Friday, March 30, 2007

திருமகன் - பொறுமையை சோதிக்க

என்னுடைய பொறுமையை அடிக்கடி பல வழியில் சோதித்து பார்ப்பது வழக்கம்ங்க. நம்ம அரசியல்வாதிகளின் அறிக்கை, பேட்டிகள், இந்திய கிரிக்கெட் போட்டிகள் போன்று பல வழிகளில், அதில் ஒரு வழி நம்ம தமிழ் சினிமா பார்ப்பது. அந்த வழியில் சில நாட்களுக்கு முன்பு திருமகன் படத்தின் மூலம் என் பொறுமையை மீண்டும் சோதித்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சும்மா சொல்லக் கூடாது படம் ஆரம்பித்தில் இருந்து என்னமா சோதிக்குறாங்க... கள்வனின் காதலியை மிஞ்சி விட்டார் S. J. சூர்யா.

கதை என்னனு கேட்குறீங்களா, ரொம்ப தாங்க தமாஸ் உங்களுக்கு, 2.30 முழுசா வர்கார்ந்து பார்த்த எனக்கே தெரியல, என் பதிவ 2 நிமிசம் படிச்சுட்டு கத கேட்குறிங்களே, இது நியாயம். ஒரே ஒரு விசயம் தான் எனக்கு இந்த படத்தில் புரிந்தது - 4 கதாநாயகிகள் சூர்யாவை துரத்தி துரத்தி லவ்வுறாங்க. இவரு மீராவை லவ்வுறார். கடைசியில் தந்தை சொன்ன பொண்ணை கட்டிக்குறார்.

புரியாத விசயம் - அவரை போய் ஏன் லவ்வுறாங்க என்பது தான். இந்த படத்தில் ஒரு சூப்பர் செண்டிமெண்ட் - தாயத்துடன் கூடிய அரணாக் கொடி. எப்படி தான் இப்படி எல்லாம் திங்க் பண்ண முடியுதோ?

சரி, நமக்கு படம் தான் புரியல, எதாச்சும் விமர்சனத்தை படித்தாவது உங்களுக்கு கதை சொல்லி விடலாம் என்று தேடியதில் கிடைத்தவை

குமுதம் : திருமகன் - வக்கிர மகன்

கல்கி : இயக்குனர் ரத்னகுமாரோடு முதல் படம். பாரதிராஜா கூடவே இருந்ததால மண் வாசனைப் படம் தந்ததுல தப்பில்ல. ஆனா, தரமா தரணுமா இல்லையா?

நான் சொல்ல விரும்புவது : சூர்யா, நல்லாவே என் பொறுமையை சோதிச்சது இந்த திருமகன், அடுத்த சோதனையாக நான் வியாபாரி பார்க்க ரெடி, ஆனால் அந்த படத்தில் நீங்க உங்க சொந்த குரலில் பேச மாட்டேன் என்று எனக்கு வாக்கு கொடுக்கனும்.

இந்த படத்தை பலர் தடுத்தும் மீறிக் கொண்டு பார்த்து எப்படி இன்னும் தெளிவா இருக்கேன் என்று கேட்பவர்களுக்கு, இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் "Will Smith" நடித்த "The Hitch" படத்தை பார்த்து என்னை தேற்றிக் கொண்டேன்.

46 comments:

மனதின் ஓசை said...

பொறுமை இழந்த புலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இன்னும் வியாபாரி வேற பாக்க போறியா நீ??

நாகை சிவா said...

//இன்னும் வியாபாரி வேற பாக்க போறியா நீ?? //

அடுத்த சோதனைக்கு என்னை ஆட்ப்படுதிக் கொள்ள வேண்டாமா? அதான் ;-)

உங்கள் நண்பன்(சரா) said...

//நம்ம அரசியல்வாதிகளின் அறிக்கை, பேட்டிகள், இந்திய கிரிக்கெட் போட்டிகள் போன்று பல வழிகளில்//

உன் பதிவைப் படிப்பது அப்படீனு நான் எக்ஸ்ட்ராவா ஒன்னு சேத்துக்கிறேன்!

கடந்தவார விகடன்லயே விமர்சனம் வந்தாச்சு , மற்றும் சில நண்பர்களும் நல்லவேளை சொன்னார்கள்! பாவம் நீ தான்!!!

நான் இன்றுதான் வியாபாரி பார்த்தேன்,(போஸ்டரில்).


அன்புடன்...
சரவணன்.

இலவசக்கொத்தனார் said...

திருமகன்னு ஒரு படமா? இது வரை கேள்வியே படலையே. இனிமே அது பத்தி யாரு பேசுனாலும் காதை மூடிக்கலாம் அப்படின்னு சொன்னதுக்கு நன்றி.

MyFriend said...

நான் அப்போவே பாக்க வேணாம் பாக்க வேணாம்னு சொன்னேனே!!!! கேட்டியா புலி நீ???????

புலி பட்டாதான் தெரியும்ன்னு காட்டிட்டியே!!!!

MyFriend said...

வியாபாரியிலும் மூனு பொண்ணுங்க லவ்வுறாங்க இவரை. இவரு மேலே என்ன ஈர்ப்போ???

ஒன்னுமே புரியலை உலகத்துல...

Anonymous said...

புலி படத்தை எப்படி பார்த்தீங்க?download பண்ணிதானே?

Anonymous said...

இனிமேல் படம் பார்க்கவேண்டும்னா நம்ப மை ஃபிரண்ட் என்னும் பட expert கேளுங்கள் :))

Anonymous said...

அந்த ஆளு படத்தை எல்லாம் நீங்க பார்ப்பீங்களா?நீயு படத்தில் இருந்து இனிமேல் இந்த ஆளு நடிச்ச படத்தை எதையும் பார்க்க மாட்டேன்ன்னு சத்தியம் செஞ்சு இருக்கேன் :)))

Syam said...

என்ன பங்கு தேடி தேடி போய் மாட்டுற போல இருக்கு..இப்போதான் பொறில மாட்டி வெளில வந்த...மறுபடியுமாமாமாமா :-)

மங்கை said...

ஏதாவது மாரியம்மன் கோவிலுக்கு போய் மந்திரிச்சுகோங்க... இந்த விபரீத ஐடியா எல்லாம் எப்படி வருது..
இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசுங்க... எங்களுக்கெல்லாம் பொறுமை இல்லைனு உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு..

கதிர் said...

புலி நானும் நேத்து உக்காந்து பாத்தேன்பா நம்ம மீரா ஜாஸ்மின் இருக்கற ஒரே காரணத்துக்காக. கடேசில அது என்னடான்னா கண்ட மேனிக்கு உப்பி போயிருக்கு.

திருமகனா அவன், தெருமகன்
எல்லாமே டபுள் மீனிங் டயலாக்கா வெச்சிருக்கான் அந்த எடுபட்ட பய, ரத்னகுமாரே முழுப்படமும் எடுத்திருந்தார்னா நல்லா இருந்துருக்கு, பாதிலயே சூர்யா டார்ச்சர் தாங்காம கழண்டுக்கினாராம்.

Santhosh said...

புலி நீயும் அந்த சோதனைக்கு ஆளானியா அய்யோ பாவமே. விடு மாப்பி. தம்பி சொன்ன மாதிரி நாதாறிப்பய அவ்ளோ அசிங்கமா வசனம் வெச்சி இருக்கான். கேட்டா எம்.ஜி.ஆர் பேசலையான்னு கேக்குறான் நாதாறி.

Radha Sriram said...

நீங்க நிஜமான பொறுமையின் பூஷணம் தாங்க.....இப்படி இருக்கும்னு தெரின்சேதான் போயி பாதீங்களா.....??
ரெவ்வியுலாம் படத்த பாக்கரதுக்கு முன்னாடியே படிக்கர பழக்கம் கிடையாதா?பாவம்!!! தியேட்டர்ல எவ்வளொ பேரு இருந்தாங்க?

மணிகண்டன் said...

இவ்வளவு கொடுமைய அனுபவிச்சுட்டும் வியாபாரி பார்க்கத் தயார்னு சொல்றிங்களே..உண்மையா சொல்லுங்க, நமீதாவுக்காக தான :)

கோபிநாத் said...

புலி....உண்மையிலேயே நீ பெரிய மனுஷசன்தான் ;-)

இந்த லூசு பயல யாரு இப்படி எல்லாம் உசுப்பேத்தி நடிக்க சொல்லறாங்கன்னு தெரியல.....அவனுங்களை முதல்ல உதைக்கணும்.

கோபிநாத் said...

\\தம்பி said...
புலி நானும் நேத்து உக்காந்து பாத்தேன்பா நம்ம மீரா ஜாஸ்மின் இருக்கற ஒரே காரணத்துக்காக. கடேசில அது என்னடான்னா கண்ட மேனிக்கு உப்பி போயிருக்கு\\

தம்பி நீயுமா ;-(
சரி......முதல்ல பாவனான்னு சொன்ன.....இப்ப மீராவா? உனக்கு ரொம்ப தான் ;-)

நாகை சிவா said...

என் சோகத்தை உலகத்திற்கு மீண்டும் பறைச்சாற்றிய பா.பா.வுக்கு என் நன்றிகள் பல....

நாகை சிவா said...

//உன் பதிவைப் படிப்பது அப்படீனு நான் எக்ஸ்ட்ராவா ஒன்னு சேத்துக்கிறேன்!//

யோவ்... அதை நானே எப்படியா சொல்லுறது?

//கடந்தவார விகடன்லயே விமர்சனம் வந்தாச்சு , மற்றும் சில நண்பர்களும் நல்லவேளை சொன்னார்கள்! பாவம் நீ தான்!!!//

:-((((

//நான் இன்றுதான் வியாபாரி பார்த்தேன்,(போஸ்டரில்).//

போஸ்டரில் போஸ் எப்படி?

நாகை சிவா said...

//திருமகன்னு ஒரு படமா? இது வரை கேள்வியே படலையே. இனிமே அது பத்தி யாரு பேசுனாலும் காதை மூடிக்கலாம் அப்படின்னு சொன்னதுக்கு நன்றி. //

கண்டிப்பா... எப்படி எல்லாம் சமூகத்துக்கு நான் சேவை செய்யுறேன் பாருங்க கொத்துஸ்.....

நாகை சிவா said...

//ஏங்க ஏன் இப்டி ஒரு தற்கொலை முயற்சி உங்களுக்கு வாழ்க்கையில என்ன அப்டி ஒரு விரக்தி? இன்னும் உயிரோட தான் இருக்கீங்களா? ;) //

விரக்தி - அதான் தெரியல....

நீங்க தானே இது போன்ற படங்களை பார்த்தால் உங்களுக்கு சொல்ல சொன்னீங்க.... (பொறியை நினைச்சு பாருங்க....)

இன்னும் இருக்கேன், உசுரோட தான் இருக்கேன், வியாபாரி பாக்க தயார் ஆகிட்டு....

மு.கார்த்திகேயன் said...

/அவரை போய் ஏன் லவ்வுறாங்க என்பது தான்.//

மாப்ஸ், லவ் பண்ண ஆளே இல்ல சூர்யாவுக்கு.. அது தான் அட்லீஸ்ட் படத்துலையாவது.. :-)

மு.கார்த்திகேயன் said...

அந்த வில்ஸ்மித் படம் பார்த்தேன்.. நல்ல படம்பா மாப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

வியாபாரி பார்த்துட்டு உயிரோட இருந்த ஒரு பதிவு போடு மாப்ள.. சக்தி சிதம்பரம் படம்ங்கிறதால கொஞ்சம் நம்பிக்கை இருக்கு.. பார்ப்போம்..

மு.கார்த்திகேயன் said...

மாப்ஸ், திருமகன் தயாரிப்பாளர் உங்களுக்கு ஒரு விருதே கொடுக்கனும்.. படத்தை பாத்ததும் இல்லாம, ஸ்டெடியா இப்படி ஒரு போஸ்ட் வேற போட்டதுக்கு :-)

மு.கார்த்திகேயன் said...

//பொறியை நினைச்சு பாருங்க....)//

நல்லா ஞாபகம் இருக்குப்பா.. ஆனா நான் அதுக்கு முன்னாலயே பாதுட்டேனே படத்தை.. என்ன பண்றது போ..

நாகை சிவா said...

//புலி பட்டாதான் தெரியும்ன்னு காட்டிட்டியே!!!! //

இது என்ன புதுக் கதையா இருக்கு, சோதனை செய்து பாத்துக்குறேன் என் பொறுமையை....

//வியாபாரியிலும் மூனு பொண்ணுங்க லவ்வுறாங்க இவரை. இவரு மேலே என்ன ஈர்ப்போ???//

வியாபாரியில் மூனு பெயரா ;-) அப்ப டபுள் ஒகே.... சோதனைக்கு சீக்கிரம் ரெடி ஆவுடா சிவா.....

நாகை சிவா said...

//புலி படத்தை எப்படி பார்த்தீங்க?download பண்ணிதானே? //

அப்புறம்? இதை திரை அரங்குக்கு வேற சென்று பாக்கனுமாக்கும்....

//இனிமேல் படம் பார்க்கவேண்டும்னா நம்ப மை ஃபிரண்ட் என்னும் பட expert கேளுங்கள் :)) //

படம் பாக்குறதுக்கு நான் மற்றவர்கள் கிட்ட கேட்கனுமா... நாங்களே பலே expert ங்க.... இப்ப வேற வழியில்லாமல் விதி சதி செய்து, அதான் இதை எல்லாம் பாக்குறோம்...

பாலராஜன்கீதா said...

டேய் இவ(ர்)ன் ரொம்ம்ப நல்லவ(ர்)ன்டா. எஸ்.ஜே.சூர்யாவின் எல்லாப் படங்களையும் பொறுமையாகப் பார்க்கிறா(ர்)ன்டா
:-)))

நாகை சிவா said...

//அந்த ஆளு படத்தை எல்லாம் நீங்க பார்ப்பீங்களா?நீயு படத்தில் இருந்து இனிமேல் இந்த ஆளு நடிச்ச படத்தை எதையும் பார்க்க மாட்டேன்ன்னு சத்தியம் செஞ்சு இருக்கேன் :))) //

நாங்களும் அப்படி இருந்த ஆளு தான்..... இந்தியாவில் இருக்கும் போது அது எல்லாம்.... இவரு மட்டும் இல்ல அந்த லிஸ்ட்ல ஒரு பெரும் கூட்டமே இருந்துச்சு... நம்ம கேப்டன் தலைமையில் அர்ஜுன், சரத், அஜித், அப்படினு ஒரு பெரும் கூட்டமே உண்டு.. இப்ப அப்படியா...

நாகை சிவா said...

//இப்போதான் பொறில மாட்டி வெளில வந்த...மறுபடியுமாமாமாமா :-) //

ஆமாம் பங்கு, விதி நம்மை துரத்தி துரத்தி அடிக்குது.

சுப.செந்தில் said...

ஏற்கனவே அடிபட்ட புலிக்கு மறுபடியும் கோடு போட வந்திருக்கார் "வியாபாரி" யாக சக்தி சிதம்பரத்தின் கையால் தீட்டப்பட்ட கத்தி என்பதை தவிர வேறு வித்தியாசம் இல்லாத "திருமகன்"
Cloning concept ஐ வச்சு செதுக்குவாங்க பாருங்க சில்லு சில்லு நொறுங்கீறுவிங்க !! உஷார் !

நாகை சிவா said...

//இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசுங்க...//

எதையும் தாங்கும் மனசும் கூட...

//ஏதாவது மாரியம்மன் கோவிலுக்கு போய் மந்திரிச்சுகோங்க...//

எங்க ஊர் மாரியம்மன் கோவில், எங்க குல தெய்வம் அய்யனார் கோவில் விபூதி, குங்குமம் எல்லாம் என்க்கிட்ட இருக்கு. அது எல்லாம் இருக்கு என்ற தைரியத்தில் தான் படம் பார்க்கவே வர்காருவது. ;-)

நாகை சிவா said...

//திருமகனா அவன், தெருமகன்
எல்லாமே டபுள் மீனிங் டயலாக்கா வெச்சிருக்கான் அந்த எடுபட்ட பய, //

எங்க டபுள் மீனிங், எல்லாமே ஸ்டேரட் தான்.... நாறப்பய....

//கடேசில அது என்னடான்னா கண்ட மேனிக்கு உப்பி போயிருக்கு.//

பிரேம் முழுக்க மீரா தான் இருக்காங்க.... :-(

நாகை சிவா said...

//கேட்டா எம்.ஜி.ஆர் பேசலையான்னு கேக்குறான் நாதாறி//

இருந்தாலும் இவன் ரொம்பவே ஒவரா பண்ணுறான், இவன் ரேஞ்சுக்கு எம்.ஜி.ஆரை கம்பேர் பண்ணுறான்.... பேசுவதற்கு முன்பு யோசிக்கவே மாட்டனுங்களா....

நாகை சிவா said...

//ரெவ்வியுலாம் படத்த பாக்கரதுக்கு முன்னாடியே படிக்கர பழக்கம் கிடையாதா?//

ரீவ்வியூ எல்லாம் நம்பிக்கை கிடையாதுங்க, சில சமயம் படா டப்பா படத்தை பத்தி சூப்பரா எழுதுவாங்க.... அதான்.

//பாவம்!!! தியேட்டர்ல எவ்வளொ பேரு இருந்தாங்க? //

இத தியேட்டரல வேற போய் பாப்பாங்களா? எல்லாம் டவுன்லோடு பண்ணி பார்ப்பது. தியேட்டரில் நல்ல படம் மட்டும் தான் பார்ப்பது....

நாகை சிவா said...

//இவ்வளவு கொடுமைய அனுபவிச்சுட்டும் வியாபாரி பார்க்கத் தயார்னு சொல்றிங்களே..உண்மையா சொல்லுங்க, நமீதாவுக்காக தான :) //

இதை எல்லாம் இப்படி ஒப்பனா சபையில் கேட்கலாமா மணி... இல்லனு சொன்னா நீங்க நம்பவா போறீங்க....

நாகை சிவா said...

//இந்த லூசு பயல யாரு இப்படி எல்லாம் உசுப்பேத்தி நடிக்க சொல்லறாங்கன்னு தெரியல.....அவனுங்களை முதல்ல உதைக்கணும். //

அத செய் முதல.... உனக்கு புண்ணியமா போகும்.

//தம்பி நீயுமா ;-(
சரி......முதல்ல பாவனான்னு சொன்ன.....இப்ப மீராவா? உனக்கு ரொம்ப தான் ;-) //

அவன் கேரளாவில் செட்டில் ஆகும் ஐடியாவில் இருக்கான் போல...;-)

நாகை சிவா said...

//மாப்ஸ், லவ் பண்ண ஆளே இல்ல சூர்யாவுக்கு.. அது தான் அட்லீஸ்ட் படத்துலையாவது.. :-) //

ரொம்ப ஒவரா இருக்கு மாமு.... ஒன்னு ஒகே, இல்ல இரண்டு கூட தேவலாம்.... 4 னா....

//அந்த வில்ஸ்மித் படம் பார்த்தேன்.. நல்ல படம்பா மாப்ஸ் //

அது படம், இவனுங்களும் தான் எடுக்குறான்ங்களே.... அதிலும் அந்த தடியா இருப்பவர் டான்ஸ் இருக்கே, கிளாஸ் மாம்ஸ்...

நாகை சிவா said...

//வியாபாரி பார்த்துட்டு உயிரோட இருந்த ஒரு பதிவு போடு மாப்ள.. சக்தி சிதம்பரம் படம்ங்கிறதால கொஞ்சம் நம்பிக்கை இருக்கு.. பார்ப்போம்.. //

அதே தான் எனக்கும், கொஞ்சம் காமெடியா இருக்கும், ஆனா நம்ம சுப. செந்தில் சொல்வதை பார்த்தால் கொஞ்சம் நடுக்கமா தான் இருக்கு.

நாகை சிவா said...

//நல்லா ஞாபகம் இருக்குப்பா.. ஆனா நான் அதுக்கு முன்னாலயே பாதுட்டேனே படத்தை.. என்ன பண்றது போ.. //

விதி வலியது மாம்ஸ்....

நாகை சிவா said...

//ஏற்கனவே அடிபட்ட புலிக்கு //

இப்படி ஒரு பெயரா? சந்தோஷம் மக்கா, சந்தோஷம்...

//மறுபடியும் கோடு போட வந்திருக்கார் "வியாபாரி" யாக சக்தி சிதம்பரத்தின் கையால் தீட்டப்பட்ட கத்தி என்பதை தவிர வேறு வித்தியாசம் இல்லாத "திருமகன்"//

அப்படியா :-(((((

//Cloning concept ஐ வச்சு செதுக்குவாங்க பாருங்க சில்லு சில்லு நொறுங்கீறுவிங்க !! உஷார் ! //

பாக்கலாமா! வேண்டாமா! டாஸ் போட்டு பாக்குறேன், இல்லாட்டி நீங்களே ஒரு முடிவு சொல்லிடுங்க...

நாகை சிவா said...

//மாப்ஸ், திருமகன் தயாரிப்பாளர் உங்களுக்கு ஒரு விருதே கொடுக்கனும்.. படத்தை பாத்ததும் இல்லாம, ஸ்டெடியா இப்படி ஒரு போஸ்ட் வேற போட்டதுக்கு :-) //

நாம் எல்லாம் ஒவர ஸ்டெடி மாம்ஸ், எத்தனை சிம்பு படம் பாத்து இருக்கோம்... இதுக்கு எல்லாம் அசரவோமா, அவருக்கு தான் நாம் எல்லாரும் சேர்ந்து ஆறுதல் சொல்லனும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைமு... மறுபடியும் இது போன்ற சோதனைகளில் இறங்காதீர்ங்கள் என்று...

நாகை சிவா said...

//டேய் இவ(ர்)ன் ரொம்ம்ப நல்லவ(ர்)ன்டா. எஸ்.ஜே.சூர்யாவின் எல்லாப் படங்களையும் பொறுமையாகப் பார்க்கிறா(ர்)ன்டா
:-))) //

கீதா, நீங்க "ன்" விகுதி போட்டே அழைக்கலாம்.

நான் ரொம்ப நல்லவன்ங்க.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அபி அப்பா said...

புலி! உன்னய நெனச்சா பாவமாகீதுப்பா, நாலு பேர் விமர்சனம் பாத்துட்டு இந்த படத்த பார்ப்பது பத்தி முடிவு செஞ்சிருக்கலாமெ:-((

நாகை சிவா said...

//புலி! உன்னய நெனச்சா பாவமாகீதுப்பா, நாலு பேர் விமர்சனம் பாத்துட்டு இந்த படத்த பார்ப்பது பத்தி முடிவு செஞ்சிருக்கலாமெ:-(( //

என் விமர்சனத்தை படித்து நாலு பேர் நல்லா இருந்தா சரி என்கிற கடமை உணர்ச்சி தான் தொல்ஸ்....