Saturday, April 22, 2006

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்


முன்னுரை : இந்த பதிவு ராஜ்குமாரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் எழதப்படவில்லை.

கடந்த வாரம் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் இயற்கை எய்தினார். தமிழகத்தில் பிறந்து கன்னட திரைபட உலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். தாதாசாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகளை குவித்தவர். அனைத்துக்கும் மேலாக தன் கண்களை தானம் செய்து இருவருக்கு ஒளி கொடுத்தவர்.

ஆனால் இவரின் இறுதி சடங்கின் போது நடந்த கலவரங்கள் அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுவனாக அமைந்து விட்டது.

அவரின் இறப்புக்கு பின் கர்நாடகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் சில

* கலவரத்தில் இறந்தவர்கள் - 8 நபர்கள்
* காயம் அடைந்தவர்கள் - 245 நபர்க்கள்
* பதிவு செய்யப்பட்ட வழக்குகள் - 41
* கைது செய்யப்பட்டவர்கள் - 581 நபர்கள்
* தீக்கரையானவை - 6 லாரிகள், 12 பஸ்கள், 20 கார்கள், 3 ஆட்டோகள், 54 இரு சக்கர வாகனங்கள், 3 பெட் ரோல் பங்குகள்
*காவல்துறையின் 7 வேன் கள், 3 கார்கள், இரண்டு குவாலிஸ் கார்கள், 5 ஜீப்கள், நான்கு இரு சக்கர வாகனங்கள்.
* மதிப்பீடபட்ட சேதம் - 100 கோடி.
* உலக அளவில் பெங்களூர் நகரத்திற்கு ஏற்பட்ட அவபெயர்.
* இவை அனைத்தின் காரணமாக எதிர்க்காலத்தில் ஏற்பட போகும் பாதிப்புகள் எவ்வளவோ?

யார் இந்த ராஜ்குமார்? எவ்வாறு இறந்தார்?

ஏதும் மக்கள் பிரச்சனைக்கு போராடி உயிர் விட்டாரா?
எவராலும் தாக்கப்பட்டு இறந்தாரா?

தன் தள்ளாத வயதில் நோய்வாய்பட்டு இறந்து உள்ளார்.

அவர் ஒன்றும் சுகந்திர போராட்ட தியாகியுமில்லை, மக்கள் பிரச்சனைக்காக போரடியவரும் இல்லை. ஒரு சாதரண சினிமா நடிகர். இன்னும் சொல்ல போனால் மொழியின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தியவர். தன் தொழில் சம்பந்தமாக இருமுறை போரட்டம் நடத்தியவர். அனைவருக்கும் பொதுவாக இருக்கு வேண்டிய நடிகர், தமிழகத்திற்கு காவேரி தண்ணீர் கொடுக்க கூடாது என பேரணி நடத்தியவர். ஒரு சராசிரி மனிதனாக தான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து தன் 77ஆம் வயதில் காலம் ஆகியுள்ளார்.

"அண்ணவரு" இந்த நாட்டிற்க்கு செய்தது "என்ன(வரு)"?

அவருக்குகாக இவ்வளவு கலவரம் நடந்தது மிகவும் வருத்துக்குரியது.
நம் அரசியல்வாதிகள் இதிலும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி அரசியல் நடத்துவது நகைப்புகுரியது.

இறுதியாக, என்று தான் நம் மக்கள் சினிமா கலைஞர்களை கடவுளாகவோ, வழிகாட்டியாகவோ காணாமல் நம் கனவுகளின் பிம்பமாக காண போகின்றார்களோ?

8 comments:

Anonymous said...

தம்பி,

"ராஜ்குமார் ஒரு மகான்". சொல்லிகிறாரு நம்ம சூப்பர்ர்ர் ஷ்டாரு. அவரு "கன்னடுத்து கண்மணி". சொல்லிகிறாங்க அவரு Fans.

துளசி கோபால் said...

சிவா,

வருகைக்கு நன்றி. உங்க ஆண்ட்டியைக் கட்டாயம் பார்க்கணும்.

சிவா, உங்க பின்னூட்டத்துலே கொஞ்சம் பாபுவையும் சேர்த்துக்கறேனே ப்ளீஸ்.

பாபு,

வாங்க. நலமா? என்ன ஆளையே காணோம்?

நாகை சிவா said...

தங்கள் வருகைக்கு நன்றி பாபு அண்ணா. சுடான் நிலைமை?ஒரு தனி கதையாக போய் கொண்டு இருக்கிறது.விபரம் விரைவில். பிரச்சனையே நேரமின்மை தான்(சோம்பேறி தனத்துக்கு இப்படி ஒரு பெயர் இருக்குல?)
அறுசுவை புதிய பக்கத்தினை கண்டேன். அருமை. அதை பற்றி மற்ற கருத்துக்கள் உங்கள் மின் அஞ்சலில் விரைவில்(நாளை????)
நான் இல்லாத குறையில் நாகை இப்படி உள்ளது? பெருமாள் மட விளாகத்தில் குறை ஒன்றும் இருக்காது (நண்பர்கள் உபயத்தில்!) என நம்புகிறேன்.

நாகை சிவா said...

வணக்கம் துளசி ஆன்ட்டி(???), அக்கா(???), மாமி(????) பாட்டி(இது கொஞ்சம் ஒவரா தான் இருக்கு, இருந்தாலும் சமாளிப்போம்)
வருகைக்கு நன்றி. என் மாமியின் புகைப்படம் அவர்கள் சம்மதத்துடன் விரைவில் உங்கள் பார்வைக்கு.
தேன்கூடு புகழ்ச்சியில் தேன் தலையில் படாமல் பார்த்துக் கொள்ளவும். தேன் தலை முடியில் பட்டால் முடி நரைத்து விடும் என என் பாட்டி சொல்லி இருக்காங்க.(எப்ப, எந்த பாட்டி???)
பாபு அண்ணனை பற்றி, அண்ணன் நலம் தான்! அண்ணன் அறுசுவையில் பயங்கர பிஸி. இந்தியாவில் இருந்த பொழது ராமனுக்கு அனில் உதவிய மாதிரி உதவி இருந்திருக்கலாம். ஆனால் உணவகங்களில் ஒன்றாக புசித்ததுடன் சரி.

அன்புடன்
தி.சிவா

Omni said...

Hello from America!! :-)

ரவி said...

அருமையான பதிவு...

துளசி கோபால் said...

சிவா,


என் கேள்விக்கென்ன பதில்? என் கேள்விக்கென்ன பதில்?னு.....

இதுதானா இப்ப பெரிய பிரச்சனை, என்னை எப்படிக் கூப்புடறதுன்னு?
அக்கா- எனக்குப் பிடிச்சிருக்கு
ஆண்ட்டீ- அவ்வளவாப் பிடிக்கலை
மாமி - வேணவே வேணாம்
பாட்டி- இன்னும் சிலபல வருஷங்கள் போகட்டுமே.

ஆமாம். அது என்ன உங்க ப்லொக்லே வந்து பதில் சொல்லணுமுன்னு நிர்பந்தம்?

சொல்லியாச்சுப்பா, சொல்லியாச்சு

Muse (# 01429798200730556938) said...

It is about Rajkumar's death.

I live in Bangalore. Following is the mail I sent to my brother as a reply to his mail enquiring my safety:

Dear brother,

I am fine.

Though "the small plants are crushed when the big tree is fallen" (thank you, rajiv gandhi) fortunately I and my friends were not happend to be small plants. Thanks to the precaution we took and the good wishes by the well wishers like you.

Behind the recent "culture" that exhilarates and equates the greatness of a person with violence I could feel the love the Kannada people have for "annavaru" (elder brother). This does not preclude the educated - my kannada colleagues have pinned Dr. Rajkumar's picture in their cabin. Affected by the wave of emotion I too was listening to his songs yesterday.

Vehicles are burnt, policemen were beaten. In Yashwantapura where I stay the mob has burnt a car just in front of the police station !!!! The king is dead. Long live demo..sorry mobocracy !!!

Except the Kannada and other news channels all other cable channels are blocked out as a mark of respect to the demised personality. Kannada channels are only broadcasting his film songs and movies. I understand that the logic behind the blocking out of other channels is that they will not be broadcasting much about their hero's movies and songs. As news channels (including CNN !!!) frequently were showing Rajkumars death, they were broadcasted except for.....

the great Sun News Channel.