங்கிளா அடிச்சுக்கிட்டு சைலண்டா இருக்காங்க, இதுல உனக்கு சதம் அடிச்சது பெரிய விசயம்னா. ஆமாம் என்பது தான் என் பதில், கூடவே எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

Friday, November 02, 2007

சங்கர சங்கர சங்கரபாண்டி

சன் டிவியில் நம்ம இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய ஊலலலா இசை நிகழ்ச்சிய பெரும்பாலானவர்கள் பார்த்து இருப்பீங்க. ரசிச்சும் இருப்பீங்க. உண்மையிலே இந்த இசை நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருந்து இருக்காது. நான் ஆரம்பத்தில் பார்க்காமல் வேறு ஏதோ தேட போயி இந்த நிகழ்ச்சிய பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றாக இருந்த காரணத்தால் மூன்றாம் அரையிறுதி நிகழ்ச்சிய தவிர மற்ற எல்லா பகுதிகளையும் பார்த்தேன். இந்த நிகழ்ச்சியில் எனக்கு பிடித்த ஒரு பாடலை உங்களுக்காக எடிட் பண்ணி இந்த பதிவில் இணைத்து உள்ளேன். பார்த்து, கேட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

மெட்ராஸ் டியூன்ஸ் என்ற இந்த குழு கால் இறுதி சுற்றிலே தோற்று வெளியேறி விட்டது. ஆனால் இறுதியில் ரஹ்மான் இந்த ஒரு பாட்டுக்காகவே இவர்களையும் வெற்றியாளர்களாக அறிவித்தார். ரஹ்மான் கமெண்ட்டையும் சேர்த்து உள்ளேன்.



You Tube யில் - http://www.youtube.com/watch?v=KzoQ_sHNy0A

குறிப்பு : அடுத்த பதிவு எது மாதிரியும் இல்லாமா புது மாதிரியாக எல்லாம் இருக்காது. வழக்கம் போல தான் இருக்கும், ஆனா மறக்காம எல்லாம் வந்து சேர்ந்துடுங்க. (வர திங்களாக இருக்கலாம்)