Friday, June 23, 2006

குண்டு 1 வச்சி இருக்கேன்!

வணக்கம் நண்பர்களே!

இது வரை நான் உருப்படியாக எந்த ஒரு பதிவும் எழுதவில்லை என சில நண்பர்கள் கூறினார்கள். அது உண்மையும் கூட. எனக்கு உருப்படியாக எந்த ஒரு விசயமும் எழுத தெரியாது என கூறினேன். அத தான் எங்களுக்கு தெரியுமே... அதனால் நான் வெளிநாடுகளில் கண்ட, கேட்டு தெரிந்து கொண்ட சில விசயங்களை எழுதும்மாறு கேட்டுக் கொண்டார்கள். அதிலும் திரு.அறுசுவை பாபு அண்ணன் மற்றும் சிலரும் சூடானை குறித்தும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதும்படி தூண்டினார்கள். அவர்கள் எல்லாரும் என் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருப்பதை பார்த்தால் எனக்கு சற்று பயமாக தான் உள்ளது. சரி, ஆனது ஆச்சு, நம்மால் முடிந்த அளவு நமக்கு தெரிந்த விசயங்களை உங்களுடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து விட்டேன். அதனின் முதல் வெளிபாடு தான் பின்வரும் புகைப்படங்கள். கண்ணி வெடிகளை குறித்து யாரும் இதற்கு முன்பு வலைப்பதிவில் எழுதி உள்ளார்களா எனத் தெரியவில்லை. அப்படி யாரும் எழுதி இருந்தால் தெரிவிக்கவும்.


இவை அனைத்து தற்பொழுது என் அலுவலக வளாகத்தில் உள்ளவை. இந்த புகைப்படங்களை பற்றியும் அது எந்த வகைகளை சார்ந்தவை போன்ற எந்த விளக்கமும் இப்பொழுது கொடுக்கவில்லை. விரிவாக கண்ணி வெடிக்களை பற்றியும், அதன் வகைகளை பற்றியும், கண்ணி வெடிகள் இருக்கும் இடத்தில் தாங்கள் சிக்க கொண்டால் அந்த இடத்தில்(நேரத்தில்) என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் படங்களுடன் விரிவாக பின்வரும் தொடர்க்களில் எழுதலாம் என்று உள்ளேன். இந்த பதிவை குறித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இடைக்குறிப்பு : கடைசி இரு புகைப்படங்களை காண தவறாதீர்கள்.(முக்கியமாக சங்கத்து சிங்கங்கள்)































*** இந்த கண்ணி வெடி இங்கு இருப்பதிலே எனக்கு மிகவும் பிடித்தது.



*** இது நம்ம தலக்கு மிகவும் பிடித்தது. சங்க அலுவல் விசயமாக என்னை சந்திக்க சூடான் வந்த போது கட்டதுரையின் ஆட்கள் அவர் மேல் இதை ஏவினார்கள். அதை இடது கையால் பிடித்து அதன் மேல் எச்சியை துப்பி, மேல இருந்த குமிழை வாயால் பிடிங்கி எரிந்தார். நான் கேட்டு கொண்டதற்கு இணங்க இதையும் என் அலுவலகத்தில் வைத்து விட்டு சென்றார்.

Saturday, June 17, 2006

இனியவை ஆறு

பிளாக்கரில் குட்டி யானை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஒட வேண்டும் என்ற காரணத்தில் நம்ம பொன்ஸ், நம்மளை ஆறு விளையாட்டிற்கு கூப்பிட்டு உள்ளார்கள். அவரை மாதிரி இந்த ஆறு பதிவை போடுவதற்கு ஆறு நாள் வர்கார்ந்து யோசிக்காமல், ஆறு படத்தின் ஆறு பாடல்களை கேட்டு விட்டு இந்த விளையாட்டை ஆரம்பிக்கின்றேன்.

முதலில் ஆறு படத்தின் ஆறு பாடல்கள்:

அஞ்சு கிலோ அரிசி வாங்கி பஞ்சு பஞ்சாக வேக வச்சி ஜன் ஜன் ஜன்....
பாக்காத என்னை பாக்காத குத்தும் பார்வையாலே பாக்காது....
ப்ரீயா விடு ப்ரீயா விடு மாமு வாழ்க்கைக்கு இல்ல கியாரண்டி....
துரோகம் துரோகம், கடவுள் தூங்கும் நேரம் பாத்து சாத்தான் ஆடும் ஆட்டம்....
நெஞ்சம் எண்ணும் ஊரிலே, காதல் எண்ணும் தெருவிலே....
தொட்டுட தொட்டுட என்ன நீ தொட்டுட உன் கிட்ட மாட்டிக்குச்சு என் மனசு....

சந்திக்க விரும்பிய ஆறு நபர்கள்:

சுவாமி விவேகானந்தர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஹிட்லர்/யாசர் அராபத்
காமராஜர்
எம்.ஜி.ராமசந்திரன்
எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி

சந்திக்க விரும்பும் ஆறு நபர்கள்:

அப்துல் கலாம்
பீடில் கேஸ்ட்ரோ
வேலு பிள்ளை பிரபாகரன்
ரஜினி காந்த்
மணிரத்னம்
இளையராஜா

விளையாட்டில் கவர்ந்த ஆறு நபர்கள்:

கபில் தேவ்
மைக்கேல் ஜோர்ட்டன்
ஸ்டீவ் வா
அகாசி/ஸ்டெபி
ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் அஸ்டின்
பிரேயன் லாரா

மறக்க முடியாத ஆறு சம்பவங்கள்:

10,11,12 ஆம் வகுப்பு பள்ளி நாட்கள்
மூன்று வருட கல்லூரி நாட்கள்
சகோதரியின் திருமணம்
தாத்தாவின் மரணம்
நாகையை சின்னாபின்னம் ஆக்கிய சுனாமி
ஐ.நாவில் வேலை பார்ப்பது

தற்சமயம் இழந்த ஆறு விசயங்கள்:

சூரியன் உச்சிக்கு வரும் வரை தூக்கும் தூக்கம்
மாப்பிள்ளை நிரஜ்னின் சேட்டைகள்
தாய் மொழியில் பேசுவது
என் ஊரின் உப்பு காற்றும், கருவாட்டு மணமும்
நண்பர்களுடன் ஆன வெட்டி பேச்சும், ஊர் உலாவும்
நல்ல உணவும், அம்மாவின் பெட் காபியும்

தெரிந்தே செய்யும் ஆறு தவறுகள்:

நேரம் தவறுவது
எதிலும் அலட்சியமாக(வருத்தப்படாமல்) இருப்பது
எந்த காரியத்தையும் கடைசி நிமிடத்தில் செய்வது
உதவி செய்து கெட்ட பெயர்(சிக்கலில்) எடுப்பது(மாட்டுவது)
Self Personalityயில் கவனம் செலுத்தாமல் இருப்பது
இதை எதையும் திருத்தி கொள்ளாமல் இருப்பது

போனதில் பிடித்த ஆறு இடங்கள்:

ஏற்காடு
வால்பாறை
மடக்கதானம் - கேரளா
பாரிஸ்
பெங்களுர் - இஸ்கான்
விசாகப்பட்டினம்

போக விரும்பும் ஆறு இடங்கள்:

இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும்
உலக அதிசயங்கள் அனைத்திற்க்கும்
கியூபா
சிங்கப்பூர்
இலங்கை
ஜெர்மன்

இந்த விளையாட்டிற்க்கு அழைக்க விரும்பும் ஆறு நபர்கள்:

கால்கரி சிவா - நம் மண்ணின் பெருமையை மாடு பிடித்து கால்கரியில் நிறுவ இருக்கும் மதுரை புயல். அவரை திட்டுவதற்கு வாக்கியங்களை
அவரே தானமாக கொடுக்கும் வள்ளல்.

கீதா சாம்பசிவம் - சங்கத்தின் நிரந்திர தலைவலி. ப்ளாக்கர்வுடன் நித்தமும் சண்டையிட்டு அதில் சில சமயம் வெற்றியும் பெரும் அதிஷ்டசாலி.

துபாய் ராசா - என்னை சமாதானம் படுத்த வேண்டும் என்பதற்காக துபாயில் வெள்ளை கொடி ஏற்றி சூடான் வரை பறக்க விட்ட அமைதி புறா. லோடு லோடாக பேரீச்சம் பழத்தை சங்கத்துக்கு அனுப்பி வைத்த திலகம்.

தெக்கி காட்டான் - சாத்தானுக்கு சவால் விடும் காட்டான். இரண்டு மார்க்கில் பெயில் செய்யப்பட்டு இந்த சமூகத்தால் வஞ்சிக்கபட்ட அப்பிராணி.

மனதின் ஒசை - அறையில் இருப்பதற்கு பயந்து பல சமயங்களை மெரீனா கடற்கரையில் கழித்த தைரியசாலி. அப்ப அப்ப கவிதை எழுதும் கவிஞர்.

வடவூர் குமார் - நாகை தங்கங்களில் ஒருவர். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஒருவர் தெரியா விட்டாலும் அவரின் மேல் எனக்கு மிக்க மரியாதை உண்டு. மடவிளாகம் என தன் பதிவிற்கு நாமகரணம் வைத்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

Wednesday, June 14, 2006

கலாமுக்கு ஒட்டு போடுவோம்!

MTV இன் யூத் ஐகான்-2006

திரு மணியன் அவர்கள் நம் மதிப்புக்குரிய ஜனாதிபதி. டாக்டர் அப்துல் கலாம் அவர்களை குறித்து ஒரு பதிவு இட்டு இருந்தார்கள். அந்த பதிவின் பின்னூட்டங்களை படிக்கும் போது திரு வவ்வால் அவர்களின் பின்னூட்ட மூலம் MTV இன் யூத் ஐகான்-2006 என்ற போட்டியை குறித்து அறிய முடிந்தது. அந்த போட்டியில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் நபர்கள்-

மகேந்திரசிங் தோணி - விளையாட்டு
ஜான் ஆபிரகாம் - சினிமா
விஜய் மல்லையா - தொழில்
அப்துல் கலாம் - அறிவியல்
அபகிஜீத் சாவந்து - இசை
நவஜோத் சித்து - தொலைக்காட்சி

இவர்களை குறித்து என் பார்வை

தோணி:
கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி கொண்ட காரணத்திற்கு இவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் கிரிக்கெட் உலகையே தன்னை நோக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. இவரின் ஆரம்ப கால பேட்டிங்கை பார்த்த போது இவரை பின்ச் ஹிட்டராக மட்டும் தான் காண முடிந்தது. ஆனால் சமீபகாலமாக தான் ஒரு தேர்ந்த மட்டைவீச்சாளர் என நிருபித்து உள்ளார். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளதால், பொருத்து இருந்து இவரை கவனிக்க வேண்டும்.

ஜான் ஆபிரகாம்:
பாலிவுட் கதாநாயகன். இன்றைய நவநாகரீக மங்கைகளின் கனவு நாயகன். ஆசியாவின் சிறந்த மாடல் என விருது வாங்கியவர். இதை தவிர சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

மல்லையா:
சிறந்த தொழிலதிபர். எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வெற்றி காணும் வரை போராடும் குணம் கொண்டவர். தொழிலில் பல சாதனைகள் செய்து பெயர் பெற்றதை காட்டிலும், இவர் கொடுத்த விருந்துகளால் அடைந்த பிரபலம் அதிகம்.

அப்துல் கலாம்:
நம் நாட்டின் தற்பொதைய முதல் குடிமகன். சாதிக்க துடிக்கும் இன்றைய இளைஞர்களின் கனவு நாயகன். பல சாதனைகளை படைத்தவர், ஜனாதிபதி பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் என்பன போன்ற பல மரபுகளை உடைத்து ஏறிந்தவர். விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காமராஜர்க்கு பிறகு பொது வாழ்வில் என்னை கவர்ந்த சாதனை புருஷன். வாழும் வழிகாட்டி. இவரின் சில அரசியல் செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இன்றைய தேதியில் நம் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு இவரை தவிர எவரும் இல்லை.

அபிகிஜீத் சாவந்து:
இவரை பற்றி நான் கேள்வி பட்டது இல்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

சித்து:
சிக்சர் சித்து என செல்லமாக அழைக்கப்பட்டவர், இன்று தன் வார்த்தைகளில் சிக்சர் அடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் பேச ஆரம்பித்தால் கண் கொட்டாமல் கேட்க தோன்றும். இவரின் பேச்சு Informative வாக இல்லா விட்டாலும் உணர்ச்சி மிகுந்தாக இருக்கும். இவரின் பேச்சில் தேசபக்தி(கிரிக்கெட்டில்) பொங்கி வழியும். இந்திய அணியை குறை கூறுவர்களை கிழி கிழி என கிழிப்பதில் இவரை மிஞ்வதற்கு ஆள் இல்லை. இவரின் கோபமும் பிரசித்தம்.

இவர்களில் நான் தேர்ந்து எடுத்தது திரு. அப்துல் கலாம் அவர்களை. இந்த போட்டியின் தலைப்புக்கு இவரை தேர்ந்து எடுப்பது தான் சரியாக இருக்கும். இதில் திரு. கலாம் அவர்கள் வெற்றி பெற்றால் அவரின் மணி மகுடத்தில் மேலும் ஒரு சிறகு. அவ்வளவு தான்.

பின் குறிப்பு:
விருப்பம் உள்ளவர்கள், இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். அந்த போட்டிக்கு போக - MTV இன் யூத் ஐகான்-2006

Saturday, June 10, 2006

ஹாய்... ஹாய்... ஹாய்...

ஒரு பத்து நாள் கடின வேலை பளுவின் காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை. அப்படி என்ன வேலைப்பளு என்கின்றீர்களா. இப்படி வந்து அந்த சோக கதைய கேளுங்க...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒன்னு இருக்குங்க, அதில் இருந்து சில நபர்கள்(Delegates - எல்லாம் ரொம்ப பெரிய கைங்க) நான் இருக்கும் இடத்துக்கு நேற்று வந்தார்கள், அவர்கள் வந்ததால் சில உபகரணங்களை நாங்கள் ஆற அமர இரு மாதங்களில் நிறுவ இருந்த வேலையை ஒரு வாரத்தில் நிறுவும்படி ஆகிவிட்டது. இந்த நொண்டி நொக்கு எடுப்பார்கள் என கேள்விப்பட்டு(பார்த்து இல்ல சாப்பிட்டோ) இருப்பீர்கள். அதே தான்....பொழப்பு நாறி போச்சு. வேற எதை பற்றியும் சிந்திக்க முடியாதபடி தொடர்ந்து வேலை, வேலை. தொடைதட்டியை(நன்றி - ஜொள்ளு பாண்டி) ஒரு வார காலமாக திறக்க கூடவில்லை. ஒரு வழியாக அனைத்து உபகரணங்களையும் வெற்றிகரமாக புதன் அன்று நிறுவி விட்டோம். அதை அனைத்தையும் பரிச்சோதனை பண்ணிவிட்டு அப்பாடா என வந்து வர்காந்தால், வர Delegates பாதுகாப்பு பத்தி பேசுவதற்கு இந்த மீட்டிங், அந்த மீட்டிங்க் சொல்லி இரண்டு நாள் அறுத்து எடுத்து விட்டார்கள். இந்த மீட்டிங்கில் Close Protection வந்தவனுங்க, Armured Vehicle சொல்லுறான், Convoy சொல்லுறான். இவங்க அடித்த கூத்தை பார்த்த போது நம்ம பிரதமர், முதல்வர் பாதுகாப்பு வீரர்கள் அடிக்கும் கூத்து தேவலாம். தீடிர் என்று வியாழன் இரவு மணல் புயல் வேற இருக்கும் என பயம் காட்டுனாங்க. ஒரு வழியா எந்த
பிரச்சனையும் இல்லாமல் அந்த Delegations பார்ட்டிகள் வந்தார்கள். வந்து என்ன பேசுனாங்க, என்ன நடந்தது என்று நான் இங்கு இப்ப கூற போவது இல்லை. சூடான் அனுபவங்கள் என்று ஒரு 10, 15 பதிவாவது பிற்காலத்தில் போட வேண்டாமா?(துளசியின் சிஷ்ய புள்ளையாக்கும்). வந்தவர்களை பத்திரமாக நேற்று மாலையே அனுப்பியாகி விட்டது. அதுனால அந்த மேட்டர பத்தி தெரிஞ்க்க விரும்புகின்றவர்கள், CNN, BBC பார்க்கவும். DPA(Darfur Peace Agreement) என கூறுவார்கள். அப்படியும் இல்லையென்றால் இந்த மாத கடைசியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. அதில் இந்த விசயம் தான் முக்கியமாக விவாதிக்கபட இருக்கின்றது,

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்....
வந்தவர்களை பத்திரமாக அனுப்பி வைத்த பிறகு வந்து பொறுமையாக நம்ம தொடைதட்டியை திறந்து ராக தேவன் மொட்டையின் பாடல்களை நுண்ணிய சத்ததில் ஒட விட்டு நம்ம மெயில் பாக்ஸ் திறந்தால் நூற்று கணக்கில் மெயில் குவிந்து கிடக்கு. நம்மளையும் மனுசனா மதிச்சு இவ்வளவு மெயில் வந்து இருக்கேனு அத்தனையும் படித்து பதில் போடுவதற்குள் நேற்றைய பொழுது முடிச்சி போச்சு. இடையில் ஒரு சிலரின் வலைப்பக்கத்தை பார்க்க மட்டும் முடிந்தது. இன்னிக்கு காலையில் வந்து நம்ம நாட்டு நிலைமையை தெரிந்து கொள்வோம் என தின நாளிதழ்கள் பக்கத்தை திறந்தால் தலை சுத்தி போச்சுங்க.... எவ்வளவு மேட்டர் நடந்து இருக்கு, இந்த பத்து நாள்ல....

"கண்ணகி மீண்டும் கடற்கரையில் இடம் பிடித்து விட்டார்கள்."
எதுக்கும் அருகாட்சியகத்தில் ஒரு இடத்தை முன்பதிவு செய்து வைக்கவும்.

"கலைஞரின் டில்லி பயணத்தில் தமிழக காங்கிரஸாரின் கூட்டணி ஆட்சி கோரிக்கை மறுக்கப்பட்டது."
தமிழக காங்கிரஸாரின் கனவுக்கு கலைஞரின் ஸ்பேஷல் ஆப்பூ.

"மோட்ரொலோ கம்பெனி தமிழகத்தில் தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது"
வாழ்த்துக்கள், இது போல பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும்.

"பெட்ரோல், டீசல் விலை உயர்வு"
இருந்தாலும் நாலு ரூபாய் அதிகம் தான் - கொஞ்சம் நாள் கழித்து ஒரு ரூபாய் குறைப்பார்களோ

"விலை உயர்வை எதிர்த்து காம்ரேட்கள் போரட்டத்தை அறிவித்து இருக்கின்றார்கள்"
வழக்கம் போல.......

"நம்ம ஜெ.ஜெவும் போராட்டம் நடத்து போகின்றாராம்."
எதிர்க்கட்சியாக இருந்தால் இது போல் எதாவது செய்து கொண்டு இருந்தால் தான் பேப்பர்ல பெயரு வரும்.

"கலாம் ஆதயாம் தரும் பதவி குறித்த சட்ட மசோதவை திருப்பி அனுப்பி விட்டார்."
மெய்யாலுமா.....இந்த மேட்டர்ல இந்து நாளிதழில் வந்து கார்ட்டூன் சூப்பருங்க. Hat's Up.

"கலாம் போர் விமானத்தை இயக்கி அதில் அரை மணி நேரம் பயணம் செய்து உள்ளார்"
அரசியல தவிர மற்ற எல்லாத்துளையும் அவர் என்றுமே சூப்பர் தானுங்க. கலாமுக்கு ஒரு சலாம்.

"ராகுல் மகாஜன் சிறையில் அடைப்பு."
என்ன தாங்க நடக்குது.... ஒன்னும் புரிய மாட்டேன் என்கிறது

"இந்திய கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்வுடன் முதல் டெஸ்டை டரா செய்தது"
ஒரு விக்கெட்டை விழ்த்த முடியாதது பெருத்த அவமானம்.

"உலக கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கியது."
சந்தோஷம், பிரேசில் மாட்சை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

கடைசியாக ஒன்றை சொல்லி முடித்துக் கொள்கின்றேன். எங்கள் அலுவலகத்தில் புதிய உபகரணங்கள் பல நிறுவி உள்ளோம். அத்துடன் அவற்றில் சில மாற்றங்களை செய்து உள்ளோம். தற்பொழுது எங்களின் V-SAT யை இத்தாலியில் இருக்கும் எங்களின் Logbase V-SATவுடன் இணைத்து உள்ளோம். அதனால் NeoCounter நிறுவி இருக்கும் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு நான் வந்தால் இத்தாலி என்று காட்டும். இத்தாலி என்று காட்டினால் உங்கள் நாகை சிவா தான் சூடானில் இருந்து படித்து கொண்டு இருக்கின்றேன் என எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் இத்தாலியில் இருந்து வலைப்பதிவர் யாரும் உள்ளீர்களா???